World Tamil Blog Aggregator Thendral: வாழ்த்து மடல்

Wednesday, 30 October 2013

வாழ்த்து மடல்

குறுஞ்செய்தி வாழ்த்து
குழுவாய் நொடியில்
அனைவருக்கும்...

எறும்பென ஓடும் எழுத்துக்கள்
எளிதாய் அழிந்து போகும்...

குழந்தமை நினைவுப் புதையல்களின்
தூசியைத் தட்டியது
கசங்கிய “வாழ்த்து மடலொன்று”

அதன் அழகிற்காய்
அனுப்பாமல்
பெட்டிக்குள்ளேயே...

எத்தனை வருடங்கள் சிறையில்?
எப்போது விடுவிப்பாய்....என
கேளாமல் கேட்டது..

என் நினைவுகளின்
பெட்டகம் நீ..
யாருக்காய் உனை
வாங்கினேனோ
அவர்களே நீயாய்
என்னுடனே உறை....


11 comments :

  1. வணக்கம் சகோதரி.
    மறக்க முடியாத அனுபவம் தான்.
    //யாருக்காய் உனை
    வாங்கினேனோ
    அவர்களே நீயாய்
    என்னுடனே உறை....// தங்களோடு இருந்து கவி பாடும் கருப்பொருள் ஆன பாக்கியம் பெற்று விட்டதே.. இனி வேறேங்கும் செல்லும்? தங்கள் கவி மலரின் தேனை உண்டு உங்களோடு மயங்கியே கிடக்கும். வித்தியாசமான சிந்தனைக்கு நன்றீங்க சகோதரி..

    ReplyDelete
  2. வணக்கம் .தனபாலன் சாரையும் முந்திவிட்டீர்களே .நன்றி சகோ

    ReplyDelete
  3. அன்பின் கீதா - வாழ்த்து பற்றிய கவிதை நன்று - கசங்கிய மடலின் அழகுக்காகவே அனுப்பப் படாமல் பெட்டிக்குள்ளே சிறை வாசம்.

    // யாருக்காய் உனை
    வாங்கினேனோ
    அவர்களே நீயாய்
    என்னுடனே உறை....// அருமை அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  4. இந்தமாதிரி வாழ்த்துக்கள் இன்னும் நிறய என் வீட்டில் ஏதோ ஒரு மூலையில் கிடக்கின்றன.
    நன்றி..

    அருமை தொடர்க..

    ReplyDelete
    Replies
    1. உண்மை என்னுடன் வசிக்கின்ற வாழ்த்துக்கள் என்னை பால்ய காலத்திற்கு அடிக்கடி பிடித்திழுக்கும்

      Delete
  5. ரசித்தேன் சகோதரி... இன்று பதிவு பகிர்ந்து கொள்வதால் தாமதம்...!

    இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    இன்று : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/charity.html

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சார்.நலமா?
      தீபாவளி போட்டி கவிதை அனுப்பி உள்ளேன் பார்க்கவும்.படம் சேர்த்துள்ளேன்.போடகூடாதெனில் கட் பண்ணிடுங்க சார்.நன்றி.

      Delete
  6. வாழ்த்துமடலினை நானும் ரசித்தேன்!
    மிக அருமை!

    அனைவருக்கும் தித்திக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. சில அழைப்பிதழ்களையும், சில நிகழ்வுகளையும் கூட... தொலைக்க நினைத்தாலும் மனசு வருவதிலலைதானே? அரிய உணர்வுகளைக் கவிதையாக்கியது அருமை! வாழ்த்துகள்

    ReplyDelete
  8. உண்மைதான் சார்.ந இளமைக்கால புதையல்கள்.அது மகிழ்வு,துன்பம் இரண்டின் கலப்படம்

    ReplyDelete
  9. அனுப்பாமல் போன
    மறதிக்கும்
    அழகாய் கவிதை சொல்லும்
    நேர்த்தி அருமை.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...