World Tamil Blog Aggregator Thendral: நிலா முற்றம்
Showing posts with label நிலா முற்றம். Show all posts
Showing posts with label நிலா முற்றம். Show all posts

Sunday, 27 September 2015

முழுநிலா முற்றம் -9

இன்று 27.9.15 முழுநிலா முற்றம் கூட்டம் 9 புதுகையில் உள்ள நண்பா அறக்கட்டளையில் நடந்தது.

பாடலாசிரியர் பி.கே .முத்துசாமி அவர்களைப்பற்றிய ஆவணப்படம் திரையிடப்பட்டது.
கவிதை

கவிஞர் நாகநாதன்-
பாஸ்புக்,காதல்,காணாமல் போய்விட்டேன் என்ற தலைப்புகளில் கவிதை வாசித்தார்...

ஆசிரியர் மலையப்பன் காதல்,ஆசிரியரிடம் பாராட்டு என்ற கவிதைகளை வாசித்தார்.

கவிஞர் செல்வா சின்னவள் பற்றிய கவிதை வாசித்தார்.

ஹைக்கூ-கவிஞர் வைகறை அம்மாவைப்பற்றி வாசித்தார்


பாடல்

கவிஞர் நீலா எஸ்.எஸ்.ஏ.திட்டத்திற்காகப்பாடப்பட்ட பாடலைப்பாடி நிலாமுற்றத்தை இனிமையாக்கினார்..அதுவரை மேகத்திற்குள் மறைந்து நின்ற நிலா மெல்ல எட்டிப்பார்த்து சிரித்தது..


நூல் விமர்சனம்-உணர்வும் உருவமும்-திருநங்கை ரேவதி

கவிஞர் கீதா திருநங்கை ரேவதி எழுதிய நூலை விமர்சனம் செய்தார்.திருநங்கைகலைப்பற்றி சமுதாயம் கொண்டுள்ள பொதுப்புத்தியை மாற்றி அவர்களையும் மதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்க வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது.

நிலா முற்றத்தை மேலும் எப்படி செழுமை படுத்தலாம் என விவாதிக்கப்பட்டது.

அடுத்த கூட்டம் குழந்தைகள் பங்கு பெறும் நிகழ்வாக கவிஞர் ரேவதியின் வீட்டில் நடத்த திட்டமிடப்பட்டது...












Monday, 24 August 2015

முழு நிலா முற்றம்-8

முழு நிலா முற்றம்-8

நாள்:29.08.15[சனிக்கிழமை]
இடம்:
இனியநிலா இல்லம்,
122 சத்தியமூர்த்திநகர்,
புதுக்கோட்டை.

அமைப்பு:கவிஞர் சோலச்சி.

வேகமாக வளரும் நிலவை ஏனிந்த அவசரமென்றேன்.... புதுகையில் அனைவரையும் காணும் ஆவலில்என்றாள்.சென்ற மாதம் உங்களை சந்தித்து கலைந்தபின் பிரிவின் வேதனையில் கரைந்து மறைந்து, பின் காணும் ஆவலில் விரைவாய் வளர்கின்றேன் என்றாள்...

என்ன வேண்டுமுனக்கு என்றேன்..இனிக்கின்ற செந்தமிழின் சுவைதனை கவிதையாகவும் ,இசையாக பாடி மகிழ்ந்து,இயலாக பேசிக்கலக்கும் ஆவலில் காத்திருக்கின்றேன் தோழி...இதைத்தவிர வேறென்ன வேண்டுமென ஆசையாக உரைத்தவளை ஏமாற்றாது அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகின்றோம்.




Friday, 31 July 2015

முழுநிலா முற்றம் -கூட்டம் 7

முழு நிலா[நீலநிலா] முற்றம்- கூட்டம் 7
நாள்[31.7.15]

இன்று முழுநிலா முற்றத்தின் ஏழாவது கூட்டம் சகோதரர் வைகறை வீட்டு மொட்டைமாடியில் நிகழ்ந்தது....வாசலில் கலர்கோலமிட்டு அனைவரையும் வரவேற்றார் சகோதரி ரோஸ்லின்.

