World Tamil Blog Aggregator Thendral: January 2017

Sunday 29 January 2017

பேலியோ அறிமுகம்-2

பேலியோவிற்கு வருவதற்கு முன் புரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்தி .
உங்களது நேரத்தை செலவு செய்து மிகவும் பொறுமையாக கீழே இருக்கும் அனைத்தையும் படிக்கவும் .


பேலியோ உணவுமுறைக்கு மாறுவதற்கு முன் கீழ்க்கண்டவற்றை தெளிவாக படித்து புரிந்து கொள்ளவும்

பேலியோ டயட் என்றால் என்ன ?
http://paleogod.blogspot.in/2016/03/blog-post.html

டயட்டுக்கு முன்பாக ரத்தப் பரிசோதனை ஏன் அவசியம்?
http://paleogod.blogspot.in/.../blood-test-before-paleo...

அதன்படி தைரோகேர் , ஆர்பிட் ஏசியா அல்லது உங்களுக்கு விருப்பப்பட்ட லேபில் பரிசோதனை எடுக்கலாம்.

புதியவர்களாகக் குழுவில் சேர்ந்து ப்ளட் டெஸ்ட் எடுத்து, டயட் கேட்க விரும்பும் அன்பர்கள் கவனத்திற்கு...

தயை கூர்ந்து இங்கே குறிப்பிட்ட முறையிலேயே நீங்கள் டெஸ்ட் சார்ட் அப்லோட் செய்து டயட் கேட்டுப் பொறுமையுடன் காத்திருந்தால், விரைவாக உங்களுக்கு டயட் சார்ட் தர எங்களுக்கு உதவியாக இருக்கும்.
___________________________________

ஸ்பெசல் ( உடனடியாக உதவி தேவைப்படும், அதிக பிரச்சனை உடைய மக்கள் ரிப்போர்ட் போட்டு டயட் சார்ட் பெற இந்த லிங்கைப் பயன்படுத்தவும்.) மற்ற பெரிய பிரச்சனை இல்லாதவர்கள் இங்கே அப்லோடு செய்தாலும் சார்ட் கிடைக்காது. உங்கள்/எங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம்
.

https://www.facebook.com/groups/tamilhealth/permalink/524730351050782/
___________________________________

உங்களிடமிருக்கும் ரிபோர்ட்களில் உள்ள ரிசல்ட் நம்பர்களை இந்த எக்சல் ஷீட்டில் தவறு இல்லாமல் சரியாக இட்டு நிரப்பி அதனை screen shot ஆக எடுத்து அதனை மேலே கண்டுள்ள சுட்டிகளில் உங்களுக்கு உரிய சுட்டியில் தனிப்பதிவிடவும்

தவறான தகவல்களுக்கு நீங்களே பொறுப்பு. சரியான தகவல்கள் இல்லாத ரிப்போர்ட்களுக்கு டயட் சார்ட் தர இயலாது.

--------------------------------------------
Excel sheet link / எக்செல் ஸீட் லிங்க்
---------------------------------------------

http://www.tiny.cc/paleoxl

கவனமாக படித்து அதில் குறிப்பிட்டபடி பதிவேற்றவும்

எக்ஸெல் ஷீட்டில் டெஸ்ட்ரிப்போர்ட் போட்டு டயட் கேட்பவர்கள்
வயது
ஆண்/பெண்
சென்டிமீட்டரில் உயரம்
சைவமா / அசைவமா
நோய்கள்
எடுக்கும் மருந்துகள்

ஆகிய அனைத்தையும் கண்டிப்பாக குறிப்பிடவும்
பேலியோவுக்குப் புதியவர்களுக்கான அறிமுகக்…
paleogod.blogspot.com|By Shankar G
paleogod.blogspot.com|By Shankar G
 
நன்றி முருகன் தீதன் ...
இவர் சொரியாஸிஸ் நோயால் மிகவும் பாதிக்கப்பட்டு இரண்டு வருடங்களாக கடுமையாக பேலியோவைப் பின்பற்றி குணமடைந்துள்ளார்..இம் மாதம் மதுரையில் நடந்த பேலியோ சந்திப்பில் இவருக்கு விருது அளித்து மகிழ்ந்தனர்...பேலியோ நிறுவனரும் குழுவினரும்.

பேலியோ அறிமுகம்

பேலியோ ஒரு அறிமுகம்

பேலியோ என்பது மருந்து மாத்திரை இன்றி, உணவுமுறையில் சிறிய மாற்றம்.

