வீடே பரபரன்னு இருக்கின்றது….வினயாவின் வரவிற்காக…அந்த வீட்டின் செல்ல மகள்
அவள்..வினயாவின் பாட்டி லெச்சுமி, இட்லிக்கடை வியாபாரத்துடன் பேத்திக்கு பிடிக்கும்னு பணியாரமும், பலகாரங்களும்
சுட்டுக்கொண்டிருந்தாள்…அம்மா பவானியோ மகளுக்காக
அறையை சுத்தம் பண்ணிக்கொண்டிருந்தாள்…பின்னே…எவ்ளோ பெரிய படிப்பு ….குடும்பக் கஷ்டத்த
நினச்சு புள்ள இராப்பகலா கண்ணுமுழிச்சுல படிச்சா. டாக்டரருக்கு தான் படிப்பேன்னு நல்ல மார்க்கு வாங்கி,இப்ப
டாக்டராவும் ஆயிடுச்சுல்ல…அவள் மட்டுமல்ல வினயா ஆசையா வளர்த்த செடிகளும் அவளுக்காய் காத்திருந்தன...வினயா வர்றான்னு சொன்னதும் இந்த டாமி கூட வால ஆட்டிக்கிட்டு வாசலயே பாக்குது....
சங்கர் தலகால் புரியாம ஓடிஓடி வேல பார்த்தான் .லெட்சுமி தன்
மகன ஆச்சரியமா பார்த்தா…நம்ம புள்ளயா இவன்..ஊர்ல ரௌடின்னு பேரு வாங்கி யாருக்கும் அடங்காம
திரிஞ்சவன்.அத நினச்சு கவலப்பட்டவள பாத்து
ஒரு கால்கட்ட போட்டுட்டா சரியாபோகுமுன்னு எல்லோரும் சொன்னாகன்னு நம்பி தேடித்தேடி பவானிய
அவனுக்கு கட்டிவச்சா.பிறகும் அவன் திருந்தல…நித்தம் போராட்டம் தான்..