முதலில் மதிப்பிற்குரிய அப்துல்கலாம் அவர்களுக்கும்,மதுக்கடை ஒழிப்பிற்காக போராடி உயிர் நீத்த அய்யா சசி பெருமாள் அவர்களுக்கும் ஒருநிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது.







நிகழ்வுகள்

1]படித்தபுத்தகம் பற்றி கூறும் நிகழ்வில்

கீதா  பாலகுமாரனின் ”உடையார் ”நாவல் குறித்தும்,

கவிஞர் மீனாட்சி அண்டனூர் சுராவின் ”மாண்புமிகு மதிப்பெண் “கதைக்குறித்தும்,
கவிஞர் ஈழபாரதி -தி இந்துவின் ”கடல்” நூல் குறித்தும்,

சகோதரர் கஸ்தூரிரெங்கன்” முஸ்லீம் தீவிரவாதிகளா?”என்ற நூல் பற்றியும்,

கவிஞர் சோலச்சி  -அன்வர் பாலசிங்கம் எழுதிய ”கறுப்பாயி என்கிற நூர்ஜஹான் ”உண்மைக்கதைக்குறித்தும்

கவிஞர் பொன்.க அய்யா மற்றும் கவிஞர் அப்துல் ஜலீல் இருவரும் கலாமின் ”எழுச்சிதீபங்கள் “குறித்தும்,
கவிஞர் நீலா “தேவதாசியரும் கட்டமைக்கப்பட்ட வரலாறும்”நூல் குறித்தும்,
கவிஞர் வைகறை “ஜப்பான்” என்ற சிறு நூல் குறித்தும் தங்களின் கருத்துகளைக்கூறினார்கள்.

2]கதைக்கூறல்
தங்கை மைதிலி “புத்தவிக்ரகம்’பற்றி வலைப்பூ நண்பர் திண்டுக்கல்தனபாலன் எழுதிய கதைக்குறித்து பகிர்ந்தார்.

திருச்சியிலிருந்து இருந்தபோதும் எப்படியாவது இந்நிகழ்விற்கு வந்துவிடவேண்டுமென்ற ஆவலில் சிரமப்பட்டு வந்து கலந்துகொண்ட தோழி ஜெயா எஸ்.ராவின்” வளையல்”பற்றியக்கதையைக்காட்சிப்படுத்தி அசத்தினார்.

3]பாடல்

முழுநிலாமுற்றத்தின் முக்கியத்துவம் பெற்றதாக கவிஞர் நீலாவின் ”பால் போல் நிலா”என்ற திருமணத்திற்குமுன் கனவு காணும் பாடல்கள் தொகுப்பைப்பாடி அனைவரின் சிறுவயது கனவுகளை மீட்டியது மிக அருமை .

கவிஞர் நாகநாதன் ”கவிதைபாடுகுயிலே” என்ற பாடலைப்பாடினார்.

முழுநிலாமுற்றத்தின் செல்லமகள் தமிழ் ஓவியா தனது தாத்தா எழுதிய “எல்லைத்தாண்டி வேதாரண்யம்”என்ற சமூகப்பாடலை இனிமையாகப்பாடினார்.

 கூட்டத்தின் புதிய அறிமுகம் கணேசன் [என் மாணவன்] நான் கொண்டகாதலடி என்ற கிராமியப்பாடலைப்பாடி அனைவர் மனதையும் கவர்ந்தார்.