கோயம்புத்தூரில் பிறந்து அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருக்கும் திருமிகு நியாண்டர் செல்வன் அவர்கள் எத்தனையோ ஆரோக்கிய வழிகளைக் கடைபிடித்த போதும் சுகரும் ,இரத்த அழுத்தமும் அவருக்கு வந்ததால் காரனம் என்ன என்னவென்று தேடியதன் விளைவே...இந்த பேலியோ டயட்..இது முகநூலில் மட்டுமே இயங்கும் குழுவாகும் @ஆரோக்கியம்&நல்வாழ்வுhttps://www.facebook.com/groups/tamilhealth/members/ என்ற குழுவில் மட்டுமே செயல்பட்டு வருகின்றது..

மருத்துவர்களும் இக்குழுவில் பயன்பெற்று சேவை புரிந்து வருகின்றார்கள்.

உலக அளவில் இந்த உணவு முறை பல்லாண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு இருந்தாலும் நம் தமிழ்நாட்டில் நான்கு வருடங்களாக திருமிகு நியாண்டர் செல்வன் அவர்கள் தமிழ்நாட்டு உணவுமுறைக்கேற்ப கண்டுபிடித்து கூறிய உணவு முறையே பேலியோ டயட்..

உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பை ,நுண்சத்துக்களை கொடுப்பதன் மூலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைய வைத்து ,கார்போஹைட்ரேட் உணவுகளைத் தவிர்ப்பதன் மூலம் தீரக்கூடிய நோய்கள் அளவிட முடியாதது..

1]டைப் 1 சுகர் எனில் கட்டுப்படுத்த முடிகிறது.
2]டைப் 2 சுகருக்கு நல்ல தீர்வு கிடைக்கிறது.
3]தைராய்டு
4]சொரியாஸிஸ்
5]உடல்பருமன் நிச்சயமாக குறைகிறது..
6]கருப்பை நீர்க்கட்டி கரைகிறது..
7]இரத்த அழுத்தம்.
8]கொழுப்பு
9]உடம்புவலி,முட்டுவலி
10]யூரிக் ஆசிட் பிரச்சனை
11]ஆஸ்துமா
12]கிட்னி லிவர் பிரச்சனை
13]மகளிர் பிரச்சனை
13]இரத்தம் குறைவு
14]கால்சியம் குறைவு
15]இரும்புச்சத்து குறைவு
16]வைட்டமின் டி குறைவு
17]மாரடைப்பைத்தடுத்தல்
18]புற்று நோயைத்தடுத்தல்
19]வலிப்பு வராமல் தடுத்தல்

இன்னும் அனுபவத்தில் உணர்ந்தவர்கள் இதன் பயனை கூறிக்கொண்டே உள்ளனர்..
மந்திரமில்லை.மாயமில்லை..
ஆதாயமும் இல்லை..
இதனால் பயன் பெற்றவர்கள் மற்றவர்களுக்கும் கூறி பயன் பெறச்செய்யவேண்டும் என்பதே இக்குழுவினரின் நோக்கமாகும்.

30000 பேர் இருந்த @ஆரோக்கியம் &நல்வாழ்வு குழுவில் இப்போது 2,74,000 பேருக்கு மேல் இணைந்து பயன் பெற்று வருகின்றனர் என்பதே இதனுடைய உண்மைத்தன்மைக்கு சான்றாகும்...

என்ன செய்ய வேண்டும்?

1]முதலில் முகநூலில் ஆரோக்கியம் & நல்வாழ்வு குழுவில் இணைய வேண்டும்.
2]Thyro care மூலம் 1.4 அல்லது 1.7 என்ற இரத்த பரிசோதனை எடுக்க வேண்டும்..இது வெளியில் எடுத்தால் ரூ 12,000 வரை கேட்பாரகள்.ஆனால் இதன் மூலம் எடுக்கும் போது ரூ1500அல்லது ரூ1600  மட்டுமே செலவாகும்.
3]2 நாட்களில் டெஸ்ட் வந்ததும் ஆரோக்கியம் & நல்வாழ்வு  முகநூல் குழுவில் word xl ஷீட்டில் அவர்கள் கேட்கும் விவரத்தை தந்தால் அவர்களே நமக்கான சைவ அல்லது அசைவ உணவுக்கான டயட் சார்டை முகநூலில் பதிவிடுவார்கள்..நாம் அதை 100 நாட்கள் கடைபிடிக்க வேண்டும்.

4]100 நாட்கள் கழித்து மீண்டும் அந்த பரிசோதனையை எடுத்து பார்க்கும் போது நமக்கே நல்ல ரிசல்ட் வந்திருப்பதை  உணரலாம்.

