World Tamil Blog Aggregator Thendral: டி.சி வேண்டாம் போங்க..

Monday 13 June 2016

டி.சி வேண்டாம் போங்க..

கீதாஅம்மா, இவங்க இன்னும் அவங்க மகளுக்கு டி.சி தரலம்மா?

 அதனால அந்த பொண்ணு பேர என்னம்மா செய்யுறது?

 என பள்ளிக்கூட பதிவு எழுத்தர் கொஞ்சம் சத்தமாக கூறிய போது ,
அருகில் கண்களில் நீர் வடிய ,ஆறாம் வகுப்பில் சேர காத்திருந்த வைத்தீஸ்வரியின் அம்மா கைகளை பிசைந்து கொண்டு நின்றார்கள்....

 ஏம்மா கண்களை துடைங்க முதல்ல, எதுக்கு அழுகனும்னு? கேட்ட போது.. இல்ல மிஸ் என் பொண்ணு திருச்சியில் உள்ள வெஸ்லி[புறத்தில் உள்ள சிறிய நர்சரி பள்ளி] பள்ளிக்கூடத்துல ஆங்கில வழிக்கல்வில படிச்சா...

திடீர்னு அவ அப்பா மாரடைப்பால இறந்து போயிட்டார்...என்ன பண்றதுன்னு தெரியல...டீ மாஸ்டரா வேலை பார்த்துக்கொண்டிருந்தார். பணம் கட்டலன்னதும் இவள அதே பள்ளியில தமிழ் வழிக்கல்வில அவங்களே மாத்திட்டாங்க...

 நாங்க புதுக்கோட்டைக்கே வந்துட்டோம்...இப்ப இவளுக்கும், இவ சகோதரிக்கும் டி.சி போய் கேட்டா ரூ30,000 கொடுத்தா தான் தருவோம்னு கறாரா சொல்லிட்டாங்கன்னு கதறி...இப்படி இவ அப்பா எங்கள தவிக்க விட்டுட்டு போயிட்டாரேன்னு அழுத போது மனம் வலித்தது..

 குழந்தைக்கு கல்விக்கட்டணம் கட்ட முடியாததே அவரது மாரடைப்புக்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம்...னு தோன்றியது,...

 ஏம்மா அரசுப்பள்ளில எல்லாமே இலவசமா தரும்போது இப்படி கஷ்டப்பட்டு சேர்க்கணும்மான்னு வருத்தப்பட்டேன்..

இல்லங்க நான் தான் அரசுப்பள்ளில படிச்சேன்...இவளாவது பிரைவேட் ஸ்கூல்ல படிக்கட்டுமேன்னு சேர்த்துட்டேன்... இப்ப என்ன பண்றதுன்னு தெரியலன்னு கவலைப்பட்ட போது ..

அவங்க டி.சி யே வேண்டாம்மா...புள்ளய இங்க சேர்த்துக்கலாம்னு அனுப்பிட்டேன்....
எஸ்.எஸ்.ஏ ...ஆசிரியப்பயிற்றுநர் அனிதாவிடம்,விவரத்தைக்கூறி இவள எப்படி சேர்க்கலாம்மான்னு கேட்டேன்..
 ஆர்.டி.இ.ஆக்ட் 2009 இன் படி சேர்க்கப்பட்டுள்ளாள்னு ஒரு வரி சேர்க்கைப்பதிவேட்டில் எழுதிட்டு சேர்த்துடுங்கம்மான்னு சொன்னாங்க.. வைத்தீஸ்வரிய சேர்த்தாச்சு..

ஆனா இன்னும் எத்தனை குழந்தைகள் இப்படி இருக்கோன்னு கவலை வந்தது...

 மக்களின் அறியாமையை சில பள்ளிகள் பயன்படுத்தி கொண்டு..அவர்களின் குருதிய உறிஞ்சுவதை எப்படி தடுப்பது?

5 comments :

  1. ஆர்.டி.இ.ஆக்ட் 2009 என்பதை முழுவிபரமாக எழுதினால் இது போல கஷ்டப் படுபவர்களும் பயன் அடைவார்களே

    ReplyDelete
  2. நல்ல விஷயம். இந்த சட்டம் பற்றிய மேலதிகத் தகவல்களையும் பகிர்ந்து கொண்டால் இன்னும் சிலருக்கும் உதவி கிடைக்கும்.

    ReplyDelete
  3. இந்த சட்டத்தை பற்றி ஒரு விரிவான பதிவு எழுதுங்கள் அம்மா ... http://ethilumpudhumai.blogspot.in

    ReplyDelete
  4. கல்வி வணிகமயமாக வெகு ஆண்டுகள்ஆகிவிட்டதே

    ReplyDelete
  5. பணம் பண்ண நினைப்பவர்களை நினைத்து வெட்கப்படுவதா, வேதனைப்படுவதா?

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...