World Tamil Blog Aggregator Thendral: April 2015

Thursday 30 April 2015

மே தின வாழ்த்துகள்


அம்மாவின் உழைப்பை
குடும்பம் மறந்தது

உழுபவனின் உழைப்பை
உலகம் மறந்தது

உழைக்காமல் வாழும் வாழ்வையே
உலகோர் விரும்ப...

உழைப்பின் சுவையறியா குழந்தைகளையே
உருவாக்குகிறது கல்வி..
உழைப்பை ஏளனமாய் எண்ணி
எத்தி தள்ளும்படி...

உடலுக்கும் உள்ளத்திற்கும்
உழைப்பே மகிழ்வைத்தருமென்பதை
உணரும் குழந்தைகளை
உருவாக்குவோம்...
வீட்டில் துவங்குவோம் முதலில்
அனைவருக்கும் மே தின வாழ்த்துகள்


Tuesday 28 April 2015

குழந்தையின் கனவாய்

அவசரமாய் பல்லு தேய்க்காம
அவதியா குளிக்காம
ஆற அமர சாப்பிட்டு
அம்மா காலை கட்டிக்கிட்டு
அப்பா கையப்பிடிச்சிகிட்டு
கடைக்கு போகலாமினி

இடிச்சிபிடிச்சி வண்டில பிதுங்கி
இயங்க மறுக்கும் பகல் சிறையில்லை
இன்னுமொரு திங்களுக்கு

ஆத்தா மடியில புதைஞ்சுக்கலாம்
தாத்தாவோடு விளையாடலாம்

வீட்டுப்பாடம் எழுதச்சொல்லி
அம்மா கொட்டு வைக்கலயே
அடுத்தவீட்டு பசங்களோடு
நாள்முழுதும் விளையாடலாம்னு
கனவுடனே எந்திரிச்சேன்

இந்திவகுப்பு
கம்ப்யூட்டர் வகுப்பு
சம்மர் கிளாஸ்னு கொல்லுறாங்க
கேட்க யாரும் மாட்டீங்களா?
நாங்களா  வாழ்வதுதான் எப்போது?



ம்னு

Monday 27 April 2015

கறம்பக்குடி கலைஇரவு 25.4.15

கலைஇரவு கவிதைகள்
----------------------------------------
1]என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
முனகும் குரலில்
முதல்வர் நாற்காலி

2]சினிமாவில் பார்க்கத்தூண்டிய
   சிரிப்பழகியின் குழந்தைகள்
   சினிமாவே பார்ப்பது இல்லையாம்
   அவர்கள் தெளிவாக

3]விலையில்லாப்பொருட்கள்
   விலையில்லா உயிர்
   டாஸ்மார்க்

4]குளிர்விக்க வனமில்லை
  குடித்த நீரோ புகையாக
  புற்றுநோய் புவிக்கு

5]மீத்தேன் நிலம்
   நியூட்ரினோ மலை
  அணுக்கதிர் கடல்
  பணி அதிகம் தமிழகத்தில்
  எமனுக்கு

6]பெண்வழி வந்தவன்
   வந்த பாதையை என்ணியே
    வாழ்வைத்தொலைக்கின்றான்

7]மணலாடை அவிழ்த்து
  நீராடை அணிந்தாள் காவிரி
  துச்சாதனனாய் மேகதாது

8]அதிர்ச்சியில் தனியார் பள்ளிகள்
   அரசுப்பள்ளி மாணவருக்கே
  அரசு மருத்துவ,பொறியியல் கல்லூரிகளில்
 முன்னுரிமை அரசு உத்தரவு
  என் கனவில்




Saturday 25 April 2015

கறம்பக்குடி கலைஇரவு 25.4.15






கறம்பக்குடி கலைஇரவு-25.4.15


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்-கறம்பக்குடி கிளை சார்பாக நேற்று நடந்த கலைஇரவு மிகச்சிறப்பாக நடந்தது.

மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் அருமை

நான்கு கால்களுடன் நடனமாடிய லிம்போகேசவன் கடைசியில் நெருப்பு நடனமும் ஆடி அசத்தியுள்ளார்.

காவடி ஆடியச்சிறுவனின் உடலெங்கும் காவடி அசைந்தாடியது அருமை.

மதுக்கூர் ராமலிங்கம் அவர்களின் பேச்சு நகைச்சுவையுடன் சிந்திக்க வைப்பதாகவும் அமைந்தது.

கவிஞர் தங்கம்மூர்த்தி அவர்களின் தலைமையில் நடந்த கவியரங்கம் செவிக்கு விருந்தென அமைந்தது.

புதுகை பூபாளன் குழுவினரின் நிகழ்ச்சி மற்றும் பல சிறப்பான நிகழ்வுகளுடன் கலை இரவு நடந்தது.