4]கவிதை வாசித்தல்

நாகநாதன்---” யாரின் அனுமதி இன்றி”என்ற கவிதையும்

மீனாட்சி--”-உலகப்பார்வையை தன்மீது
                     திருப்பியத்தலைவர்”கலாம் குறித்த கவிதையும்
பொன்.க அவர்கள் ”மரணதண்டனைக்கூடாதென”- மது இன்னும் எத்தனை உயிர்களைக்குடிக்கும் எனக்கேட்டார்.

நீலா எழுதிய ”நான்கு ஜாமங்களின் கதை” மதுவால் கணவன் மனைவி இடையே தாம்பத்ய உறவில் ஏற்படும் சிரமங்களைக்காட்டிய விதம் அருமை.

கீதா.”தங்கத்தட்டென்றேன்”என்ற .நிலா பற்றியக்கவிதை வாசித்தார்.

அமிர்தாதமிழ் எழுதிய “எங்கள் தலைக்கொய்து”என்ற ரோஜாக்கவிதை அருமை.

கவிஞர் செல்வா தான்  கேட்டு அதிர்ந்த மாணவன் கூறிய ”அப்பாக்கு தெரியாம”என்ற கவிதையைப் பகிர்ந்தார்.

5]நிகழ்வின் புதுமையாக கவிஞர் வைகறை

ஹைக்கூ வாசித்தல் என்ற தலைப்பில் ஹைக்கூ கவிதை அடங்கிய தாள்களை அனைவருக்கும் தந்து படிக்கக்கூறி அவர்களுக்கே அக்கவிதை என்றார் .அனைவரும் மகிழ்வுடன் கலந்து கொண்டு வாசித்தனர்...

தக்கமுன் தாயாரிப்புடன் அனைவரும் வந்து நிகழ்வைச்சிறப்பித்தது முழுநிலா முற்றத்தின் வளர்ச்சி சரியான பாதையில் சென்று கொண்டுள்ளது என்பதை உணரமுடிந்தது....நடுவில் வந்து விண்மீனாய்  வெளிச்சம்தர முனைந்தது மின்மினிப்பூச்சி...மனநிறைவுடன் முழுநிலா எங்களை வழி அனுப்பி வைத்தது...

நிகழ்வை செவிக்குணவுடன் வயிற்றுக்கும் கோதுமைப்பாலும் ,பிஸ்கட்டும் தந்து சிறப்புடன் நடத்திய வைகறை மற்றும் ரோஸ்லின் ஆகியோருக்கு மனம் நிறைந்த நன்றி


Thursday, 2 July 2015

முழு நிலா முற்றம் -6ஆவது கூட்டம்


முழு நிலா முற்றம்  -6ஆவது  கூட்டம்

நாள் 1.07.15

இடம் :கவிஞர் நா.முத்துநிலவன் அய்யா இல்லம்

மாலை 6 மணி அளவில் அய்யாவின் வீட்டில் முழுநிலா முற்றம் துவங்கியது.எங்களுக்கு முன் நிலா வந்து காத்திருந்தது..

.மொட்டைமாடியில்....மழைக்காற்று வருட தென்னங்கீற்றின் சலசலப்பில் கூட்டத்தின் பாடல் நேரம்....

கவிஞர் முத்துநிலவன்  மதுரை மீனாட்சிக்கு கல்யாணம் மற்றும் அச்சமும் நாணமும் என்ற முற்போக்கு சிந்தனையுள்ள பாடல்களைப்பாட,

கவிஞர் நீலா பச்சை மரகத பட்டுமற்றும் மயிலும் குயிலும் என்ற பாடல்களைப்பாடி தனது இனியக்குரலால் அனைவர் மனதையும் சுண்டியிழுக்க,

தமிழாசிரியர் சண்முகம் அவர்கள் கண்ணுக்கு குளமேது என்ற கர்ணன் பட பாடலைப்பாட,

சிறந்த படிப்பாளியாகிய சுதந்திரராஜன் சிந்துநதியின் மிசை நிலவினிலே என்ற பாரதியின் பாடலைப்பாட ,

கவிஞர் நாகநாதன் சங்கீதஜாதிமுல்லையைப்பாட,

கவிஞர் சோலச்சியின் கிராமத்து பாடலும்,கவிஞர் மகா.சுந்தர் அமுதே தமிழே என்ற பாடலும்...

