World Tamil Blog Aggregator Thendral: May 2016

Tuesday 31 May 2016

இனிமை

மண் தொடும்
மழையின் வாசம்

 மனம் தொடும்
அன்பின் நேசம்

 இனம் தேடும்
பறவையின் கீதம்

 குணம் நாடும்
மனித நேயம்

கணந்தோறும் சிலிர்த்திடும்
இனிமை......இனிமை..

Monday 30 May 2016

அண்ணே எப்படின்னே வட்டம் போட்டீங்க?

அண்ணே எப்படின்னே வட்டம் போட்டீங்க?


பொறியியலில் தங்கமெடல் வாங்கிய மகள் கலைநிலாவின் கேள்விக்கு வடிவேல் ஆசாரி திரும்பி பார்த்து ஒரு புன்னகையைப் பதிலாகத் தந்து தொடர்ந்து தன் வேலையைப்பார்த்துக் கொண்டே....
காம்பஸ் இல்லன்னா எனக்கு வட்டம் போடவே வராதுன்னு சொல்லிகிட்டே அவர் கையில் என்ன கருவி வச்சிருக்கார்னு தேடினாள்.

அவருக்கு தான் பொறியியல் பட்டம் கொடுத்திருக்கனும் நியாயமா பார்க்க போனா...
பள்ளிக்கூடமே போகாம அத்தனை கனக்கச்சிதமாக அலமாரி தயார் செய்ததை பார்த்த போது ,சே என்ன படிப்புடா இதுன்னு வெறுப்பு தான் வந்தது.

கண்கள் வியப்பில் விரிய ,அவள் அவரின் கை வேலைப்பாட்டை பார்த்து அதிசயித்துக்கொண்டிருந்தாள்.
எப்போதும் மேமாத விடுமுறை வெளியூரிலேயே அதிகம் கழியும் ...சொல்லப்போனால் இந்த மே மாதம் தான் முழுக்க முழுக்க வீட்டுப்பணியிலேயே சென்றது..

கரையான் அரித்த ஷோ கேஸை சரி செய்யத்தான் ஆசாரியை அழைத்தது ..ஆனால் அது புத்தக அலமாரி செய்ய இன்னும் சில வேலைகளை செய்ய வைத்து விட்டது.

4 ஆம் தேதி தொடங்கிய வேலை இன்னும் முடியவில்லை.90%நிறைவடைந்துள்ள நிலையில் வங்கித்தேர்வு எழுதுவதற்காக தயார் செய்து கொண்டிருந்த மகள் கலைநிலா ,அவ்வவ்போது வடிவேல் ஆசாரியையும், அவருக்கு துணை செய்யும் அழகு என்ற பத்தாம் வகுப்பு மட்டுமே படித்த இளைஞனின் திறமையையும் கண்டு வியந்து கொண்டிருந்தாள்.

வீட்டுக்கு நடுவில் அத்தனை பொருட்களும் கொட்டிக் கிடக்க, குட்டி வாண்டுக்கு ஏக கொண்டாட்டம்..அத்தனையையும் அவ்வளவு ஆர்வமாய் வேக வேகமாய் கலைத்து போட்டு,பிடிக்க வந்தால் ஒரே ஓட்டமாய் ஓடினாள்.


ஒரு வழியாக வேலை நிறைவடையும் நிலைக்கு வந்து விட்டது...

நாளை மறுநாள் பள்ளிகூடம் போகனும்....

ஆசிரியராக பணியில் சேர்ந்து 28 வருடங்கள் முடிந்து 29 ஆவது கல்வியாண்டு துவங்குகிறது.
ஆனாலும் இன்னமும் தொடரும் பழக்கமாய்

பள்ளித்துவங்கும் முதல் நாளில் , புது பேக்,புது பேனா,புது நோட்டு,புது டிபன்பாக்ஸ்,புது சேலை,புது செருப்புன்னு தயாராகிக்கொண்டு உள்ளேன்.இப்பதான் முதன்முதலாய் பணிக்கு செல்வது போல ஒவ்வோர் ஆண்டும் இதே கதை தான்.ஆனாலும் மாறப்போவதில்லை..இந்த குணம் தான் என்னை இன்னும் மாணவியாகவே வைத்திருக்க காரணமாக இருக்கலாம்..