இத்தகைய ஆளுமைகள் நிறைந்த மேடையில் கவிதை வாசிக்க வாய்ப்பளித்ததோழர் ஸ்டாலின் மற்றும் கறம்பக்குடி தோழர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளும் நன்றியும்.


தவிப்பு

விழாக்களில்
விலகி நின்றனர்
பட்டங்கள் சுமந்தோர்...

Friday 24 April 2015

அழகென்பது

அழகென்பது......

எது அழகென்ற எனது கேள்விக்கு பதில் கூறிய  முகநூல் தோழமைகட்கு என் மனம் நிறைந்த நன்றி...
உலகிலேயே அசிங்கமான பெண் என ஒரு பென்ணைப்பற்றியச்செய்திகள் வந்து கொண்டுள்ளதைக்கண்டு மனம் வெறுத்து எழுந்த கேள்வி..

பதில் கூறிய அனைவரும் வெள்ளைநிறத்தோலும் வடிவமும் தான் அழகென யாரும் கூறவில்லை.தெளிவான சிந்தனை உள்ள தோழமைகளைப்பெற்றிருக்கின்றேன் என்பதில் பெருமைப்படுகின்றேன்...

@Purushothaman Gk .   எல்லாம் அழகே

@  Narash Sh.     Ullam thooimayai iruppathu azhagu

@Sheik Mohamed  .   எல்லாமே.. எவரையும் சொல்லாலும் செயலாலும் காயப்படுத்தவியலா எல்லாமே

@Reghu Nath மனசுக்கு பிடிச்சது

@ஓவியர். தமிழன் மானமும்
அறிவும்

@Thirumal Vadalur. குழந்தையின் மழலைச் சிரிப்பு...

@RajamDrughouse Rajaraman. அறிவும், குணமும்...!!
தன சக்தி மனச குதுகாலிக்க வைக்கிற எல்லாம்

@Uma Bharathi .மற்றவர்களை பாதிக்காத எதுவுமே அழகு தான்
தமிழன் வேலவன் இந்த உலகத்தில் அனைத்து செயலும்,பொருளும் ,ஒவ்வொரு நிகழ்வும் அழகுதான் பார்பவர்களிடம்தான் வேறுபாடும் எனக்கு காக்கையின் அழகு பிடிக்கும்,

@.சு.பிரசாத் பெருந்துறை .எது நம்மை மறக்க வைக்கிறதோ , அது !

@தமிழ் பராசரன். Therlaye....

@சங்கரராம பாரதி .அழகும் மகிழ்ச்சியும்   
அவரவர் மனதை பொறுத்ததே ....அக்கா

@Thiru Pathi M A. combination of qualities, such as shape, colour, or form, that pleases the aesthetic senses, especially the sight.

@Shiva Shankar .எல்லாமே

@Kamali Dasan Erode .ethu alagu illai?

@Maha Suman. அன்பு நிறை மனமழகு

@Renugadevi Velusamy .மனத்தின் செம்மை

@Nesan Mahathi .எது அழகு?அது அவரவர் மனதைப் பொருத்தது.எனக்கு அழகான ஒன்று உங்களுக்கு அசிங்கமாகலாம்.

@.Gnana Vadivel மனது சுகமாய் இருக்கையில்
கண்கள் காண்பவை அனைத்துமே அழகு

@Angel Angel anbu. ..unconditional love is real beauty ..

@Gladson Antony. மழலைச் சிரிப்பு...
மணி மாறன் அம்மா

@Jansirani Krishna. Manam azhakaaka irunthaal ellaame azhaku thaan

@Nixon Edward .எதிர்பார்ப்பு இல்லாத எல்லாமே அழகு

@Bullsstreet T A Vijey .அழகு என்பது பார்க்கப்படும் பொருளில் இல்லை.பார்வையில்தான் அழகு எப்போதும் இருக்கிறது.
ஆர். ஆனந்தம் எது அழகோ, அது அழகு (பார்வை)

@Saya Sundaram. மற்றவரை காயப்படுத்தாத எல்லாமே அழகு தான்...

@R Siva Perumal .மனது வைத்தால் எல்லோர்க்கும் எல்லாம் அழகு.
நாகரீக கோமாளி நம்மால் இது போல் முடியாதே என் ஏங்க வைக்கும் எல்லாமே அழகுதான்.... நீங்க சொன்ன அசிங்கமான பெண் போல நானும் ஆக முடியாது அதனால் அதுவும் ஒரு அழகே...

@Vivek Shankar .iyarkai

@Vivek Shankar .naanum

@Solachy Solachy. என் தாயே உங்கள் அன்புதான் அழகு
சர் நா புத்துணர்ச்சி.....

