World Tamil Blog Aggregator Thendral: மனிதம்1

Wednesday, 19 February 2014

மனிதம்1

சிறுவயது நினைவலைகளில்
சந்துவழி வந்து
சந்துவழியே மலக்கூடை
சுமந்து சென்ற தோட்டிச்சி
அடிக்கடி வருகின்றாள்...!

விடியும் முன்
வீட்டருகே கிடக்கும்
சாணி எடுத்து கரைத்து
கோலமிடுவாள் அக்கா...

அறியாமல்ஓருநாள் இருட்டில்
பன்றிவிட்டையை கரைத்து
விட்ட கையை கழுவிக்கொண்டே
இருப்பாள் எப்போதும்.....!

சோப்புவாங்கியேகாசு கரையுதென
திட்டும் அம்மாவிடம் கேட்டேன்
தோட்டிச்சி பாட்டிக்கு சோப்பு
வாங்க யாரு காசு கொடுப்பாரென....?

12 comments :

  1. இந்த நிலை மாற வேண்டும்! சிறப்பான கவிதை!

    ReplyDelete
    Replies
    1. முயல்வோம் .மிக்க நன்றி சார்

      Delete
  2. இந்தக் கொடுமை முதலில் மாற வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமா சார்.முயல்வோம்.நன்றி சார்

      Delete
  3. இந்நிலை கண்டிப்பாக மாறியே ஆகவேண்டும்.....

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்மா,கொடுமைகள் களையப்படவேண்டும்

      Delete
  4. வணக்கம் சகோதரி
    மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும் சூழல் மாற வேண்டும் என்று எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள் அரசியல்வாதிகள். மாற்றுவார் யார் என்பது மில்லியன் கேள்வி! மாற்றம் விரைவில் ஏற்படட்டும். சமூக சிந்தனைக்கு நன்றிகள் சகோதரி..

    ReplyDelete
  5. மனிதக் கழிவுகளை அள்ளும்விதமாகக் கட்டப்பட்டுள்ள பழங்காலத்துக் கழிப்பறைகளை அகற்றுவது முதல் தீர்வு. சாக்கடைகளில் அடைப்பை நீக்குவதற்கு மனிதர்களை இறக்குவதற்குப் பதில், இயந்திரத்தைப் பயன்படுத்துதல் இரண்டாம் தீர்வு. இவை நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் ஜனத்தொகையும் வீடுகளும் மிகுந்த நாட்டில் இவை முழுமையாக நிறைவேற இன்னும் சில ஆண்டுகள் ஆகும். கழிப்பறை இல்லாத வீடுகள் இல்லை என்ற நிலை வந்தால் இது எளிதாகும்.

    ReplyDelete
  6. அருமையான அனைவருக்கும் வர வேண்டிய சிந்தனை !

    ReplyDelete
  7. வணக்கம்
    சகோதரி

    எங்கே செல்லும் இந்தப்பாதை......எங்கேமுடியும் இந்தப்பாதை......

    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. வேதனையான விடயம் வழி பிறக்க தான் வேண்டும்.

    ReplyDelete
  9. இது பற்றித் தினமணியில் ஓய்வு பெற்ற நீதியரசர் ஒருபெண்மணி எழுதிய கட்டுரையையும், கோவை செம்மொழி மாட்டுக் கருத்தரங்கத் தலைமை உரையில் நடிகர் சிவக்குமார் ஆவேசமாகப் பேசியதும் நினைவுக்கு வருகின்றன. அதிலும் உங்கள்-
    தாய்கூட குழந்தையின் மலத்தை
    முகம் சுளித்தே அள்ள வேண்டியுள்ளது
    எப்போதும்...!

    இப்போதும்அள்ளுகின்றனர்
    மனிதர்களின் மலத்தை
    மனிதர்களே....!“ எனும் வரிகள் வயிற்றில் ஈட்டியைப் பாய்ச்சிவிட்டன!
    மாற்ற வேண்டும் மாற்றம் வேண்டும். அருமை! தொடர்க!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...