நம்ம சகோ கில்லர்ஜிக்கு நகச்சுத்தி வந்தாலும் வந்தது...அதுக்கு ஆபரேஷன் பண்ணிக்கிட்டு மருத்துவர்கள் முழிக்க,.....
சைடு கேப்ல இவரு சொர்க்கலோகம்?![அங்கேயா போவாரு...கில்லர்ஜின்னு பேர வச்சுக்கிட்டு]போயியியி..கடவுளைப்பார்க்க ,அந்தக்கடவுளோ பாவம் இவரோட வேண்டுதல்களையே நிறைவேற்ற முடியாது..பின்ன இந்தியாவுல மதம் ஜாதிங்குற வார்த்தையே இல்லை சொன்னா செயிலுன்னு சொல்ல கடவுளு தலையில கைய வச்சுக்கிட்டு...இந்தப்படுபாவிய பிடிக்க முடியாது போலன்னு அவரு ஒரு பந்தயம் வைக்க....
சொர்க்கத்துலேர்ந்து என்னைப் பார்த்து...மாட்டிவிட்ட சகோவ என்ன பண்ணலாம்...இருக்கட்டும் எப்படியும் ஆபரேஷன் முடிந்து வெளியே வரும் போது கவனிச்சுக்கலாம்...இப்ப கடவுள பார்க்கலாம்னு நினைச்ச உடனே விஷ்க்னு சொர்க்கத்துல நானு... கள்ளச்சிரிப்போட நம்ம சகோ கில்லர்ஜி....
பக்கத்துல அநியாயத்துக்கு அணிகலன்களோட வரிசையா எல்லா மதக்கடவுளும்....உட்கார்ந்துருக்காக...யாரப்பாத்து கேக்கலாம்னு போனா ...எதுக்கு வம்பு மொத்தக்கடவுள்களையும் ஒரே சமயத்துல பார்த்து கேட்டுடலாம்னு ..முடிவு பண்ணேன்...
ம்ம் கூறும் உமது ஆசைகளைன்னு திருவிளையாடல்ல வர்ற சிவபெருமான் சிவாஜி ஸ்டைலில் எல்லோரும் கேட்க...
எல்லாத்தையும் நிறைவேத்துவீகளான்னு வழக்கம் போல கிராஸ் கேள்வி கேட்க ....ம்ம்ம்ம்ம்னு உருமிவிட்டு கேளும் கேளும் கேட்டுப்பாரும்னு அதட்ட...அய்யோடான்னு பயந்துகிட்டே கேட்க ஆரம்பித்தேன்..
1]நிசமாவே பூமியில இத்ன கடவுள் இருந்தும் நடக்குற அநியாயத்த யாரும் கேக்கலயே இனி ஒரு கடவுளாவது கேட்பீகளா?..
2]மனுசனுக்கு ஆறறிவு வேண்டாம் ஐந்தறிவே போதும்ஆறாவது அறிவ அழிக்க முடியுமாக்கடவுளே...,அத வச்சுக்கிட்டு இவன் படுத்துற பாடு தாங்க முடியல...
3]பெண்களைக்குறை சொல்லாத...இருங்க இருங்க பெண்கள் குறை சொல்லும் படி நடக்காத ஆண்களைப்படைப்பீர்களா..சாமி..
4]நீங்க எல்லாம் ஒண்ணா சேர்ந்து நம்ம சரத்குமாரு ஸ்டைல நிறுத்துறா சண்டைய...எல்லா மதமும் ஒண்ணுதாண்டா...மனுசனப் பிரிச்சவன வெட்டுறான்னு சொல்லோனும் முடியுமா,...?
5]எத்தன முறை சின்ன வயசுல உங்கள சுத்திசுத்தி வந்து எல்லாரும் நல்லாருக்கனும்னு வேண்டிக்கிட்டேன்...ஆனா என்ன மட்டும் நல்லா வைக்காத உங்களுக்கு தண்டனைக் கொடுக்க ஆசைப்படுறேன் முடியுமா சாமி?இல்ல இழந்து போன என் மகிழ்ச்சியெல்லாம் திருப்பி கொடுத்துடுங்க.....எலுமிச்சம்பழ விளக்கே ஆயிரக்கணக்குல ஏத்தியிருக்கேன் ..கொஞ்சம் கூட கருணை காட்டலியே பா...
