World Tamil Blog Aggregator Thendral: August 2017

Thursday 31 August 2017

யாருக்கான கல்வி இது?

யாருக்கான கல்வி இது?
கொஞ்சம் கூட சிந்தித்திருப்போமா....
எக்காலத்திலும் தமது வணிகத்திற்கு பாதிப்பு வந்து விடக்கூடாது என்று திட்டமிட்டு , சிந்தனையை தூண்டி விடக்கூடாது என்று....மெக்காலேவால் உருவாக்கப்பட்ட கல்வி முறையை.....
இன்றைய இந்தியாவில் உள்ள முதலாளிகளுக்காகப் பணி செய்ய கற்பித்துக் கொண்டு உள்ளோம்.
சிலர் மட்டுமே செல்வச்செழிப்பில் வாழ 99 சதவீத மக்கள் வறுமையால் வாடக் காரணமென்ன என்று கேள்வியைத் தூண்டாதக் கல்வியால் பயன் என்ன?
ஒவ்வொருவரும் தாம் மட்டும் வறுமையில் இருந்து விடுபட எண்ணி வாழ்கிறோமே...ஒட்டுமொத்தமாக வறுமையை ஒழிக்க போராடுகிறோமா?
ஜனநாயக நாட்டில் கல்வி சமத்துவமாக அமையவில்லை ....சமமாக கொடுக்கவில்லை என்றால் அது எப்படி ஜனநாயக நாடாகும்....?
இதை கற்பிக்கும் ஆசிரியர்கள் உணர்ந்துள்ளோமா?
இந்த கல்வியறிவும் இல்லையெனில் நம் கதி என்ன?
இதைக்கூட அனைவருக்கும் கொடுக்க முடியவில்லையே....
சென்னை மாநகராட்சியில் படித்து முதுகலை பட்டம் வாங்கிய துப்புரவாளர்களின் இளைஞர்கள் மாநகராட்சி பணியாளர் பணிக்கு விண்ணப்பித்த போது ... அவர்களுக்கு வழங்கப்பட்ட பணி என்ன தெரியுமா...
கல்வி அறிவு இல்லாத அவர்களின் தாத்தா , அப்பா.செய்து வந்த அதே துப்புரவாளர் பணி.... வேணும்னா செய் இல்லைனா போவென துரத்தும் போது அரசுப் பணின்னு ஏற்று கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டனர்....
என்ன படித்தாலும் இறுகப் பிடித்து இருக்கும் மூட நம்பிக்கையை ஒழிக்காத கல்வி...... ஒரு கல்வியா?
கல்வி என்பது எழுத்தறிவு தருவது அல்ல... மக்களுக்கு விழிப்புணர்வு கொடுப்பதாக அமைய வேண்டும் என்று பாவ்லோபிரேயர் சொன்னபோது அவரை சிறையில் அடைத்தார்களே....ஏன்?
ஒரு போதும் மக்கள் சிந்திக்கவே கூடாதென நினைக்கும் முதலாளித்துவ அதிகாரம் ...
மக்களுக்கு எதிரான விசயங்களை சட்டப்படி நியாயம் என்று நம்மையே ஏற்க வைக்க தானே இந்த கல்வியறிவு.... பயன்படுகிறது.
சமச்சீர் கல்வி வேண்டும் என்ற போராட்டத்தில் உருவானது இந்த"கல்விமேம்பாட்டு கூட்டமைப்பு"என்ற அமைப்பு.....என்றார் . தோழர் சு.மூர்த்தி.
கல்வி அனைவருக்கும் சமமாகக்கொடுக்க வேண்டும் என்று ஏன் ஆசிரியர்கள் போராட மறுக்கிறோம்?
சமூகச்சிந்தனையே வரக்கூடாது என்று கிரிக்கெட் பின்னால்...... கேளிக்கை களுக்கு பின்னால் இளைஞர்களை.    துரத்தும் காரணம் என்ன?
மதம்......வறுமையை, துன்பத்தை,தலைவிதி என்று ஏற்றுக்கொள்ள வைப்பது எந்த விதத்தில் நியாயம்?
உப்பு மூட்டை சுமக்கும் கழுதை கதை.....முதலாளிக்கு துரோகம் செய்யக்கூடாது என்று குழந்தையிலேயே கற்றுக் கொடுக்கிறதே.....
இந்த பத்து ஆண்டுகளுக்கஅரசு பள்ளி மாணவர்கள் 256 பேர் மட்டுமே மருத்துவக் கல்லூரி யில் படித்து உள்ளனர்.இனி அதுவும் கிடையாது.
இப்போ மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கும் கிடையாது என்கிற போது தான்.....உணரத்துவங்குகிறோம்.
நடுத்தர வர்க்கம் தனக்கு ஆபத்து வந்தால் மட்டுமே சமூக நீதி கேட்கும் நிலை.
சமவெளி மாணவர்களுக்கே இந்த நிலை என்றால் மலைவாழ் மக்களுக்கு என்ன நீதி கிடைக்கும்.அவர்களுக்கு கல்வி உத்திரவாதம் உண்டா....?
என்று கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு சு.மூர்த்தி அவர்கள் கேட்ட போது..........
சிந்திக்க வேண்டிய சூழ்நிலை......
இந்த வாய்ப்பை தந்த புதுகை செல்வா அவர்களுக்கு மிக்க நன்றி..

