World Tamil Blog Aggregator Thendral: April 2017

Saturday 29 April 2017

மனதை நிறைத்த காட்சி..

மனதை நிறைத்த காட்சி ..

புதுகை -தஞ்சை நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது...

,கருத்து நீண்டிருந்த தார்ச்சாலையின் இருபக்கங்களிலும் மரப்போத்துகள் பாதுகாப்பாக நடப்பட்டுள்ளதைக் கண்ட போது..மனம் நிறைவாக இருந்தது ....இதுவரை நான் பயணித்துள்ள சாலைகளிலெல்லாம் மரங்களின் மரண ஓசையோடும்,மனம் நிறைய வேதனையோடும் வெறுமை சூழ ...கண்ட நிலையை மறக்கச்செய்தது புதுகை -தஞ்சை பயணச்சாலை ....

இன்னும் சில வருடங்களில் அவை நெடுமரங்களாக வளர்ந்து பசுமைப்பாதையாக நிழல்தரும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.இதற்கு காரணமான நல்ல உள்ளங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்..

இதை ஏன் மற்ற சாலைகளில் பயன் படுத்த கூடாது ..?
சுங்க வரி வசூலிக்கும் நிறுவனங்கள் தான் அழித்த மரங்களுக்கு பதிலாக மரங்களை நட்டு வளர்க்க வேண்டும் என்று யார் உத்தரவிட வேண்டும் ...?

மரங்களுக்காக குரல் எழுப்ப வேண்டியது நம் கடமை அல்லவா?

அருகில் அமர்ந்து இருந்த அம்மா பேருந்தில் இரண்டு டிக்கெட் எடுத்தார் ..ஒருவர் மட்டும் தானே இருக்கின்றார் என்று இன்னொருவர் எங்கே அம்மா ?என்றேன் ...பின்னாடி என்மவ உட்கார்ந்துருக்காம்மான்னு சொன்னார். அப்படியா என்ன பண்றாங்க? ..வல்லம் கல்லூரியில் படிக்கிறாங்கம்மா..என்றார் .இங்கு தான் இடமிருக்கே ஏன் தனியா உட்காருந்துருக்காங்க?


நான் வெள்ளரிக்காய் கூடையோட இப்படி புடவைக்கட்டிக்கிட்டு இருக்கேன்ல அதனால எங்கூட உட்கார வெட்கப்பட்டுக்கிட்டு அங்கன போய் உட்கார்ந்துருக்காமான்னு பாவம் படிக்கிற புள்ளைக்கு சங்கடமா இருக்கும்ல அதான்னு சொன்ன போது...

இப்படிப்பட்ட அம்மாக்களால் தான் உலகம் உய்கிறது ..என்று தோன்றியது ..நாசமா போன கல்வி அம்மாவையும் அவமானப்பொருளாக்கியக் கொடுமை... ..

Monday 24 April 2017

என் கதை


இரை தேடும் மலைப்பாம்பென
மெல்ல ஊர்ந்தது ..

வயிற்றுக்குள் சலனமுறும்
இரை போதாமல் ..

வழியெங்கும் இரை விழுங்கி
மறுபடி உயிருடனே இரையை
துப்பிச்செல்கிறது ...

இரவு பகலை விழுங்கி செரிக்கும்
அக்கணத்தில், கமலாதாசின்
"என்கதை "
என்னை செரித்துக்கொண்டது ...

தமிழ் தெரியாது ..


எனது இருக்கை இது ...கொஞ்சம் நகர்ந்து அமருங்களேன் ...இல்ல... ஒரு ஆண் இங்க உக்கார்ந்திருந்தாரு ..அவருகிட்ட கேட்டுட்டு தான் இங்க உக்கார்ந்திருக்கேன்னு வாதம் செய்யவும் எரிச்சலாகி இங்க பாருங்கன்னு மின்னஞ்சல் ஐ காட்டியதும் விழித்த பெண் மறுபடி எழாமல் பிடிவாதம் செய்ய ..

இல்லம்மா நான் முன்பதிவு செய்துள்ளே ன்னு...நிரூபித்தபின் ...அப்படின்னா அந்த ஆள் இங்க இருந்தரேன்னு தயங்க...அருகில் இருந்த பெண் அவர் தவறா உக்கார்ந்திருந்தார் அடுத்த கம்பார்ட்மென்ட் ..அவருக்கு ..என்ற பின்னும் , சற்றும் நகராமல் ...இருக்க மெல்ல எரிச்சலுடன் அமர்ந்தேன் ...