முதல்முறையாக  சீவிசிங்காரிச்சு என்ற சிறுவயது குழந்தைத்திருமணம் பற்றிய பாடலை கவிஞர் கீதா பாட, முழுநிலா முற்றம் கலைக்கட்டியது...

சிறிது வயிற்றுக்கும் என்ற வகையில் பப்பாளிப்பழம்,கொய்யாப்பழம்,மாம்பழம் தட்டில் தவழ்ந்து வந்தன...தேநீருடன்...மருமகள் இலட்சியாவின் அன்பு நிறைந்த கைகளில்

கவிதை நேரம்

தமிழ் ஓவியா” லாவண்யாவின் கூந்தல்” என்ற கவிதையில் கருநிற அருவி என வர்ணித்தாள்...

எம்ஃபில் மாணவர் நாகநாதன்” அந்திமாலைப்பொழுதில் /திரும்பத்திரும்ப கண்ணடித்தது/தெருவிளக்கு”என்ற கவிதையுடன்.மேலும் பலகவிதைகளையும் தந்தார்.

கவிஞர் ஈழபாரதி" நிலா" பற்றியக்கவிதையைப்படித்தார்.

கவிஞர் கீதா" இயற்கை "பற்றிய கவிதையை வாசித்தார்.

கவிஞர் வைகறை படித்ததில் பிடித்த கவிதை என கூறியதில் ஒன்று
”ஏதேனுமொரு மின்னலின்/கிளைகளைப்பிடித்துக்கொண்டு/கீழிறங்கி விடுகிறது/மழை என்ற கவிதையை ச .மணி எழுதிய ”வெயிலில் நனைந்த மழை” என்ற நூலில் இருந்து கூறினார்.

மழைப்பற்றி கவிதை படிக்கையில் மழையும் வந்து ரசித்தது.
இந்நூலை கவிஞர் முத்துநிலவன்  அறிமுகம் செய்ய தமிழாசிரியர் சண்முகம் பெற்றுக்கொண்டார்.
கவிஞர் வைகறை எழுதிய
”சிலேட்டில் விழுந்த முட்டை “கவிதை அருமை.

கவிஞர் மல்லிகாவின் “ஆணாதிக்கம் கவிதை சிறப்பு,

சோலச்சியின் கவிதை குடும்பத்தகராறில் குழந்தையின் வலியைக்கூறியது,தனது” முதல்பரிசு “என்ற சிறுகதை நூல் வெளியீட்டு விழா பத்திரிக்கையை சோலச்சி வழங்கி அனைவரையும் விழாவிற்கு அழைத்தார்
தங்கை மைதிலி  சுடச்சுட எழுதிய கவிதையில்”நதி நடுங்கியது “என்ற சொல்லாடல் அனைவராலும் பேசப்பட்டது.

மீனாட்சிசுந்தரம் அவர்களின் மணவுறவு,தலைக்கவசம்,

பொறியியல் மாணவர் இராமதாஸ் எழுதி வாசித்த”உழவனின் வேதனைப்பற்றிய கவிதையும்,

ஆசிரியர் அமிர்தாவின் ”இயற்கை பேச”என்ற கவிதையும்

கவிஞர்ரேவதியின் “வான்நிலா எட்டிப்பார்த்து”என்ற கவிதையும் கவிதை நேரத்தை சிறப்பித்தன.

ஆணாதிக்கம் பற்றிய கவிதையுடன் ,மழைநேரத்தில் சுடச்சுட மசாலாபோண்டா தந்து பசியை போக்கினார் சகோ மல்லிகா.

மருமகள் இலட்சியா அனைவருக்கும் அழகாய் அன்புடன் பரிமாறினார்.