முக்கியமாக மருந்து மாத்திரை சாப்பிடுபவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி மாத்திரைகளை எடுத்து நமக்கு பிரச்சனை இல்லை என்றால் மறுபடி மருத்துவரின் ஆலோசனைப்படி மாத்திரையின் அளவை குறைப்பதோ அல்லது நிறுத்துவதோ செய்ய வேண்டும்..

 மேலும் விவரங்களுக்கு
திருமிகு நியாண்டர் செல்வன் அவர்களின் ”பேலியோடயட்” என்ற நூல் வாங்கி படிக்கலாம்..
திருமிகு சிவராம் ஜெகதீசன் அவர்களின் உன்னை வெல்வேன் நீரிழிவே என்ர நூலில் தெரிந்து கொள்ளலாம்..

யூ ட்யூப் ல பேலியோ டயட் தமிழ் என போட்டால் திருமிகு நியாண்டர் செல்வன்,திருமிகு மனோஜ்,திருமிகு சங்கர்,மற்றும் மருத்துவர் அருண்குமார் ஆகியோர் பேசும் பேச்சை கேட்பதன் மூலம் விளக்கமாக தெரிந்து கொள்ளலாம்.
 paleo booksநானும் பேலியோவும்.

நானும் பேலியோவும்

கடந்த 7 வருடங்களாக…தைராய்டு நோயால் உடலெடை அதிகரித்து எப்போதும் சோம்பலுடன் ,தூக்கமும் நானும் இணை பிரியாதவர்களாய் இடம் கிடைத்தால் படுத்துகொள்ளவேண்டும் என்றே தோன்றும்
விளைவு எடை கூடிக்கொண்டே போக..

எடை குறைக்க யோகா வகுப்பிற்கு சிலநாள்,ஜிம் கிளாஸிற்கு சிலநாள்,இப்படியான எனது எடைக் குறைப்பு முயற்சியில்…

காலை முழுதும் உணவைத் தவிர்த்து…சிறுதானியங்கள் சேர்த்து என பல வழிகளில் அதனுடன் போராட…வெற்றி என்னவோ உடல் எடைக்கே கிடைத்தது…

Wednesday 25 January 2017

குடியரசு தின வாழ்த்து

குடியரசு தின வாழ்த்து
---------------------------------------

காளைக்காக போராடிய
காளைகளே

இன்று உங்களின் கொம்புகள்
கூர்தீட்டப்படட்டும்.

வலியின்றி கிடைக்கும் எதற்கும்
மதிப்பில்லை...

அன்று சுதந்திரத்திற்காகப் போராடிய
குருதிகளின் ..மிச்சம் நீங்கள்..

எங்களின் எதிர்கால நம்பிக்கைகளே..
உணர்வு பெற்று
உள்ளம் தெளிந்தவர்களே..

சிந்தை தெளிய குடியரசின்
67 ஆண்டு காலப்பாதையை
கூர்ந்து பாருங்கள்...

எங்கும் முட்கள் கண்டால்
எடுத்து தூய்மை படுத்துங்கள்..

ஆங்காங்கே இருக்கும் சோலைகளை
நேசமுடன் ரசியுங்கள்...

ரசிப்பதும் நேசிப்பதும் மனிதகுணம்..

களம் இறங்கிய போராளிகளே...
வடிவமையுங்கள் உங்களை...

மனதால் இணைந்த மகிழம்பூக்களே
மணத்தால் அழியுங்கள் கயவர்களை...

ஒருவிரலால் விரட்டும் காலம் வரும்..
ஓயாமல் காத்திருங்கள்...

பண்பாட்டு போராளிகளே...
பண்பட்டு செயல்படுங்கள்...
உரிமைக்காக
புண்படவும் தயாராகுங்கள்....

நம்நாடு உங்களால் உண்மையான
குடியரசு நாடாகட்டும்....
Monday 23 January 2017

இப்படியொரு போராட்டம் இனி வருமா?

இப்படியொரு போராட்டம் இனி வருமா?

எத்தனையோ ஆசிரிய சங்கப்போராட்டங்களில் கலந்துகொண்டிருக்கின்றேன்...

கைது செய்கிறோம் என்ற பெயரில் பயணியர் மாளிகையில் அல்லது திருமணமண்டபங்களில் தங்க வைத்து பின் விடுதலை செய்து விடுவார்கள்..

அப்போது அடையாத ஒரு உணர்வை கடந்த ஒரு வார கால போராட்டத்தில் உணர்கின்றேன்..

