World Tamil Blog Aggregator Thendral: September 2015

Wednesday 30 September 2015

அழிவாளோ அருணிமா?

 வகை-4

 "..அருணிமா..." எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை எனது சொந்தப்படைப்பே எனச் சான்றளிக்கிறேன், இப்படைப்பு இதற்கு முன் வெளியானதல்ல எனவும், போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் பிரசுரத்திற்கு அனுப்பமாட்டேன் எனவும் சான்றளிக்கிறேன்" 



ஓடும் ரயிலில்

எட்டியே உதைத்தனர் விஷமிகளே

எகிறியே வீழ்ந்தேன். காலை

நசுக்கிச்சென்றது அடுத்து வந்தது..
நனைத்துச்சென்றது மனிதக்கழிவால்
நள்ளிரவில் குருதி ஆற்றில் நனைத்தே

வைகறையில் ஒதுங்க வந்தவன்
பதறி அலறி மருத்துவரிடம் சேர்க்க
தயங்கிநின்றவரிடம் துணிந்துரைத்தேன்

அறுத்தெறியுங்கள் என் காலை
கைப்பந்து கால்பந்து உதைத்து உதைத்து
கனவை அடையும் நேரம் இழந்தேன்...

நொறுங்கி வீழ்ந்தவளை
வரலாறு படைக்கவே பிறந்தாய்
வா..இமயம் தொட ..என்றே அழைக்க..

உயிருள்ள காலுடன் உயிரற்றதும் இணைய
தத்தி தத்தி நடந்தே தொட்டேன்...

இன்னும் ஏழு மலைகள் தொட்டே
ஓய்வேன் என்றே நினைத்தாரோ
ஓயேன் என்றே ஏறுகின்றேன்..


உலகமனைத்தும் ஒன்றாயின
மனங்கள் ஒன்றாவதெப்போது...
பெண்ணை அழித்தே வாழ்வீரோ
பண்பாடு அறிவீர் தோழர்களே..





Tuesday 29 September 2015

வலைப்பதிவர் சந்திப்புக்கு டிக்கெட் பதிவு பண்ணிட்டீங்கத்தானே?


இங்க பார்றா..


சிவாஜியின் திறமையும்....நடிப்பும் யாருடனும் ஒப்பிடமுடியாத ஒன்றுல.

மாபெரும் அந்தமேதைக்கு பிரெஞ்ச் அரசாங்கம் அந்நாட்டின் மிக உயரிய விருதான செவாலியே விருது நம்ம நடிகர்திலகம் சிவாஜிக்கு கொடுத்த போது உலகே வியந்தது.


பாரதரத்னா விருது கொடுக்கலன்னு எல்லோரும், சிவாஜிக்கு இந்தியா  மதிப்பு கொடுக்கலன்னு  வருத்தப்பட்டார்களாம்....அதற்கு ஒருவர் ,நடிகர் திலகம் சிவாஜியே ஒரு பல்கலைக்கழகம்...அவருக்கு ஏன் விருது...?

பல்கலைக்கழகம் தான் மற்றவர்களுக்கு விருது கொடுக்க வேண்டுமே தவிர ..பல்கலைக்கழகத்திற்கு யாரும் விருது கொடுக்க முடியாது....

இது எதுக்குன்னா...தினம் தினம் பதிவர் பணி கூட்டம்,வீதி கூட்டம் ,முழுநிலா முற்றம் என்ற ஓட்டத்தில் .

போட்டில எப்படியாவது கலந்துக்கனும்னு ...புத்தகங்கள் புடை சூழ எழுத

அமர்ந்த போது நிலவன் அண்ணாவின் அழைப்பு.
..என்ன கீதா
பண்றீங்க?....கட்டுரை எழுதலாம்னு உட்கார்ந்தேன் அண்ணா...

அப்படியா அத அப்றம் பாக்கலாம்.ஒரு சின்ன வேலை[இரவு விடிய விடிய செய்தேன் ] இருக்கு...அத முடிக்கனும் வாங்க என்றதும் எல்லாத்தையும் ஓரங்கட்டிட்டு...போனா ...

கையேட்டுல கொஞ்சம் மாற்றம் இருக்கு ..மூணு பேரும் சேர்ந்து செஞ்சா முடிஞ்சிடும்னு...பதிவர்களின் பட்டியலை எனக்கு,வைகறைக்கு,அண்ணாக்கு என  மூணு பேருக்கும் பிரிச்சு  கொடுத்து எழுதிட்டு வாங்கன்னு சிரிச்சுக்கிட்டே..சொன்னாங்க...