@பால கன்  --- அன்பு... கருணை... இரக்கம்... ஈதல்... தியாகம்... இப்படி பல...

@Jawahar Jawahar. Tamil​

@Revathi Narasimhan. Geetha.

@உமா என்கிற பெருமாள் ஆச்சி--- மகிழும் ,மகிழ வைக்கும் அனைத்துமே அழகு ..அகமே அழகு .!!
இள மணி உண்மை; நேர்மை; அன்பு இவை போன்றவை.


@Jai Gopi Kannan M Adhu Alahu....
ஆ.நந்திவர்மன் அழகென எதுவும் இல்லை

@Thilagaraj Petchiappan .அழகு என்பது ஒரு ஒப்பீடுதான். அது காலத்திற்கேற்ப, இடத்துக்கு இடம், ஆளுக்கு ஆள் மாறக்கூடியது. ஒரு அழகான ஆணோ, பெண்ணோ கொடுமைக்காரர்களாக இருந்தால் ?............. எனது பார்வையில் சாதி, மத அடிப்படைவாதிகள் அழகற்றவர்களே....

@Baskar Kanna .தமிழனாய் பிறந்ததே அழகு சகோ

@Siva Kumar S. நீ

@இரா.ஜெயா--- நம் நட்பு

@Abbas Yas-- Mazhalai Siryppu....

@இராமமூா்த்தி செல்வமணி---  தங்கள் பெயாிலேயே இருக்கிறதே....தமிழ்!

@Thiru Moorthi .உண்மைதான் சகோதரி.ஊடகங்கள் இப்படி ஒரு தகவலை வெளியிட்டு,மற்றவர்களின் மனங்களை நோகச்செய்யும் ஊடகக்காரர்களின் செயலே அருவருக்கத்தக்கது.

@பொன். குமார். அழகே அழகு

நேசன் கவிதைகள்​நகரவிடாமல் ஒருநொடியேனும் நிறுத்திவைக்கும் நிறுத்திவைக்கும் எதுவும்.

@Murugavel Sathya .நான்தான்.......

அப்படீன்னு சொன்னா நம்பவா போறீங்க....
எங்கும்
எப்பொழுதும்
எல்லா நேரங்களிலும் அன்பு ஒன்று மட்டுமே அழகு மற்றவையெல்லாம் சூழ்நிலை , சந்தர்ப்பங்கள் பொறுத்து......

@Suresh Kumar .Enadhu thayin surukkam vizhundha anbu mugam. Enakku mattum.

 அழகென்ற ஒன்றும் அழகற்ற ஒன்றும் நம் மனதில் முன்னோர்களால் கற்பிக்கப்பட்ட ஒன்று...
வகுப்பில் குழந்தைகளிடம் கூறுகையில் நாம் தவளை அழகில்லை என அருவருக்கும்  போது அது நம்மைப்பார்த்து இதெல்லாம் உருவமா என நினைக்க வாய்ப்பிருக்கிறது...
என்பேன்

உண்மையில் அழகெற்ற ஒன்று இல்லவே இல்லை....இயற்கையில் அனைத்துமே அழகுதான்....

இப்பெண்ணை உலகின் அசிங்கமான பெண் என கூறிய அந்த மனமற்ற மனிதன் தான் உண்மையில் அறிய வேண்டும் எது அழகென....? இப்படி கூறியும் கவலைப்படாது வாழ்வை வென்ற இப்பெண்ணை பாராட்டுவோம்.நம் குழந்தைகட்கு புரிய வைப்போம் எது அழகென...
மனம் நிறைந்த நன்றி அனைவருக்கும்.


விண்ணின் கருணை

கங்குலின் அமைதியில்
ஓவென அலறி
காற்றின் கைகளால்
கதவைஅறைந்து
தூக்கத்தைக்கெடுத்து
மின்சாரத்தைப்பிடுங்கி
நெல்லுக்கு இறைத்த நீர்
புல்லுக்கு பாய்வதாய்
ஆறறிவுக்கும் அளித்து
அமைதியான விண்ணை....
கைவிட்டுடாதே என
கைபிடித்துக்கெஞ்சத் தோன்றியது...
ஓடிய நீரை சேமிக்காமல்
வேடிக்கைப்பார்த்தவளை நோக்கி
நகைத்தது விண்...

Wednesday 22 April 2015

வாழ்த்துவோம்


வாழ்த்துவோம்

விந்தைகளின் உலகமது
வியப்பின் எல்லையைக்காட்டி
வியக்கவைத்து மகிழுமது

வரவேற்பு முதல் நன்றி
வரை வித்தியாசங்களின்
வகுப்பாய் அமையுமது..

மழலைகள் குதூகலிக்கும்
மகிழ்விடமது..