சகோதரர் கஸ்தூரி ரங்கன் தங்கை மைதிலியுடன் வந்தபோது அவரின் பிறந்தநாளை முன்னிட்டு ஆங்கிலத்தில் அனைவரும் வாழ்த்த ,அவரோ தமிழில் இன்னும் கண்டுபிடிக்கல வாழ்த்துபாடல் என கவலைப்பட உடனே முத்துநிலவன் அய்யா தமிழில் பிறந்தநாள் வாழ்த்து பாடி சகோவின் மனக்குறையை  நீக்கினார்....”வெயிலில் நனைந்தமழை “முழுநிலா முற்றத்தின் பரிசாக தங்கை மைதிலியால் சகோ கஸ்தூரிரங்கனுக்கு வழங்கப்பட்டது..
சுதந்திரராஜன் அவர்கள் தான் படித்த “காலம் தோறும் பிராம்மணீயம்”,”அசுரா”,”சரயு “ஆகிய நூல்களைப்பற்றிய கூறியது மிகச்சிறப்பாய் அமைந்தது,
மீனாட்சி,சோலச்சி,கீதா ஆகியோர் தங்களது அனுபவங்களைப்பற்றிக்கூற முழுநிலா முற்றம் குடும்ப சந்திப்பாக இனிதாய் முடிந்தது.நிகழ்ச்சியைக்கண்டு மகிழ்ந்த நிலா சிரித்துக்கொண்டே மறைந்தது கருமுகிலின் பின்....
                 

Tuesday, 2 June 2015

முழுநிலா முற்றம் -5 ஆவது கூட்டம்

இன்று முழுநிலா முற்றம்-5 ஆவது கூட்டம்

புதுகையில் உள்ள ஏ.எல்.ஏ.மழலையர் பள்ளியில் சிறப்புடன் நடந்தது.

பௌர்ணமி நிலா மேகக்கூட்டங்களுக்கிடையே மறைந்து விளையாட...மேகம் தரை தொட்டு மகிழ்ந்தது...

நாகநாதன் தனது தேடுகிறோம் என்ற கவிதையை வாசிக்க,

 அமிர்தா தமிழ் அவரளின் புதல்வி எழிலோவியா நிலாவைப்பற்றி குட்டிக்கவிதை வாசித்ததுடன்,சுப உதயக்குமார் எழுதிய” பச்சைத்தமிழ் மனது” என்ற நூலை பற்றி விமர்சனம் செய்த விதம் அருமை...

பள்ளியின் முதல்வர் அண்ணாத்துறை அவர்கள் படித்ததில் பிடித்தது என கவிஞர் நா.காமராசு  வின்  அம்மாவாசை பற்றிய கவிதை,கண்ணதாசனின் ”மாங்கனி” என்ற கவிதை நூல் பற்றியும் துவக்க காலத்தில் தான் எழுதிய வாசித்த கவிதைகளையும் கூறினார்.

கவிஞர் மகா.சுந்தர் இறையன்பு அவர்களின் நூலில்,பூனைக்கு யார் மணியைக்கட்டுவது என்ற கதை ,
கோன் ஐஸ் உருவான வரலாறு
முன்னாள் பிரதமர் மாண்புமிகு நேரு அவர்கள் தனது நேரத்தை திருடிய விதம் பற்றியும் கூறி,
கவிஞர்களை விட உழவனின் கூற்றான அடர்ந்த வனத்தை
  “ஈ புகுந்தால் சிறகொடியும்”ன்ற கூற்றின் சிறப்புக்குறித்தும்

 அமைதியான கடல் ஆற்றலுள்ள மாலுமியை உருவாக்கும் என்ற ஆட்டோவில் எழுதப்பட்ட சிந்தனையை பகிர்ந்ததுடன் ..முடிவில் ஆனந்தயாழை மீட்டுகிறாய் என்ற தேசிய விருது பெற்ற  பாடலைப்பாடி கூட்டத்திற்கு மெருகூட்டினார்.