மாணவர்களின் மாண்பை உணர வைத்த போராட்டம்..
தலைவனின்றி ,எந்த வித தகராறுமின்றி ஒன்றுபட்டு அமைதியாக அறவழியில்,அகிம்சையில் போராடிய போராட்டம்...
சல்லிக்கட்டு குறித்த மாற்றுகருத்து இருந்தாலும் மாணவர்களோடு துணை நிற்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் முழு மனதோடு உறுதுணையாய் நின்ற காட்சி..

Sunday 22 January 2017

ஒன்றிணைந்து விடுங்கள் மாணவர்களே...

ஒன்றிணைந்து விடுங்கள் மாணவர்களே...

போராட்ட உணர்வு நீர்க்காமல் இருக்க...

அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்கள் தங்களை ஒன்றிணைத்து ஒரு அமைப்பு உருவாக்க வேண்டும்...உடனடியாக..

அதற்கு தலைமை தேவையில்லை பொறுப்பாளர்களே போதும்....

தமிழ்நாட்டின் உரிமைக்காக போராடும் உண்மையான அமைப்பாக சாதி,இன,மத,வேறுபாடில்லாத அமைப்பாக அது செயல்படவேண்டும்...

கட்சி,அரசியல்,நடிகர்கள் கலக்காத அமைப்பாக அது அமைவதே சிறப்பு..

எண்ணிக்கை முக்கியமல்ல..
நேர்மையானவர்களைக்கொண்டதாக அது உருவாகவேண்டும்...

கலைக்கும் சூழ்ச்சி துவங்கி விட்டது...

ஒன்றிணைந்து விடுங்கள் மாணவர்களே...

இனி உங்களை ஒன்றிணைய துரோகிகள் விடமாட்டார்கள்...

தமிழ்நாட்டையும்,தமிழனையும்,தமிழையும் காப்பாற்ற இனி யாரையும் நம்ப முடியாது..

மாணவர்களாகிய நீங்களே..காப்பாற்றுவீர்கள் என்ற நம்பிக்கை உருவாக்கிவிட்டீர்கள்...

ஐ.ஏ.எஸ் சகாயம் அவர்களிடம் ஆலோசனை கேளுங்கள்...அவர்களைப்போன்ற நல்ல உள்ளங்கள் உங்களை வழிநடத்துவார்கள்...

போராட்ட உணர்வை தேக்கி வையுங்கள்..

அது அடிக்கடி தேவைப்படும் நிலை தான் இன்று..

உங்கள் பகுதியில் நடக்கும் அநியாயங்களை பார்த்துக்கொண்டு சும்மா இருக்காதீர்கள்..

நியாயத்திற்காக உங்கள் குரல் எங்கும் ஒலிக்கட்டும்..

இனியாவது தமிழன் தமிழனாக வாழட்டும்..

பெரியாரின் விதைகள் முளைத்து விட்டதைக்காண்கிறேன்...

பெரியாரின் விதைகள் முளைத்து விட்டதைக்காண்கிறேன்...

தமிழன் உணர்வுள்ளவனாக,சுயமரியாதை உள்ளவனாக,தன்மானச்சிங்கமாக,சாதி ,இன,மத பேதமற்று ஒன்றிணைய ஆசைப்பட்ட தொண்டுக்கிழவனின் கனவுகள் இன்று தமிழகமெங்கும் நனவாகத்தொடங்கியுள்ளன...

ஆங்காங்கே சில துரோகிகள் முளைக்கலாம்..ஆனால் அவர்கள் இன்னும் ஒற்றுமையையே ,ஆவேசத்தையே,வளர்க்கின்றார்கள்.

தங்களைத்தாங்களே அடையாளப்படுத்தி தமிழினத்துரோகிகள் நாங்கள் என உலகிற்கு வெளிச்சமிட்டுக்காட்டுகின்றனர்.

இதற்கெல்லாம் அச்சப்பட..அவர்கள் முனைமழுங்கி வேடிக்கைப்பார்க்கும் இலவசத்திற்கு மயங்கிய பிச்சைக்காரர் கூட்டமல்ல..

அக்னிக்குஞ்சுகள்..அமைதியாய் போரிடுகின்றன...

ஏமாற்றமுடியாத தெளிவில் உள்ளதைப்பார்த்து அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்...


வெல்க...வெல்க மாணவர்கள் ஒற்றுமை..

Friday 20 January 2017

வெற்றி அவர்களுக்கே..


தங்களுக்கு தாங்களே கட்டுப்பாடு விதித்துக்கொண்டு....உலகத்திற்கே எடுத்துக்காட்டான ஒரு போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு ஒரு வீர வணக்கம்..

