World Tamil Blog Aggregator Thendral: November 2016

Wednesday 30 November 2016

நீங்க வந்துட்டீங்களா புதுகை புத்தகத்திருவிழாவிற்கு..


நீங்க கிளம்பிட்டீங்களா புதுகை புத்தகத்திருவிழாவிற்கு..
 
இன்று கவிஞர் முத்துநிலவன் அவர்கள் பேசுகின்றார்.

மனம் மீள முடியாத துன்பத்தில் மூழ்கும் போதெல்லாம் எனை மீட்க புத்தகக்கடைக்குச் சென்று விடுவேன்..
புன்னகையால் என்னை வரவேற்று என்னை மீட்டு அவை எனக்கே என்னை தரும்...

எனக்கு மட்டும் இல்லை இது என்பதை புத்தகத்திருவிழா எனக்கு உணர்த்தியுள்ளது..

முதல் நாள் பேசிய எழுத்தாளர் எஸ் .ராமக்கிருஷ்ணன் அவர்களும்,
நேற்று பேசிய பேச்சாளர் மதுக்கூர் ராமலிங்கம் அவர்களும் தங்களை மீட்க புத்தகங்களேயே நாடுகின்றனர் என்று கேட்ட பொழுது..
மேலும் புத்தகங்களில் கரைந்து போகின்றேன்.

என்னை வழி நடத்திய புத்தகங்களை எனது மாணவிகளுக்கும் அறிமுகம் செய்ய புதுகை புத்தகத்திருவிழா உதவுகின்றது...

அம்மா உங்க கவிதைகள் ரொம்ப நல்லாருக்கும்மான்னு குழந்தைகள் சொல்லும் போது விருது கிடைத்த மகிழ்வு.

ஒவ்வொரு நாளும் முடியும் போது இன்னும் 4 நாள் தானே இருக்கும் என்ற கவலையும் வருகின்றது.


 புத்தகங்களை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யுங்கள்..

இன்றைய சமூக சீர்கேட்டிலிருந்து உங்கள் குழந்தைகள்
மீள புத்தகங்களே கை கொடுக்கும்..

ஓடி ஓடி மேடையில் மற்றவர்களை ஏற்றி அழகு பார்த்து ,ஒவ்வொன்றையும் திட்டமிட்டு செய்யும் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் வியக்க வைக்கின்றார்...கற்றுக்கொள்ள வேண்டும் அவரிடமிருந்து நிறைய அனைவரும்..எந்த செயலையும் முழு முயற்சியுடன்...இறங்கி பணி செய்வதால் தான் இத்தனை உயரத்திற்கு வர முடியும் என்பதற்கு அவரே உதாரணம்..நன்றி அவருக்கு..

Monday 28 November 2016

புதுக்கோட்டை கலக்குகின்றது..

புதுக்கோட்டை கலக்குகின்றது..

புத்தகத்திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஆளுமையான பேச்சாளர்கள் செவிக்கு விருந்து படைத்து வருகின்றனர்..
மாணவர்கள் கலை நிகழ்ச்சிகளால் கண்களுக்கு விருந்து படைக்கின்றன்ர்.
முதல்நாளில் எழுத்தாளர் எஸ்.ராமக்கிருஷ்ணன் அவர்கள் தனது நிதானமான...பேச்சால் கதைகள் பிறந்த கதையைக்கூறி மக்களை தனது பேச்சால் கட்டிப்போட்டார்.

இரண்டாம் நாளான நேற்று பேராசிரியர் ஞானசம்பந்தன் அவர்கள் தனது குழுவினரான சொல்லின் செல்வர் சம்பத்குமார்,பேராசிரியர் விஜயசுந்தரி,முனைவர் மகாசுந்தர்,கவிஞர் நதியா ஆகியோருடன் மிகச்சிறப்பாக நகைச்சுவையான பட்டிமன்றம் நடத்தி மக்களை மகிழவைத்தார்.








மூன்றாம் நாளான இன்று புதுகை பூபாலன் குழுவினர்..நமது மூடநம்பிக்கைகளை,முட்டாள் தனங்களை நகைச்சுவையாக சிந்திக்கும் படி நமது அறிவீனத்தை சுட்டிக்காட்டியது மிக அருமை..

பெரியாரை போற்றி,பெண்களை நகைச்சுவை என்ற பெயரில் கிண்டலடிக்காமல்,..அவர்களுக்கு படிக்க நேரம் கொடுங்கன்னு பேசி அவர்களுக்கு மதிப்பளித்தது பாரட்டுதற்குரியது..

பெண்கள் போகப்பொருளாக ,மட்டம் தட்டக்கூடிய பொருளாக,மதிப்பிழந்தவளாக சமூகம் அடையாளப்படுத்திக்கொண்டிருக்கும் காலத்தில் இப்படியும் பேச்சாளர்கள் இருப்பது கொஞ்சம் ஆறுதலாக உள்ளது..வாழ்த்துகள் பூபாலன் சார்.