புத்தகமில்லா நாளை
பூக்களுக்கு காட்டி மனம்
பூப்பதை ரசிக்குமது
புதுகையின் திருவிழாவாய் ஆண்டுதோறும்
பூரித்து மகிழவவைக்குமது

கலைகளின் பிறப்பிடமாக
களிப்பூட்டி மகிழுமது
மனிதநேயம் வாழுமிடமாய்
மனங்களை நேசிக்குமதில்
மகிழ்ந்தே கூடுவோம்
வெங்கடேஸ்வரா பள்ளியில்

 எழுத்தாளர் எஸ்.ராவின் பேச்சால்
எழுச்சி பெற்று மகிழ்ந்தது....நேற்று


கவிஞராய்,  நல்லாசிரியராய்,
காந்தக்குரலுக்குச் சொந்தக்காரராய்
மனிதநேய மாண்பாளராய்
கவிஞர் பாலாவின் வித்தாய்
வாழும் தங்கம் மூர்த்தி அவர்களுக்கும்
வாழ்வின் துணையாய்
ஊன்றுகோலாய் திகழும்
சகோதரி அஞ்சலிமூர்த்தி அவர்களுக்கும்
மனம்நிறைந்த வாழ்த்துகள்

இன்று உலக புத்தக தினம்-23.4.15


இன்று உலக புத்தக தினம்-23.4.15

சிறு வயதில் பாலமித்ரா, அம்புலி மாமா,விக்கிரமாதித்யன் கதைகளைச்சுமந்து என் கற்பனையை வளர்த்து மகிழ்ந்தது.





பதின் வயதில் பட்டுகோட்டை பிரபாகர்,இராஜேஷ்குமார்,சுபா கதைகளைச்சுமந்து வாழ்வை பிரமிக்க வைத்தது.

பருவத்தில் இரமணிச்சந்திரன் ,பாலக்குமாரன் கதைகளைச்சுமந்து வாழ்வை அடையாளம் காட்டியது...

பொன்னியின் செல்வன் ,அலையோசை,கடல்புறாவென கல்கி சாண்டில்யனின் கதைகளால் வரலாறை கண்முன் நிறுத்தியது

ஆனந்தவிகடனாய் இளவயது முதல் என்னுடனே வாழ்கிறது...

கதைகளை கன்னாபின்னா வென சென்றவளை சிறந்த நூல்கள் வலையிட்டு இழுத்து தனக்குள் புதைத்துக்கொண்டது...

என்னில் கலந்த நூல்கள் என் கல்லறையிலும் துணையாய் வருவேனெ உறுதியளித்து என்னுடனே வாழ்கின்ற புத்தகத்தை இன்று கொண்டாடும் தினமாம்...

வாழ்த்துவோமே..

Tuesday 21 April 2015

அட்சயதிருதியை

அங்காடிகள் நிரம்பி வழிந்தன
அட்சயத்திருதியையால்
குண்டுமணித்தங்கம் வாங்க
குறைக்கச்சொல்லிப் போராடுபவளின்

குழந்தைக்கான கல்விக்கட்டணத்தை
குறைக்காமல்  பிடுங்கும்
கந்துவட்டிக்காரனிடன் செல்லாது
அவளின் போராட்டம்..

Thursday 16 April 2015

விதையானவள்.....துளிர்க்கிறாள்...

விதையானவள்.....துளிர்க்கிறாள்...

மயங்கிய நிலையில் பல நாட்கள் இருந்த அந்த குழந்தை விழித்தபோது வயிற்றில் வலியும் சுமையுடன் இருப்பது போன்ற உணர்வும் ஏற்பட கலங்கிய குரலில் கேட்டவளை அவளை கவனித்துக்கொண்ட பெண் கவலைப்படாதேம்மா  உன் மூளை பாதிக்கப்பட்டு வீங்கியதால் அதற்கான இடம் தேவைப்பட உன் மண்டை ஓட்டின் சிறு பகுதியை அறுத்து உன் வயிற்றுச்சதையோடு பொறுத்தியுள்ளார்கள் மீண்டும் அதை மண்டை ஓட்டில் பொறுத்தி விடுவார்கள் என்ற போது அந்த 13 வயது குழந்தை தன் கோணிய வாயால் புன்னகைக்க முயன்று ஏற்றுக்கொண்டாள்.எத்தனை மனத்துணிவு இருந்தால் சாதாரணமானவர் அச்சப்படும் நிலையை ஏற்கும் துணிவுடையவளாக இருக்கிறாள் என வியந்தாள் அவள்.கடைசியில் அந்த மண்டை ஓட்டை வைத்தால் தொற்று ஏற்படுமோ என்ற அச்சத்தில் பிளாட்டினம் வைத்து அவளின் தலைப்பகுதியை மூடியுள்ளார்கள் மருத்துவர்கள்.

