World Tamil Blog Aggregator Thendral: October 2014

Friday 31 October 2014

பிச்சி

கங்குலின் பனிப்போர்வைக்குள்
கூனிக்குறுகி தெருவோரம்
கிடந்த பிச்சி.
கணநேர பார்வையில்
.சுண்டி எனை இழுத்து
மனஆழியில் புதைந்தாள்..
பிச்சியாக்கி...

Thursday 30 October 2014

Thalaivar Easwran -அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணித்தலைவர் ஈஸ்வரன்...அவர்களும் நானும்....

நினைவலைகளில்....

அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணித்தலைவர் ஈஸ்வரன்...அவர்களும் நானும்....


நான் 1988இல் படித்து முடித்ததும் பணியேற்று தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப்பதிமூன்று வருடங்கள் பணியாற்றியது வாழ்க்கையில் மறக்க முடியாத காலங்கள்..ஒரே குடும்பமாய் எந்தவித பேதமுமின்றி வாழ்ந்த காலங்கள்...

இன்று கைநிறைய ஆசிரியர்கள் ஊதியம் பெற அன்று நடந்த போராட்டங்களே காரணம்...அப்படி நடந்த போராட்டங்களில் ஒன்று தான் பஞ்சாயத்துராஜ் திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றியப்பள்ளிகளை கொண்டுவருவதை எதிர்த்து நடந்த போராட்டம்...பணிக்கு வந்த 5வருடங்களில் அதில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது..
தலைநகர் தில்லியில் இந்தியா முழுக்க அனைத்து தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்ட போராட்டம்...

தமிழ்நாட்டில் இருந்து ஒரு கம்பார்ட்மெண்ட்  நிறைய ஆசிரியர்களை ஏற்றிக்கொண்டு  தமிழ்நாடு விரைவுத் தொடர்வண்டி  புறப்பட்டது...தில்லியில் ஒரு குருத்வாரா எனப்படும் சீக்கியர்களின் கோவிலில் தான் தங்கியிருந்தோம்...மிகப்பெரிய மண்டபம்...அது...[சீக்கியர்களின் கடமைஉணர்வை தனியாக எழுத வேண்டும்...]

Wednesday 29 October 2014

munaivar vaa.nehru -ஒரு கோப்பை மனிதம் நூல் குறித்து வலைப்பதிவர் சந்திப்பில் சிறப்புரையாற்றிய

ஒரு கோப்பை மனிதம் நூல் குறித்து வலைப்பதிவர் சந்திப்பில் சிறப்புரையாற்றிய

        முனைவர் வா. நேரு பகுத்தறிவாளர்க்கழக மாநிலத்தலைவர்  அவர்களின் விமர்சனம்....

 அண்மையில் படித்த புத்தகம் : ஒரு கோப்பை மனிதம்- மு.கீதா (கவிதை நூல்)

 ஆசிரியராகப் பணியாற்றும் மு.கீதா அவர்களின் கவிதைத் தொகுப்பு நூல் இது. தன்னுடைய velunatchiyar.blogspot.com  வலைப்பூவிலும், முக நூலிலும் எழுதிய கவிதைகளின் தொகுப்பு எனக்குறிப்பிடுகின்றார் நூலாசிரியர். " "சமூகத்தோடு என்னைப் பிணைத்த எனது எண்ணங்களே கவிதைகளாய் நெய்து உங்கள் மனங்களை வலைவீசிப் பிடிக்கின்றன . எனை வார்த்த கவிதைகளும் , என்னால் வார்க்கப்பட்ட கவிதைகளும் தொகுப்பாய் மலர்ந்துள்ளன " என்று சொல்லும் என்னுரையே கவித்துவமாகத்தான் இருக்கிறது.

                       கவிதை என்பது சமூகம் சார்ந்ததாக, நம்மைச்சுற்றி நிகழும் அவலங்களை எடுத்துக்காட்டுவதாக அமையும்போதுதான்  கவிதையாக நம்மைப்போன்றோருக்கு தோன்றுகிறது. மு.கீதா அவர்களின் கவிதைகள் பலவும் அப்படி சுட்டிக்காட்டுகின்றன, நல்ல கவித்துவமும் கற்பனையும் மிக்க வரிகளால் ., எடுத்துக்காட்டாக ஒரு கவிதை 'பருவத்தின் வாசலில்'
மேலும் படிக்க..இங்க கிளிக்

http://vaanehru.blogspot.in/2014/10/blog-post_29.html?showComment=1414602457937#c4458295888222441487

எப்படி அணுகுவது..?

எப்படி அணுகுவது..?

இன்றைய வளரும் சமுதாயத்தை அணுகுவது எப்படி என்றே புரியவில்லை.ஒரு பக்கம் கண்டிக்கவே கூடாது என அரசும், ஆசிரியரும் ,பெற்றோர்களும் முடிவெடுத்து அவர்கள் போகும் வழியிலேயே போவது தவறோ எனத்தோன்றுகின்றது.

.முன்பெல்லாம் அடித்தாலும் துடைத்து போட்டு விட்டு பெற்றோர்களை அணுகிவிடும் குழந்தைகள் தஞ்சமென..

ஆனால் இப்போது சிறு வார்த்தைக்கூடத்தாங்காமல் கோபப்பட்டு பெரியவர்களைப் பழிவாங்கவா அல்லது தோல்வியைத்தாங்கும் மனவலிமை இல்லாததா...அல்லது இப்படி நடக்கும் துணிவை தொலைக்காட்சியும்,திரைப்படமும்,சமூகமும் கற்றுக்கொடுத்ததா...எதுவெனப் புரியவில்லை .ஆனால் எங்கோ தவறு நடக்கின்றது..அதைப்பற்றி புலம்பியே வாழ்நாள் கழிகின்றது..பயனெதுவும் விழையாமல் ...

Monday 27 October 2014

ஒரு கோப்பை மனிதம் -நூல் வெளியீட்டு விழா

ஒரு கோப்பை மனிதம் நூல் வெளியீட்டு விழா

குடும்ப விழா போல இருந்தது நூல் வெளியீட்டு விழா..