அலைஅலையாக மக்கள் கூட்டம் அவர்கள் பின்னே ஒன்றிணைய...பொறுமையாக இருங்கள் என வழிநடத்திக்கொண்டிருக்கும் மாணவர்களை எண்ணி பெருமையாக உள்ளது...

தங்களது குறிக்கோளை நோக்கி நிதானமாக போராட்டத்தை வடிவமைத்து..அரசையே உலுக்கிக்கொண்டிருக்கிறார்கள்..

தமிழர் உரிமைக்கு போராடுகிறோம் என அரசியல் செய்யும் போலிகளுக்கு மத்தியில் உண்மையான உணர்வோடு போராடும் தமிழ் இளைஞர்கள்...

புதுக்கோட்டையில் 3 வது நாளாக போராட்டம் மிகச்சிறப்பாக நடந்துகொண்டுள்ளது...
கொஞ்சநேரமாவது அவர்களோடு அமர்ந்து விட்டு போகனும் என்ற ஆவலோடு மக்கள் வந்து கலந்துகொண்டு அவர்கள் வெற்றியடைய வாழ்த்து சொல்லி செல்கின்றனர்..

அவர்களின் ஒற்றுமை மேலும் சிறக்கட்டும் ...

வெற்றி அவர்களுக்கின்றி வேறு யாருக்கு வரும்...?!

Wednesday 18 January 2017

அமைதிகாக்கும் அக்னிக்குஞ்சுகள்

அமைதிகாக்கும் அக்னிக்குஞ்சுகள்
----------------------------------------------------------

வெட்கமாக உள்ளது....

பிள்ளைகளை பனியில் வாடவிட்டு கொடுமை படுத்தும் அரசு...

மக்களால் மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தான் மக்களின் நியாயமான கோரிக்கையை புறக்கணித்து அதிகாரத்திமிரில், ஆணவத்தோடு ,அமைதியாய் போராடும் பிள்ளைகளை அடித்து நொறுக்குகின்றது..

வீட்டில் உறங்கவும்,உண்ணவும் முடியவில்லை...இது தமிழனுக்கு நடக்கும் போராட்டமா?அல்லது இந்தியாவிற்கும் பீட்டாவிற்கும் நடக்கும் போராட்டமா?

யாருக்கு பயந்து அமைதிகாக்கிறது...அரசு...

அக்னிக்குஞ்சுகள் தெருவில் இறங்கியுள்ளது என்பதை இன்னும் உணராமல் அலட்சியப்படுத்துவது அநீதியானது...

இப்போது பணிந்தால் பின் தமிழகத்திற்கு இழைக்கும் கொடுமைகளுக்கெல்லாம் போராட ஆரம்பித்துவிடுவார்கள், ஆட்சி செய்ய முடியாதே என்ற அச்சமும் ,இதற்கு பணியக்கூடாதென்ற வீம்பும் நம் பிள்ளைகளை போராட விட்டு வேடிக்கை பார்க்கிறது..

என்ன செய்ய முடியும் இவர்களால் என்ற அலட்சியம்..

வியப்பாக உள்ளது அவர்களின் அமைதி....போராட்ட குறிக்கோளை தெளிவாக தெரிவித்து எந்தவித வன்முறையும் இன்றி...போராடும் தன்மையை எங்கிருந்து கற்றார்கள்...

தமிழனுக்காக தானே அரசு...அவர்களின் உரிமையை மீட்டெடுக்க முடியாமல் எதற்கு ஆட்சியில் அமர வேண்டும்..

அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ள வேண்டும்...இந்த பண்பை...

பிள்ளைகளிடமிருந்து கற்றுக்கொள்வோம் இந்த அரிய பண்பை...

நள்ளிரவில் பெண்கள் இத்தனை ஆண்களுக்கு மத்தியில் பாதுகாப்பாக இருக்க முடியும் என்பது கனவிலும் நினைத்து பார்க்க முடியவில்லை...

இங்கு சாதி இல்லை,மதம் இல்லை,ஆண் பெண் பால் பாகுபாடு இல்லை..

எல்லோருக்கும் ஒரே குறிக்கோள்...
தமிழரின் உரிமை...ஒன்றே

வேடிக்கை பார்க்கும் நாமும் இணைய வேண்டும்...

சல்லிக்கட்டு...

உங்களை சிரம் தாழ்ந்து வணங்குகின்றோம்...இளைஞர்களே..

அத்தனை பெண்களும் உங்களுக்கு மத்தியில் பாதுகாப்பாய் இருக்கும் போது மனம் நெகிழ்வாய் ,பெருமையாய் இருக்கின்றது என் பிள்ளைகளே..

