World Tamil Blog Aggregator Thendral: வீதி
Showing posts with label வீதி. Show all posts
Showing posts with label வீதி. Show all posts

Sunday, 25 October 2020

வீதி கலை இலக்கியக் களம் 77

வீதி கூட்டத்திற்கு எழுத்தாளர் கி.ரா அவர்கள் வருகை

வீதி கலை இலக்கியக் களம் 77
இதுவரை நடந்த வீதி கூட்டங்களில் ஆகச் சிறந்த கூட்டமாக இன்றைய வீதி அமைந்தது.
மகிழ்வில் மனம் கூத்தாடுவதை உணர்கிறோம் ஏனெனில் எதிர்பாராத ஆச்சரியமாக எழுத்தாளர் கி.ரா அவர்கள் இன்று வீதி நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார் .மாபெரும் எழுத்தாளரை வீதி வணங்கி மகிழ்ந்தது.நம்ப முடியாத உண்மை.எத்தனை எளிமையாக நூற்றாண்டை நெருங்கும் அவரின் எளிமை உன்னதமானது.
கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள் அறிமுக உரை நிகழ்த்தினார்.
எழுத்தாளர் நாறும்பூநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கி.ராவின் கதைகள் குறித்தும்,அவருடனான நட்பு குறித்தும்,கரிசல் இலக்கிய வகைமையின் சிறப்பு குறித்தும் கை தேர்ந்த கதை சொல்லியாக கூட்டத்தை தன் வசப்படுத்தினார்.
வீதி உறுப்பினர்களான இரா.ஜெயா சுற்றுப்புற சூழல் கதையும்,மலையப்பன் கோபல்ல கிராமம் நாவலும், கிரேஸ் பிரதிபா அட்லாண்டா சொந்த சீப்பு கதையும், சுபஸ்ரீ முரளீதரன் சென்னை கதவு கதையும்,கமலம்எறும்பு கதையும், காரைக்குடி கிருஷ்ணாவேலைவேலையே வாழ்க்கை கதையும், சகோதரர் பாண்டியன்எழுத மறந்தகதையும்,கீதா பேதை கதையும், குறித்து மிகச் சிறப்பாக விமர்சனம் செய்தனர். சகோதரர் கஸ்தூரி ரங்கன் கூட்டத்திற்கு தலைமை பொறுப்பை ஏற்று சிறப்பாக நடத்தி குருபூஜை கதையும் குறித்து மிகச் சிறந்த விமர்சனங்களைக் கூறிய விதம் அருமை.
கீதா வரவேற்புரை கூற,சோலச்சி நன்றியுரை கூற கூட்டம் நான்கு மணி நேரத்திற்கு மேல் வீதி நடைபெற்றது.
வீதி கூட்டத்திற்கு எழுத்தாளர் கி.ரா வை வரவழைத்த தோழர் நாறும்பூநாதன் அவர்களை வீதி வணங்கி மகிழ்கிறது.மிக்க நன்றி தோழர்.
இன்றைய பொழுது கி.ராவின் நினைவுகளோடு இனிமையாக கழிந்தது...
விரைவில் வீதி உறுப்பினர்கள் கி.ராவை சந்திக்க அனுமதி அளித்துள்ளார்.. மிக்க நன்றி அனைவருக்கும்.

Wednesday, 26 August 2020

வீதி கலை இலக்கியக் களம்-75

வீதி கலை இலக்கியக் களம்-75
பவளவிழா அழைப்பிதழ்.

நாள்:30.8.2020 ஞாயிறன்று
காலை:10.00-1.00 
இணையவழி நிகழ்வு
Zoom id: 507 503 9922
Password:veethi

அன்புடன் அழைக்கிறோம்...
வீதி நிறுவுநர் முனைவர் அருள் முருகன் அவர்கள் தலைமையில்...
வீதியின் முன்னோடி கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள் அரசியலோடு தொகுப்புகளை வழங்க..
தமிழரின் வீரத்தை,இயற்கையோடு,விங்குகளோடு,பறவைகளோடு இணைந்த வாழ்வை, ஆகச் சிறந்த மருத்துவ அறிவை,வேள்பாரி நாவல் கற்பிக்கும் கல்வியை, பாத்திரப் படைப்புகளை, கதைகளும் திருப்புமுனைகளும் நிறைந்த சுவாரசியத்தை,தமிழரின் நம்பிக்கைகளை , பெண்களுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தை,நட்பின் மேன்மையை குறித்து உரையாற்ற உள்ளனர்..
நமது முன்னோரின் மேன்மையை உணர அழைக்கிறோம்..இது வெறும் நாவலல்ல...நமது பண்பாட்டை உலகிற்கு அறிவிக்கும் கண்ணாடி..