                    26.10.14 ஞாயிறு மதுரையை நோக்கி   காலை 7.30 மணி அளவில் வானம் மழைத்தூவி வாழ்த்த...வலைப்பூ சந்திப்பு நிகழ்ச்சிக்கு துவங்கியது பயணம்..முத்துநிலவன் அண்ணா மற்றும் சகோதரி மல்லிகா,சகோ கஸ்தூரிரங்கன் ,தங்கை மைதிலி,நிறைகுட்டி,தோழி ஜெயலெக்ஷ்மி,கவிஞர் நீலா,தோழி மாலதி,தோழர் ஸ்டாலின்,கவிஞர் மகாசுந்தர்.,இவர்களுடன் அனுசுயாவும், நானும்....நெருக்கடியான ஆனால் இனிமையான ,மறக்க முடியாத பயணமாய்...!

                  போகும் வழியில் கலைநயமிக்க  உணவுவிடுதியில் உரிமையோடு நான் தான் காலை உணவுச்செலவை பகிர்ந்து கொள்வேன் என்று சகோதரி ஜெயா அனைவருக்கும் உணவளித்தார்கள்.மீண்டும் துவங்கியது பயணம்..மதுரையை நோக்கி...!

                 காலை 10.30 மணியளவில் விழா நடக்கும் இடத்திற்குச் சென்றோம் வலைப்பதிவர் அறிமுக நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது...வலைப்பூவில்  கருத்துக்களை மட்டுமே பகிர்ந்து கொண்டிருந்த தோழர்களை நேரில் பார்த்து பேசியது மனம் நிறைவாக இருந்தது.தோழி கிரேஸ் குடும்பம் ,கோவைஆவி,ரத்னவேல் அய்யா,கரந்தை ஜெயக்குமார் அண்ணன் அவர்கள் குடும்பத்துடன்...வந்திருந்தார்கள்,தோழர் கில்லர்ஜி,தோழர் கணேஷ்
ஜோக்காளி பகவான்ஜி ,திடங்கொண்டு போராடு தோழர்,இன்னும் பலர்...மதியம் 1.30 வரை அறிமுக நிகழ்ச்சி தொடர்ந்தது...பட்டறிவும் பாடமும் வலைத்தள அம்மா மிகவும் மகிழ்ந்து பேசினார்கள்.நடுவே மதுரையின் ஜிகிர்தண்டா வழங்கி மேலும் சுவை கூட்டினார்கள்.


Saturday 25 October 2014

காவிரி2

நீராடையணிந்த காவிரி
நிலமகளின் மானம் காத்தாள்.

Friday 24 October 2014

வலைப்பதிவர்கள் சந்திப்பில்- நூல் வெளியீடு


       ஒரு கோப்பை மனிதம்-நூல் வெளியீடு 
           
            நிகழ்ச்சி நிரல்


நாள்:26.10.14 ஞாயிறு    நேரம் :மாலை 3.00 மணி
இடம்:கீதா நடன கோபால நாயகி மந்திர்.தெப்பக்குளம்.மேற்கு வீதி ,மதுரை

தலைமை                         : திருமிகு  இரா . ஜெயலெட்சுமி அவர்கள்
                                                      http://jayalakshmiaeo.blogspot.in/
புதுக்கோட்டை மாவட்ட உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்-[மழலையர்] 

நூல் வெளியிடுபவர்         :கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள்
                                                        http://valarumkavithai.blogspot.in/
                                                       தமுஎகச மாநிலத்துணைத்தலைவர்

நூல் பெறுபவர்                     :முனைவர் வா.நேரு அவர்கள்
                                                        http://vaanehru.blogspot.in/
                                                         பகுத்தறிவாளர் கழக மாநிலத்தலைவர்

வாழ்த்துரை                             :கவிஞர் ஸ்டாலின் சரவணன் அவர்கள்
                                                           http://www.stalinsaravanan.blogspot.in/
                                   தமுஎகச புதுக்கோட்டை மாவட்டத்துணைச்செயலர்

ஏற்புரை                                    :கவிஞர் கீதா 
                                                                           http://velunatchiyar.blogspot.com 


 வலைப்பதிவர்கள் அனைவரும் வந்து சிறப்பிக்க வேண்டுகின்றேன்.
                                                        
                                                                     நன்றி




Thursday 23 October 2014

ஒரு கோப்பை மனிதம்-மதிப்புரை

ஒரு கோப்பை மனிதம்-மதிப்புரை

                                    எனது நூலுக்கு மதிப்புரை எழுதியுள்ள கவிஞர் வைகறை முகநூலில் அறிமுகமாகிய இனிய தோழர்...நந்தலாலா இணைய இதழ் ஆசிரியர்,கவிஞர்கள் சூழ வாழும் வரம் பெற்றவர்...இவரின் ஆகச்சிறந்த கவிதைகள் இவரை  சிறந்த கவிஞரென உலகிற்கு அடையாளம் காட்டுகின்றன.தனது இடைவிடாத பணிச்சூழலிலும் எனது நூலுக்கு மதிப்புரை தந்த தோழமைக்கு என் மனம் நிறைந்த நன்றி....

மதிப்புரையாக.....

காலத்தின் காலடித்தடங்களாய் ஒலிக்கும் வரிகள்..

                          ஒரு கலை எப்போது உண்மையான படைப்பாக முழுமையடைகிறது? அதன் விரல்கள் இயற்கையழகில் மெய் மறக்கையிலேயா? கற்பனை வர்ணனைகளால் அலங்கரிக்கப் படுகையிலேயா? பிரச்சாரப் பேருரைகளாலா? இல்லை. எப்போது ஒரு கலை சமகால நிகழ்வுகளைப் பதிவு செய்கிறதோ அப்போதுதான் அது உண்மையான படைப்பாகிறது.

ஒரு கோப்பை மனிதம்-அணிந்துரை

 கனடாவில் இருந்து..

எனது கவிதை நூலுக்கு அணிந்துரை தந்தவர்வலைப்பூ நல்கிய தோழி இனியா.. இலங்கையில் பிறந்து தற்பொழுது கனடாவில் வசிக்கும் இனியா விடம் அணிந்துரை  கேட்டவுடன் மிகவும் மகிழ்வுடன் தனது பல்வேறு சிரமங்களுக்கு நடுவில் எழுதி கொடுத்துள்ளார்.இவரின் அன்பிற்கு என்ன கைம்மாறு செய்வதென தெரியாமல் மனம் நேசத்தில் நிறைந்து வழிகின்றது...இவரது http://kaviyakavi.blogspot.com.என்ற வலைத்தளத்தில் அழகிய படங்களுடன் நூறு கவிதைகட்கு மேலும்,கட்டுரைகளும் தமிழின் மேன்மையைக்கூறுகின்றன...