இத்தனை பண்பாடும் ஊறிய குருதியில் ...பெண்ணினம் அச்சமின்றி போராடுவதை நினைக்கையில் ...பெருமிதப்படுகின்றேன்...

உங்களின் நோக்கம் தெளிவாய்...குறிக்கோளை நோக்கி பயணிக்கும் உங்களை பார்த்து விஷமிகள் அச்சத்தோடு அமைதி காப்பதை எண்ணி உள்ளம் மகிழ்கின்றது..

கலாமின் குழந்தைகளே உங்களை இனி யாரும் ஏமாற்றி பிழைப்பு நடத்த முடியாது என நிரூபித்து விட்டீர்கள்..

சூடு சுரணையற்ற மாக்களின் மத்தியில் சுடர் விளக்காய் காண்கையில் எதிர்காலம் நம்பிக்கை ஒளியை பாய்ச்சுகின்றது..

எதையும் எதிர்பார்க்காது...யாருக்கும் அடிபணியாது ...
எதிர்த்து போராடும் வல்லமையாளர்களே உங்கள் போராட்டம் வெல்லட்டும்...

இத்தனை ஆண்டுகளாய் சுரண்டி வாழ்ந்த கூட்டம் ...திரும்பி பார்க்காது ஓடட்டும்...

பெண்கள் சுயநலமானவர்கள் என்ற கருத்தை உடைத்து போராட்டக்களத்தில் நிற்கும் வீராங்கனைகளே..
நாளை உங்களோடு உங்களின் பெற்றோர்களும் களமிறங்குவார்கள்....

வேஷதாரிகளின் வேடம் கலையும் நாள் வந்து விட்டது..
உங்களை குறை சொல்லியே வாழும் கூட்டம் தலைகவிழ்ந்து நிற்கின்றது..

வாழ்த்துகள் குழந்தைகளே...

Tuesday 17 January 2017

மின்னூலாக்க....

புதுகை கணினித்தமிழ்ச்சங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கையாக...

உங்கள் நூல்கள் மின்னூலாக அமேசானில் விற்க...

அழைக்கின்றோம் வாருங்கள்.

நாள்:18.1.17
காலம்:5.30.-8.30
இடம்:மாரீஸ் ஹோட்டல்.புதுக்கோட்டை
[பழனியப்பா பேரூந்து நிறுத்தம் அருகில்]


இன்று மாலை [18.1.17] 5.30 மணியளவில் புதுக்கோட்டை மாரீஸ் ஹோட்டலில் நடைபெற உள்ள கூட்டத்திற்கு வருக..

உங்களது நூல் அல்லது நூலாக்க வடிவில் உள்ள உங்களது படைப்புகளும் ,உங்களது புகைப்படமும் கையில் கொண்டுவரவேண்டும்...

இன்று புத்தகம் இல்லை, ஆனால் விரைவில் மின்னூலாக்கம் செய்ய வேண்டும் என்று விரும்பினாலும் ..வரலாம்..

உங்கள் சந்தேகங்களை நேரில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

எந்த வித செலவுமில்லை என்பது முக்கியம்..


Monday 16 January 2017

நூல் அறிமுகம் -தைராய்டு ஏன்? எதற்கு?எப்படி?


நூல் அறிமுகம் –

தைராய்டு.-ஏன்? எதற்கு? எப்படி?
ஆசிரியர்.ஜி.முத்துராமன்.

பதிப்பகம் –ஆரோக்கியம்&நல்வாழ்வு வெளியீடு.

கடந்த 6 வருடங்களாக தைராய்டு குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டு மாத்திரையோடே எழும் எனக்கு அது குறித்த ஒரு விழிப்புணர்வை உண்டாக்கி என்னை நானே சீர் செய்து கொள்ள உதவிய நூல் இது.

இந்நூல் உருவாக காரணமாக இருந்த நல்ல உள்ளங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றியையும் பாராட்டுகளையும் கூறிக்கொள்கின்றேன்.

எத்தனையோ புத்தகங்களைpபடிக்கின்றோம்..
அத்தனையும் ஏதோ ஒரு வகையில் நம் மனதில் இடம் பிடிக்கின்றன…

நமது உடல் ஆரோக்கியம் குறித்து படிக்க வேண்டிய நூல்களில் ஒன்றாக ஆரோக்கியம் &நல்வாழ்வு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் தைராய்டு நோய் குறித்த விழிப்புணர்வு நூல் இது.