புது மாணவர்களை சந்திக்க, நானும் புதுசா போனும் தானே.
முகநூலிலும் இனி தினமும்......

Tuesday 17 May 2016

தேர்வு வெற்றி..உண்மையா?

தேர்வு வெற்றி..உண்மையா?

 நம் குழந்தை பிராய்லர் கோழியா?

 தமிழகம் முழுதும் தேர்வு வெற்றி குறித்துப் பேசப்படும் சூழ்நிலையில்....அவ்வெற்றிக்கு பின் உள்ள மாணவர்களின் நிலையை எண்ணுகையில்...

 வெறும் மனப்பாடத்திறனை மட்டும் வெற்றியாக கொண்டாடுகின்றோமா ?என யோசிக்க வேண்டியுள்ளது.

 பாட புத்தகத்தை மட்டும் படித்து விட்டு அதிக மதிப்பெண் பெறுவதை பார்க்கும் போது...

Monday 16 May 2016

விதைக்கலாம்-38

விதைக்கலாம்-38

வாழ்த்துகள் ரோஷ்ணி...


வீதியும் ,விதைக்கலாமும் ,வைகறையும்...

 விதைக்கலாம் சகோதரர்களுடன் இருக்கும் காலைப்பொழுது மனம் நிறைந்த துள்ளலுடன் துவங்கும் போல.



இன்று விதைக்கலாம் நிகழ்வின் 38 ஆவது வாரம் இன்று மேகமூட்டமான காலைப்பொழுதில்புதுக்கோட்டை பூங்காநகரில் உள்ள ஐயப்பன் கோவிலில் துவங்கியது. இவ்வார சிறப்பு விருந்தினராக மிகச்சிறந்த வலைப்பதிவர்,ஒளிப்பதிவாளர்,பயணங்களின் காதலரான திருமிகு வெங்கட்நாகராஜ் அவர்கள் தில்லியிலிருந்து வந்து கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும்திரு செல்வக்குமார், நிருபர் சாதிக் மற்றும் சகோ ரஃபீக்கின் நண்பர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 விதைக்கலாமின் சிறப்பு நிகழ்வாக சகோ வெங்கட் நாகராஜ் அவர்கள் வைகறையின் மகன் ஜெய்குட்டிக்காக ஆறாம் வகுப்பு படிக்கும் தனது மகள் ரோஷ்ணி, தனது சேமிப்புத்தொகையான ரூ 3000/ கொடுத்துள்ளாள் என்று கூறி பணத்தை தந்த போது, மனம் நெகிழ்ந்து போனது....

 ஒரு குழந்தையின் துன்பத்தை இன்னொரு குழந்தை உணரத்துவங்கி விட்டால் அதைவிட நற்பண்பு வேறென்ன வேண்டும்.... வாழ்த்துகள் ரோஷ்ணி..


 விதைக்கலாம் குழு உறுப்பினரான சகோ சிவாவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்...வெவ்வேறு பணியில் உள்ள அவர்கள் விதைக்கலாம் மூலம் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றனர்.


 சகோ கஸ்தூரி ரங்கன் அவர்கள் அவர்களை ஒருங்கிணைத்து வழிக்காட்டுவது மிக அருமை.

சகோ சிவா வைகறைக்கான நிதியாக ரூ 500 கொடுத்து உதவினார். விதைக்கலாம் அமைப்பிற்கு நன்கொடையாக ரூ1000/திருமிகு நா.முத்துநிலவன் அவர்கள் கொடுத்திருந்தார்.

விதைக்கலாம் மணி சாரும் ,அவரது மனைவியும் அன்புடன் குழம்பி கொடுத்து உபசரித்தனர்.