ஆயிரக்கணக்கான மக்கள் விழாவில் கலந்து கொண்டு புத்தகங்களை அள்ளிச்செல்கின்றனர்...

இவ்விழாவைச்சிறப்பாக நடத்திக்கொண்டிருக்கும் கவிஞர் தங்கம்மூர்த்தி அவர்களுக்கும்,தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்

Wednesday 23 November 2016

புத்தகத்திருவிழா உங்களுக்காகவே

புத்தகத்திருவிழா உங்களுக்காகவே

இப்படியொரு இடம் கிடைத்தால் வாழ்நாள் முழுதும் அப்படியே கரைந்து விடலாம்..

அமைதியான,காற்றோட்டமான,வெளிச்சத்துடன் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களின் வெங்கடேஸ்வரா பள்ளியின் நூலகத்தில்...

ஒரு இனிமையான காலைப்பொழுதில் வலைப்பதிவர் சந்திப்பு குறித்த கூட்டத்திற்காகச் சென்றோம்...நூலகம் ஆரம்பித்தது முதல் வந்து பாருங்கன்னு சகோதரி அஞ்சலி அவர்கள் அழைத்திருந்தபோதும் அன்று தான் வாய்ப்பு கிடைத்தது.

எப்போது கூட்டம் தாமதமாகத்துவங்கினாலும் கொஞ்சம் சலிப்பும்,கோவமும் வரும்...ஆனால் அன்று கூட்டமே நடக்கலன்னாலும் பரவால்ல அமைதியா அமர்ந்து படிக்கலாம்னு சொல்லிட்டே இருந்தேன்...

எந்த புத்தகத்தை விடுவது எந்த புத்தகத்தை எடுப்பது எனத்தெரியாமல் ஜெயா தடுமாற...
தேவதச்சனின் கவிதை நூலை வாசிக்க ஆரம்பித்தேன்..இரண்டு கவிதைகள் தான் வாசிக்க முடிந்தது...

எஸ்.ராவின் இரண்டு நூல்களை ஜெயா எடுத்துக்கொண்டார்..எங்களின் ஆர்வத்தை ப்பர்த்து நூலகப்பொறுப்பாளர் காசாவயல்கண்ணன் சிரித்தப்படியே கண்காணித்தார்..

கனவு இல்லம் கட்டும் அனைவரும் நூல்களுக்கென ஒரு அறை தங்கள் வீட்டில் அமையுங்கள்..






புத்தகத்திருவிழா உங்களுக்காகவே

Monday 21 November 2016

வீதி-33


அன்புடன் அழைக்கின்றோம்
அன்பைக்காட்ட
அன்பைப்பெற
ஆவலுடன் காத்திருக்கின்றோம்
அன்பான வருகையால்
வீதியை நிறைக்க
வருவீங்க தானே


Sunday 20 November 2016

Haridas Director G.N.R.Kumaravelan Interview - Ananda Vikatan




வீதி கலை இலக்கியக்களம் கூட்டம்-33

இம்மாத வீதிக்கூட்டம் இவர்களுக்காக...உங்களால்...

இம்மாத வீதிக்கூட்டம் இவர்களுக்காக...அன்பு மட்டுமே இவர்களுக்கு தேவை அளிப்போம் அளவின்றி...வாருங்கள் வருகிற ஞாயிறு அன்று 27.11.16 புதுக்கோட்டை ஆக்ஸ்போர்டு சமையற்கலைக்கல்லூரியில்..காலை 9.30.மணி அளவில்...

தமிழ்த்திரு குருநாதசுந்தரம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி.20.11.16


தமிழ்த்திரு குருநாதசுந்தரம்  படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி.20.11.16

இறுக்கமான ,கனத்த இதயங்களைத்தாங்கி புதுகை நகர்மன்றம் இப்படி ஒருநாளும் தன் வரலாற்றில் இருந்திருக்க வாய்ப்பே இல்லை..