தனது குடும்பத்துடன் கலந்து கொண்ட கவிஞர் வைகறை கூட்டத்தை மேலும் செம்மையாக்கும் கருத்துகளை கூறியதுடன்.ஒரு நாளில் 24 நான்கு மணி நேரத்தை அதிகரிக்கும் யுக்தியை கூறினார் .

சிங்கப்பூரில் பணி புரியும் முகநூல் நண்பர் யாழிசை மணிவண்ணன் அவர்களின் கவிதைகளில்
         ” சுருங்கிய பின்
         சுமையாய் தெரிகிறது
        குடை”
என்ற கவிதை வாழ்வின் யதார்த்தத்தைச்சுட்டுவதாய் அமைந்தது.

கவிஞர் நீலாவின் பயண அனுபவம் எங்களையும் அவர்களுடன் பயணிக்க வைத்தது...இறுதியில் நிலாவைப்பற்றி பாடலை பாடி கூட்டத்தை இனிமையாக்கினார்...ஆலங்குடியிலிருந்து இதற்காகவே வந்த அவரின் பண்பை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

உதவி தொடக்கக்கல்வி அலுவலர் ஜெயா  அருண் மழலையர் பள்ளியில் தான் பார்த்து வியந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்..

நான் நிலா பற்றிய கவிதைகள் வாசித்து,மதுரையில் பார்த்த பொன்னியின் செல்வன் நாடகத்தைக்குறித்தும் பேசினேன்.

நிகழ்வின் சிறப்பாக கவிஞர் ரேவதி தனது தனி நடிப்புத்திறன் மூலம் நாடகம் நடித்து அனைவரையும் வயிறு வலிக்க சிரிக்க வைத்தார்.  திருமிகு.வேலு.விஜயபாரதி,தினேஷ்குமார்,மணிவண்ணன்,லாவண்யா,சகோதரி ரோஸ்லின்,ஜெய் குட்டி ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முழுநிலா முற்றத்திற்கு இடத்துடன் ,பால்கேக்,பப்ஸ்,டீயும் தந்து வயிற்றுக்கும் உணவளித்து மகிழ்ந்தார் பள்ளியின் தாளாளர்.திருமிகு .அண்ணாத்துரை. தோழி ஜெயா கோதுமைப்பால் அளித்து கூட்டத்தை நிறைவு செய்தார்...

மழையும் கலந்து கொண்டு முழு நிலா முற்றத்தின் ஐந்தாவது கூட்டத்தை சிறப்பித்தது.

Saturday, 4 April 2015

4.4.15-முழு நிலா முற்றம்- மூன்றாவது கூட்டம்



4.4.15-முழு நிலா முற்றம்- மூன்றாவது கூட்டம்

காமராசபுரத்தில் உள்ள ரேவதி தமிழாசிரியர் வீட்டில் நடந்தது மழலைகள் கூட்டமாகவே கலகலன்னு இருந்தது.குழந்தைகள் விடுகதைக்கேட்டு அசத்திவிட்டார்கள் .நடனம் ஆடி மகிழ்வித்தார்கள்.

நிலாவைப்பற்றி கூறுங்கள் என்றதும் ஒருவன் அதைபார்த்தா என் கைக்குள்ள வச்சுக்கனும் போலருக்கு ஆனா அது எல்லாருக்கும் சொந்தமாச்சேன்னான் பொதுவுடமைச் சிந்தனைவாதியாய் .

கவிஞர் நீலா  ஷாஜகான் -மும்தாஜ் கதை குழந்தைகளுக்காக் கூறிய போது நாங்களும் மெய்மறந்து கேட்டோம்.

கவிஞர் வையாபுரி கவிதை வாசித்தார்.

கவிஞர் சிவா கலவையான திரையிசைப்பாடல்கள் பாடி அசத்தினார்.