போங்க அண்ணா நான் கட்டுரையே எழுதல இன்னும்னு சொன்னதுக்குதான் மேலே சொன்ன பல்கலைக்கழகம் ......பேச்சு....

நீங்க விருது கொடுக்குற இடத்துல இருக்கீங்க ..உங்களுக்கு எதுக்கு விருதுன்னு ,முதல்ல இத பாருங்கன்னு ...கொடுத்துட்டாங்க...

என்னடா சாக்கு கிடைக்கும்னு நானும் இருந்தேன்ல...பின்ன இப்படி போட்டிக்கு வந்த கட்டுரையெல்லாம் என்னை இந்த மிரட்டு மிரட்டுனா என்ன பண்றது....?

எப்படா ஜகா வாங்கலாம்னு இருக்கும் போது அண்ணாவும் இப்படி சொல்லிட்டாங்களா...அவ்ளோதான்...என் கூட ஜெயாவும் சேந்தாச்சு..

ஆத்தாடி அண்ணா சிரிச்சுகிட்டே, பாராட்டிக்கிட்டே வேலைப்பளு தெரியாதபடி செய்ய வச்சுடுறாங்க...வைகறை பாவம் இன்னும் அந்தப்பணியில தான்.அண்ணா அழைப்பிதழ்,கேடயம்னு அந்தப்பணியில் இருப்பதால் அண்ணாவின் பங்கையும் அவரே பார்க்கின்றார்...





சுற்றுலா போயிருக்குற ஸ்ரீமலை வந்ததும் கையேட்டுப்பணி முடிஞ்சிடும்ல..

                                         ஷீல்டு மாடல் வந்தாச்சு,அழைப்பிதழ் மாதிரி வந்தாச்சு...வேளை கிடுகிடுன்னு ஆரம்பிச்சாச்சு....கையேட்டுப் பணி தொடருது...

எதிர் நோக்கிய செலவில் பாதி நன்கொடை வந்துருக்கு..மீதியும் வந்துடும்...

விழா நடக்கும் இடம் குறித்த வரைபடம் தயாரிப்பில் இருக்கு..விரைவில் அதுவும்..

பிறகென்ன ஆமா டிக்கெட் பதிவு பண்ணிட்டீங்கத்தானே..



Sunday 27 September 2015

முழுநிலா முற்றம் -9

இன்று 27.9.15 முழுநிலா முற்றம் கூட்டம் 9 புதுகையில் உள்ள நண்பா அறக்கட்டளையில் நடந்தது.

பாடலாசிரியர் பி.கே .முத்துசாமி அவர்களைப்பற்றிய ஆவணப்படம் திரையிடப்பட்டது.
கவிதை

கவிஞர் நாகநாதன்-
பாஸ்புக்,காதல்,காணாமல் போய்விட்டேன் என்ற தலைப்புகளில் கவிதை வாசித்தார்...

ஆசிரியர் மலையப்பன் காதல்,ஆசிரியரிடம் பாராட்டு என்ற கவிதைகளை வாசித்தார்.

கவிஞர் செல்வா சின்னவள் பற்றிய கவிதை வாசித்தார்.

ஹைக்கூ-கவிஞர் வைகறை அம்மாவைப்பற்றி வாசித்தார்


பாடல்

கவிஞர் நீலா எஸ்.எஸ்.ஏ.திட்டத்திற்காகப்பாடப்பட்ட பாடலைப்பாடி நிலாமுற்றத்தை இனிமையாக்கினார்..அதுவரை மேகத்திற்குள் மறைந்து நின்ற நிலா மெல்ல எட்டிப்பார்த்து சிரித்தது..


நூல் விமர்சனம்-உணர்வும் உருவமும்-திருநங்கை ரேவதி

கவிஞர் கீதா திருநங்கை ரேவதி எழுதிய நூலை விமர்சனம் செய்தார்.திருநங்கைகலைப்பற்றி சமுதாயம் கொண்டுள்ள பொதுப்புத்தியை மாற்றி அவர்களையும் மதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்க வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது.

நிலா முற்றத்தை மேலும் எப்படி செழுமை படுத்தலாம் என விவாதிக்கப்பட்டது.

