மறக்க முடியாத நாளாக..
இன்று குழந்தைகளின் கண்களில் அப்படி ஒரு மகிழ்வைக் கண்டேன்.
சிலவருடங்களாக சுட்டி விகடன்,சிறுவர் மணி,இந்து வின் மாயாபஜார்...என குழந்தைகளுக்காக சேர்த்து வைத்த நூல்கள் ,இன்று குழந்தைகளின் கைகளில் நூலகப்பிரிவேளையில் தந்தேன்..
அத்தனை ஆசையாக ஓடி வந்து வாங்கியக் காட்சியைக்கண்ட பொழுது குழந்தைகள் படிக்க விரும்புகின்றனர் பாடத்தை விட ...அவர்களுக்கு சுவாரஸ்யமான புத்தகங்களை நேசிக்கின்றனர் என்பதை உணர்ந்தேன்.
அம்மா இதுல குறுக்கெழுத்து எழுதலாமா?
அம்மா இந்த படத்தை வரையலாமா?
அம்மா..புள்ளி புள்ளியா இருக்கே இத பென்சிலால இணைக்கலாமா?ன்னு ஒரே கேள்விகள் மயம் ..
ஒருத்தி கலர் கொடுக்கத்துவங்க ..நீ என்ன படிச்சேன்னு கேட்பேனே..உனக்கு புடிச்சத குறிப்பு எடுத்துக்கிட்டு ,கலர் கொடேன்மா என்றதும் வேகமாகக் குறிப்பு எடுக்கத்துவங்கினாள்.
இது உங்களுக்காக தந்த புத்தகம் எது வேணாலும் பண்ணலாம் ஆனா புத்தகம் வீணாகப்போகக்கூடாது என்றேன்... அத்தனை மகிழ்வாய்த் தலையாட்டி
ஒவ்வொருவரும் புத்தகத்திற்குள் கலந்து மறைந்ததைக்கண்ட போது எல்லையில்லா மகிழ்ச்சி...
நாளை பாடக்கேள்விகள் எழுதிக்காட்டுனா மறுபடியும் தரேன்னு வாங்கி வச்சுருக்கேன்...
என் வேலையையும் கொஞ்சம் பார்க்கனும்ல..