கவிஞர் சுரேஷ்மான்யா நிலாப்பற்றியக்கவிதைக்கூறி மாணவர்களுக்கு கற்பனை வளர ஊக்குவித்தார்.உடனே ஒருவன் நிலா எப்போது டியூப்லைட் மாதிரி வெளிச்சமாருக்கும் ஆனா இன்னைக்கு குண்டுபல்பு மாதிரி மஞ்சளா இருக்குன்னான்.ஒருவன் அம்மா தட்ட வீசிட்டாங்க எனக்கு எடுத்து தாங்க சாப்பிடனும் என்றான்.

கவிஞர் ரேவதி பூமி பற்றியக்கவிதை வாசித்தார்கள்.

கவிஞர்சோலச்சி விடைகூறமுடியாத விடுகதைக்கூறி மாணவர்களிடம் மாட்டிக்கொண்டார்.
நிலா எல்லாவற்றையும் வேடிக்கைப்பார்த்துக்கொண்டு ரசித்தது.
மாணவர்களுக்கான ஒரு மலையாளப்பாட்டு ஒன்றை நான் பாட மாணவர்களும் சேர்ந்து பாட உண்மையில் நிறைவாக இருந்தது..
மாணவர்கள் மனமின்றி கலைந்தார்கள்

சிறப்பாக நடத்திய ரேவதிக்கு வாழ்த்துகள்.

அடுத்தக்கூட்டம் தோழி ஜெயா வீட்டில் கீரனூரில் சித்திராப்பௌர்ணமி...அன்று...

Thursday, 5 March 2015

5.3.15 mulu nila mutram-முழு நிலா முற்றம்

முழு நிலா முற்றம் -2 ஆவது கூட்டம்

இன்று முழு நிலா முற்றம் கூட்டம்  மாலை 7மணி அளவில் நிலவின் மேற்பார்வையில் கவிஞர் நீலா தலைமையேற்க இனிதாகத்துவங்கியது...

 ’
கவிஞர் அமிர்தாவின் மகள் செல்வி எழில் ஓவியா  புகலிடம் தேடிப்பறவையாய்” என்ற ஈழப்பாடலொன்றைப்பாடி அனைவர் மனதையும் ஒரு நிமிடம் உறைய வைத்தாள்...அவரின் இரண்டாவது மகள் கூட்டத்தையே வலம் வந்து கலகலப்பாக்கினாள்.


முத்துநிலவன் அய்யா ” பண்டை புகழும்...”என்ற நாட்டுப்பாடலொன்றைப்பாடி மேலும் இனிமைக்கூட்டினார்.
கவிஞர் பொன்.கருப்பையா அவர்கள்” காலநில மாறிப்போச்சு “ என்ற சுற்றுச்சூழல் பற்றிய பாடலொன்றை பாடி அசத்தினார்.


கவிஞர் மாலதி அவர்கள் தாய் மற்றும் நிலவு குறித்த கவிதைகள் வாசித்தார்.

கவிஞர் மகா.சுந்தர் அவர்கள் பாரதி மற்றும்  தமிழ் குறித்த மரபுக்கவிதைகளை வாசித்தார்.

அனைவருக்கும் தேநீரும் பிஸ்கட்டும் வந்து வயிற்று பசியைக்குறைத்தது.

கவிஞர் நீலா எழுதிய கவிதையை அச்சிட்ட அட்டையை பெண்கள் தின சிறப்பு என கவிஞர் மல்லிகா அவர்கள் வழங்கினார்கள்.

கவிஞர் நீலா அவர்கள்” சொல்லி[ல்] முடியாத கதை “ என்ற மது பற்றிய சிறுகதையை வாசித்தார்.

