World Tamil Blog Aggregator Thendral: என் .... கனவுகளின் நாட்குறிப்பு

Tuesday 8 October 2013

என் .... கனவுகளின் நாட்குறிப்பு

மறைந்து போன
முதியோர் ,அனாதை
இல்லங்கள்..

முதுமைக்குத் தலைவணங்கும்
இளமை..

போதை நீக்கிய பொழுது போக்கில்
இளைய சமுதாயம்..

மூடிய மதுக்கடைகளின்
துருப்பிடித்த கதவு..

மக்களின் நலனே
வாழ்க்கையாய்
எண்ணும் தலைவர்கள்..

அரசின் சலுகைகள்
லஞ்சமின்றி மக்களிடம்..

ஈழத்தமிழச்சியின்
கண்ணீர் துடைக்கும்
சிங்களச் சகோதரன்..
ஆயுதம் தொலைத்த
அமெரிக்கா..

அன்பின் நிழலில்
அனைத்து நிலப்பரப்பும்..

என்று கனவாகும்...?

No comments :

Post a Comment

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...