அந்த பெண்ணின் அம்மாவின் இடத்தில் வேறு ஒரு வடநாட்டு பெண் அமர்ந்து இருந்ததால், அவர் அந்த பெண்ணை எழுந்திருக்க சொல்ல சட்டாம்பிள்ளை கணக்கா அது கியா கியான்னு இந்தியில் ஏன் இடம் இதுன்னு வாதம் செய்ய ...இதுகிட்ட பேச முடியாதுன்னு அவர்கள் சோர்ந்த நிலையில் உங்க இடம் என்றால் நீங்க தானே உட்காரனும் எழுந்திருக்க சொல்லுங்க என்றேன்...இல்லம்மா இந்தி தெரியாது அதுகிட்ட தமிழ்ல புரிய வைக்க முடியல என்றார்கள் ..

அப்பதான் இரயிலின் முகப்பில் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டும் பெயர் எழுதியிருப்பதைப்பார்த்து எரிச்சலுடன் ஏறி அமர்ந்த வெறுப்பில் ..அந்த வடநாட்டு பெண்ணின் அடாவடித்தனம் .....மேலும் கோபத்தைத் தூண்ட ...உங்க இடம் இது உரிமையுடேன் விரட்டுங்கள் என எல்லோரும் சேர்ந்து சத்தமிட்ட உடன் அந்த பெண்ணை அழைத்து வந்த ஆள் ...இருங்க ஏன் சத்தம் போடுறிங்க அவங்களுக்கு தமிழ் தெரியாது ...நீங்க சொன்னா எப்படி புரியும்னு சொன்ன போது.தமிழ் தெரியலன்னு அவங்க தான் வருத்தப்படனும் ..தமிழின் இடத்தில், தமிழனின் உட்கார்ந்தால் இப்படிதான் விரட்டுவோம்னு சொன்ன போது.கொஞ்சம் குரல் ஏன் உயர்ந்ததுன்னு தெரியல .

Tuesday 11 April 2017

கக்கூஸ்

கக்கூஸ்-ஆவணப்படம் திரையிடல்

நாள் :15.4.17

இடம் :கந்தர்வன் அரங்கம்

8,அய்யனார்புரம் மூன்றாம் வீதி
புதுக்கோட்டை

குழந்தையின் மலத்தை தாய் கூட சற்று முகம் சுழித்தே அள்ளுவாள் ...

ஆனால் தினமும் ஆயிரக்கணக்கான மனிதர்களின் நரகலை தனது கைகளால் அள்ளி சுத்தம் செய்பவர்களை எண்ணி பார்க்க நமக்கு எங்கே நேரம் இருக்கின்றது ..

எண்ணிப்பார்க்க கூட தகுதியற்றவர்களாக வாழ்பவர்கள். நமது கழிவுகளைச் சுத்தம் செய்பவர்களை கடவுளுக்கு சமமாக வைத்து பார்க்க வேண்டுமல்லவா ...வராக அவதாரத்தை அவர்களுக்கு முக்கியத்துவம்...கொடுக்கவே எடுத்தாரோ உண்மையாக இருந்தால் ...கடவுள்

Monday 10 April 2017

போர்க்குரல் ஒலிக்கின்றது ..

போர்க்குரல் ஒலிக்கின்றது ..

தெருவில் இறங்கி வருமுன் காக்க போர்க்குரல்
எழுப்புகின்றனர் ..குழந்தைகளும் ,பெண்களும் ...அவர்களோடு சில ஆண்கள் மட்டும் ...

மதுக்கடைகளை குடியிருப்பு பகுதியில் திறக்காதே
என்று ...?

எல்லாவற்றிற்கும் கூடும் ஆண்கள் கூட்டம் இதற்கு மட்டும் ஒதுங்குவது ஏன்?

கடையைத் திறந்தால் அடித்து நொறுக்குவோம் என்று அந்தப்பெண் கூறுவது உங்கள் குடும்பத்திற்காகவும் தான் ...

அதிகமான விபத்துகளும்,,அதிகமாக பென்குழந்தைகள் முதல் மூதாட்டிவரை பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படுவதற்கும்  காரணமாக இருப்பது மதுதான் என்பது அனைவரும் அறிந்த உண்மையல்லவா ?

மதுக்கடை வருமானத்தில் மக்களின் உயிரைப்பறித்து இலவசங்கள் கொடுக்க நினைக்கும் அரசா மக்களைக்காக்கும் ...?

நம்மை நாமே தான் காத்துக்கொள்ள வேண்டும்..