கவிஞர் வைகறை,கவிஞர் அப்பாஸ்,கவிஞர்.வையாபுரி,கவிஞர் அமிர்தா,கவிஞர்  ரேவதி,கவிஞர் உப்பைத்தமிழ் கிறுக்கன் ஆகியோரின் கவிதைகளால் நிலா முற்றம் நிரம்பி வழிந்தது.













நிகழ்ச்சியில்” பாஷோ”ஹைக்கூ இதழை முத்துநிலவன் அய்யா வெளியிட கவிஞர் நீலா அவர்கள் பெற்றுக்கொண்டார்.

பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகனின் தொடர்ச்சியான” ஆலவாயன்”
நாவலில் பிடித்த ஒரு பகுதியை கவிஞர் கீதா கூறினார்.

கவிஞர் சுரேஷ் மான்யா சிறுகதை குறித்து விளக்கி கவிஞர் நீலாவின் சிறுகதையில் உள்ள சிறப்புகளை கூறி சிறந்த விமர்சனத்தை அளித்தார்.

கவிஞர் சூர்யா சுரேஷ்,கவிஞர்.சிவா,புதுக்கோட்டை நாணயவியல் கழகத்தைச்சேர்ந்த பஷீர் அலி,கவிஞர் பொன்னையா,கவிஞர் காசிநாதன்,கவிஞர் சோலச்சி மற்றும் நிறைய புதுக்கவிஞர்கள் வந்திருந்து நிகழ்வைச் சிறப்பித்தனர்.

அறந்தாங்கியில் ஒரு பள்ளியின் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு எனக்காக இக்கூட்டத்தில் கலந்து கொள்ள விரைந்தோடி வந்த தோழி ஜெயாவின் அன்பு மனதை நெகிழ வைத்தது

தமிழ்ச்சுவை அருந்திய நிலவோ மேலும் ஒளிர்ந்து தன் மகிழ்வை எதிரொளித்தது..

கீதா மற்றும் வைகறை நன்றி கூற முழுநிலா முற்றம் இனிதே முடிந்தது..





Tuesday, 3 February 2015

புதுகை முழு நிலா முற்றம்..03.02.15









 புதுகை நிலா முற்றம்..03.02.15

சென்ற ஆண்டில் பெரம்பலூர் செல்வகுமார் தோழர் நிலா முற்றம் என்ர தலைப்பில் நடுரோட்டில் நிலவின் ஒளியில் நிகழ்ந்த கூட்டத்தை பற்றி ஒரு பதிவு ....எழுதியிருந்தார்..நிலா எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று .நிலவின் ஒளியில் இலக்கியம் பருகுவதென்றால் அதைவிடவேறு சிறப்பு என்ன உள்ளது. ஏக்கத்துடன் படித்தேன்..

திடீரென வைகறை மற்றும் நிலவன் அய்யாவிடமிருந்து ஒரு மின்னஞ்சல்..இன்று நிலா முற்றம் நிகழ்வு புதுக்கோட்டை புதுக்குளத்தில் என...ஆஹா எனக்கூடிவிட்டோம்...
இதமான நிலவு எங்களை  மேற்பார்வையிட ..புதுக்குள நடைப்பாதையில் முத்துநிலவன் அய்யா மற்றும் அவர்கள்துணைவியார் மல்லிகா மற்றும் வைகறையுடன் புதுக்குளத்தில் புதுகைக் கவிஞர்கள் அனைவரும் கூடினோம் ..இனிய நிகழ்வாய்..கவிஞர் செல்வா அவர்களின் இனிய கவிதையுடன் துவங்க..சுவாதி கவிதை வாசிக்க.என் கவிதைகளுடன் கவிஞர் நீலாவின் இனிய அனுபவங்களுடன் நிலா முற்றம் இனிமையாகி மாலதியின் குழந்தைகளுடனான அனுபவங்களுடன் அழகாக நிகழ்ந்தது நிலா முற்றம்...

இனி தொடர்ந்து நிகழும் நிலாவுடனான தொடர்பு..