Saturday, 27 June 2020

வீதி கலை இலக்கிய களம்-73 இணையத்தில்

அன்புடன்
ஒரு கோப்பை இலக்கியம் பருக அழைக்கிறோம்
வீதி தனது 73 ஆவது நிகழ்வை இணைய வழியில் நிகழ்த்த உள்ளது....
உலகமெங்கும் வீதியின் நண்பர்கள் தங்களின் வாழ்த்துகளை மட்டுமே கூற முடிந்த நிலையில் தற்போது உங்களுடன் இணைந்து பயணிக்க வீதி அன்புடன் காத்திருக்கிறது...
வீதியின் முன்னோடிகள் திருமிகு கும.திருப்பதி தலைமை ஏற்க, கவிஞர் நா.முத்துநிலவன்  ஊரடங்கு தந்த உணர்வு என்ற தலைப்பில் உரையாற்ற, திருமிகு விசி.வில்வம் ஊரடங்கில் உளவியல் என்ற தலைப்பில் கலந்துரையாட உள்ளனர் நாளை காலை உங்களோடு..
உங்களின் மதிப்புமிகு காலங்களை ஒதுக்கி எங்களோடு இணைய வாருங்கள் என்று அன்புடன் அழைக்கிறோம்...பாடல்,
கவிதைகள், நூல் விமர்சனம் மற்றும் திரைவிமர்சனம் என பல்வகைச் சுவையுடன் பரிமாற காத்திருக்கிறது வீதி.
இணைவோம் இணையத்தில்..

Saturday, 14 April 2018

veethi 47

வீதி கலை இலக்கியக்களம் -௪௭ (47)

இம்மாத வீதிக்கூட்டம் மிகச் சிறப்பாக இளைஞர்கள் சூழ ௨௧.௧.௧௮ (21.1.18) ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்தது .

வரவேற்புரை:இம்மாத கூட்ட அமைப்பாளரான கல்வியாளர் சுதந்திரராஜன் அவர்கள் வீதியின் சிறப்பைக் கூறி அனைவரையும் வரவேற்ற விதம் சிறப்பு .

அஞ்சலி :மறைந்த எழுத்தாளர் ஞானி ,கவனகன் ஆகியோருக்கு வீதியின் சார்பாக அஞ்சலி செலுத்தப்பட்டது .

கவிதை:

ஆசிரியர் சுந்தரவள்ளி தூக்கத்தை தொலைக்கச் செய்யும் புத்தகமே நல்ல புத்தகம் என்று கூறி அவருக்குப் பிடித்த கவிதைகள் சிலவற்றைக் கூறினார் .

காரைக்குடியில் இருந்து வீதியில் கலந்து கொண்ட கவிஞரும் முகநூல் நண்பரும் ,ஆசிரியருமான கிருஷ்ணவேணி அவர்கள் வீதியின் சிறப்புகளைக்கூறி "அச்சம் தவிர் "என்ற தலைப்பில் மிக அருமையான கவிதையை வழங்கினார் .

அறிமுக மாணவக் கவிஞர் அம்பி .பாலச்சந்திரன்தனது முதல் கவிதையான பல் தொடை வெண்பாக்கவிதையை "எண்ணங்கள் "என்ற தலைப்பில் வழங்கிய போது அனைவரும் மகிழ்ந்து பாராட்டினர் .வீதிக்கு கிடைத்துள்ள மற்றுமொரு தமிழ்ப்புதையல் அவர் .

பேராசிரியர் பாண்டியராஜன் அவர்கள் தனது ஹைக்கூ கவிதைகளால் வீதிக்கு கலகலப்பு ஊட்டினார் .
கவிஞர் மலையப்பன் "இடைவிடாத "எனத்துவங்கும் கவிதையை வழங்கி வீதிக்கு மெருகூட்டினார் .