 இன்றைய நிகழ்வு மிகச்சிறப்புடன் இனிதே முடிந்தது.

Wednesday 11 May 2016

முகநூலின் வலிமை உணர்கின்றேன்...

முகநூலின் வலிமை உணர்கின்றேன்...
 நன்றி சே.தமிழா,அப்பாஸ் . 

பார்த்ததும் இல்லை,பேசியதும் இல்லை.

கவிஞர் வைகறையின் பதிவைப்பார்த்து விட்டு மனம் நெகிழ்ந்து ரூ5000/ அனுப்பியுள்ளார்...முகநூல் நண்பர் சே.தமிழா.. என்ற தமிழரசன்.https://www.facebook.com/chetamilaa?fref=ts

பொள்ளாச்சியைச்சேர்ந்த இவர் ..தற்போது சென்னையில் பணி புரிகின்றார்...மறைந்த கவிஞன் வைகறையின் மகனுக்கு நீளும் உதவிக்கரங்களை வணங்குகின்றேன்...

 நேற்று ஒரு திருமண சந்திப்பில் திடீரென வந்து ரூ 500 கொடுத்தார் நண்பர் அப்பாஸ் தனது தேவதையான மகளை அறிமுகம் செய்து...எதிர்பார்க்காத உதவி கிடைக்கும் போது மனம் நெகிழ்கின்றது...மிக்க நன்றி அப்பாஸ்.https://www.facebook.com/absyasmine.absyasmine?pnref=friends.search

 பணம் என்பதை விட தனக்கு அப்பா கொடுத்த உறவுகளாய் அவன் வளர்ந்த பிறகு உணரும் போது நம்மில் அவன் தந்தையைக் காண்பான் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

 நாங்கள் இருக்கின்றோம் என நீங்கள் தயாராக உள்ள போது ரூ5,00.000 என்ற இலக்கில் தற்போது ரூ 1,25,000 சேர்ந்து உள்ளது...

 தொடரும் கரங்களுக்கு அன்பான நன்றிகள்....
 தொடரும் உங்கள் அன்பால் விரைவில் சேர்ந்திடும் நாம் எதிர்பார்த்த ரூ5,00,000.. இத்தொகை கீழ்க்கண்ட கணக்கில் சேர்க்கப்பட உள்ளது.எதிர்பார்த்த தொகையான ரூ 10,00,000 ஆகஸ்ட் மாதத்திற்குள் சேர்ந்து விடும் என்ற நம்பிக்கையோடு...
First Name : MUTHU BASKARAN
Last Name : N
Display Name : MUTHU BASKARAN N
Bank : STATE BANK OF INDIA
Branch : PUDUKOTTAI TOWN BRANCH
Account Number : 35154810782
Branch Code : 16320
IFSC Code : SBIN0016320 CIF No. : 80731458645 நிதி அளிப்பவர்கள் இந்த மின்னஞ்சலிலும் தெரிவித்தால் அறிவிக்க வசதியாக இருக்கும். vaigaraifamilyfund@gmail.com உதவும் கரங்களுக்கு மிக்க நன்றி

Sunday 8 May 2016

விதைக் கலாம் நண்பர்களின் 37 ஆவது வாரம்

                                             “விதைக் கலாம் ”

நண்பர்களின் 37 ஆவது வாரம் இன்று புதுக்கோட்டை அய்யனார் கோவிலில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி ”விதைக்கலாம்: நண்பர்கள் மூலம் நடத்தப்பட்டது... 

இதுவரை 420 மரக்கன்றுகள் நடப்பட்டு பாதுகாப்பாகப்பராமரிக்கப்பட்டு வருகின்றன...இவர்களால்..



இளைஞர்களை குறை சொல்லியே பழக்கப்பட்டவர்கள் இவர்கள் செயல் பாடுகளை நேரில் கண்டால் இளைய சமூதாயத்தின் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் நிச்சயம் வரும்.