தொடர்ந்து போராட வேண்டிய நியாயங்கள் அதிகம்......
அதற்கு சிந்திக்க க்கூடிய தோழமைகள் ஒன்றிணைய வேண்டும்......



Tuesday 29 August 2017

என்ன சொல்ல..?(

சாப்பிட்டியாடா......கமர் நிஷா...

ஒரு வார்த்தை தான் கேட்டேன்...பொங்கி வரும் அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல்...... வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு இல்லை என்று தலையாட்டினாள்....
சாப்பிடலயா.... உனக்கு தானே காய்ச்சல் னு மாத்திரை கொடுத்து விட்டேன்...சாப்பிடாமலா போட்ட....அல்சர் வந்து விடுமேடா.....(பள்ளியில் என் கைப்பை தான் மருந்துக்கடை 29 வருடங்களாக)

சரி ஏன் முடியாம வந்துச்சு.....
நிறைய பாத்திரம் தேய்ச்சேன் மா....தண்ணில நின்னது ஒத்துக்கல....சுரம் வந்து விட்டது...(அவளின் அம்மா சென்ற வருடம் இறந்து விட்டார்.நல்ல தெளிவாக சிந்திக்க கூடிய புத்திசாலி மாணவி)

அப்பா எங்கே?
காலைலயே வேலைக்கு போய்டாரும்மா....
வீட்ல வேற யாரு இருக்கா...?

அண்ணன் இருக்காம்மா....அவன் தூங்கி கிட்டு இருந்தான் மா...
நான் தான் தம்பிய கிளப்பி விட்டு....வீட்டு வேலை முடிச்சேன்மா....

சாப்பாடு கொண்டு வரலயா.....இரு வாங்கிட்டு வரச் சொல்றேன்....
அதற்குள் ஒரு மாணவி அம்மா நான் இட்லி கொண்டு வந்துருக்கேன் சாப்ட சொல்லுங்கம்மா என்று சாப்பாடு டப்பாவை தூக்கி கொண்டு ஓடி வர....
வேண்டாம் மா.... நான் தோசை கொண்டு வந்துருக்கேன் என்றாள்...

சரி அவளது டிபன் பாக்ஸ எடுத்து வாங்கன்னு சொல்லி பார்த்தால்... அழகாக தோசை மை மடக்கி.குழம்பை மேல் டப்பாவில் ஊற்றி எடுத்து வந்திருந்தாள்...
யார்டா சமைச்சா?
நான் தான் மா...
எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒரு வீட்டையே சுமக்கும் கொடுமை.....
மனம் துடிக்க..கண்கலங்கி விட்டேன்.
என்ன கொடுமை.... அண்ணா உனக்கு உதவி செய்வானா என்றதற்கு மாட்டான் அம்மா என்றபோது...

சமத்துவம் வந்து விட்டது என கூறுபவர்கள் முகத்தில்.....துப்ப வேண்டும் போல் பொங்கியது...

14வயது சிறுமி வீட்டு வேலை அனைத்தும் செய்ய, தூங்கி எழுந்து அவளை குறை கூறும் 20 வயது ஆண்மகன்.

அருகில் அணைத்து ஒரு தோசையை நான் ஊட்டி விட்டதை,  நிலவேம்பு கசாயம் குடிக்கச் சென்று திரும்பிய எட்டாம் வகுப்பு மாணவிகள் கண்கள் விரிய பார்த்த போது....
உன் கூடப் படிக்கும் தோழி சாப்பிட்டாளா இல்லையானு கேட்க மாட்டீர்களா?. அவளுக்கு முடியலன்னா உதவி செய்ய மாட்டீர்களா.....?

அம்மா இல்லாமல் அவள் படும் வேதனையை நீங்கள் தானே தீர்க்க வேண்டும் என்ற போது மாணவிகள் தங்கள் பொறுப்பை உணர்ந்தனர்.


மனித நேயம் தான் முக்கியம்.... படிப்பு அடுத்தது தான் என்றேன்....