நெடுஞ்சாலை மதுக்கடைகள் குடியிருப்புகளில் நுழைவது இன்னும் மோசமான நிலையே உண்டாக்கும் ......

மக்கள் நினைத்தால் மட்டுமே முதலாளித்துவ,சுயநல அரசை ஒழிக்க முடியும் ...

அன்று குழந்தை திருமணத்தால் பெண்குழந்தைகள் லட்சக்கணக்கில் விதவைகளாக இருந்தனர் என்பது வரலாறு ..
 
இன்று மதுவால் பெண்கள் லட்சக்கணக்கில் விதவைகளாக ஆக்கப்படுகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை

பெண்களுக்கு துணை நில்லுங்கள் ..அவர்கள் உங்கள்
சகோதரிகள் தான் ....

Friday 7 April 2017

ஆணும் பெண்ணும் சமமா ?


 
ஆணும் பெண்ணும் சமமா ?

ஒன்பதாம் வகுப்பு மாணவி இன்று என்னிடம் வந்து மிக ரகசியமாக அம்மா ஒருத்தன் என் பின்னாடியே வந்து அவனை காதலிக்கச்சொல்லி கட்டாயப்படுத்துகின்றான் ...இல்லைனா விசம் குடிச்சி நீதான் காரணம்னு சொல்லிட்டு செத்து போய்டுவேன் ...உன் பள்ளியில் உன்னை அவமானப்படுத்துவேன்னு மிரட்டுகின்றான்மா. அப்பா அம்மா கிட்ட சொன்னேன் அவங்க அவன் ரவுடி நீ தான் கவனமா போனும்னு பயப்படுறாங்கம்மா...

என்னம்மா செய்வதுன்னு கலங்கியபடி கேட்ட பொழுது..மனம் வெடிக்கும் நிலை..ஒரு பெண் குழந்தை எதெற்கெல்லாம் போராடி வளர வேண்டியுள்ளது ..

துணிச்சலா இருடா இதற்கெல்லாம் பயப்படக் கூடாதுன்னு தைரியம் கொடுத்தாலும் ..இனி உன் அப்பா கூடவே வந்துட்டு போண்ணு தான் சொல்ல முடிந்தது ...

அதையும் மீறி தொல்லை செய்தால் காவல் துறையில் சொல்லிடுவோம்னு சொல்லி அனுப்பினாலும் மனதில் ஒரு அச்சம் படுபாவி ஆசிட்டை ஊத்திடுவனோன்னு..
 
தனக்கு தானே குழி தோண்டும் மாணவிகள் ....

ஆண்பிள்ளைகள் மட்டும் குறை கூறினால் உண்மையை மறைப்பதாக ...ஆகும் ..

இன்று பெண் குழந்தைகள் பெற்றோர்களைப்படுத்தும் பாடு..சொல்லி மாளாது...

பருவத்தின் வாயில் நின்று அவர்கள் இக்காலக்கட்டத்தில் மனதை வழிப்படுத்தும் முறையை கூறினாலும் புறந்தள்ளி வீழவே துணியும் நிலை.

பெண்குழந்தைகள் படும் பாடுகளை தினமும் அறிவுறுத்தி நீங்கள் தான் உங்களுக்கு முதல் பாதுகாப்பு ...எதையும் மறைக்காமல் பெற்றோரிடம் கூறுங்கள் ...என்று எவ்வளவு முறை சொன்னாலும் விழலுக்கு இறைத்த நீராக ஆகின்றது ...

திரைப்பட கதாநாயகிகள் போல் காதல் மட்டுமே வாழ்க்கை எண்ணி வலையில் வீழ்கின்றனர் ..

முன்பெல்லாம் சில மாணவிகள் மட்டுமே இப்படி இருப்பார்கள்..ஆனால் இன்று அதற்கு எதிராக பல மாணவிகள் விட்டில் பூச்சிகளாக ...

பெண்ணை பெற்ற பெற்றோர்கள் அவர்களை வழி நடத்த முடியாமல் இரத்த கண்ணீர் வடிக்கின்றனர் ...

பல பெண்களை சுற்றும் ஒருவன் எனத்தெரிந்தும் அவன் தான் வேண்டும் என முட்டாள் தனமாக கூறும் மாணவிகளின் வாழ்க்கை என்ன ஆவது .....

திரைப்படங்கள் ரவுடிகளின் பின்னே அலைய வைத்து வருங்கால சந்ததிகளை வீணாக்கியது தான்  மிச்சம் ..