அடுத்த கூட்டம் குழந்தைகள் பங்கு பெறும் நிகழ்வாக கவிஞர் ரேவதியின் வீட்டில் நடத்த திட்டமிடப்பட்டது...












veethi meet-19 வீதி கூட்டம்-19

வீதி கலை இலக்கியக்களம்-கூட்டம் 19
நாள்:27.9.15
இடம் :புதுகை

இன்று வீதி கலை இலக்கியக்களம் கூட்டம் 19 வழக்கம் போல் ஆக்ஸ்போர்டு உணவகக்கலைக்கல்லூரியில் நடந்தது.

கூட்டம் துவங்கும் முன் தங்களது அனுபவங்களைக்கூறும் நிகழ்வில்

ஸ்ரீமலையப்பன் தங்களது விதைக்கலாம் அமைப்பைப்பற்றியும்,வலைப்பதிவர் கையேடு தயாரிப்புக்குறித்தும் ,,

சுகன்யா ஞானசூரி வீதிக்கூட்டம் பற்றியும்,

கீதா வலைப்பதிவர் விழாப்பணிகள் குறித்தும் பகிர்ந்து கொண்டார்கள்.

மண்ணுக்கு மரம் பாரமா?
மரத்துக்கு கொடி பாரமா?
பாடலை எழுதிய 97 வயது மூத்த பாடலாசிரியர் நாமக்கல் மாவட்டம் புதுப்பட்டிக்கிராமத்திலிருந்து வர விழா துவங்கியது..

தலைமை:பாவலர் பொன் .கருப்பையா அவர்கள்

வரவேற்புரை
செல்வா அவர்கள் வரவேற்புரையே தற்கால நிகழ்வுகள் நிறைந்த கவிதையாகக்கூறி வரவேற்றார்...

”வீதிக்கு வந்து விட்டோம்
வேறு வழியே இல்லை
எரிந்தே கிடந்தாலும்
இழுத்துச் செல்ல வேண்டும் தேரை”

வீதியின் குரல்கள் ஒலித்துக்கொண்டே உள்ளன”என்றார்.

கவிதை -மாலதி

அப்துல் கலாம் பற்றியும் மாணவர்கள் குறித்தும்சிறப்பான கவிதைகளை வாசித்தார்
 
“சினங்கொள்ளச்செய்யும் சேட்டைகள்
நமைச் சீண்டிப்பார்க்கும் சிற்றுளிகள்”

என்ற வரிகள் அனைவராலும் பேசப்பட்டன...

கட்டுரை -”மீண்டும் விதைக்கலாம் தமிழ்”-அப்து ஜலீல்

கனிம வளங்கள் வற்றுவதைப்போல தாய் மொழியான தமிழும் வற்றிக்கொண்டு வருகிறது.மீண்டும் விதைக்க நான் தானே முயலவேண்டும் ,,..என தமிழ்மொழி வளர்ச்சி மற்றும் தமிழர்களின் தாய் மொழி குறித்த அக்கறையின்மை,தன் பாரம்பரியத்திற்கு மீண்டும் நாம் வரவேண்டும் என்ற அக்கறையான கட்டுரையை அருமையாக வாசித்தார்.

நூல் விமர்சனம்.கீதா

கதவுகள் திறக்கும் வானம்- கவிதை நூல்

இந்தியப்பெண்கவிஞர்களின் கவிதைத்தொகுப்பு -புதியமாதவி...காவ்யா பதிப்பகம் வெளியிட்டுள்ள நூல் .
விலை ரூ 110

11 மொழியில் 19 கவிஞர்கள் எழுதியுள்ள 45 கவிதைகளை உள்ளடக்கியது.

மும்பையில் வாழும் கவிஞரான புதிய மாதவி தனது முன்னுரையில்

” பெண் மொழிக்கு தேசங்கள்,மொழிகள்,இனங்கள் இல்லை”எனக்கூறி இந்தியப்பெண்ணியம் என்ற கட்டுரைக்காக தேர்வு செய்யப்பட்ட கவிதைகளின் தொகுப்பு இந்நூல் என்கிறார்.

எந்த மொழியாக இருந்தாலும் பெண்ணின் உணர்வுகள் தங்களது மனக்குமறலை,தனக்கென ஒரு வீடில்லாத ,காலமில்லாத நிலையை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளன..பெண் நிலை எந்த நாட்டிலும் ஒரே மாதிரியாக உள்ளதை உணர முடிகின்றது.சமூக அக்கறையுள்ள இருகவிதைகள் மனதை ஆக்ரமித்துக்கொண்டது...சமூகச்சிந்தனை உள்ள பெண்ணுக்கு நேரும் வன்முறைகளை ஒரு கவிதை விளக்குகின்றது.ஒரு கவிதை சிரியா நாட்டில் குழந்தைகள் கூடச்சிறைச்சாலையில் இருப்பதையும் அந்நாட்டு மக்களின் நிலையையும் எடுத்துக்காட்டுகிறது என்றார்..