அய்யோ என் குழந்தையின் புன்னகையைப் பறித்துக்கொண்டார்களே எனக்கதறி துடித்தார் அவளின் தந்தை...எப்படியும் அவள் பிழைத்துக்கொள்வாள் என நம்பிக்கையுடன் துவா செய்து கொண்டே இருந்தாள் அவள் தாய்....

உலகிலேயே அழகான பள்ளத்தாக்கு என கருதப்படும் சுவாட் பள்ளத்தாக்கில் பிறந்த அந்தக் குழந்தைதான் ...பெண்குழந்தைகளின் கல்விக்காக போராடிக்கொண்டிருக்கும் மலாலா யூசுப்சாய்.....பள்ளியிலிருந்து திரும்பும் போது தாலிபான் களால் தலையில் சுடப்பட்ட குண்டு அவளின் மூளையை உரசி தோளைத்துளைத்து...உலகே அந்தக்குழந்தைக்காக கண்ணீர் விட்டது.மருத்துவமனையில் மயங்கிய நிலையிலும் புத்தகப்பையை விரும்பியவள்...

                                 ”நான் மலாலா”

என்ற நூல் அவளது வரலாறை கண்முன் கொண்டுவந்து நிறுத்துகின்றது .கடந்த சில நாட்களாக அவளோடு வாழ்ந்த என்னுள் உறைந்து விட்டாள் ..பாகிஸ்தானின் நிலையை அவள் பிறந்த சுவாட் பள்ளத்தாக்கின் வரலாறை...மறைந்து வாழ வந்து அப்பகுதியையே பிடித்துக்கொண்டு மக்களை அழிப்பதையே அச்சுறுத்துவதையே இலட்சியமாகக் கொண்டு வாழும் தாலிபான்களின் உண்மை முகத்தை காட்டுகிறது... இந்நூல்.

பெரியோர்களுக்காக அனைவரும் போராட, குழந்தைகளுக்காக இன்று கூட நைஜீரியாவில் கடத்தப்பட்ட குழந்தைகள் அவர்களின் பெற்றோரை அடையும் வரைப்போராடுவேன் என தான் மிகவும் நேசித்த தன் நாட்டை இழந்து அயல் நாட்டில் வாழ்ந்து கொண்டு போராட்டத்தை தொடரும் அச்சிறுமிக்கு சென்ற ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்திருப்பதில் வியப்பில்லை....

அவளைப்போல் குழந்தைகளை உருவாக்க வேண்டும் என்ற உறுதி மனதில் பிறக்கின்றது .அவளது தந்தைக்குத்தான் அந்த பாராட்டைக்கூற வேண்டும்....அனைவரும் படிக்க வேண்டிய நூல்.

Wednesday 15 April 2015

ஒரு சந்தேகம்....

ஒரு சந்தேகம்....

இரண்டு அவாக்களுக்கிடையே பிரச்சனை. நடுவில் நான். ஒரு அவா சொல்லுது சூத்திரவா முன்னாடி என்ன திட்டுறான்னு என் கிட்டயே சொல்லி வருத்தப்படுது...இங்க நான் தான் சூத்திராள்...அப்படின்னா தே.....மகன்னு அர்த்தம் ...இல்லன்னு சொல்ல சொல்லுங்க ..என் தாயை பழிக்கும்  இந்து தர்மத்தை நான் ஏற்பதா வேண்டாமா....?

இந்து மதத்துல எந்த பிரிவினையும் இல்ல எல்லோரும் ஒண்ணு தான்னு  சொல்ல முடியுமா...?

இதுல கொடுமை என்னன்னா....காலடில பிறந்த சூத்திராளுக்களுக்குள்ள நான் தான் பெரியவன்னு அடிதடி சண்டை....உனக்குள்ள சண்டை போடாதடா..உனக்குன்னு சுயமரியாதை இருக்கு..உன்ன மிதிச்சு சிலர் வாழ்வதை ஏற்காதன்னு போராடிய பெரியாரை இவர்கள் அவமானப்படுத்த முடியாது. இவர்களே இவர்களை அவமானப்பட வைத்து வேடிக்கைப் பார்க்குது ஒரு கூட்டம்..

தனிமை


தனிமை வாழ்க்கை ஒரு வாழ்க்கையா...
ஒத்த ஆளுக்கு இவ்ளோ சம்பளம் தேவையா?
சமைக்கவே மாட்டீங்கத் தானே...

வேலை முடித்து வந்ததும்
வேலையே இல்லாமல்
வெட்டியாய் இருப்பீகத்தானே...


யாருக்கும் பதில் சொல்ல வேண்டாம்
சுதந்திரமா சுத்தலாம்தானே,....

