World Tamil Blog Aggregator Thendral: உறுத்தலும்,ஒறுத்தலும்.

Sunday, 27 October 2013

உறுத்தலும்,ஒறுத்தலும்.

உறுத்தலும் ஒறுத்தலும்
-----------------------------
விபத்தில் அடிபட்ட
உயிர்தனை தவிர்த்து
தாண்டி வருகையில்
தன்னலம் நெஞ்சில்
முள்ளாய்...

குடிநீர் குழாய் உடைந்து
வீணாகும் புனலை
பார்த்துக் கொண்டே
நித்தம் கடக்கையில்..

பட்டாம் பூச்சிகளாய்
பறக்கும் மழலைகள்
பாரம் சுமந்து
பள்ளி சிறைதனில்
எழுத்துக்களால் அடக்கி
ஆளப்படுகையில்..

உணவு விடுதியில் மணக்கும்
உணவை பரிமாறும் சிறுவன்
பசியுடன் சாப்பிடல என
கூறுகையில்..

பூப்பறிக்கும் பிஞ்சு விரல்கள்
தீக்குச்சி அடுக்கி
நொந்து போகையில்
உறுத்துகின்றது...

பலரும்
உறுத்தலை ஒறுத்தலால்
மாறாமல் இயங்குகின்றது
உலகு...



12 comments :

  1. கவிதை மனதை உறுத்த
    காட்சியோ உலுக்கிவிட்டது...

    மிகமிக அருமையான உணர்வுக் கவிதை!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மனம் வலித்த போது உதயமான கவிதை.நன்றி

      Delete
  2. படிக்க வேண்டிய வயதில்
    வேலைக்கு போகும் சிறுவர் சிறுமியர்
    என்ன பாவம் செய்தார்கள் இவர்கள்.

    ReplyDelete
    Replies
    1. இன்னும் தொடரும் கொடுமை சார்

      Delete
  3. சுயநலத்தை நாகரிகம் என்று சொல்லிக்கொள்ளும் போக்கு ஓயாதவரை இதுதொடரவே செய்யும் சகோதரி .அருமையான கேள்வி மனசாட்சியை நோக்கி

    ReplyDelete
    Replies
    1. தினம் தினம் உறுத்தல் தொடர்கிறது சகோதரி

      Delete
  4. சகோதரிக்கு வணக்கம்..
    அவசர உலகில் நடப்பதை எல்லாம் கண்டும் காணாமல் வாழ்க்கையெனும் பாதையைக் கடந்து செல்லும் பாதசாரிகளுக்கு மத்தியில் தங்கள் சிந்தனை போற்றதலுக்குரியது. அனைவரின் வாழ்வும் சிறக்க வேண்டும். நல்லதொரு சிந்தனைக்கு நன்றி சகோதரி..

    ReplyDelete
  5. ஒரு சாண் வயிற்றுக்காக...

    ReplyDelete
    Replies
    1. மனம் கலங்குகின்றது சார்

      Delete
    2. கலக்கமே இல்லாத 543 நா.ம.உ க்களில் 365 கோடீசுவர்களாம்

      Delete
  6. கோடீசுவரர் ஆவது தானே அவர்களின் நோக்கம்

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...