நல்ல மனிதராய்,
நல்ல ஆசிரியராய்,
நல்ல ஆசிரியப்பயிற்சியாளராய்,
மனிதநேயமிக்கவராய்,
பணிவுடன் கூடிய பேரறிவு மிக்கவராய்,
மாணவர்கள் போற்றும் ஆசிரியராய்,
புதுகை தமிழக தமிழாசிரியர்கழகத்தின் மாவட்ட செயலாளராய்,
புதுகையில் தமிழாசிரியர்கள் கணினி அறிவு பெறக்காரணமாய் இருந்தவராய்,
தமிழ்நாட்டின் டி.என் .பி சி வினாத்தாள் தயாரிப்பாளராய்,

தூயத்தமிழ் கவிஞராய்,சிறுகதையாசிரியராய்,கட்டுரையாளராய்,

வீதி கலை இலக்கியக்களம் உருவாக வித்திட்டவர்களில் ஒருவராய் ,

இன்னும் பல திறமைகள் இருந்த போதும் ,ஆர்ப்பாட்டமில்லா எளிமையுடையவராய் வாழ்ந்து ,குறுகிய காலத்தில் அனைவர் மனதிலும் இடம் பிடித்து பாரதியைப்போல், தனது வாழ்வை முடித்துக்கொண்ட திருமிகு குருநாதசுந்தரம் அய்யாவின் நினைவேந்தல் நிகழ்வு இன்று புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடந்தது..

கோவை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருமிகு நா.அருள் முருகன் அவர்களும்.
புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருமிகு சாந்தி அவர்களும்,
புதுக்கோட்டை,தேவக்கோட்டை ,சிவகங்கை மாவட்டக்கல்வி அலுவலர்களும்,

தமிழகத்தமிழாசிரியர் கழகத்தின் மாநில மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களும்,
கல்வியாளர்கள்,ஆசிரியர்கள்,மருத்துவர்கள்,பள்ளி முதல்வர்களும்,கவிஞர்களும்,இலக்கிய அமைப்பைச்சேர்ந்தவர்களும் பள்ளிக்குழந்தைகளும் ,கலந்து கொண்டு அவருக்கு கவிதையாகவும் அனுபவ உரையாகவும் அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்வில் கலந்து கொண்ட அவரது குடும்பத்தினருக்கு ஆதரவும் பாதுகாப்பும்,தேவையான உதவிகளை செய்வதாக அனைவரும் மனமாரக்கூறினர்.

எல்லோருக்கும் நல்லவராய் ஒருவரால் வாழ முடியும் என்பதைதமிழ்த்திரு குருநாதசுந்தரம் அய்யா அவர்கள் வாழ்ந்து காட்டியுள்ளதை இன்று நகர்மன்றம் உணர்ந்தது...






 புதுகை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள்
 வீதி நிறுவனர் முனைவர் நா,அருள்முருகன் அய்யா அவர்கள்
கோவை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்.

Wednesday 16 November 2016

முன் மாதிரிப்பள்ளி-செவ்வாய்ப்பட்டி ஊ.ஒ.ந.நி.பள்ளி கரம்பக்குடி ஒன்றியம்.புதுக்கோட்டை





ஒன்பது மஞ்ச வேன் வந்த ஊர்ல இப்ப ஒண்ணு தான் வருது அதையும் வராம பண்ணிடுவோம்..

தன்னம்பிக்கையோடு கரம்பக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமிகு சந்திரா அவர்கள் சொன்ன போது நம்பவே முடியவில்லை தான்..ஆனால்...

27.10. 16 இன்று கரம்பக்குடியில் உள்ள செவ்வாய்ப்பட்டி ஊராட்சி ஒன்றியநடுநிலைப்பள்ளிக்கு பள்ளிப்பரிமாற்றத்திட்டத்தின் படி காலை 8.00 மணிக்கு கிளம்பி  குழந்தைகளின் நடனங்களால் வாகனம் அதிர அதிர 9.00 மணிக்கு இருபது மாணவிகளுடன் ,எங்கள் பள்ளித்தலைமையாசிரியர் ,பொறுப்பாசிரியர்கள் கிருஷ்ணவேணி மற்றும் கீதா[நான்] ஆகியோர் சென்றோம்..

பள்ளியின் நுழைவாயிலில் மாணவர்களும் பள்ளித்தலைமையாசிரியருடன் அனைத்து ஆசிரியர்களும் வந்து வரவேற்றனர்..

சாரண ,சாரணீய மாணவர்களின் சீருடை அணிவகுப்பு மரியாதை மிக நேர்த்தியாக ,சிறந்த காவலர்கள் அணிவகுப்பிற்கு இணையாக மாணவர்கள் அணிவகுத்து சென்ற விதம் மிக அருமை...

கொடியேற்ற நிகழ்விற்கு பின் , அனைவருக்கும் மாணவர்களே தயாரித்த பூங்கொத்து கொடுத்து, வரவேற்று, இறைவணக்கக் கூட்டம் நடந்தது.
சந்தைப்பேட்டைபள்ளியின்  தலைமையாசிரியர் திருமிகு அமுதா அவர்கள் வாழ்த்துரை வழங்க,மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளோடு அன்றைய நாள் துவங்கியது..



மாணவிகளின் கைகளில் நூல் கண்டைக் கொடுத்து நட்சத்திரமாக வடிவமைத்து பின் அழகாகப்பிரித்து அவர்களின் நட்பை வலுப்படுத்திய விதம் அருமை.