சிறுகதை-அண்டனூர் சுரா.

இலங்கை வாழும் ஒரு குடும்பம் அகதியாக ஆஸ்திரேலியாவை நோக்கி கள்ளத்தோணியில் பயணம் செய்வதைக்காட்சிகளாக்கினார்.இலங்கை மொழிநடையில் எழுதி,அவரே பாத்திரமாக மாறி வாசித்த விதம் அனைவர் மனதிலும் கதையின் வலியை உண்டாக்கியது.







சிறப்பு அழைப்பாளர் அறிமுகம் -மீரா .செல்வா

பாடலாசிரியர்,நாடக ஆசிரியர்,வசனகர்த்தா என பன்முகப்பரிமாண பி.கே.முத்துச்சாமி அவர்களை அறிமுகம் செய்தார்.

நேர்காணல்.

பாடலாசிரியர் முத்துச்சாமி அவர்கள் நேர்கானலில் பாடல் எழுதப்பட்ட சூழ்நிலைகள்,தமிழக முதலமைச்சர்களுடன் திரைத்துறையில் ஈடுப்பட்ட விதம்,தனது கதையை பிறர் திருடி ஏமாற்றிய கோபம்,காலத்தால் அழியாத பாடல்களை தனது நடுங்கும் குரலால் பாடிக்காட்டினார்...

9 நாடகங்கள்,30,000 வெண்பாக்கள் இயற்றிய வெண்பா வேந்தர் என பட்டம் பெற்றவர்..முன்னால் முதலமைச்சர் காமராசர் இவரைத்தேடி வீட்டுக்கு வந்து சென்றதாக கூறினார்.

”மண்ணுக்கு மரம் பாரமா?”

”மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான்
மாட்டு வண்டியில..”

”சின்னச்சின்ன நட நடந்து
செம்பவள வாய்திறந்து”

போன்ற புகழ் பெற்ற பாடலைப்பாடியுள்ளார்.


வறுமை சூழ்ந்து வாழ்கின்ற மாபெரும் பாடலாசிரியர் பி.கே .முத்துச்சாமி பற்றிய ஆவணப்படம் திரையிடப்பட்டது.
நலிந்த அக்கலைஞருக்கு வீதிக்கூட்டம் சார்பாக ரூ 5000/-வழங்கப்பட்டது..
.தமிழகம் மறந்த மாபெரும் கலைஞரை வீதி அனைவருக்கும் அறிமுகப்படுத்தியது.இம்முயற்சியை செய்த விழா ஒருங்கிணைப்பாளர்கள் மீரா.செல்வா & செல்வா ஆகியோருக்கு வீதி அமைப்பு மனம் நிறைந்த வாழ்த்துகளை கூறியது...

அவரைப்பற்றிய ஆவணப்படம் தயாரித்த இளைஞருக்கு கௌரவம் செய்யப்பட்டது.


வீதியில் சிறப்பு விருந்தினராக திருச்சியைச்சேர்ந்த வி.சி.வில்வம் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

நன்றியுரை :மீரா.செல்வா

எதிலும் புதுமையாகச் செய்து பாரட்டுக்கள் பெறும் செல்வா & செல்வா கூட்டணி இன்றும் வீதிக்கூட்டத்தை சிறப்பாக நடத்தியதை அனைவரும் பாராட்டி மகிழ்ந்தனர்.

Friday 25 September 2015

வலைப்பதிவர் விழா கூட்டம் -9

வலைப்பதிவர் திருவிழா2015



கண்முன் விழாவைக்காட்சிகளாக்கி மேலும் சிறப்பாகச்செய்வதெப்படி என்ற திட்டமிடலில் விழாக்குழு இயங்கி வருகின்றது...வீட்டு நிகழ்வுக்கு கூட யாரும் இப்படி ஒன்றிணைந்து செயல் பட மாட்டோம்...ஆனால் இவ்விழா அனைவரையும் ஒன்றிணைக்கின்ற விழாவாக உள்ளது...