கடமை முடிந்து விட்ட தனிமை
வாழ்வில் கேள்விகளால்
வலை பின்னுகின்றார்கள்

எனக்கென தனியாக
எதுவும் இருக்கக்கூடாதென்பதில்
தீவிரமாய் இருக்கின்றார்கள்

என் மகிழ்வை அவர்கள்
தீர்மானிக்க முனைகின்றார்கள்...

என் வாழ்வை வடிவமைக்க
எடுக்கும்  சிரத்தையில்
சிறு பகுதி கூட அவர்களை
எண்ணிப்பார்க்க மறுக்கின்றார்கள்...

கண்ணீரைத் துடைத்த கைகளே
கண்ணீரை எதிர்பார்த்து காத்திருக்கின்றன ...

எல்லாவற்றையும் பார்வையாளராய்
பார்க்க கற்றுக்கொடுத்த தனிமையோ

என்னருகே கை கோர்த்துச்சிரிக்கின்றது
 நீ பெண்ணென்பதால் தான்
இத்தனையும் என...


Monday 13 April 2015

சித்திரைத்திருநாள்

தையிலும் சித்திரையிலும்
தவறாமல் தமிழ்ப்புகழ் ....

தமிழை அழித்துக்கொண்டே...

தனக்குள் சிரிக்கின்றாள்...
தமிழ்த்தாய்...

தன்னருமைத்தெரியாது
தன்புகழ் பாடும்
தமிழர்களை எண்ணி...

Sunday 12 April 2015

உயிர்த்துளி..

கும்மாளமிட்டு
குற்றாலக் குளியலெனக்
குளித்து மகிழ்ந்தது புதுகை

உடல் சிலிர்த்து
நனைத்து மகிழ்ந்தது தரு...

இட்டக் கோலத்தைக்
கலைத்து மகிழ்ந்தது விண்..

துள்ளாதே
நாசம் செய்த உன்னை
நனையவிட்டு நனையவிட்டு
காய வைத்து வறுத்தெடுப்பேன்
என உறுமியது இயற்கை

Thursday 9 April 2015

என்ன செய்யப்போகின்றோம்....?

என்ன செய்யப்போகின்றோம்....?

ஒன்றும் புரியவில்லை ...சமூகச்சீர்கேட்டிலிருந்து குழந்தைகளைக்காக்கப் போராடிக்கொண்டிருக்கின்றோம்.ஏழாம் வகுப்பு ,எட்டாம் வகுப்பு குழந்தைகள் கூட காதல் மயக்கத்தில் வீழ்கின்றன என்ற உண்மை தீயாய்ச்சுடுகின்றது...

சினிமாவில் வருவதெல்லாம் உண்மை என்ற நினைவில் ஆழ்ந்து தங்கள் வாழ்க்கையை ஒன்பதாம் வகுப்பிலேயே துவங்க நினைக்கும் குழந்தைகளை எப்படிக்காப்பாற்றுவது...?

பள்ளிச்சீருடையில் காதலிப்பது போல் படமெடுக்கும் சமூக விரோதிகள் தங்கள் குழந்தைகள் இந்த வயதில் காதலித்தால் ஏற்றுக்கொள்வார்களா...?

குழந்தைகள் மனதை விடமாக்கும் போக்கை கண்டும் காணாமல் வாழப் பழகிக்கொள்ள வேண்டுமா..?

ஒரு பக்கம் கைக்குள் நீலப்படங்களைப்பார்த்து தானும் சீரழிந்து ,காமவெறியில் அலைந்து வயது வித்தியாசமின்றி பெண்களைச் சீரழிக்கும் கூட்டம்..

மற்றொரு பக்கம் பள்ளி வயது சிறுவர்களும் போதையில் வீழ்ந்து அழியும் சமூகம்..தான் குடிக்கும் போது மகிழும் ஆண்கள் தங்கள் குழந்தைகள் குடித்தாலும் மகிழ்ந்து குடிக்க ஆதரவு தருவார்களா..?

 பெண் குழந்தைகள் படித்து முன்னேறி வரும் சூழ்நிலையில் குழந்தைத்திருமணங்கள் மீண்டும் நடக்கத்துவங்கி விட்டன என்பது ,மறுக்கமுடியாத உண்மை...

ஆண்குழந்தைகளும் இதனால் பாதிக்கப்பட்டு  சீரழிகின்றன....வளரும் சமுதாயம் சீர்கெடும்படியான சமூகச்சூழ்நிலையை இனியும் அனுமதிக்கலாமா?

பெற்றோரும் கண்டிப்பதில்லை,,ஆசிரியரும் கண்டிக்கக் கூடாது என்றால் காட்டுச்செடியாய் மாணவர்கள் வளரவேண்டியது தானா..?