 இதுவரை முகநூலில் மட்டுமே பார்த்து வந்த இந்நிகழ்வை நேரில் காணும் வாய்ப்பைத்தந்த சகோ கஸ்தூரி ரங்கனுக்கும்,மகன் மலைக்கும் மிக்க நன்றி. 

வாராவாரம் ஞாயிற்றுக்கிழமையன்று 5 கன்றுகள் நட்டு வருகிறார்கள். 

சமூகத்தை குறை சொல்வதை விடசெயல் பட வேண்டும் என்ற ஆவலில், கலாம் மறைந்த நாளில் துவங்கியது ”விதைக்கலாம்” என்ற குழுவிற்கான சிந்தனை. எதையும் ஆடம்பரப்படுத்தி விளம்பரம் தேடும் இக்காலத்தில் இவ்விளைஞர்கள் சத்தமின்றி சமூக நலனுக்காக,சுற்றுச்சூழலுக்காகப் பாடுபட்டு வருகின்றார்கள்.

 ஓய்வை பலனுள்ளதாக ,பயனுள்ளதாக ஆக்கும் இந்நிகழ்வு மிகவும் போற்றுதற்குரியது. குறைவான நண்பர்களால் துவங்கப்பட்ட இவ்வமைப்பு இன்று கடல் கடந்து விரிவடைந்துள்ளதை மறுக்க முடியாது.

 இன்று சகோ கஸ்தூரியும் ,மகன் மலையும் அழைத்த போது...மிகுந்த ஆவலுடன் சென்றேன்... தோழர் ரஃபீக் சுலைமான் வருவார்மா வந்துடுங்க என்றனர். காலையில்புதுக்கோட்டை அய்யனார் கோவிலில் மரம் நடும் நிகழ்வு என்றனர்.

அங்கு சென்று பார்த்தால் கம்ப்யூட்டர் பிடிக்கும் கைகள் மண்வெட்டி கடப்பாரையுடன் குழி வெட்டிக்கொண்டு... மவுஸ் பிடிக்கும் கைகளில் மரக்கன்று தவழ்ந்து.கொண்டு..


















 வழமையாக வரலாற்றை நிலைநிறுத்தும் பணியாக, கேமிராவுடன் கஸ்தூரி ...நிகழ்வுகளைப்படம் எடுத்துக்கொண்டு...

 வீதி உறுப்பினர்கள் பாதி பேர் விதைக்கலாமில் என்பதை எண்ணி பெருமையாகக் கருதுகின்றேன்..

 கலகலப்புடன் ஜாலியாக அவர்கள் மரக்கன்று நடுவதைப்பார்க்கும் போது நமக்கு வயது குறைந்து அவர்களுக்கு இணையாக செயல் படும் ஆவல் பிறக்கின்றது..







 இன்று விதைக்கலாமிற்கு ஆசிரியர் மணிகண்டன் அவர்கள் வந்திருந்தார்... 

கவிஞர் வைகறையின் மகன் ஜெய்குட்டிக்காக விதைக்கலாம் நண்பர்கள் முதல் தவணையாக ரூ 27,000 கொடுத்துள்ளனர் என்பதை மிகவும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

 [கஸ்தூரிரங்கன் ரூ10,000,ஸ்ரீமலையப்பன் ரூ 2,000,விதைக்கலாம் நண்பர்கள் ரூ15,000]

 சகோ கஸ்தூரியின் வழிகாட்டுதலால் விதைக்கலாம் மேலும் சிறப்புகளை நோக்கி நடைபோடுகின்றது...

 வைகறையின் கடைசி தொகுப்பை நூலாக்கம் செய்வது தன்கடமையாகசெய்கிறேன் என்று,வைகறையின் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.சகோ கஸ்தூரிரங்கன்..

 இப்படிப்பட்ட நல்ல உள்ளங்கள் சூழ வாழ்வது வரமே..