நிலவன் அண்ணா அழைப்பிதழ் வடிவமைப்பில் ஆழ்ந்துள்ளார்....விழா சிறப்பாக முடியனும் அண்ணா என்ற தூக்கவராத எனது கவலைக்கு...சூப்பரா செஞ்சுடுவோம்மா கவலைப்படாதீங்கன்னு...எல்லோரையும் ஊக்கமூட்டுகிறார்...

கையேட்டு நூலுக்கு இதுவரை 195 வருகைப்பதிவும் ,87 வலைப்பதிவும் ஆக 282 வலைத்தளங்களே உள்ளன ...25 ஆம் தேதிக்குள் பதிவு வருகையை முடித்துவிடலாம் என்ற மலையப்பனின் கோரிக்கையை முத்துநிலவன் அண்ணா...மேலும் இரண்டு நாட்களுக்கு நீடித்து உள்ளார்..கடைசி நேர ஆர்வலர்களின் விருப்பத்திற்காக....

ஸ்கேன் செய்தாலே நமது வலைத்தளம் தெரியும் படி நவீன உத்தியில் கையேட்டு விவரம் தயாராகிக்கொண்டு உள்ளது...விரைவில் பதிவர்கள் பதிவு செய்வதும் நண்பர்களை பதிவு செய்ய வைப்பதுமே மிக முக்கியமான பணியாகும்...

கையேட்டு மலரில் விளம்பரம் குறித்து மலர்தருவில்...

பதிவர் கையேட்டின் உட்பக்க விளம்பரக் கட்டணங்கள்

இருவண்ணம் முழுப்பக்கம் - 3000 ரூபாய்கள்
இருவண்ணம் மூன்றில் ஒரு பங்கு - 1000 ரூபாய்கள்

ஒரே வண்ணம் (கருப்பு) - ஒரு பக்கம் - 1500 ரூபாய்கள்
மூன்றில் ஒரு பங்கு  ஒரே வண்ணம் - 500 ரூபாய்கள்
விளம்பரக் கட்டணங்களைக் இதே வங்கிக் கணக்கிலும் செலுத்தலாம். அதே வங்கிக் கிளை என்றால் நிர்ணயிக்கப்பட்டத் தொகையையும் வேறு வங்கிகள் என்றால் பணமாற்றுச் சேவைக்கட்டணத்தையும் சேர்த்து செலுத்துமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

நிதியளிக்க

First Name        : MUTHU BASKARAN
Last Name         : N
Display Name      : MUTHU BASKARAN N
Bank              : STATE BANK OF INDIA
Branch            : PUDUKOTTAI TOWN BRANCH
Account Number    : 35154810782
Branch Code       : 16320
IFSC Code         : SBIN0016320
CIF No.           : 80731458645

நிதி அளிப்பவர்கள் இந்த மின்னஞ்சலிலும் தெரிவித்தால் அறிவிக்க வசதியாக  இருக்கும்.
bloggersmeet2015@gmail.com


நாட்கள் குறைவது மிக மகிழ்வாக உள்ளது..பணிகள் விரைகின்றன....

Tuesday 22 September 2015

வலைப்பதிவர்விழா கூட்டம்-7

22.09.15 இன்று மாலை 6 மணியளவில் நண்பா அறக்கட்டளையில்

வலைப்பதிவர் விழாக்குழு கூட்டம் நடைபெற்றது...

விழாவில் முக்கிய முடிவுகள் கலந்தாலோசித்து எடுக்கப்பட்டன.

அழைப்பிதழ் விரைவில் தயாராகிவிடும் முகவரி அனுப்பினால்  அனுப்பி வைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது...

வலைப்பதிவர்க் கையேடு தரமானவையாக வரவேண்டும் என்பதில் கவனமாக குழு உள்ளது.

கவிதைக்கண்காட்சிக்கு கவிதைகளை மைதிலியும் வைகறையும் தேர்வு செய்துள்ளனர்...ஸ்டாலின் ஓவியக்கண்காட்சிக்கு தயாராக உள்ளார்..

கையேட்டுக்குழு பொறுப்பிலுள்ள ஸ்ரீமலையப்பன்...அம்மா...கியூஆர் கோட் எல்லாருக்கும் தயாரிச்சாச்சும்மா...ஸ்கேன் பண்ணா வலைமுகவரிக்கு போய்டும்மா தானாகவே...என்று மலைக்க வைத்து விட்டார்....