சிறுகதை :

எங்கள் பள்ளியில் படிக்கும் எனது ஏழாம் வகுப்பு மாணவி விவேதா "செய்யும் தொழிலே தெய்வம் "என்ற தலைப்பில்
" பணம் சேர்ந்த பின் தொழிலைக்கவனிக்காத வியாபாரியைத்தேடும் மக்களுக்காக மீண்டும் அவன் வியாபாரம் செய்ய வருகிறான் "என்ற கருத்து மிக்க கதையைக் கூறிய விதம் அனைவரையும் கவர்ந்தது .

தலைமை :தலைவராகஅரசுப்பள்ளிகளுக்காக,அரசுப்பள்ளி மாணவர்களுக்காக குரல் கொடுக்கின்ற ,சமூகச்செயற்பாட்டாளர் ,புதுகையின் ஒளிப்பதிவாளர்களுள் குறிப்பிடத்தக்கவரான புதுகை செல்வா அவர்கள் தலைமை ஏற்று மிகச்சிறப்பாக வழி நடத்தினார்கள் .கவிஞர் வைகறை அமைப்பாளராக இருக்கையில் தலைமை ஏற்ற வீதியின் நினைவுகளைப்பகிர்ந்து ,தற்போது ரோஸ்லின் அவர்கள் அமைப்பாளராக இருக்கும் வீதியில் தலைமைப்பொறுப்பை ஏற்பது குறித்து நெகிழ்வின் உரையாகத்துவங்கினார்கள் .சமூகசீர்கேடுகளைக் கலைஞர்களால் மட்டுமே சுட்டிக்காட்டி திருத்த முடியும் என்றும்,ஜல்லிக்கட்டுத்துவங்கி இன்று வரை மாணவர்களின் போராட்டம் தொடரும் வகையில் சமூகம் நிலை சீர்கெட்டு கிடக்கும் நிலை உள்ளது .இலக்கியம் அதை மக்களுக்கு உணர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. என்று சமூகம் சார்ந்த அவரது பேச்சு வீதிக்கு வலு கூட்டியது .

கட்டுரை :சகோதரி ரோஸ்லின் "மெரீனா இளைஞர் எழுச்சி "என்ற தலைப்பில் ஜல்லிக்கட்டுப்போராட்டம் இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பின் திரண்ட மாணாவர்களின் எழுச்சி ,இளைய சமுதாயத்திற்கான அறைகூவல் ....தீக்கங்கு போல அது சுடர் விட்டுக்கொண்டே இருக்கும் என்ற கருத்தில் கம்பீரமானக் குரலில் படைத்த விதம் மிக அருமை .அது குறித்த வீதி உறுப்பினர்களின் உணர்வான விமர்சனம் மிகச் சிறப்பு .

நூல் விமர்சனம்

கவிஞர் இரவி உதயன் அவர்களின் நூலை கவிஞர் அமிர்தாதமிழ் மிக எளிமையாக கவிதைகளை உணர்ந்து ஆழ்ந்து செய்த விமர்சனம் பாராட்டுதற்குரியது . .கவிஞர் செல்வா தனக்கே உரிய பாணியில்"பழகிக்கிடந்த நதி " என்ற நூலை கவிதையில் விமர்சனம் செய்தமுறை சிறப்பு .

கவிஞர் சாமி.கிருஷ் அவர்களின் "துருவேரியத்தூரிகைகள் "என்ற நூலை
"விதைக்கலாம்" மலையப்பன் கடலில் மூழ்கி முத்தெடுப்பது போல அதன் சாரத்தை அட்டகாசமாக கூறிய போது நூலின் பெருமையை அனைவரும் உணர்ந்தனர் .சில முத்துக்களில் ஒன்று

"ஒரு கன்னத்தில் அறைந்தால்
மறு கன்னத்தைக் காட்டலாம்
நாங்கள்
அடி வயிற்றில் அல்லவா
அடிக்கப்படுகிறோம் "

அதை மனம் நெகிழ்ந்து நூலாசிரியர் சாமி கிருஷ் ஏற்றுக்கொண்டார் .