அரசுப் பள்ளி குழந்தைகள்..... கவனிக்க பட வேண்டிய தெய்வங்கள்....

Friday 25 August 2017

வீதி கலை இலக்கியக்களம் -42

 வீதி கலை இலக்கியக்களம் -௪௨

"மனம் சுடும் தோட்டாக்கள் "மு,கீதா ,

"ஒரு பட்டமிளகாயும் கொஞ்சம் உப்பும் "மீரா செல்வகுமார் .

கவிதை நூல்கள் அறிமுக விழா .

எளிமையாக அறிமுகம் செய்ய நினைத்து ....கவிஞர் முத்துநிலவன் அண்ணாவால்  கலை கட்டுகின்றது....

உங்கள் வரவு எங்கள்வீ தியை சிறப்பிக்கும் அவசியம் வருக...











Monday 21 August 2017

manam sudum thottakkal-மனம் சுடும் தோட்டாக்கள் நூல் வெளியீடு

காகிதம் பதிப்பகத்தின்
 "மனம் சுடும் தோட்டாக்கள். 
"ஒரு பட்ட மிளகாயும் கொஞ்சம் உப்பும் " ,
"அழுக்கு தேவதைகள் "ஆகிய மூன்று கவிதை நூல்களின் வெளியீட்டு விழா 


புதுச்சேரி தமிழ்ச்சங்கத்தில்சிந்துவெளி அமைப்பின் மூலம் மூன்று கவிதை நூல்கள் வெளியீட்டு விழா 19.8.21 சனிக்கிழமை அன்று மாலை 6 மணியளவில் ...

 வயலோசை முனைவர் பாலதண்டாயுதம் பாடலுடன் இனிமையுடன் துவங்கியது .

 வரவேற்புரை:

 கவிஞர் முனைவர் செல்வகுமாரி அவர்கள் அனைவரையும் மகிழ்வுடன் வரவேற்றார் ....

 வாழ்த்துரை

 திராவிட இயக்கத்தின் பாரம்பரியத்தை ,சிந்துவெளி நாகரீகத்தின் சிறப்புகளை விரிவாக எடுத்துரைத்து வாழ்த்தினார் .கவிஞர் முனைவர் சிவ.இளங்கோ அவர்கள் .


           கவிஞர் சண்முகசுந்தரம் அவர்கள் நகைச்சுவையான வாழ்த்துரையால் அரங்கத்தை கலகலப்பாக்கினார் .

 நூல் வெளியீடு

                     புதுச்சேரி அரசு கொறடா திரு இரா.அனந்தராமன் அவர்கள் கவிஞர் தேவதாவின் "மனம் சுடும் தோட்டாக்கள் ", கவிஞர் மீரா செல்வகுமாரின் "ஒரு பட்ட மிளகாயும் கொஞ்சம் உப்பும் " கவிஞர் ஆயுதாவின் "அழுக்கு தேவதைகள் " ஆகிய கவிதை நூல்களை வெளியிட்டு வாழ்த்தினார் ..தமிழ் மேல் இருந்த அவரது பற்றை உணர்த்தும் வகையில் சிறப்பானதொரு வாழ்த்தை வழங்கினார் .

              நூல்களை பெற்று சிறப்பித்த தமிழ்மாமணி பூங்கொடி பாராங்குசம் அவர்கள் புதுச்சேரியில் பாவேந்தர் வாழ்வில் முக்கிய இடம் பெற்ற கவிஞர் புதுகை சிவம் அவர்களின் மகள் என்பது எனது நூலுக்கு கிடைத்த பெருமையாகக் கருதுகின்றேன் .
 நூல் பற்றிய மதிப்புரை

 முனைவர் அவ்வை .நிர்மலா , கவிஞர் மு.பாலசுப்ரமணியன் மற்றும் கவிஞர் முனைவர் ப.இரவிக்குமார் ஆகியோர் நூல்களின் சிறப்புகளை மிக அழகாக எடுத்துரைத்தனர் .
 தலைமையுரை

                     கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள் புதுகைக்கும் புதுவைக்கும் பாரதிதாசன் காலத்திலேயே இருந்த உறவை அழகாக எடுத்துக்காட்டி கவிதை நூல்கள் குறித்தும் நூலாசிரியர்கள் குறித்தும்சிறப்புடன் உரையாற்றி புதுவை மக்களின் மனம் கவர்ந்தார் .

 நிறைவுப்பேருரை பேரா.முனைவர் .நா.இளங்கோ அவர்கள் தமிழ்க்கவிதையியல் வரலாற்றில் ,வளர்ச்சியில் இன்றையக் கவிஞர்களின் பொருத்தப்பாடு குறித்து நகைச்சுவையாக சிறப்புடன் பேசினார் .