Thursday 12 January 2017

பொங்கல் வாழ்த்து


 
 
அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்..
தமிழர் கொண்டாடிய ஒரே விழா...
உலகுக்கு நன்றி கூறும் விழாவை அறிமுகப்படுத்திய தமிழனின் பெருமையைக்கூறும் பெருவிழா..
 
இன்று எங்கள் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடினோம்..மாணவிகளும் ஆசிரியர்களு
ம் இணைந்து பொங்கல் விழாவை மிகச்சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தது மறக்க முடியாதது.முன்னெடுத்து வைத்த தலைமையாசிரியருக்கு மிக்க நன்றி..
நேற்று மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் முதல் பரிசை பெற்ற கூடுதல் மகிழ்வும்..Wednesday 11 January 2017

தமிழர் திருநாள்

என்று மாறும் இந்த இழிநிலை

அன்று
அறுவடை மகிழ்வில்
ஆராதித்து கொண்டாடிய
தமிழர் திருநாள்..

இன்று
வாடிய பயிர்களுக்காக..
ஆசையாய் வளர்த்த காளையுடன்
விளையாடுவதற்காக...
போராடுகின்ற விழா.
வருடந்தோறும்...

சுதந்திர இந்தியாவில்
நன்றி கூறும் விழாவிற்காக
போராடுகிறாய்..தமிழா...
தமிழினம் இணையும் காலம்
விரைந்து வரட்டும்...

தேவை
கொஞ்சம் உப்பு
கொஞ்சம் சூடு..

Thursday 5 January 2017

தங்கல்---திரைக்காவியம்

பெண்களுக்கு பெருமை சேர்க்கும் படம் “தங்கல்”

பெங்களூருவில் சாலையில் நடந்த பெண்ணை போற போக்கில் பாலியல் வன்முறை செய்யலாம் என்ற பொதுப்புத்தியை ஆண்களுக்கு உண்டாக்கியுள்ள இந்த சமூகத்தில் தான் இப்படிப்பட்ட படங்களும் வந்து கொஞ்சம் சுவாசத்தையும்,ஆறுதலையும் தருகின்றன..

முதலில் இப்படத்தின் இயக்குநருக்கும்,தயாரித்து அப்படத்தில் வாழ்ந்து இருக்கின்ற அமீர்கானுக்கு பெண் இனத்தின் சார்பில் தலைவணங்கி நன்றியை கூறிக்கொள்கின்றேன்..

அதில் வாழ்ந்து இருக்கின்ற நடிகர்கள் மட்டுமல்ல,தொழில்நுட்பக்கலைஞர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்...

ஒரு தலைசிறந்த ஓவியமாக,சிற்பமாக”தங்கல்”மிளிர்கின்றது எனில் மிகையில்லை..

Wednesday 4 January 2017

வீதி கலை இலக்கியக்களம் -34


                                                                      வீதி
                                                  கலை இலக்கியக்களம்-34
 நாள்:25.12.16
இடம் :ஆக்ஸ்போர்டு சமையற்கலைக்கல்லூரி.புதுகை

வரவேற்புரை :

கவிஞர் சோலச்சி தனது கவியுரையால் தலைவர் மற்றும் சிறப்பு விருந்தினர்களையும் ,அனைவரையும் வரவேற்றவிதம் சிறப்பு.

அஞ்சலி :

முன்னாள் முதலமைச்சர் செல்வி .ஜெயலலிதா அவர்களுக்கும்,கவிஞர் இன்குலாப் மற்றும் இசைவேந்தர் பாலமுரளிக்கிருஷ்ணா ஆகியோருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தலைமை:கவிஞர் ரேவதி

மகிழ்ச்சியை வெளியில் தேடாதீர்கள் அது உங்களுக்குள்ளேதான் இருக்கின்றது என்னும் கருத்தை ஒரு கதை மூலம் கூறி நிகழ்வை சிறப்பாகத்தொடங்கி வைத்தார்.

பாடல்:

கவிஞர் முருகதாஸ் இன்குலாப்பின் மனுசங்கடா பாடலை கீழ்வெண்மணி நினைவுநாளுக்காக சமர்ப்பித்தார்.

கவிஞர் பவல்ராஜ் அத்தமகனே அத்தானேஎன்ற கிராமியப்பாடலை இசையுடன் பாடிய விதம் மிக அருமை.

கவிஞர் மாலதியின் பள்ளி மாணவி குழந்தைப்பாடகர் வெர்ஜின் அழகே அழகு பாடலைப்பாடி அசத்தினார்.

கவிஞர் வைகறையின் பள்ளி மாணவி எவனோ ஒருவன் வாசிக்கிறான்என்ற பாடலை இனிமையாகப்பாடி நிகழ்விற்கு மெருகூட்டினார்.