"காலத்தின் குரல் பெரியார் "

என்ற பேராசிரியர் தமிழரசன் அவர்களின் நூலை வீதியின் பெருமைக்குரிய குழந்தையான எழில் ஓவியா தனக்கே உரிய பாணியில் வியந்து பாராட்டி செய்த விமர்சனம் போற்றுதலுக்குரியது .பெரியாரை பெரியவர்களே உணராத காலத்தில் ,குழந்தைகள் உணர்வது என்பது ஆச்சர்யமான ஒன்று தானே ...

சிறப்புரை :வீதியின் வேராகவிளங்கும் கவிஞர் முத்துநிலவன் அவர்கள் வீதியின் ஐம்பதாவது கூட்டம் குறித்த ஆலோசனையை வழங்கினார் .கதையை கூறிய சிறுமிக்கு கவிஞர் சாமிக்கிருஷின் நூலை வாங்கி ,வழங்கி பாராட்டினார் .

டீ குடிப்பது என்பது
டீ குடிப்பது மட்டுமல்ல ...
அது போல ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது ஜல்லிக்காட்டுக்கானது மட்டுமல்ல .கொக்கோகோலா பாட்டிலைத் தலைகீழாகக்கொட்டி தனது எதிர்ப்பை காட்டிய மாணவர்களின் உணர்வின் வீச்சு .உடையில் இல்லை பண்பாடென்பது இரவிலும் பெண்களை மரியாதையாக பாதுகாப்பாக நடத்தி உலகிற்கே வழிகாட்டிய முன்மாதிரியான போராட்டம் .அது அக்னி என்றும் அணையாது என்று மிகச்சிறப்பனதொரு உரையை வழங்கினார் .

நன்றியுரை :அமைப்பாளர் ரோஸ்லின் நன்றியுரை வழங்கினார் .

வீதியை திட்டமிட்டு மிகச்சிறப்பாக வழங்கிய அமைப்பாளர்கள் இருவரையும் வீதி பாராட்டி மகிழ்கின்றது ..












Monday, 3 July 2017

வீதி கலை இலக்கியக்களம் -40

வீதி கலை இலக்கியக்களம் -40

நாள்: 25.6.17
இடம் :ஆக்ஸ்போர்ட் சமையர்கலைக்கல்லூரி புதுக்கோட்டை .
காலம் :10.00 காலை

வரவேற்புரை :கவிஞர்  கீதா .

தலைமை :திருமிகு இரா .ஜெயா
உதவி தொடக்கக்கல்வி அலுவலர் .திருச்சி .

சிறப்பு விருந்தினர் :கவிஞர்  முருக தீட்சண்யா. மயிலாடுதுறை



கவிதை :கவிஞர்  மீரா .செல்வகுமார்,கவிஞர் செந்தில்குமார்.

நூல் அறிமுகம் :செல்வி எழில் ஓவியா "உயிராயுதம் "

பாடல் :கவிஞர் பவல்ராஜ் .

நன்றியுரை :கவிஞர் சிவகுமார் .

வீதி குறித்து விமர்சனங்கள்

செல்வி எழில் ஓவியா

எழில் ஓவியா added 7 new photos — feeling happy with இரா.ஜெயா and 3 others.
கப்படுத்தினேன்.மது ஒழிப்பிற்காக உயிரைக் கொடுத்த அய்யா சசி பெருமாள் அவர்களின் போராட்ட வாழ்க்கையை அவருடனே 10 வருடங்களுக்கு மேலாகப் பயணித்து இப்புத்தகத்தில் ஆவணப்படுத்தியுள்ளார் அருள்தாஸ் .
இப்புத்தகத்தை அறிமுகப்படுத்த வாய்ப்பளித்தமைக்கு நன்றிகள். 😀🙏🙏🙏😀