உணவுக்குழு தலைவர் ஜெயா பேசிப்பேசி களைத்துப்போன எங்களுக்கு சிற்றுண்டி வாங்கி வந்து உணவு பட்டியலை வாசித்துக்கொண்ண்ண்ண்டே இருந்தார்....

பாவம் நிதிப்பொறுப்பாளர்...[நான் தான்] வந்த நன்கொடையெல்லாம்  உணவுக்குழுவிற்கே கொடுக்க வேண்டியிருக்குமோன்னு மகிழ்வான கவலையை உண்டாக்கிவிட்டார்..



எப்படா 11.10.15 வரும்னு இருக்கு அதுவரை தூக்கம் போச்சு அனைவருக்கும்...முத்துநிலவன் அண்ணா தான் பாவம்..ஆனா தகுதியான தலைமையின் கீழ் செயல்படுவது மிக மகிழ்வாக இருக்கு...ஒவ்வொரு செயலையும் விழாக்குழு உறுப்பினர்களை கேட்காமல் முடிவு எடுப்பதில்லை.

விரைவில் அழைப்பிதழுடன் சந்திப்போம்....



Friday 18 September 2015

கேள்விகளால் துளைக்கவோ நானும்?-வலைப்பதிவர்சந்திப்பு 2015 புதுக்கவிதைப்போட்டி



வலைப்பதிவர்சந்திப்பு 2015 புதுக்கவிதைப்போட்டி
-------------------------------------------------------------------------

கேள்விகளால் துளைக்கவோ நானும்?-


என்னிடம் கேள்வி கேட்கும்
எல்லாரிடமும் கேட்க
கேள்விகள் என்னிடமும் உள்ளன.


கையூட்டை சாடிக்கொண்டே
கையூட்டு பெறும் அப்பாவை நோக்கி
பறக்கின்றன அவைகள்...

அண்ணனுக்காய் தனியாகப்பரிமாறும்
அம்மாவையும் ஒருகை பார்க்க
துடிக்கும் அவைகளை ஆசுவாசப்படுத்துகின்றேன்..

துள்ளிக்குத்தோடும் என்னை பார்வையால்
மிரட்டி ஒடுக்கி  கல்லூரி வாசலில் தவமிருக்கும்
அண்ணனுக்காக காத்திருக்கின்றன...

பேருந்தில் உரசுமவனை வெட்டிக்குதற
பேராவல் கொண்டே திரிகின்றன.

சுத்தம் சோறு போடும் பழமொழியை
நனைக்கும் அவனின் செயலைக்கண்டு
வெட்கித்தவிக்கின்றன....

ஊழற்ற ஆட்சி அமைப்போமென்றே கூறி
ஊழலுக்குள் புதைந்தவர்களை
தாழிக்குள் புதைக்கத்தயாராய் ...வெறித்தபடி...

ஒற்றுமையின்றி சாதிப்பித்தேறி தடுமாறுபவனை
ஒன்று திரட்டி மதச்சண்டைக்கு தயாராக்கும்
தலைவனை அழித்தொழிக்க தவமிருக்கின்றன.


கேள்விக்கணைகளை தவிடு பொடியாக்கிட
கேள்விகளையே சாட்சியாக்கி சிதறடிப்போம் வாரீர்

-------------------------------------------------------------------------------------------

இப்படைப்பு *"வலைபதிவர் சந்திப்பு 2015 மற்றும் தமிழ்இணைய கல்வி கழகம் நடத்தும் "மின்தமிழ் இலக்கிய போட்டிகள்"களுக்காக நான் எழுதிய சொந்த படைப்பாகும்!

*வகை (4) புதுக்கவிதை போட்டி!
முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவைகள்!
இதற்குமுன் எங்கும் வெளியானதல்ல என்றும் முடிவுகள் வெளியாகும்வரை  வேறெங்கும்  வெளிவராது என்றும் உறுதியளிக்கின்றேன்!


தென்றல் கீதா

Wednesday 16 September 2015

thukkamaa-தூக்கமா,கலக்கமா.ஏன் தாமதம்?

அன்பான வலைப்பூ சகோதர சகோதரிகளுக்கு

ஆயிரக்கணக்கான வலைப்பதிவர்கள் உள்ள தமிழ் வலைப்பதிவர்களில் 130 வலைப்பதிவர்கள் வருகையும்,கையேட்டிற்காக 38 வலைப்பூ முகவரிகளும் மட்டுமே பதிவாகி உள்ளன.

குறைவாக 500 முகவரிகளாவது இருந்தால் தான் நூல் சிறப்பாக அமையும்.