என்ன செய்யப்போகின்றொம் நாம்...?எந்தத்தலைவனும் அவதாரம் எடுத்து வரமாட்டான்.இன்று அடுத்தவர்களுக்கென்றால் நாளை நமக்கு...

பணமே குறிக்கோளாய் ஓடுபவர்கள் ஒரு நாள் தங்கள் குழந்தைகளை மீட்க முடியாமல் தவிக்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள்...

பெரியவர்களுக்கான இந்த சமுதாயம் குழந்தைகளை நினைக்கப்போவது எப்போது..?

குழந்தைகளுக்கான கல்வியில்லை...குழந்தைகள் நலமுடன் வாழ்வதற்கான சமூகமில்லை..

நாட்டுப்பற்று,மொழிப்பற்று ,இனப்பற்று எதுவும் இல்லாத தன்னலமான தலைமுறை உருவாகிக்கொண்டுள்ளது.

என்ன செய்யப்போகின்றோம்....?

Wednesday 8 April 2015

தீருமோ?

திரும்பிய பக்கமெல்லாம்
துயர் கொண்டாய்த் தமிழா

வந்தோரை வாழ்விக்கவே
வாழ்ந்தாய்.....இன்றோ

காட்டுமானைச் சுட்டால்
கடுஞ்சிறை

 தமிழனைச் சுட்டால்
தங்கப்பதக்கமா....

சுருங்கிய வயிற்றை நீவ
சுமை தூக்கியவனை
சுட்டுவீழ்த்தவோ இந்தியா

தன்னமலமற்ற தலைமை
திகழ்ந்திடாதோ தமிழகத்தில்....
தலைநிமிர்ந்து வாழ வழியில்லையோ
தமிழ்நாட்டில்........

Sunday 5 April 2015

மனவளக்கலை மூன்றாம் நிலை அகத்தாய்வு


மனவளக்கலையின் மூன்றாவது அகத்தாய்வு பயிற்சியில்

பாலாம்மா என்னை எப்படியாவது மனவளக்கலை பயிற்சி எடுக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அடிக்கடி வலியுறுத்தி கொண்டே இருந்தார்.சனி ஞாயிறு இரண்டு நாட்கள் முழுமையாக அகத்தாய்வின் மூன்றாம் நிலைப் பயிற்சி அளித்தார் தஞ்சையைச் சேர்ந்த அருள்நிதி காஞ்சிநாதன் அவர்கள்....

கலகலன்னு வகுப்பை கொண்டு சென்றார்....திருக்குறள்,பைபிள்,குர்ரான்,திருமந்திரம் ,சித்தர் பாடல் ஆகியவற்றில் மேற்கோள்களைக்காட்டி சிறப்புடன் வகுப்பு எடுத்தார்.

ஒரு மனிதன் தவறு செய்வதற்கு அவன் மட்டுமே காரணமல்ல எனும் போது அவனை மட்டுமே தண்டிப்பது முறையாகாது என்றது யோசிக்க வைத்தது.


குடும்ப அமைதி என்ற தலைப்பில் ஒரு ஆணால் பெண் எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுகின்றாள்...சமத்துவமான பெண்ணை ஆண் தன் வசதிக்காக எப்படியெல்லாம் கட்டுப்படுத்தி வைத்துள்ளான் என்ற போது நல்ல விசயம இருக்கேன்னு சிந்திக்க வைத்தது.

பாலியல் அறிவின்மையே எல்லா சிக்கல்களுக்கும் காரணம் என்றும் அதைப்பற்றிய தெளிவு இருந்தால் சமுதாயம் சீர்படும் ...என்ற போது அட சரிதானே ..என்றது மனம் .

பெரியாரைப்பற்றி புத்தரைப்பற்றி ...நியூட்டன் ,ஐன்ஸ்டீன்.பற்றி பேசி வேதாத்ரி அவர்களின் சிந்தனைகளைக் கூறிய போது இன்னும் முழுமையாகத்தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் பிறந்தது...

Saturday 4 April 2015

4.4.15-முழு நிலா முற்றம்- மூன்றாவது கூட்டம்



4.4.15-முழு நிலா முற்றம்- மூன்றாவது கூட்டம்

காமராசபுரத்தில் உள்ள ரேவதி தமிழாசிரியர் வீட்டில் நடந்தது மழலைகள் கூட்டமாகவே கலகலன்னு இருந்தது.குழந்தைகள் விடுகதைக்கேட்டு அசத்திவிட்டார்கள் .நடனம் ஆடி மகிழ்வித்தார்கள்.

நிலாவைப்பற்றி கூறுங்கள் என்றதும் ஒருவன் அதைபார்த்தா என் கைக்குள்ள வச்சுக்கனும் போலருக்கு ஆனா அது எல்லாருக்கும் சொந்தமாச்சேன்னான் பொதுவுடமைச் சிந்தனைவாதியாய் .