சிறப்பு விருந்தினர் கவிஞர் முருகதீட்சன்யா அவர்கள்
முருக தீட்சண்யா added 5 new photos.
,வீதி இலக்கிய களத்தின் அழைப்பாளனாக.
39 நிகழ்வுகளை ஒரு இலக்கிய அமைப்பு சத்தமில்லாமல் கடந்திருப்பது பெரும் வியப்பை தந்தது,40 வது நிகழ்வு சோலச்சியின் பாடலோடு தொடங்கியது, தொடர்ந்தது கவிதை வாசிப்பு, படித்ததை பகிரும் தோழர்கள் என்று ஒரு கலை இலக்கியத்திற்கான முழு தேடலாக வீதி இருந்தது,
#எழில்_ஓவியாவின்
நூல் விமர்சனத்தை விடவும் அவர் மேடையை கையாளும் விதம் என்னை கவர்ந்தது
அதை விடவும்
அவருக்குள்ள கோபமும் அதில் உள்ள நியாயமும் அவருக்கு இருக்கும் தெளிவான புரிதலும் வியக்க வைத்தது,தன் இயல்பில் தன்னெழுச்சியாக துடிப்பாக வளரும் இப்படியான குழந்தைகளை பார்க்கிற போது ஒரு மகிழ்ச்சி தோன்றும் ஒரு மகளின் தகப்பனாக.
Devatha Tamil அவர்கள் மிகச் சிறப்பாக நிகழ்வை ஒருங்கினைத்திருந்தார்,தலைமை ஏற்ற இரா.ஜெயா அவர்கள் தன் இயல்பான மொழியால் பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்,ஒரு தேர்ந்த கதை சொல்லியைப் போல. இவர் எங்கள் மயிலாடுதுறைக்காரர் என்பது கூடுதல் மகிழ்ச்சி.
ஒரு நல்ல அவையில் என் மனம் கவர்ந்த ஆளுமைகள் குறித்து பேசும் வாய்ப்பு Stalin Saravanan வழியாக கிடைத்தது
அவருக்கும் என் அன்பு.
வீதிக்கு என் வாழ்த்துகள்.
நண்பர் Andanoor Sura
தோழர் Neela Alangudi இவர்களின் சந்திப்பும் மகிழ்வை தந்தது.




சோலச்சி புதுக்கோட்டை பாடலுடன் தொடங்கி கவிதை விமர்சனம் கதை என கலை கட்டியது வீதிக்கு வந்த தோழர்கள். இது 40வது கூட்டம். வைகறை நினைவு படுத்திக் கொண்டோம். அவரது மனைவியை சந்தித்தேன். என்னால் முழுமையாக அவர் பற்றிய நினைவை பகிர முடியவில்லை. தாழம்பூ என்ற சிற்றிதழை 39ஆண்டுகளாக நடத்தி வரும் கோவிந்தராசன் அய்யாவை சந்தித்தேன் கிரியா ஊக்கியாக இருந்தார். உள் மனம் அவரை உதாரண புருசராக எடுத்துக்கொண்டு வலுப்பெற்றது. எல்லாவற்றுக்கும் நன்றிகளை கீதா Devatha Tamil தோழருக்கே சொல்ல வேண்டும். நல்ல சைவ சாப்பாட்டுடன் ஊர்த்திரும்பினோம். துண்டு போர்த்தி கௌரவித்தார்கள் பெருசா இருந்திச்சு. நன்றி முருக தீட்சண்யாவுக்கு.

நேற்று தோழர் Neela Alangudi வை சந்தித்ததில் ஒரு மகிழ்ச்சி ஒரு மிகச் சுவாரஸ்யமான புத்தக சேஸிங் அனுபவத்தை சொன்னார். அது கதையாக மாறினால் நன்றாக இருக்குமென தோனியது. கவிஞர் பவுல்ராஜ் மக்களிசை பாடலாக காலம் மாறிப்போச்சு என்று தானே எழுதி இசையுடன் பாடினார் மிக அருமையான தொடக்கம். Devatha Tamil தோழரின் தொடக்கம் அருமை இரா.ஜெயா தோழர் ஆசிரிய பணியில் இருந்து கொண்டு நல்ல தேர்ந்த வாசிப்பாளாராக இருப்பதும் மிக்க மகிழ்ச்சி. அவர்களின் மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.