வலைப்பதிவர் கையேடு உங்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே சிறப்புடன் இருக்கும்..நமக்கான ஒரு கையேட்டை கொண்டுவர நாங்கள் காத்திருக்கையில் ஏன் இத்தனை தாமதம்...உங்கள் வலைப்பூவை நாங்கள் அறிய வேண்டாமா...?

20.9.15 க்குமேல் கையேட்டு நூல் வேலை ஆரம்பிக்க உள்ளதால் விரைந்து நீங்களும் உங்களது நண்பர்களும் பதிவு செய்ய அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்...

இது நம்ம விழாங்க...கூப்பிடுங்க எல்லாரையும்..

Tuesday 15 September 2015

வலைப்பதிவர் திருவிழா 2015

அன்புள்ள மகளிர் கடல் , தமிழ்மணம் மற்றும் பிற திரட்டிகளில்  இணைந்துள்ள சகோதர சகோதரிகளுக்கு வணக்கம்...

உலக வலைப்பதிவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியாய் புதுகையில் வலைப்பதிவர் திருவிழா 11.10.15 அன்று புதுகையில் நடக்க உள்ளது.அவ்விழாவில் மகளிர் கடல் மற்றும் தமிழ்மண உறுப்பினர்களின்  வருகையை ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன்..
மேலும் வலைப்பதிவர் கையேடு தயாரிக்கப்பட உள்ளது அதில் 400 க்கும் மேற்பட்ட வலைப்பதிவர் விவரங்கள் தொகுக்கின்றோம்.வர இயலாத நிலையில் bloggersmeet2015@gmail.com என்ற மின்னஞ்சலில் தங்கள் வலைக்குறிப்பை அனுப்பி வைக்கும் படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்..உங்களுக்கு தெரிந்த வலைப்பதிவர்களிடமும் இவ்விவரத்தைக்கூறி அனுப்பி வைப்பீர்கள் என நம்புகின்றேன்...ஆண் பதிவர்களை விட

பெண் பதிவர்கள் அதிகமாக கையேட்டில் இடம் பெற வேண்டும் என்பது என் ஆவல்..www.bloggersmeet2015.blogspot.com.மேலும் விவரங்களை இந்த வலைப்பூவில்...காணுங்களேன்...

Monday 14 September 2015

வலைப்பதிவர் திருவிழா

வலைப்பதிவர் விழா-2015



புதுகையில் அக்டோபர் 11 நாள் நடக்க இருக்கும் வலைப்பதிவர் விழா குடும்ப விழாவாக நடக்க உள்ளது ...என்பதை ஆஸ்திரேலியாவில் இருந்து அழைக்கும் என் இனிய சகோதரி கீதமஞ்சரியின் வலைப்பூவில் பார்த்தால் உணரலாம்..நன்றிமா

http://geethamanjari.blogspot.in/2015/09/blog-post_14.html?showComment=1442247083152#c1780318107490051643

Thursday 10 September 2015

bloggers meet- வலைப்பதிவர் திருவிழா-5

விழாப்பணிகளில் விழாமல்


விழா ஏற்பாடுகள் சிறப்பாக ஒருவரை ஒருவர் கேட்காமலும் கேட்டும்...நடந்து கொண்டுள்ளன ..கண் முன் இப்படிதான் விழா நடக்கப்போகிறது என்பது காட்சியாய் விரியத்துவங்கி விட்டது....

பங்கேற்ப்போர் பட்டியல் டி.டி.சாரின் உதவியுடன் தயாராகிக்கொண்டுள்ளது.

உணவு ஏற்பாட்டுக்கு சகோதரி ஜெயா தயாராகி விட்டார்கள்..முடிந்தால் இன்னுமொரு வயிறு எடுத்துக்கொண்டு வாருங்கள்...உபசரிப்பில் அவர்களை மிஞ்ச ஆள் இதுவரை பிறக்க வில்லை....

வலைப்பதிவர்கள் விழாக்குறித்து

பதிவர்களும் விழாவும்
--------------------------------

வலைப்பதிவர் திருவிழா குடும்ப விழா போல கொண்டாடப்போகிறோம் என்பதற்கு இதை விட வேறென்ன சான்று வேண்டும்...

