World Tamil Blog Aggregator Thendral: பதின்மூன்று அகவையானவள்

Thursday, 24 October 2013

பதின்மூன்று அகவையானவள்


பதின்மூன்று அகவையானவள்

வகுப்பிலேயே
நில்லாள்
பட்டாம் பூச்சியெனவே
பறப்பாளவள்
பள்ளி வளாகத்திலும்
வீட்டிலும்.
கண்டித்தாலும்
ரசிப்போம் அவளின்
வெகுளித்தனத்தை.

சில நாட்கள் விடுப்பில் ..அவள்
என்னாச்சும்மா ?
கேள்விக்கு விடையாக
வெட்கத்தையே பதிலாக்கினாள்..

மேலும்
துழாவிய போது
கண்களில் கண்ணீருடன்
குழறலாய் கூறினாள்.
தன் சிறகுகள்
வெட்டப்பட்டதை......

7 comments :

  1. அடடா...
    மனம் பதைக்கிறது..
    பண்டைய காலத்திற்கு சென்றுவிட்டோமோ
    என்றும் நினைக்கிறது..
    பால்ய விவாகம் அறுத்தெரியப்படவேண்டிய ஒன்று...

    ReplyDelete
  2. அடடா! இதைத்தான் பெண்ணியக் கவிதை என்று சொல்கிறார்கள். ஒரு பெண்ணையன்றி வேறுயாரால் அந்த “இன்பத்தின் துன்பத்தை“ இப்படி வெளிப்படுத்த முடியும்?
    தமிழின் மிக்ச்சிறந்த பெண்ணிய எழுத்தாளர் அம்பை அவர்கள் எழுதிய “அம்மா ஒரு கொலை செய்தாள்” கதை படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதை நினைவூட்டியது. தொடர்ந்து நிறைய நிறைய எழுதுங்கள்

    ReplyDelete
  3. அழகான உணர்வை கவியாய் வடித்தமைக்கு வாழ்த்துக்களுடன் கூடிய நன்றீங்க சகோதரி. இயற்கையானவை எல்லாம் மூட நம்பிக்கையில் முழுகிப் போனது சோகமான கதை தான்.

    ReplyDelete
    Replies
    1. பெண்களே உணராத நிலை .நன்றி

      Delete
  4. மிகவும் அருமை கீதா!
    பூப்பெய்திய
    பேருவுவகையை
    வெளிப்படுத்தும் போதே
    வெட்டப்பட்ட சிறகுகள்......
    துடிக்கிறது
    என் மனமும்தான்

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...