கவிதை

கவிஞர் நாகநாதன் மரங்கள்”,மற்றும் மேலும் சில கவிதைகளைப்படைத்தார்.

கவிஞர் பாரதி ஏகலைவன்திருநங்கை,நான் கிறுக்கன்,நான் சொல்லுறத கேளுங்க என்ற தலைப்பில் கவிதைகள் வாசித்தார்.

கவிதை:கருப்பையா தலைமை ஆசிரியர் பொன்னமராவதி
வெள்ளைப்பணம் வைத்திருப்பவர்கள்,வெயிலில் நிற்கவேண்டும் ஏன்
என்பது போன்ற கேள்விகளைக்கொண்ட கவிதையை வாசித்தார்.

 கவிஞர் சிவக்குமார் கீற்ருக்குள் கருகின நாற்றுக்க”,நான் சொல்லுறத கேளுங்க,”ஆகிய கவிதைகளை வாசித்தார்.

கவிஞர் காசாவயல் கண்ணன் அப்போ நீட்டா எழுதுனா பாசு,இன்று நீட் எழுதுனா தான் பாசு ,போன்ற அருமையான குறுங்கவிதைகளை வாசித்து நிகழ்வினை சிறப்பித்தார்

கவிஞர் சாமியப்பன் எதிர்த்து கேட்க வேண்டிய எல்லோரையும்,வரிசையில் நிற்க வைக்கின்றது அதிகாரவர்க்கம்.என்ற கவிதையையும்

கவிஞர் பாரதிச்செல்வன்கருப்பு பண முதலைகளை பிடிக்க வலை விரித்தார்கள்என்ற கவிதையையும்,

எழுத்தாளர் செம்பை மணவாளன்காதல்ரசம் சொட்டும் கவிதையையும்,

வீதியில் விருந்தாக அனைவருக்கும் அளித்து மகிழ்ந்தனர்.

நூல் விமர்சனம்

கவிஞர் கூரா.அம்மாசையப்பனின் ஞாபகநடவுகள்வளரி இதழின் கவிப்பேராசான் மீரா விருது பெற்ற நூலின் சிறப்புகளை கூறிய விதம் அருமை.

ஏற்புரை

கவிஞர் கூரா .அம்மாசையப்பன் தனது ஏற்புரையில் அனைவருக்கும் நன்றி கூறி அவர் ரசித்த கவிதைகளையும்,கவிதையின் தன்மைகளையும் .
அவர் பணிபுரியும் இரும்பு உருக்காலையில் செயல் பட்டுக்கொண்டிருக்கும் மனமகிழ் முத்தமிழ் மன்றத்தின் செயல்பாடுகளையும்,அம்பறா என்ற சிற்றிதழ் குறித்தும் மிகச்சிறப்பாக பகிர்ந்து கொண்டார்.
வீதி சாதிக்க நினைப்பவர்களின் சங்கமம் என்று பாராட்டினார்.

கட்டுரை

நிருபர் ம.மு.கண்ணன் அவர்கள் ஆரோக்கியம் குறித்த இயற்கை உணவுகளைக்குறித்த ஒரு கட்டுரையை படைத்தார்.

சிறப்பு விருந்தினர்.
கவிஞர் அன்னக்கொடி ஸ்ரீவில்லிபுத்தூர்.

கவிஞர் நாகநாதனின் மரம் குறித்த கவிதையைப்பாராட்டி,அவர் எழுதிய மரம் குறித்த கவிதையை வாசித்தார். புதுக்கோட்டையின் சிறப்புகளை சங்க இலக்கியங்களிலிருந்து எடுத்துக்காட்டினார்.
விமர்சனம் எவ்வாறு இருக்க வேண்டும் .திறனாய்வு செய்யும் போது எதைப்பற்றியெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கூறியது மிகச்சிறப்பு.

சிறப்பு நிகழ்வு

கவிஞர் கீதா பேலியோ டயட் குறித்த சிறு அறிமுகம் செய்தார்,வீடியோக்காட்சியும் காட்டப்பட்டது.

நன்றியுரை

கவிஞர் முருகதாஸ் நன்றி கூற வீதிகலைஇலக்கியக்களம் சிறப்பாக முடிந்தது.

நிகழ்வை திட்டமிட்டு சிறப்பாக செய்த அமைப்பாளர்கள் கவிஞர் சோலச்சி,கவிஞர் முருகதாஸ் ஆகியோரை வீதி பாராட்டி மகிழ்கின்றது.