6]இந்தியா கடன்ல இருக்கு உங்க பக்கத்துல இருக்குற திருப்பதி வெங்கடாச்சலபதிக்கு ஆயிரம் கோடிக்கணக்குல நகை இருக்குன்றாக....கொஞ்சம் இரக்கப்பட்டு இந்தியாவோட கடனை அடைக்க சொல்லிடுங்க சாமி...
7]கண்டங்கள் எல்லாத்தையும் முடிஞ்சா ஒண்ணா இணைச்சு இந்த அயல்நாட்டுக்காரங்ககிட்டஇருந்து, ஆமா சாமி ஆ ஊ ன்னா எல்லைத்தாண்டினேன்னு பிடிச்சுட்டு போயி கொடுமைப்படுத்துறாய்ங்க....ஒண்ணா சேர்த்தாச்சுன்னா இந்த பிரச்சனையே இல்லல்ல...இந்தியாவ குப்பை கொட்டுற நாடா எந்த நாடும் நினைக்காதுல்ல..கொஞ்சம் காதக்கொடுங்க[ நம்ம பிரதமருக்கு அயல்நாட்டுலேயே இருக்காருன்னு கெட்டப்பேரு மாறிடும்ல...]
8]காலக்கடிகாரம் இருந்தா ஒரே சுத்தா சுத்தி என்ன சின்ன வயசுல கொண்டி உட்டுறுக அட எல்லாரையும் தான்....செய்த தப்பயெல்லாம் செய்யமாட்டோம்ல...ஆனா புதுசா தப்பு பண்றத தடுக்க முடியாது சாமி..
9]கொஞ்ச நாளைக்கு பணக்காரர்கள்டேருந்து எல்லாத்தையும் புடுங்கி வறுமையில் வாடும் ஏழைகளிடம் கொடுத்துடுங்க..கஷ்டம்னா என்னன்னு அவங்களும் உணரட்டும் என்ன நாஞ் சொல்றது...அதுக்குள்ள கன்னத்துல கைய வச்சுக்கிட்டா என்ன பண்றது சாமியோவ்...
10]பேசாம எல்லாரும் ஒண்ணா சேர்ந்து மனுசப்பயல்க கிட்ட நாங்க எல்லாம் ஒரே உருவம் தான் இனி நீங்க அடிக்கிட்டா யாரு காரணமோ அவங்களுக்கு எண்ணெய்க்கொப்பரைதான்னு நேர்ல வந்து சொல்லிட்டு போயிடுங்க சாமிகளா..என்னோட இந்த சின்ன ஆசையெல்லாம் நிறைவேத்திட்டீகன்னா...தந்தை பெரியாரே நேர்ல வந்து நீங்க இருக்கீங்கன்னு சொல்லவச்சுடுறேன் சாமியோவ்..
அய்யோடா ஏனிப்படி சாமியெல்லாம் ஓடுறாங்கன்னு தெரியலயே...
இன்னும் பத்து பேரு ஆசையக்கேட்போமா..யாரப்புடிக்கலாங்கோ
1] அன்பு அண்ணன் முத்துநிலவன்
http://valarumkavithai.blogspot.com
2]அன்பு சகோதரி கீதமஞ்சரி
http://geethamanjari.blogspot.in
3]அன்புசகோதரர் தளிர்சுரேஷ்
http://thalirssb.blogspot.com
4]நம்ம தம்பி கஸ்தூரி
http://www.malartharu.org
5]அன்புச்சகோதரி இளையநிலா
http://ilayanila16.blogspot.com
6]அன்புத்தோழி தென்றல் சசிகலா
http://veesuthendral.blogspot.in
7]அன்புத்தோழர் ஜோக்காளி
http://www.jokkaali.in
8]அன்புச்சகோதரி மாலதி
http://malathik886.blogspot.in
9]உணர்வான தோழியும் சகோதரியும் ஆன ஜெயா
http://jayalakshmiaeo.blogspot.in
10]கொடுத்து சிவந்த கரங்களை உடைய நம்ம விசு ஆசம் சார்
http://vishcornelius.blogspot.com
அப்பாடி ஒருவழியா இவங்க கிட்ட ஒப்படைச்சாச்சு இனி கில்லர்ஜி பிழைப்பது இவர்கள் கையில் கொஞ்சம் பார்த்து ஆசைய சொல்லுங்க எல்லாரும்...