துவாரகா சாமிநாதன் added 2 new photos.
 சூழலில் மிகத் திடமாக பேசினாள். என் செல்லப் பெண் துவாரகாவை இப்படித்தான் வளர்க்க வேண்டுமென நினைக்கச் செய்தாள். மக்களிசை பாடலை பாடியதும் தன் விமர்சனமாக பெண்ணின் உடைகளை மட்டுமே விமர்சித்து பாடும் போக்கு தவறெனவும் தனக்கு தாவணி கம்பெர்டா இருந்தா போட்டுகிறேன் அப்படியில்லை ஏதாவது திருநாளில் வீட்டில் மட்டும் தாவணியும் மற்ற நாளில் ஜீன்ஸ் போடுவதில் என்ன குற்றம் கண்டீர் பாப் கட்டிங்கும் குட்டை பாவாடை போட்டால் உங்களுக்கேன் கோபம் வருகிறது அது போல ஆணுக்கான உடையை ஏதும் சொல்கிறீர்களா என பொரிந்து தள்ளினாள். பதில் சொல்லும் வரை பாடிய அய்யாவை விடவில்லை. சபாஷ் போட வைத்தாள். வளர்ப்பும் வாசிப்பும் சரியான பாதையில் சென்றால் அவள் பெரிய ஆளா வருவா..நாமும் அவளை வாழ்த்துவோம். அவளாண்ட போன் நம்பர் வாங்காது வந்துட்டேன். நாமும் அவளோடு உரையாடி உரமேற்ற வேண்டுமே. சமூகத்திற்கு ஒரு போராளி கிடைத்து விட்டாள்.
நம்பிக்கை ஊற்று நீ
வீதிக்கு வா மனிதியே
உலகம் உன் பின்னால் வரும்
கனல்மதிக்கு பிறகு அடுத்ததாக இவளை காண்கிறேன்.
வளர்த்தெடுத்த அன்னை அமிர்தா தமிழ் நன்றியும் அன்பும்.

இன்றைய தினத்தை முருக தீட்சண்யா வோடு வீதியில் களித்தேன். மனப்பாரம் கொஞ்சம் குறைந்திருந்தது. ஒரு மக்களிசை. புத்தக விமர்சனம். கவிதை வாசிப்பு என கலந்து பட்ட விருந்தாக அமைந்தது புதிய அன்பர்கள் நிறைய பேரை சந்தித்த மகிழ்ச்சி. தீட்சண்யாவின் அழகான மென்மையான கதை சொல்லல் முறையில் மூழ்கி திளைத்தேன். எழுத்தும் கலையும் வாழ்வும் ஒரே நேர்கோட்டில் பயணிக்க வேண்டுமென ஊடு இலை பாவாக பேசினார் பாரதியில் தொடங்கி புதுமை பித்தன். கு.அழகிரிசாமி. பிரபஞ்சன் என அவர்களின் கதையை மட்டும் சொல்லாமல் அவர்களைப் பற்றிய நெகிழ்வான செய்திகளை சொல்லி நெகிழச் செய்தார். வைக்கம் பசீரைப் பற்றி அவர் பேசி முடித்த போது அனைவரும் அஞ்சு நிமிசம் அமைதியாய் நெகிழ்ந்திருந்தனர். இதற்கெல்லாம் நன்றிகள் தோழர்களுக்கு Devatha Tamilஅமிர்தா தமிழ்சோலச்சி புதுக்கோட்டைமிடறு முருகதாஸ்Andanoor Sura
கவிஞர் Andanoor Sura
கவிஞர் முருகதீட்சண்யாவின் இன்றைய உரை முக்கியமானது. கவிஞரான அவர் சிறுகதைகள் குறித்து பேசிய விதமும் அவர் எடுத்துகொண்ட கதைகளும் அவரொரு தேர்ந்த வாசிப்பாளர் எனக் காட்டியது. நன்றி கவிஞரே

சிறப்பு விருந்தினர்களை கௌரவித்தல்

கவிஞர் துவாரகா அவர்களுக்கு கவிஞர் அந்தோணி அவர்கள் சிறப்பு செய்கின்றார் .
 கவிஞர் முருகதீட்சன்யா அவர்களுக்கு தமிழாசிரியர் திருப்பதி அவர்கள் சிறப்பு செய்கின்றார
 தலைமை வகித்த திருமிகு இரா .ஜெயா அவர்களுக்கு கவிஞர் நீலா அவர்கள்  சிறப்பு செய்கிறார் .
 சென்ற மாதம் சிறுகதை நூல் வெளியிட்ட கவிஞர்  சொலச்சிக்கு கவிஞர்  பவல்ராஜ் சிறப்பு செய்கிறார் .
 சிறுகதைக்காக விருது வாங்கிக்கொண்டே இருக்கும் எழுத்தாளர் சுராவிற்கு தாழம்பூ ஆசிரியர் சிறப்பு செய்கின்றார் .