World Tamil Blog Aggregator Thendral: தமிழ் தெரியாது ..

Monday 24 April 2017

தமிழ் தெரியாது ..


எனது இருக்கை இது ...கொஞ்சம் நகர்ந்து அமருங்களேன் ...இல்ல... ஒரு ஆண் இங்க உக்கார்ந்திருந்தாரு ..அவருகிட்ட கேட்டுட்டு தான் இங்க உக்கார்ந்திருக்கேன்னு வாதம் செய்யவும் எரிச்சலாகி இங்க பாருங்கன்னு மின்னஞ்சல் ஐ காட்டியதும் விழித்த பெண் மறுபடி எழாமல் பிடிவாதம் செய்ய ..

இல்லம்மா நான் முன்பதிவு செய்துள்ளே ன்னு...நிரூபித்தபின் ...அப்படின்னா அந்த ஆள் இங்க இருந்தரேன்னு தயங்க...அருகில் இருந்த பெண் அவர் தவறா உக்கார்ந்திருந்தார் அடுத்த கம்பார்ட்மென்ட் ..அவருக்கு ..என்ற பின்னும் , சற்றும் நகராமல் ...இருக்க மெல்ல எரிச்சலுடன் அமர்ந்தேன் ...

அந்த பெண்ணின் அம்மாவின் இடத்தில் வேறு ஒரு வடநாட்டு பெண் அமர்ந்து இருந்ததால், அவர் அந்த பெண்ணை எழுந்திருக்க சொல்ல சட்டாம்பிள்ளை கணக்கா அது கியா கியான்னு இந்தியில் ஏன் இடம் இதுன்னு வாதம் செய்ய ...இதுகிட்ட பேச முடியாதுன்னு அவர்கள் சோர்ந்த நிலையில் உங்க இடம் என்றால் நீங்க தானே உட்காரனும் எழுந்திருக்க சொல்லுங்க என்றேன்...இல்லம்மா இந்தி தெரியாது அதுகிட்ட தமிழ்ல புரிய வைக்க முடியல என்றார்கள் ..

அப்பதான் இரயிலின் முகப்பில் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டும் பெயர் எழுதியிருப்பதைப்பார்த்து எரிச்சலுடன் ஏறி அமர்ந்த வெறுப்பில் ..அந்த வடநாட்டு பெண்ணின் அடாவடித்தனம் .....மேலும் கோபத்தைத் தூண்ட ...உங்க இடம் இது உரிமையுடேன் விரட்டுங்கள் என எல்லோரும் சேர்ந்து சத்தமிட்ட உடன் அந்த பெண்ணை அழைத்து வந்த ஆள் ...இருங்க ஏன் சத்தம் போடுறிங்க அவங்களுக்கு தமிழ் தெரியாது ...நீங்க சொன்னா எப்படி புரியும்னு சொன்ன போது.தமிழ் தெரியலன்னு அவங்க தான் வருத்தப்படனும் ..தமிழின் இடத்தில், தமிழனின் உட்கார்ந்தால் இப்படிதான் விரட்டுவோம்னு சொன்ன போது.கொஞ்சம் குரல் ஏன் உயர்ந்ததுன்னு தெரியல .

1 comment :

  1. மொழி தெரியாவிட்டால் கஷ்டம் தான். இப்போதெல்லாம் தமிழ் நாட்டில் பல வடக்கத்தியர்! சிறு வேலைகள் செய்பவர்கள், கல்லூரி மாணவர்கள் என பலரும் இங்கே வ்ந்து விட்டார்கள். இன்றைக்கு திருவரங்கம் வீதிகளில் சின்னச் சின்ன பொருட்கள் விற்பனை செய்யும் பலர் ஹிந்தி மொழி பேசும் வடக்கத்தியர்கள்....

    வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...