கவிஞர் நீலா  ஷாஜகான் -மும்தாஜ் கதை குழந்தைகளுக்காக் கூறிய போது நாங்களும் மெய்மறந்து கேட்டோம்.

கவிஞர் வையாபுரி கவிதை வாசித்தார்.

கவிஞர் சிவா கலவையான திரையிசைப்பாடல்கள் பாடி அசத்தினார்.

கவிஞர் சுரேஷ்மான்யா நிலாப்பற்றியக்கவிதைக்கூறி மாணவர்களுக்கு கற்பனை வளர ஊக்குவித்தார்.உடனே ஒருவன் நிலா எப்போது டியூப்லைட் மாதிரி வெளிச்சமாருக்கும் ஆனா இன்னைக்கு குண்டுபல்பு மாதிரி மஞ்சளா இருக்குன்னான்.ஒருவன் அம்மா தட்ட வீசிட்டாங்க எனக்கு எடுத்து தாங்க சாப்பிடனும் என்றான்.

கவிஞர் ரேவதி பூமி பற்றியக்கவிதை வாசித்தார்கள்.

கவிஞர்சோலச்சி விடைகூறமுடியாத விடுகதைக்கூறி மாணவர்களிடம் மாட்டிக்கொண்டார்.
நிலா எல்லாவற்றையும் வேடிக்கைப்பார்த்துக்கொண்டு ரசித்தது.
மாணவர்களுக்கான ஒரு மலையாளப்பாட்டு ஒன்றை நான் பாட மாணவர்களும் சேர்ந்து பாட உண்மையில் நிறைவாக இருந்தது..
மாணவர்கள் மனமின்றி கலைந்தார்கள்

சிறப்பாக நடத்திய ரேவதிக்கு வாழ்த்துகள்.

அடுத்தக்கூட்டம் தோழி ஜெயா வீட்டில் கீரனூரில் சித்திராப்பௌர்ணமி...அன்று...

Thursday 2 April 2015

கலை இலக்கிய இரவு-1.4.15

கலை இலக்கிய இரவு-அறந்தாங்கி த,மு,எ,க,ச நடத்திய விழா நேற்று அறந்தாங்கியில் சிறப்புடன் நடந்தது.அவ்விழாவில் நான் வாசித்த கவிதை

எழில் கொஞ்சும் அவளின் மேனியெங்கும்
ஏற்றமிகு கலைவண்ணம் கொண்டாள்

பொங்கி வழிந்த அன்பையெல்லாம்
பிரபஞ்சமெங்கும் அள்ளி வீசினாள்

அவளால் உயிர்த்த உயிர்கள்
அளவில்லா வளங்களால்
உயிர்த்து உயிர்த்து உறவாடின

உள்ளம் மகிழ்ந்தவளின்
உயிர் பருகத் துடித்தன சில

நோயாளி ஆக்கி உறிஞ்சி
மகிழ்ந்தன சில

ஊடுருவி சிதறடித்து
சிரித்தன சில

வற்றாத வளங்களை
வற்றச்செய்தோமென
குதித்தன சில

காக்கின்றவளின் மேனிங்யெகும்
கொதிக்கின்ற தார் ஊற்றி
மகிழ்ந்தன சில

அப்போதும் புன்னகை புரிந்தவளின்
அழகை அழித்து ஆர்பரித்தன

மகிழ்வையே தந்தவள்
மருகி மருகி வாடினாள்

உள்ளங்களால் இணைந்த உறவுகள்
ஊதியங்களால் பிரிந்து
தாண்டவமாடுகையில்

தறுதலையாய்ப் போன மகனைத்
தட்டி கேட்கவியலா தந்தையெனத்
தலைகுனிந்தாள்

ஆர்ப்பரித்து விழுங்க காத்திருந்த
ஆழியிலிருந்து காத்தவளை
ஆறறிவு ஆழிக்குள் மூழ்கவைக்க
ஆய்கிறது அலைகிறது

வியர்வையால் தன் தாகம் தீர்த்தவனின்
வயிற்றுச்சுருக்கமென வெடித்துப்
பிளந்து வாடுபவளை

அப்படியே விழுங்கிட
ஆணையிட்டு காத்திருக்கிறது அரசு

தன் ரத்தமே தன்னைக் குடித்தால்
தாங்குவாளா.....

விட்டுவிட்டு தேடுவானோ விவசாயி
விடமாட்டான் விடமாட்டான்
உயிர்போகும் வரை

உணர்வில்லாத் தமிழா
உப்பிட்டுத்தானே உண்கிறாய்

உன் தாய் நிலம் வீழ -நீ
உறங்கியது போதும்

விழித்தெழு
தடைதகர்த்திடு
நிலம் காத்திடு...