  அயல்நாட்டில் அமீரகத்தில் வாழும் முகநூல் நண்பர் திருமிகு ரஃபீக் அவர்கள் இன்றைய நிகழ்வில் கலந்து கொண்டார்.அவரை சந்தித்த தருணங்கள் இனிமையானவையாக.

 தனது மகள் ஆயிஷாவை சமூக அக்கறை உள்ள குழந்தையாக வளர்த்து வருகின்றார்.குழந்தைகள் வாசிக்க வைக்க வேண்டுமென்பதை செல்லுமிடங்களிலெல்லாம் வலியுறுத்திக்கொண்டுள்ளார்.

 புதிய வீடு கட்டும் போது அனைவரும் புத்தக அறை ஒன்று கட்டவேண்டும் என்பது அவரது விருப்பமாக உள்ளது..
எளிமையாக எந்த வித ஆடம்பரமும் இன்றி அவர் பழகியது அருமை. வைகறைக்காக நீண்டுள்ள உதவிக்கரமாய்..ரூ 5000/. கொடுத்து உதவியுள்ளார். 

முகநூல் நட்பு கண்ணீர் துடைக்கவும் நீளும் என்பதை உணர்த்தியுள்ளது. 

விதைக்கலாம் குழு மேலும் பல உயரங்களைத்தொட வாழ்த்துகள்.

 மனம் நிறைந்த நன்றியை வீதி அனைவருக்கும் சமர்ப்பிக்கின்றது.

Saturday 7 May 2016

ஜெய்குட்டிக்கான வைப்பு நிதி தொகை வரவாக...

ஜெய்குட்டிக்கான வைப்பு நிதி தொகை வரவாக... 
கையிருப்பு தொகை -
------------------------------------------
 1]கவிஞர் நா.முத்து நிலவன் -ரூ10,000

2]கவிஞர் மு.கீதா -ரூ 10,000

3]பேராசிரியர் துரை பாண்டியன் -ரூ10,000
 [பாரத் மெட்ரிக் பள்ளி]

4]கவிஞர் கதிரேசன் ரூ 6,000
வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் [முதல் கொடையாக]

 5]கவிஞர் சோலச்சி -ரூ5,000

 6]ஆக்ஸ்போர்டு சுரேஷ் -ரூ5,000

7]தமிழாசிரியர் கழகம் புதுகை -ரூ5,000 [முதல் கொடையாக] 

8]கவிஞர் மாலதி -ரூ5,000

9] கவிஞர் மணிகண்டன் -ரூ1,000

10]கவிஞர் மீனாட்சி சுந்தரம் -ரூ1,000

 11]புலவர் ஜெயா -ரூ 500

 12]கவிஞர் நெப்போலியன் சிங்கப்பூர் -ரூ5,000

13]வலைப்பதிவர் திரு ..கில்லர்ஜி அபுதாபி -ரூ2,000

14]வலைப்பதிவர் திரு தமிழ் இளங்கோ -ரூ2,000

15]சென்னை அரசன் [ராஜா] -ரூ 4,000 -

16]விதைக்கலாம் நண்பர்கள் -ரூ27,000

17]முகநூல் நண்பர் திருமிகு ரஃபீக் சுலைமான் அவர்கள் -ரூ5,000

18]வலைப்பதிவர் திரு .செல்வத்துரை முத்துகனி அவர்கள்    -ரூ500

19]வலைப்பதிவர் திரு ..பகவான் ஜி   அவர்கள்                      -ரூ1000

20]திருமிகு சிவகுமாரன் ஆலங்குடி                              -ரூ1000

21]வலைப்பதிவர் திரு.கோபிசரபோஜி                          -ரூ2,500

22]முகநூல் நண்பர் திரு தமிழரசன்[சே தமிழா]      -ரூ5,000

23]முகநூல் நண்பர் திரு.அப்பாஸ் யாஸ்                    -ரூ500
                         
                                           