ஏற்புரை

              நூலாசிரியர்களான கவிஞர் மீரா செல்வகுமார்
 கவிஞர் கீதா @தேவதா தமிழ் மற்றும் கவிஞர் ஆயுதா ஆகியோர் ஏற்புரை வழங்கினர் .

 நன்றியுரை

                 பண்டிதர் சா.து.அரிமாவளவன் அவர்கள் நன்றி கூறினார் .

 நிகழ்ச்சி தொகுப்பு
                   திருமதி சுபாசினி அவர்கள் சிறப்புடன் நிகழ்வைத்தொகுத்தளித்தார் . 

விழாவிற்கு புதுச்சேரியின் இலக்கியவாதிகள், தோழர் தமிழ்நெஞ்சம் ஆகியோர் கலந்து   கொண்டு சிறப்பித்தனர் .



                                 சென்னையிலிருந்து சகோ முரளி@Muralee Tharan ,சுபஸ்ரீ Subhasree Muraleetharan,காரைக்குடியில் இருந்து சகோ Kanmani Sundaramoorthy,திருச்சியில் இருந்து சகோ வி.சி. வில்வம் மற்றும் கியூபா ,செஞ்சையில் இருந்து தோழி Alli Ramadass,பாண்டிச்சேரியில் இருந்து தோழி Thanam Ragothaman மற்றும் வலைப்பதிவர் கலையரசி எனது அத்தை உமாதேவி ஆகியோர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர் .


                         விழா இத்தனை சிறப்புடன் அமையக்காரணமானவர்கள் அன்புநிறை பெண்ணியம் செல்வக்குமாரிஅவர்களும் பண்டிதர் சா.து. அரிமாவளவன் அவர்களும் தான் .எனை அறியாத புதுவையில் என்னை அறிமுகப்படுத்திய விதம் வாழ்வில் என்றும் மறக்கவியாலாது .... மனம் நெகிழ்ந்த அன்புடன் அவர்களை மறுநாள் பார்த்துகலந்துரையாடி வந்தேன் .... 

என் வாழ்வில் மறக்கமுடியாத விழா இது ...

 வாழ்த்து கூறிய அன்புள்ளங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றியும் அன்பும் ..

Thursday 17 August 2017

மனம் சுடும் தோட்டாக்கள் கவிதை நூல் வெளியீட்டு விழா



அன்புடன் அழைக்கின்றோம்

கவிதை நூல்கள் வெளியீட்டு விழா...

நாள் 19.8.17 சனிக்கிழமை
காலம் மாலை 5 மணி
இடம் தமிழ் சங்கம் பாண்டிச்சேரி
தலைமை கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள்

கடற்கரை
மணல்வெளியில்
கவிதைகளை
விதைத்து விட்டு
கலைந்திடத்தான்
முதலில் திட்டம்..

புதுகைக்கும்
புதுவைக்கும்
பூர்வீக சொந்தம்
உண்டோ?
தங்க மனசுகள்
எம் கவிதைகளை
சங்கத்தில் வைத்து
ஆராதிக்கப் போகின்றன..

அப்பன் பாரதி
அவன் தாசன்
குரல்கள்
கேட்டிருந்த
குயில் தோப்பின்
மிக அருகில்..

முக்கவிஞர்
முத்தெடுத்த
கவிதைகளை
உங்கள்
அகம் சேர்க்க
ஆவலுடன்
அன்பின் விழா!!

அருமைப் பெரியோரே!
அன்புநிறை தோழர்களே!!

புதுவை
தமிழ்ச்சங்க வாசலிலே.

காத்திருப்போம்
கவிதைகளோடு
நாங்களும்.

வந்து சேருங்கள்...

Friday 4 August 2017

தயாரா சென்னை

சென்னை நலமா
செல்லமாய் மென்மையாய் கேட்க
 பறக்கின்ற நகர்வில்
ஒரு நிமிடம் அது வார்தாவின் நினைவில்
ஓலமிட்ட அவலத்தை
உயிர் பறித்த உடலாக
உறைந்து உறைந்தது.

தயாரா சென்னை ...?
ஆட்டோ ஓட்டுநர்
ஆர்வமாய் தயாரென்க...

பாலத்தில் தொங்கியத் துயில்

அம்மாயியின் நடுக்கத்தையோ
அலறி இழுத்து சென்ற
அம்மாவின் கதறலையோ..
பிறந்து கண் விழிக்காமல்
மிதந்து மறைந்த மழலையின்
அழுகையையோ.......
எதை உறைத்து
படபடத்தது.....