வகுப்பறையா அல்லது விண்வெளியா என மலைத்து நின்றோம். அறியலின் முன்னேற்றங்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கி உலகத்தை மாணவர்களுக்கு காட்டி வருகின்றது.

தலைமையாசிரியர் திருமிகு சந்திரா அவர்கள் எட்டாம் வகுப்பு தமிழ்ப்பாடத்தை மிக அருமையாக ஸ்மார்ட் கிளாஸாக எடுத்தார்..பாட அறிமுகம் செய்ய திருமிகு அழகேஸ்வரி ஆசிரியரின் சைகை மொழி நடிப்பு மிகவும் பாராட்டுதற்குரியது..
வீர சிவாஜியின் வசனத்தை மாணவர்கள் நடித்து காட்டி வகுப்பிற்கு மெருகூட்டினர். 
















உணவுத்திருவிழா கண்காட்சியை உயர்திரு உதவிக்கல்வி அலுவலர் கரம்பக்குடி அவர்கள் திறந்து வைத்தார்கள்....கூடுதல் உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் அவர்களும் ,வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளர்களும் கலந்து கொண்டு கண்காட்சியைச்சிறப்பித்தனர்.





















மாணவர்கள் காய்கறிகளை பல உருவங்களாகச்செதுக்கி அதன் பயன்களை ஆங்கிலத்திலும் ,தமிழிலும் எடுத்துரைத்த விதம் மிகச்சிறப்பு...ஆங்கில எழுத்துகள் ஏ முதல் இசட் வரை உள்ள பெயர்களைக்கொண்ட காய்கள் மற்றும் பழங்களைத் தேடித்தேடி அதை கண்காட்சியில் வைத்து அதன் சிறப்புகளை மாணவர்களைக் கூற வைத்த தலைமையாசிரியரையும்,உடன் ஒத்துழைத்த ஆசிரியர்களையும் மனம் நிறைந்து பாராட்டலாம்.

வகுப்பறைச்சுவர்கள் கண்கவரும் ஓவியங்களோடு கருத்தையும் கவர்ந்தன.
பள்ளிக்கு முன் மிகப்பெரிய விளையாட்டு மைதானம் அமைந்து தூய்மையான காற்றையும் ,பள்ளிக்கு ஒரு பிரமாண்டத்தையும் தந்து கொண்டுள்ளது.

கழிப்பறைகள் மிகத்தூய்மையாக இருந்ததைக்கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை.   

மாணவர்கள் சுற்றுப்புறச்சூழலை மிகத்தூய்மையாக வைத்திருக்கிறார்கள்.
ஒவ்வொருவரும் பொறுப்புணர்ந்து செயல்படுகின்றனர்...அவர்களே இந்நாட்டின் விதைகள் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.

உள்ளூர் மக்களின் ஒத்துழைப்பும்,தங்கள் பள்ளிக்காக ஆசிரியர்கள் அனைவரும் மாதம் ரூபாய் 500 பங்களித்து பள்ளிக்குத்தேவையான வசதிகளைச்செய்வது அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எல்லாம் ஒரு எடுத்துக்காட்டு.
தனியார் மூலம் தொடுதிரை கணினி வகுப்பு அமைத்துள்ளது தலைமையாசிரியரின் அர்ப்பணிப்புக்கு கிடைத்த பரிசு எனலாம்.

தமிழ்நாடு அரசு நல்லாசிரியர் விருது கொடுத்து தலைமையாசிரியர் திருமிகு சந்திரா அவர்களை கௌரவித்துள்ளது.தனக்கான அரசு அளித்த பரிசுத்தொகையினையும் அப்பள்ளிக்கே தந்து மகிழ்ந்த அவரை என்ன சொல்லி பாராட்டுவது எனத்தெரியாமல் திகைக்கின்றேன்.

இத்தனைக்கும் காரணம் தன்னுடன் பணிபுரியும் சக ஆசிரியர்களே என எளிமையாகக்கூறி ,அவர்களை பொறுப்பு மிக்க ஆசிரியர்களாக உருவாக்கியுள்ளார்.அத்தனை ஆசிரியர்களும் மாணவர்களும் கொண்டாடும் அப்பள்ளியின் தலைமையாசிரியர் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஓர் மிகச்சிறந்த உதாரணம்.

செவ்வாய்ப்பட்டிக்குள் வந்த ஒன்பது மஞ்சள் வாகனங்களை அழித்து அவ்வூருக்கு திறமையான குழந்தைகளை உருவாக்கி தந்து வருகின்றார்.
படிப்பிலும் ,ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கும் மாணவர்களை உருவாக்கி வரும் அத்தனை நல்ல உள்ளங்களுக்கும்
மனம் நிறைந்த வாழ்த்துகள்.