 தொடரும் உங்கள் அன்பால் விரைவில் சேர்ந்திடும் நாம் எதிர்பார்த்த ரூ5,00,000.. இத்தொகை கீழ்க்கண்ட கணக்கில் சேர்க்கப்பட உள்ளது.எதிர்பார்த்த தொகையான ரூ 10,00,000 ஆகஸ்ட் மாதத்திற்குள் சேர்ந்து விடும் என்ற நம்பிக்கையோடு... First Name : MUTHU BASKARAN Last Name : N Display Name : MUTHU BASKARAN N Bank : STATE BANK OF INDIA Branch : PUDUKOTTAI TOWN BRANCH Account Number : 35154810782 Branch Code : 16320 IFSC Code : SBIN0016320 CIF No. : 80731458645 நிதி அளிப்பவர்கள் இந்த மின்னஞ்சலிலும் தெரிவித்தால் அறிவிக்க வசதியாக இருக்கும். vaigaraifamilyfund@gmail.com உதவும் கரங்களுக்கு மிக்க நன்றி

Thursday 5 May 2016

கவிஞர் வைகறையின் மகன் ஜெய்க்குட்டிக்காக

வைகறை நினைவஞ்சலிக்கூட்டத்தில்

 ஜெய்குட்டிக்கான வைப்பு நிதி தொகை வரவாக... 
கையிருப்பு தொகை
-------------------------------------------
 1]கவிஞர் நா.முத்து நிலவன்                                          -ரூ10,000

 2]கவிஞர் மு.கீதா                                                                 -ரூ 10,000

3]பேராசிரியர் துரை பாண்டியன்                                     -ரூ10,000
 [பாரத் மெட்ரிக் பள்ளி]

4]கவிஞர் கதிரேசன்                                                               -ரூ 6,000
வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் புதுகை
 [முதல் கொடையாக]

 5]கவிஞர் சோலச்சி                                                               -ரூ5,000

6]ஆக்ஸ்போர்டு சுரேஷ்                                                        -ரூ5,000

 7]தமிழாசிரியர் கழகம் புதுகை                                          -ரூ5,000
[முதல் கொடையாக]

 8]கவிஞர் மாலதி                                                                      -ரூ5,000

 9] கவிஞர் மணிகண்டன்                                                        -ரூ1,000

 10]கவிஞர் மீனாட்சி சுந்தரம்                                                -ரூ1,000

 11]புலவர் ஜெயா                                                                          -ரூ 500

12]கவிஞர் நெப்போலியன் சிங்கப்பூர்.                                 -ரூ5,000
                                                                                                      -------------------------
  நாள் 5.5.16                                                                                   ரூ63,500
                                                                                                          ---------------------

 இத்தொகை கீழ்க்கண்ட கணக்கில் சேர்க்கப்பட உள்ளது.எதிர்பார்த்த தொகையான ரூ 10,00,000 ஆகஸ்ட் மாதத்திற்குள் சேர்ந்து விடும் என்ற நம்பிக்கையோடு... உங்களின் ஆதரவை நாடி...கைகொடுப்பீர்கள் என்ற உறுதியோடு...

 First Name : MUTHU BASKARAN

Last Name : N

Display Name : MUTHU BASKARAN N and.PON.KARUPPAIAH

Bank : STATE BANK OF INDIA

Branch : PUDUKOTTAI TOWN BRANCH

Account Number : 35154810782

 Branch Code : 16320

IFSC Code : SBIN0016320

CIF No. : 80731458645

 நிதி அளிப்பவர்கள் இந்த மின்னஞ்சலில் தகவல் தெரிவித்தால், அறிவிக்க வசதியாக இருக்கும்.

பட்டியல் தொடர்ந்து http://veethimeet.blogspot.com/2016/05/blog-post.html என்ற வலைத்தளத்தில் இணைக்கப்படும்..