தோழி இனியாவின் அணிந்துரையாக...


வணக்கம் தோழி!

கவிஞர் கீதா அவர்கள் கனவு பலிக்கும் வேளை இது. பண்பட்டுப் போன உள்ளம் அவருக்கு மகிழ்ச்சி, பரிதவிப்பு, ஆதங்கம், ஆக்ரோஷம், வேதனை என ரசித்து ருசித்து அறுசுவையுடன்  படைத்திருக்கிறார் இவ் விருந்தை நாம் அருந்த  என்றே எண்ணத் தோன்றுகிறது. அவர் வேண்டு கோளுக்கிணங்க அளவில்லா மகிழ்ச்சியுடன் அவர் வெளியிடவிருக்கும் நூலுக்கு அணிந்துரை தரவிளைகிறேன்.
அவருக்கு நிறைந்த வாழ்த்தும் வெற்றியும் கிட்ட வேண்டும் என வணங்கி வாழ்த்துகிறேன் ....!

Wednesday 22 October 2014

ஒரு கோப்பை மனிதத்தில் ஒரு துளி

ஒரு கோப்பை மனிதம்-எனது கவிதை நூலில் ஒரு துளி

தீபாவளிக்கவிதை-பட்டாசுக்கனவில்

ஏன் அம்மா
நாம் வெடித்து மகிழ்வதெப்போ”?
அடுத்த ஆண்டு காசு வரும்
கட்டாயம் வாங்கிடலாம்
என்றாள் அன்னை..

மத்தாப்பூக்குச்சிகளை
அடுக்கிய தங்கச்சியோ
எனக்கு எனக்கும் என்றாள்

இயலாத புன்சிரிப்பில்
தங்கமே தவறாது
வாங்குவோம் என்றாள்..

வெடிமருந்து அடுக்கிக்கொண்டே
கிழிந்த முந்தானையால்
முகம் துடைக்க எத்தனித்த வேளையிலே
இடியொன்று இறங்கியது போல்

பட்டாசுடன் பட்டாசாய்
வெடித்துசிதறி
அன்புமகனே
ஆசையாய் நீகேட்ட
வான்வெடிய பார்த்துக்கோவென்றாள்..



Monday 20 October 2014

வலைப்பதிவர் சந்திப்பு திருவிழாவில்

வலைப்பதிவர் சந்திப்பு திருவிழாவில்


ஒரு கோப்பை மனிதம் -கவிதைநூல் வெளியீடு
                 
                          நிகழ்ச்சி நிரல்

இடம்:கீதா நடன கோபால நாயகி மந்திர்   ,மதுரை

நாள்:26.10.2014

நேரம்:மதியம் 2 மணி

”ஒரு கோப்பை மனிதம் -கவிதை நூலை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கவும்

திருமிகு. முத்துநிலவன்அவர்கள் த.மு.எ.க.ச மாநிலத்தலைவர்
கவிஞர்,பட்டிமன்ற பேச்சாளர்,தமிழாசிரியர்,

”ஒரு கோப்பை மனிதம் -கவிதை நூலை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கவும்



நூலைப்பெற்று சிறப்புரை வழங்கவும்

முனைவர் வா .நேரு அவர்கள்

பகுத்தறிவுக்கழக மாநிலத்தலைவர்

நூலைப்பெற்று சிறப்புரை வழங்கவும்

இசைந்துள்ளனர் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்...













ஒரு கோப்பை மனிதம் -முன்னுரை

ஒரு கோப்பை மனிதம்-முன்னுரை
--------------------------------------------------------------
நூல் எழுதுவதை விட அந்நூலுக்கு தகுதியானவர்களிடமிருந்து முன்னுரை பெறுவது என்பது எவ்வளவு சிரமமான செயல் என்பது நூல் வெளியிட்ட அனைவருக்குமே தெரியும் ... எனது நூலை வலைப்பதிவர் சந்திப்பில் வெளிடலாம் என முடிவு எடுத்த போது குறுகிய காலங்களே என்னிடம்...

யாரிடம் பெறுவது என்ற ஆலோசனையில் என்னை இலக்கிய உலகில் வழிநடத்திச்செல்லும் அய்யா முத்துநிலவன் அவர்கள் வலைத்தளத்தில் கலக்கும் சகோதரி மைதிலி பற்றி கூறியவுடன் மிகவும் மகிழ்வாக இருந்தது..நான் இரண்டு நாட்களில் தரமுடியுமா எனக்கேட்ட பொழுது உடனே சரியெனக்கூறியதுடன் தன் பள்ளிப்பணி,குடும்பப்பணி,இணையப்பணி ஆகிய பணிச்சுமைகளுக்கிடையேயும் எனக்காக நேரம் ஒதுக்கி அழகான முன்னுரை எழுதித்தந்துள்ளார்

 தங்கை மைதிலி.http://makizhnirai.blogspot.com.மகிழ்நிறை என்ற இவரின் வலைத்தளம் வலைப்பதிவர்களிடம் மிகவும் புகழ் பெற்றது..நகைச்சுவையாக சிறந்த சிந்தனைகளை அள்ளித்தருவதில் அவருக்கு நிகர் அவரே..சிறந்த ஆசிரியர்..நல்ல பண்பாளர்.இந்த நேரத்தில் இவரை இந்நிலைக்கு கொண்டுவந்துள்ள..

சாரல்


ஆயிரம் வெடிச்சரமென
வெடித்துச்சிதறாமல்..

சிறுசிறு தூறலாய்
கார்மேகமும்...
ஒத்தைவெடியாய்...

Friday 17 October 2014

ஒரு கோப்பை மனிதம்-கீதா[தேவதா தமிழ்]-கவிதை நூல்.

விரைவில் ...

ஒரு கோப்பை மனிதம்-கீதா[தேவதா தமிழ்]

கவிதை நூல்

முகநூல் மற்றும் வலைப்பூ தோழமைகட்கு சமர்ப்பனம்

முகநூலிலும், வலைப்பூவிலும்www.velunatchiyar.blogspot.com-thendral மனம் நிறைந்த தோழமைகளின் பாராட்டுகளாலும்,விமர்சனங்களாலும் பக்குவப்பட்ட எனது கவிதைகள் தன்னை புணரமைத்துக்கொண்டு நூல் வடிவில் தங்கள் கரங்களில் தவழ உள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அக்டோபர் 26 அன்று வலைப்பூ நண்பர்கள் சந்திக்கும் திருவிழாவான வலைப்பதிவர் சந்திப்பு நிகழ்வில் வெளியிடப்பட உள்ளது.விரைவில் உங்கள் கரங்களில்...

Monday 13 October 2014

இது திருட்டு அல்லவா

இப்படி கூட நடக்குமா
http://sivamindmoulders.blogspot.in/2014/09/blog-post_15.html சூப்பர் காப்பி....நம்ப முடியல...

Sunday 12 October 2014

தீபாவளி...அலைகள்

தீபாவளி...அலைகள்

                              அம்மா அந்த பாவாடை நல்லாருக்கும்மா...எடுத்துக்கவா...ம்ம்ம்..வில கூட இருக்கேம்மா ...அடுத்த தீபாவளிக்கு எடுக்கலாம்மா..சரிம்மா இந்த ப்ரௌன் கலர் பாவாடையே நல்லாருக்குல்ல .இதையே எடுத்துக்கலாம்மா...

அம்மா ,அப்பா இன்னும் வெடி வாங்கலயே..எப்பம்மா வாங்குவோம்..வாங்கலாம் இரு ..பறக்காத...ஏங்க பிள்ளைகள கூட்டிப்போய் வெடி வாங்கிட்டு வர்றீங்களா..பார்ப்போம் பார்ப்போம்..
னு சொல்லிட்டு அப்பாவே போய் வாங்கி வச்சுருப்பாங்க..எனக்கும் தம்பிக்கும் சமமா பிரிச்சு கொடுப்பாங்க..

தினமும் மதியம் வெயிலில் காயவச்சு எடுத்து வைப்போம்..ராக்கெட் எல்லாம் கனவுதான்...ஒத்த வெடி பாக்கெட் இரண்டு பேருக்கும் கட்டாயம் இருக்கும் .நாள் பூரா வெடிப்போம்...

சோமாஸ் செய்ய உட்கார்ந்தாங்கன்னா பக்கத்து வீட்லருந்து வந்து ஒண்ணா உட்கார்ந்து அரட்டையோடு சுட்டு.... டின்னுல அடுக்கி வச்சுருவாங்க...முருக்கு எல்லாம் டின்ல தான்...தீபாவளிக்கு மட்டும் தான் பலகாரம்.

மற்ற நாட்களில்..தியேட்டரில் 25 பைசாவிற்கு கிடைக்கும் சம்சாவிற்காகவே சினிமாக்கு போவோம்...இப்பவும் சம்சா மட்டுமே பிடித்த பலகாரமாய் உள்ளது.பக்கத்து வீட்ல என்ன பலகாரம் செய்தாலும் நாங்களும் அங்கே  ஆஜராகி விடுவோம்...வட்டவட்டமாய் முருக்கு சுடும் கண்ணகி அம்மாவை வியந்து பார்ப்போம்...

மாமி வீடு,பெரியம்மா வீடுகளில் என்ன செய்சுருக்காங்கன்னு லிஸ்டே எடுப்பாங்க...சிறுவயதில் மாமா வீட்டிலேயே எல்லோரும் வளர்ந்ததால அவங்க வீட்ல எடுக்கும் போது எனக்கும் தம்பிக்கும் சேர்த்தே எடுப்பாங்க....ஒரு கருப்புகலர் பெல்ட் வச்ச கவுன் அது  ஒரே மாதிரி அஞ்சாறு பேருக்கு மேல போட்டுக்கிட்டு வரிசையா நின்னோம்..கண்ணு பட்டுரும்னு ஆத்தா{அப்பாவின் அம்மா}எல்லோரையும் உட்கார வச்சு சுத்தி போட்டாங்க..

தீபாவளி அன்று அதிகாலை ஆத்தா 3மணிக்கே எழுந்து அடுப்புல பலகாரம் சுட்டுகிட்டு இருப்பாங்க...தலைல எண்ணைய் வச்சு 4மணிக்கெல்லாம் குளிச்சு முடிச்சு ..பாதுகாத்த வெடியெல்லாம் காலி பண்ண ஆரம்பிப்போம்....இதுல கார்த்திகைக்கு வேணும்னு தனியா வேற எடுத்துக்குவாங்க..

விடிந்ததும்..வரிசையா பலகாரம் எல்லா வீட்டுக்கும் இருக்கும் ...புது டிரஸ போட்டுக்கிட்டு பெருமையா ஓடி ஓடி குடுத்து வருவேன்...மாமா வீட்டுக்கு போனா எங்களுக்குன்னு வெடிதனியா கொடுப்பாங்க...டிரஸ் இருந்தா வாங்கிகிட்டு....கால்ல பொத்துன்னு விழுவோம் ....திருநீறு பூசி காசு கொடுப்பாங்கள்ல ..இதப்போல 3 வீட்ல வசூலிச்சபின்ன..மறுபடி வெடி வெடிக்க கிளம்பிடுவோம்...வீடு நிறைய ஆட்கள்...மனம் நிறைய சந்தோஷம்....பொங்கும்..

மனம் நிறைந்த மகிழ்ச்சி இன்று கணக்கின்றி புடவை எடுக்கும் போதும், வெடி வாங்க முடிந்தாலும் அந்த மகிழ்ச்சி இப்ப இல்ல...என் குழந்தமைக்காலம் எப்போதும் மனதில்...ஏக்கத்தை உண்டாக்கிக்கொண்டு....எனக்கு மட்டும்தானா...!

Saturday 11 October 2014

வலைச்சரத்தில் முதல்நாள்-வணங்கி வரவேற்கின்றாள் அனைவரையும் வேலுநாச்சியார்..தென்றலின் இனிமையுடன்....இயல்பூவாய்



                                                           வலைப்பூக்கள் கோர்க்க
                                                           வளமான மனதுடன்
                                                          அன்புடனே அழைத்திட்ட
                                                          அன்பின் சீனா அய்யா
                                                           தமிழ்வாசி பிரகாஷ்
                                                          ஆகியோருக்கும், எனது
                                                         வலையில் வீழுமனைவருக்கும்
                                                         மகிழ்வான வணக்கம்

வாங்க வாங்க....!

கரம் சேர்த்து வலைச்சரம் கோர்க்க அழைக்கின்றேன்.முதல் முறை என்பதால் உள்ளூறும் நடுக்கத்தை மறைத்து தென்றலென வீசுகின்றேன்..அனைவரின் மனதையும் இதமான நறுமணத்துடன் வலைப்பூவால் நிறைக்கவே விரும்புகின்றேன்...

எனது வலைத்தளம் பற்றி

 வலைத்தளம் பற்றி நான் சிறிதே அறிந்த நிலையில் பூத்த பூ இது....www.velunatchiyar.blogspot.com-thendral  

தென் தமிழ்நாட்டில் தோன்றிய புயல்,சிவகங்கைச்சீமையின் ராணி வீரமங்கை வேலுநாச்சியார் சுதந்திரத்திற்காக போராடிய பெருமையை அறிந்த கணத்தில் அவருக்கு பெருமை சேர்க்க ஏதேனும் செய்யனுமே என்ற எண்ணத்தில் அவர் பெயரையே எனது வலைப்பூவிற்கு சூடி மகிழ்ந்தேன்.

                                                  தமிழ் தானும் வளர்ந்து மற்றவர்களையும் முன்னேற்றும் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் எங்களின் முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் அருள்முருகன் மற்றும் அய்யா முத்துநிலவன் ஆகியோரின் தொலைநோக்கு சிந்தனையால் தமிழை இணையத்தில் வளர்க்கும் நோக்கத்தில் எங்களுக்கு அளிக்கப்பட்ட கணினிப்பயிற்சியே எனதுவலைப்பூ வளர  நீரூற்றியது.....

திண்டுக்கல் தனபாலன் சாரும் கரந்தை ஜெயக்குமார் சகோதரும் அளித்த பயிற்சி இன்னும் நீங்காமல் மனதில்...தொடர்ந்து அவர்கள் அளிக்கும் ஊக்கமே என் வலைப்பூ சோலையாக மாறி , வலைச்சரப்பணிக்கு என்னை அழைக்க காரணமானது.

இதுவரை 300பதிவுகள் பதிந்துள்ளீர்கள் வாழ்த்துகள் என சீனா அய்யா கூறியபின் தான் அப்படியான்னு கவனித்தேன்....மலைப்பாகத்தான் இருந்தது முதலில்...இந்த பதிவுக்காக அனைத்துப் பதிவுகளையும் மீண்டும் பார்க்கும் போது நினைவலைகள் வலைப்பூவின் வாசத்தை உணர்த்தியது... 

என் எழுத்துகள் சமூகத்திற்கு ஏதேனும் ஒரு நன்மையை விளைவிக்க கூடியதாக,சமூக அக்கறை நிறைந்ததாக இருக்க வேண்டும் என்ற  எண்ண அலைகளில் தோன்றியது கவிதையாக ,கட்டுரையாக ,அனுபவமாக என பல்வேறு தலைப்புகளில் தென்றல் மணம் பரப்புகின்றது....பள்ளி ஆசிரியராக பணி புரிவதால் என் உலகம் குழந்தைகளைச் சுற்றியே உள்ளது.எனது படைப்புகளில் அவர்களே பெரும்பாலும் ஆக்கிரமிக்கின்றனர்...

இனி தென்றலின் வாசம் நுகர்வோம்


*கவிதைகளே என் உணர்வுகளுக்கு வடிகாலாய் அமைகின்றது.மனதில் உணர்ந்தவைகளே கவிதைகளாக பூத்துள்ளன.  மனவலியில் பிறந்த கவிதை இது...என்னை யார் என எல்லோருக்கும் அடையாளப்படுத்திய கவிதை.... எல்லோராலும் மிகவும் பார்க்கப்பட்ட ,பேசப்பட்ட கவிதை....இன்றைய பெண்களின் நிலையாக மீளா வலியை உணர்த்தும் கவிதை..

* எல்லோரையும் ஊக்கப்படுத்தி வழிநடத்தும் கவிஞர் ,எழுத்தாளர், பட்டிமன்ற பேச்சாளர்,5.10.14இல் மூன்று புத்தகங்களை வெளியிடுபவரும் ,அன்பு சகோதரருமான முத்து நிலவன்அய்யாவின் அணிந்துரை எனது”விழிதூவிய நூல்”கவிதை நூலை உங்களுக்கு அறிமுகப்படுத்தும் கட்டுரை இது

*என்னை பார்க்கும் போதெல்லாம் அக்கா இந்த கவிதைய மறக்கவே முடியலக்கா என்று கூறும் அன்புசகோதரி.இவரைப்போல நகைச்சுவையாக எழுதி மனம் கவர வைக்க முடியுமா...என என்னை கவலைப்பட வைத்த திறமைச்சாலி.இவரிடம் கற்றுக்கொண்டே வலைச்சரத்தில் பயணிக்கின்றேன். ..சமூக நோக்குள்ள ஆசிரியர் ...மாணவர்களுக்கு கிடைப்பதரிது இக்காலத்தில் ஆனால் இவரும் இவரது துணைவரும் சிறந்த ஆசிரியர்களே ....யாரன்று ஊகிக்க முடிந்ததா...நீங்கள் நினைப்பது சரிதான் சகோதரி மைதிலி&சகோதரர் கஸ்தூரிரங்கன் ஆகியோர் தான் இந்த உற்சாகத்திற்கு சொந்தக்காரர்கள்...ஆஹா சகோதரிய  பற்றிஎழுதும் போதே வார்த்தைகள் வரிசைக்கட்டி நிற்கின்றதே...நன்றி மைதிலி...

*எங்க புதுக்கோட்டை தொன்மையும் சிறப்பும் வாய்ந்த ஒன்று...தமிழ்நாட்டிலேயே இரண்டாவது பெரிய அருங்காட்சியகம்  உள்ளது.மேலும் புதுக்கோட்டை கி.மு.5000 நூற்றாண்டுக்கு முந்தைய காலத் தொன்மை வாய்ந்தது என எங்களின் முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களால் உலகறியச்செய்யப்பட்டது..பள்ளிக்குழந்தைகளுடன் ஜாலியா ஒருநாள்....பாக்குறீங்களா நீங்களும்...


*நாட்டிற்காய் உழைப்போர் அருகி வரும் நிலையில்...நாட்டைக்காக்க தன்னை இழந்த வீரன் மேஜர் முகுந்த் வரதராஜனின் மகள் இவள் ...


*ஒரே சமூகச்சிந்தனையாவே போகுதேன்னு ஒரு மலைப்பயணத்திற்கு உங்களை அழைத்துசெல்ல முடிவெடுத்தேன் போலாமா...

*ஒரு தேவதை போல என் வகுப்பில் இருந்தாள்.அவளைப்பற்றி இப்படி ஒரு கதை எழுத நேரிடும் என நினைக்கவேயில்லை....அனீஸ் படிக்கிறீங்களா....

*என் பாட்டியிடம் பேசும் போதெல்லாம் என் தாத்தாவைப் பற்றி அதிகம் கேட்பதுண்டு ...எத்தனை முறைக் கேட்டாலும் சொல்வதற்கு அலுக்காத நாங்களும் கேட்பதற்கு அலுக்காத ஒன்று...சுதந்திரம் பற்றி பேசும் போதெல்லாம் உடல் சிலிர்க்கும்....என் சமூக அக்கறையின் வித்து இங்கிருந்து தான் வந்திருக்க வேண்டும் ....

*அன்பை நோக்கிய உலகம் இன்று இதை மட்டுமே நோக்குவதால் உலகே அழிவின் பாதையில்....

*இப்போது பெண்களைச் சிதைப்பதற்கு புது வழி ஒன்று கிடைத்திருக்கின்றது..நினைக்கவே அஞ்சும் செயல்களை எளிதாய் செய்துவிடுகின்றார்கள்.இன்னும் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலைதான்.அதன் வலி உணராதவர்கள்...உணர.

* தமிழின் பெருமையை உணர்ந்தவர்கள் இவ்விலக்கியங்களின் பெருமையையும் அறிந்திருப்பார்கள்.தமிழாசிரியர் மட்டுமல்ல தமிழ் உணர்வாளர்கள் படிக்க வேண்டிய நூல்களின் தொகுப்பு.வலைச்சரத்தில் வந்த பதிவு இது

*கடிதங்கள் கையெழுத்து மட்டுமல்ல முகமும் காட்டும் கண்ணாடி....மகளிடம் இருந்து கடிதத்தை எதிர்நோக்கும்  தாய் இவள்

*எத்தனையோ இயந்திரங்களை கண்டு பிடித்து விட்டோம்.செவ்வாயில் நிலை நிறுத்தி விட்டோம் மங்கள்யான்..ஆனால் இவர்கள் மாறாமல் இன்றும்

*ஒரு அம்மாவிடம் உங்களுக்கு மிகவும் சிரமமான வேலை எதுவென கேட்டால்.....கூறும் பதிலாய்

*முன்பெல்லாம் திருமண விழாக்களுக்கு செல்வதென்றாலே ஒரே ஆட்டம் தான்....எப்படா வரும்னு காத்திருந்து ஐந்து நாள் விழாக்கள் போல சுற்றங்கள் புடை சூழ நிகழ்ந்த விழாக்கள் சிறுவயது  நினைவலைகளில்...பாவம் இந்தப்பாட்டி

*அட..வெட்கம் பெண்களுக்கு மட்டும் சொந்தமா



*ஆஹா நிறைய பதிவுகள் நான் நான்னு எட்டிப்பாக்குதுக .என் வலையில் வீழ்ந்த உங்களுக்கு நன் முத்துகளே கொடுத்துள்ளேன் என நம்புகின்றேன்....அப்பாடா ஒரு வழியா முதல் நாள் முடிஞ்சிடுச்சு....ம்னு ஒத்துக்கொண்ட நாள் முதல் நல்லா செய்யனுமேன்னு ஒரே கவலை...முடிச்சிட்டோம்ல..இனி உங்க கவல படிக்கிறதெல்லாம்...இன்னும் ஒரு வாரத்துக்கு விடமாட்டோம்ல...நாளைக்கு பாக்கலாம்...




இனிய கலந்துரையாடலாக..11.10.14

இனிய கலந்துரையாடலாக..11.10.14




இன்று கவிஞர் வைகைறை அவர்கள் வீட்டில் ஒரு கலந்துரையாடல் கவிஞர்கள் நாணற்காடன்,ஸ்ரீபதி,கண்மணிராசா ஆகியோருடன்,புதுகைக் கவிஞர்களான முத்துநிலவன்அய்யா,சுவாதி,செல்வா,சோலச்சி,கஸ்தூரிரங்கன் ஆகியோருடன் நானும்..இருந்தது மிகவும் மனநிறைவாய்...

நடுநடுவே ஜெய் குட்டி ஜோட்டாபீமாய் மாறி மனதைக்கவர்ந்தான்...

கலந்துரையாடலின் கருப்பொருளாய்..
                   இலக்கியம் ,இலக்கிய இதழ்கள்,புதுக்கவிதை,ஹைக்கூ,எழுத்தாளர்கள் குறித்து பேசியதும்,கந்தகப்பூக்கள் ஆசிரியர் ஸ்ரீபதியின் துணங்கைக்கூத்து கதைகளில் இருந்து யந்திர இதயம் கதை கேட்டதும்,மாலை நேரத்தை இனிமையாக்கியது...கவிதைகளால் இணைவோம் நிகழ்வில் முன் அறிமுகம் இருந்தாலும் இன்றைய சந்திப்பு கூடுதலாய் அவர்ர்களைப்பற்றி தெரிந்து கொள்ளும் வாய்ப்பாக அமைந்தது....

இக்கூட்டம் தொடர்ந்து கூடுமெனில் ஆரோக்கியமான இலக்கியக்கூட்டமாக அமையும்...மலரும் 

மனதைக்கவர்வதாக ஒரு வண்ணத்துப்பூச்சியின் வரவு கூட்டத்திற்கு அழகு சேர்த்தது...

இந்நிகழ்விற்கு ஏற்பாடு செய்த கவிஞரும்,நந்தலாலா இணைய இதழாசிரியருமான வைகறைக்கு நன்றி..

அலைகள்

நினைவலைகளில்
முதல் அலையாய்
நீ..
இறுதி அலையிலும்
நீயே..

Friday 10 October 2014

kalil jipraan-முறிந்த சிறகுகள்-கலீல் ஜிப்ரான்


முறிந்த சிறகுகள்-கலீல் ஜிப்ரான்

தமிழில் கவிஞர் புவியரசு.

மனதில் உட்புகுந்து உயிரைத்தொடுவதாய்  என்ன ஒரு காத்திரமான எழுத்து வன்மை...!

லெபனானும்,பெய்ரூட் மரங்களும்,செடார் மரங்களும்,பைன் மரக்காடு,வில்லோமரங்கள்,ஓடைகள் அனைத்தும் செல்மாவின் காதலுக்கு சாட்சியாக...கவிபாடுகின்றன.

.அழகை வர்ணிக்கும் விதம் ப்ப்பான்னு இருக்கு..ஒரு அழகான காதல் காவியம்...தோல்வியைத் தழுவியதால் மனதில் உறைந்து விட்டதோ எனத் தோன்றுகிறது...

நூலின் முன்னுரையில்...

“ஒவ்வொரு மனிதனும் தன் முதற் காதலை நினைத்துக்கொள்கிறான்;அந்த அபூர்வ நேரத்தை திரும்ப நினைவுக்குக் கொண்டு வருகிறான்,அந்த நினைவு ,அவனது ஆழமான உணர்வுகளை மாற்றி விடுகின்றது .எத்தனையோ கசப்புகள் இருந்தாலும் ,அவனை ஆனந்தத்தில் ஆழ்த்தி விடுகின்றது”உண்மையான வரிகளாய்...

மனதில் படிமமாய் ...அமர்ந்து விட்டது.

Thursday 9 October 2014

மெல்லத் தமிழ் இனி....

நேற்று தமிழ் வளர்ச்சித் துறை நடத்திய பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் நடந்தன..

மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பாகச் செய்தனர்...முடிவாக

தமிழ்த் துறைத் தலைவர் ” மனதிற்கு வேதனையாக உள்ளது...பல மாணவர்கள் தமிழில் பெரும் பிழைகள் செய்துள்ளனர்...இப்படி தமிழ் வளரும் சந்ததியிடம் இருப்பின் மெல்லத் தமிழினிச் சாகும் என்ற கூற்று மெய்யாகுமோ என வேதனையாக உள்ளது.. பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் தமிழை இவ்வளவு பிழையாக எழுதினால் என்ன செய்வது..?என்று வருத்தத்துடன் கூறினார்...

மனதில் உறுத்தல் அதிகமாகின்றது..

.ஒருவரின் தாய் மொழி பிழையாக எழுதுவதை அலட்சியபடுத்துவது என்பது மொழி அழிவின் துவக்கமல்லவா? தமிழாசிரியர்கள்,தமிழ் உணர்வாளர்களின் குழந்தைகள் கூட தமிழில் திறமில்லாத நிலை..மட்டுமல்ல தமிழை வெறுக்கும் நிலை..

உன் தமிழை வச்சுகிட்டு ஒண்ணும் செய்ய முடியாதென, தமிழ்ச்சமூகம் மனதில் பதிய வைத்துவிட்டது..மொழி பண்பாட்டின் சின்னம் ..அதை புறக்கணித்தல் என்பது கொடுமை...

மதிப்பெண்ணிற்காக தமிழ் இல்லை..வாழ்க்கைக்காக ....நம்மை நாம் உணர்வதற்காக ...கட் ஆஃப் மார்க் நோக்கி ஓடும் தமிழ்ச் சமுதாயம்...தமிழையும் அதில் இணைத்தால் தான் சற்று திரும்பியாவது பார்க்கும்..நிலை

.ஒரு பக்கம் கணினியில் தமிழ் வளரும் நிலை..

ஒரு பக்கம் வளரும் சந்ததிகளிடம் தமிழ் குறித்த அலட்சியம்...

ஒரு மாணவன் பேசினான்”ஒருவனின் தாய் மொழியை அழிக்க வேண்டுமெனில் ,அவன் மனதில் அவனது மொழி குறித்த அலட்சியத்தை,தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கி விட்டால் போதும் அது தானாக அழிந்து விடுமென்று...”

குழந்தைகளிடம் தவறு இல்லை..நாம் தான் எங்கோ தவறு செய்கின்றோம்...?கல்வியைச் சுமையாக்கி வாசிப்பது என்பதையே மாணவர்களை வெறுக்கும் நிலைக்கு தள்ளிவிட்டோம்...பிற நூல்களைப்படிப்பதைக்கூட மாணவர்கள் விரும்ப வில்லை...

என்ன செய்யப்போகின்றோம்...?.நம் குழந்தைகள் தமிழ் மொழியை நேசிக்க வைக்க..?



Tuesday 7 October 2014

இன்னும் எத்தனைக்காலம் தான் கேட்க வேணும்...?

இன்னும் எத்தனைக்காலம் தான் கேட்க வேணும்...?

மதிப்பிற்குரிய ஜேசுதாஸ் அவர்களுக்குள் உள்ள ஆணாதிக்கச் சிந்தனைகள் வெளிப்படும் நேரங்களாய் ..தற்பொதைய கூற்று..

”அணியும் ஆடையினால் மற்றவர்களுக்குத் தொல்லை தரக்கூடாது”
அதற்கு பதிலடியாய் கவிஞர் வெண்ணிலா....

 தமிழ்” தி இந்து” வில்
”எங்கள் ஆடைகளை உரித்து தான் நீங்கள் எல்லோரும் மீசையை முறுக்கிக் கொண்டு எகத்தாளமாக உலா வருகிறீர்கள் என்ற ரகசியம் அறிந்தவர்கள் நாங்கள்.எங்கள் பிரியத்துக்குரிய ஆண்களை நிர்வானமாக்கிவிட்டு நாங்கள் எப்படி வெளியேறுவோம் ஆண்களே”என சாடியுள்ளார்.

உடையணியாத விலங்குகள்,பறவைகளுக்கு இந்த பிரச்சனைகள் ஏதும் வருவதில்லை .பெண்ணாய் பிறந்த பாவத்திற்கு இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இப்படி கேட்க வேண்டி வருமோ.?

நேற்று கூட ராமநாத புரத்தில் ஏழு வயது சிறுமிக்கு பாலியல் பலாத்காரம் நிகழ்ந்துள்ளது.ஜேசுதாஸ் அவர்களே இதற்கு என்ன பதில் சொல்லப் போகின்றீர்கள்.ஆண்களின் வக்கிர குணங்கள் மாறவேண்டும் என நினைத்தால் அது சரியான தீர்வு....அதைவிட்டு இப்படியெல்லாம் பேசுவது உங்களை நீங்களே தரம் தாழ்த்திக்கொள்வது போலாகாதா....

பெண்கள் எப்போதும் ஆண்களின் கைலி தெரியுது ,உள்ளாடை தெரியுது என புலம்பிக்கொண்டிருக்க மாட்டார்கள் .அவர்களுக்கு சமாளிக்க வேண்டிய பிரச்சனைகள் ஏராளம் உள்ளது.பார்வை சரியில்லாதவர்களின் பேச்சுக்களை புறந்தள்ளி வாழ எங்கள் குழந்தைகட்கு கற்று தருகின்றோம்...அரைகுறை ஆடையில் திரையில் பெண்களை ஆடவிட்டு ரசிக்கும் ஆண்கள் தான் உடைகளைப் பற்றி பேசுகின்றார்கள்...என்பதை புரிந்து கொள்ளுங்கள்..ஆண் குழந்தைகட்கு   பெண்களை மதிக்கும் தன்மையை கற்றுக்கொடுங்கள்...

இன்னும் தொடரும் சிறுமிகளின் பிரச்சனைகளுக்கு என்ன காரணம் என்பதை உணருங்கள் தோழர்களே.

Sunday 5 October 2014

vizha---விழா



விழாக்களில்
சொற்பொழிவு கேட்போரை
பிணிக்கச் செய்வதாய்..

மௌனமான அவதானிப்பில்
மூலையில் தனிவிழா
குழந்தைகட்குள்ளே...

சத்தம் போடாதேயென மிரட்டும்
பெரியவிழா, குட்டிவிழாவை

ஒரே இடத்தில்
இரு விழாக்கள்..
பாவம் குட்டிவிழாக்கள்
எல்லா விழாக்களிலும் ...

கவிஞர் முத்துநிலவன் எழுதிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழா..



முப்பெரும் விழா..!05.10.2014

கவிஞரும் சகோதரருமான முத்துநிலவன் அய்யாவின் மூன்று நூல்கள் வெளியீட்டு விழா 05.10.14 இல் புதுக்கோட்டை நகர்மன்றத்தில் மிகச்சிறப்பாக நடந்தது.

                      மதியமே முந்திக்கொண்டு  வான்மழை வந்து வாழ்த்து பூக்கள் தூவ, விழா இனிமையாய் மண்ணின் மணத்துடன் துவங்கியது.

தனது வெண்கலக்குரலால் விழாவைத் தொகுத்து கூட்டத்தைத் தனது கட்டுக்குள் வைத்து மிகச் சிறப்பாக  நடத்தி விழாமல் பார்த்துக் கொண்டார்..கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள்..

கரிசல்குயில் கிருஷ்ணசாமி தனது கானமழையால் அனைவரின் மனதையும் கவர்ந்தார்.

பேச்சாளர்கள் அனைவரும் தகவல் களஞ்சியங்களாக..கேட்போரை .கேளாதவரை பிணிக்கும் சொற்பொழிவைத் தந்து கூட்டத்தைச் சிறப்பித்தனர்...நகைச்சுவையான பேச்சுக்களால் அரங்கம் குலுங்கியது..

நிரம்பித் ததும்பியது நகர்மன்றம்...முத்துநிலவன் அய்யாவின் மேல் உள்ள அன்பாலும்,செவிக்கினிய பேச்சாலும் உறைந்து மகிழ்ந்து இருந்தனர்.

நகர்மன்றத்தில் உறவினர்களாலும் ,நண்பர்களாலும்..நிறைந்த இருந்த காட்சி முத்துநிலவன் அவர்கள் நிறைய மனிதர்களை தனது அன்பால் சொத்துக்களாய் சேர்த்து வைத்துள்ளதை எடுத்துக்காட்டியது..

தமிழ்நாட்டைத் தாண்டியும்  அவருக்கு இருக்கும் வலைப்பூக்களின் உறவுகள் வந்திருந்து விழாவைச் சிறப்பித்தனர்..

விழா இதமாக ,இனிமையாக,துள்ளி ஓடும் நதியைப்போல மனதை,கண்களை ,செவியை நிறைந்து இருக்கின்றது...

வாழ்த்துகள் சகோதரருக்கு...



mazhai---மழை

வானம் பூமியை
வருடும் நேரம்...!

சாரலின் கீதம்
மனதை நனைக்கும்..

Thursday 2 October 2014

மனம்

வீடு,வாகனம்
சுத்தமாச்சு
மனம்...?

நினைவலைகள்


சட்டென்று குழந்தையாகி
பால்யங்களில் புதைந்து கொள்ள
மனம் விழைகின்றது எப்போதும்...!

இழந்த உறவுகள் உயிர்க்குமா?
என் நினைவு தான் நடக்குமா..?

எளியதாயில்லை மறத்தல்
எரிமலையாய் பீரிட்டு
என்னை புதைகுழிக்குள்
சுருட்டியிழுக்கும் சுனாமியாய்....

Wednesday 1 October 2014

-தமிழரின் ஆதித் தாள பறை இசை நடனப்பயிற்சி

தமிழர்களின் ஆதி தாளப்பயிற்சி அட்டகாசமாய் முடிந்தது..

.27.09.14-29.09.14 -----------------3 நாட்கள்

நம்மால் ஒதுக்கப்பட்ட அந்த கருவியில் தான் எத்தனை இசைகள்...ஒவ்வொன்றும்...தாளமிட ,கால்களை தானாக ஆட வைக்கும் திறனுடையதாய்..

பறை குறித்து பயிற்சியாளரும், சொய்ங்சொய்ங் பாடிய மகிழினியின் கணவருமான மணிமாறன் அவர்கள் கூறியது....

ஆதிகாலத்தில் தகவல் தொடர்பு சாதனமாய் வேட்டையாடும் பொழுது விலங்குகளை அச்சுறுத்தவும்,தகவல் பரிமாற்றத்திற்கும் பயன் பட்டது பறை..அதனம்மா என்ற ஒரு விலங்கு உண்டு..அது பறை அடித்தாலே இறந்து விடுமாம்...யாழ் இசைத்தால் மீண்டும் உயிர்க்கும் என்று சங்க இலக்கிய ஆய்வாளர் முனைவர் வளர்மதி கூறுவார்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலில் முழங்கிய பறை சத்தம் கேட்ட பின்பே திருமலைநாயக்கர் உணவு உண்டதாக வரலாறு ..சொல்கிறது..

பாரதிதாசனின் கூற்றாய்” தூங்கும் புலியை பறை கொண்டு எழுப்பிடடா”.பறையை தனது கவிதைகளில் புகுத்தியவர்.

பறை ஆட்டம் என சொல்லவே தயக்கம் உள்ளது...உண்மையில் பறை அடித்ததால் தான் அவர்கள் பறையை ஆனார்கள்...பறைக்கும் பறையர்களுக்கும் தொடர்பு இப்படித்தான் ஏற்பட்டது...