1]அரங்கேற்றம்.வலைப்பூவில் வலைப்பதிவர் விழா
http://psdprasad-tamil.blogspot.in/2015/09/wish-bloggermeet-2015.html?showComment=1441645023832#c2651048209536710139

2]சகோ தளிர்சுரேஷ் அவர்களின் வலைப்பூவில் வலைப்பதிவர் விழா
http://thalirssb.blogspot.com/2015/09/bloggers-meet-2015.html?showComment=1441804360370#c7545655987527556294பதிவர் விழா

3]தங்கை மைதிலியின் வரவேற்பில்http://makizhnirai.blogspot.com/2015/09/our-pudukkottai-blogger-meet.html

4]அருமையாக பதிவு செய்துள்ள மதுமதி.காம் http://www.madhumathi.com/2015/08/phudukottaibloggermeet2015.html

5]ஸ்கூல் பையன் பதிவுகள் http://www.schoolpaiyan.com/2015/08/28082015.html?showComment=1441813284146#c6935010517736389380

6]சகோ கரந்தை ஜெயக்குமார் பதிவில் http://karanthaijayakumar.blogspot.com/2015/09/blog-post.html?showComment=1441814019304#c8774514093065566475

7]குடந்தையூர் சரவணன் சாரின் பதிவில்...http://kudanthaiyur.blogspot.in

8]http://tamilarivukadhaikal.blogspot.in/2015/08/blog-post.html#comment-form தமிழ் அறிவுக்கதைகள் பக்கத்தில் 

9]தமிழ் இளங்கோ சாரின் பதிவில் http://tthamizhelango.blogspot.com/2015/08/blog-post_22.html

10]சகோதரி தென்றல் சசிகலாவின் பதிவில் http://veesuthendral.blogspot.in/2015/09/blog-post_10.html

11]சகோதரர் பரிவை சே.குமார் மனசிலிருந்து http://vayalaan.blogspot.com/2015/08/2015.html

12]தீதும் நன்றும் பிறரை தர வார  அய்யாவின் 2 பதிவுகளில்  1]http://yaathoramani.blogspot.in/2015/08/2015-1.html.
2]http://yaathoramani.blogspot.in/2015/08/2.htmlhttp://yaathoramani.blogspot.in/2015/08/2.html

13]சகோ விமலனின் சிட்டுக்குருவியின் குரலாய் http://vimalann.blogspot.com/2015/09/blog-post_10.html

14]தங்கை கிரேஸின் கவிதையாய் http://thaenmaduratamil.blogspot.com/2015/09/bloggersmeet2015-pudukottai.html
15]தங்கை கிரேஸின் அழைப்பொலியாய் http://thaenmaduratamil.blogspot.com/2015/09/Tamil-bloggers-list-2015-handbook.html

16]அய்யா மதுரைத்தமிழனின் ஆலோசனையாய்  http://avargal-unmaigal.blogspot.com/2015/09/2015-bloggers-meet.html

17]வலைப்பதிவர் விழா குறித்து தொடர்ந்து எழுதி வரும் தோழர் எட்வின் அவர்களின் பதிவில் http://www.eraaedwin.com/2015/08/03_14.html

18]பொன்யுகம் பதிவில் http://ponugam.blogspot.in/2015/08/blog-post_29.html

19]தில்லையகத்து குரோனிக்கல்ஸ் சாரின் பதிவில் http://thillaiakathuchronicles.blogspot.com/2015/09/BloggersMeet-2015-Information.html

20]தமிழ்வாசியின் வாசிப்பில் http://www.tamilvaasi.com/2015/08/blog-post.html

21]சகோதரி இளையநிலாவின் கவிதையில் http://ilayanila16.blogspot.com/2015/09/blog-post.html

22]சகோ...செந்தில்குமார் அவர்களின் கூட்டாஞ்சோறில் http://senthilmsp.blogspot.com/2015/09/blog-post_14.html?showComment=1442245611537#c3093736031548136364

23]http://muhilneel.blogspot.com/2015/09/blog-post_14.html?showComment=1442245480841#c7288258206174134369 சகோ முகிலின் பக்கங்களில்

24]சகோ கீதமஞ்சரியின் வலைப்பூவில் http://geethamanjari.blogspot.in/2015/09/blog-post_14.html?showComment=1442247083152#c1780318107490051643

25]குச்சி மிட்டாயும் குருவிரொட்டியும் சந்திப்பிற்காக நான்கு பதிவுகளில்.
http://kuttikkunjan.blogspot.com/2015_08_01_archive.html

அனைவருக்கும் நன்றி...
இன்னும் தொடரும்..