வளரி இதழ் வழங்கிய
கவிப்பேராசான் மீரா 2015 விருது
விழா
மதுரையில் மிகச்சிறப்பாக நிகழ்ந்தது..
என்னுடன் தாங்களே விருது பெரும் மகிழ்வோடு வீதி இலக்கிய உறவுகள் கவிஞர் முத்துநிலவன் ,கவிஞர் மகாசுந்தர்,கவிஞர் மீரா .செல்வகுமார்,கவிஞர் வைகறை,திரைப்பட பாடலாசிரியர் புதுகைப்புதல்வன்,கவிஞர் நாகநாதன்,கவிஞர் சோலச்சி,கவிஞர் நீலா,அண்ணி மல்லிகா,கவிஞர் அமிர்தாதமிழ்,குட்டி கவிஞர் எழிலோவியா,குட்டீஸ் லாவண்யா,ஆர்யா,ஆதவன்,அக்கா மங்கையர்கரசி ஆகியோர் மகிழ்வோடு கலந்து கொண்டனர்.
எனது அழைப்பில் வலைப்பூ நண்பர்கள்.திருமிகு செந்தில்குமார்,திருமிகு பகவான் ஜி,திருமிகு மதுரைசரவணன்,திருமிகு சிவா[கலகல வகுப்பறை],வலிபோக்கன்,தமிழ்வாசிப்பிரகாஷ்..கவிஞர் ஞானசூரி சுகன்யா,
தனது அரிதான நேரத்திலும் கலந்துகொண்டு சிறப்பித்த தோழி ஜெயா,திருமிகு எமர்சன்,.
இன்னும் சிலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விழாவில் தோழி ஆதிரா முல்லை,கவிஞர் பர்வதவர்த்தினி,கவிஞர் கூரா அம்மாசையப்பன்,ஆகியோரை நேரில் சந்தித்தது வாழ்வின் பெருமகிழ்வு..
கவிஞர் மீராவின் நினைவலைகளை திருமிகு தி.சு நடராசன் எங்களிடம் கடத்திய விதம் மிகச்சிறப்பு,
தலைமை வகித்த திருமிகு செல்லாவின் பேச்சு அருமையாக இருந்தது..
கவிஞர் முத்துநிலவன் அண்ணா தங்கைகளுக்கு கிடைத்த விருது தனக்கே கிடைத்த விருதாக உணர்கின்றேன் எனக்கூறி அகமகிழ்ந்தார்.
வாழ்த்துரை வழங்கிய அனைவரும் நூல்கள் குறித்து அருமையாக பேசினார்கள்.
எங்கே போவேன்? கவிதையை அரங்கில் வாசித்த கவிஞர் மலர்மகள் அவர்களுக்கு நன்றி..
கவிஞர் ஆதிரா முல்லை தனது தனித்துவ மிக்க பேச்சால் அனைவரையும் கவர்ந்தார்..
தோழி கிரஸுக்கும் சேர்த்து நான்.ஏற்புரை வழங்கிய தருணம் இனிமையானது
வளரி இதழ் ஆசிரியருக்கும்,
எங்களது கவிதைகளை தேர்வு செய்த ஆசிரியர் குழுவினருக்கும்,
தங்களது மதிப்பு மிக்க காலத்தை எனக்காக ஒதுக்கி என்னுடன் வந்து கலந்து கொண்டு நிறைவான மகிழ்வை அளித்து தோழமைகளுக்கும் மனம் நிறைந்த நன்றி..
கிரேஸிடமிருந்து போட்டோக்களை சுட்டுட்டேன் நன்றிமா...