நன்கொடை கொடுத்தோர் விவரத்தை அனைவரும் பார்ப்பதற்காக...

 vaigaraifamilyfund@gmail.com

 வலைப்பதிவர்களின் மேலான ஆதரவை தந்து உதவிட வேண்டுகின்றோம்...எந்தவித பணப்பயனும் இன்றி மறைந்து விட்ட வைகறையின் குடும்பத்திற்கு ஆதரவாக இருப்பது நம் கடமை....அல்லவா.....

Wednesday 4 May 2016

இலக்கியம் பேசி கலையும் கூட்டமல்ல வீதி

இலக்கியம் பேசி கலையும் கூட்டமல்ல வீதி
 ---------------------------------------------------------------------

புதுகையின் இலக்கிய ஆளுமைகளின் மனிதநேயம் வியப்பில் ஆழ்த்துகிறது....

 இளம் கவிஞர்களை ஊக்கப்படுத்துவதிலும் ,அவர்களுக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருப்பதிலும் அவர்களுக்கு நிகர் அவர்களே.. கவிஞர் தங்கம் மூர்த்தியும் கவிஞர் முத்துநிலவனும் ஒரே மனிதநேயத்தோடு செயல்படுவதைக் காண்கையில் ...என்ன சொல்வது..

 கவிஞர் தங்கம் மூர்த்தி நேற்று நடந்த நினைவஞ்சலி கூட்டத்தில் ”வைகறையின் மகன் வளர்ந்த பிறகு என்ன நமக்கு அப்பா சேர்த்து வைத்தார்னு நினைக்கக்கூடாது.

இத்தனை மனித உள்ளங்களை சேர்த்து வைத்துள்ள தனது அப்பாவை எண்ணி பெருமைப்பட வேண்டும். அவன் பெயரில் நாம் போட இருக்கும் பெரும் தொகை அவனுக்கும் அவனது அம்மாவிற்கும் தன்னம்பிக்கை அளிக்கும் ஊன்று கோலாக ...வைகறை வெறுமையாக விட்டு சென்று விடவில்லை என்ற எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும்...

 காலத்தால் வைகறையின் பெயர் அழியாது நிரந்தரமாக இருக்கும் வகையில் ”வைகறை நினைவு விருது “ இளம் கவிஞர்களுக்கு வழங்கப்பட வேண்டும்... அதுவரை நம் கண்ணீரின் ஈரம் காயாது இருக்கட்டும்” என்று கூறிய அவரின் வார்த்தைகள் அனைவரின் மனதிலிருந்து வந்த உண்மையான அன்பின் வெளிப்பாடு.. 

அதற்கான முயற்சியில் வீதி களம் இறங்கியுள்ளது.. இதற்காகவே பொதுவான ஒரு சேமிப்புக்கணக்கு துவங்கப்பட உள்ளது. அதில் பணம் போடுபவரின் பெயர்கள் வெளிப்படையாக அறிவிக்கப்படும்...

உங்களின் கரமும் எங்களோடு இணைந்தால்.....வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் எங்களின் இலக்கு வெற்றி பெறும்.... நம்பிக்கையோடு காத்திருக்கின்றோம்.

வைகறை நினைவஞ்சலி கூட்டம் -வீதி 27

வீதி இலக்கியக்களம் கூட்டம் -27 
வைகறை-நினைவஞ்சலி கூட்டம்
 --------------------------------------------------

இப்படியொரு கூட்டம் நடத்துவோம் என்று யாரும் எதிர்பார்க்கவே இல்லை..வீதியின் முக்கிய செயல்பாட்டாளராக வைகறை பரிணமிக்கும் வேளையில் ,வைகறையை காலம் பிரித்துவிட்ட கொடுமை.

 வைகறை படத்தில் பார்க்க நேர்ந்த கொடுமை..

கனத்த மௌனமாய் வீதிக்கூட்டம்..வைகறைக்கு அஞ்சலி செலுத்திய காட்சி....

வெறும் அஞ்சலி செலுத்துவதாக கூட்டம் இருப்பது மட்டுமின்றி அவரது குடும்பத்திற்கு உறுதுணையாக விளங்க வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது..