World Tamil Blog Aggregator Thendral: பெண்

Thursday, 27 February 2014

பெண்

இன்று தினமணி 28.2.2014 செய்தித்தாளில்ஆம்பூர் அருகே 12.7.2012 இல் பகலில் வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த 10 வயது சிறுமியை தனது பேத்தியை விட்டு அழைத்து வரச் சொல்லி 60 வயது மிருகம் ஒன்று பாலியல் வன்முறை செய்து, வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியும் உள்ளது .இவ்வழக்கின்  தீர்ப்பாய் வேலூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை தீர்ப்பளித்துள்ளது .இப்போது அந்த சிறுமியின் நிலை ?
என்னவென்றே தெரியாத ஒரு வன்முறையால் எத்தனை மனச்சிதைவு ஏற்பட்டிருக்கும். இவளின் எதிர்கால வாழ்வில் இந்நிகழ்வு எத்தனை பாதிப்புகளைத் தரும் .மனம் மகிழ்ந்து  அவள் இல்லற வாழ்வில் ஈடுபட இயலுமா ?
  தி இந்து பத்திரிக்கையில்27.2.2014" பெண்களுக்கு இரவு சொந்தமில்லையா " என்ற கட்டுரையில் பிரேமா ரேவதி தான் பார்த்த இரவில் அரிதாய் ஒரு சில பெண்களை மட்டுமே காணமுடிகின்றது என சுட்டியுள்ளார் .
'இரவில்  மட்டுமல்ல
 பகலிலும் நடக்க முடியவில்லை
மகாத்மா "
என்ற கவிதை நினைவிற்கு வருகின்றது .நிம்மதியாய் வாழ விடுங்கள் பெண்களை என்றே சத்தமிடத் தோன்றுகின்றது .
ஆடை குறைவாய் அணிவதே வன்முறைக்கு காரணம் என கூறுவர் சிலர் .இந்த சிறுமி பாதிக்கப்பட்டதற்கு காரணம் என்ன. ?
தொடரும் பாலியல் வன்கொடுமைகளுக்கு முடிவே இல்லையா?
.நம் வீட்டில் நிகழாத வரை செய்தியாய் செரித்து போகவே வாழ்கிறோமா ?
முடிவு எப்போது ?
பகலும் ,இரவும்,தனிமையும் ,பொதுவும்,வீடும் ,நாடும் எப்போது பெண்களுக்கானதாகவும்  மாறும் ....?

11 comments :

 1. வணக்கம்
  சபாஷ்.....சரியான கேள்வி....
  வாழ்த்துக்கள்
  என் பக்கம் கவிதையாக-தேடுகிறேன்....தேடுகிறேன்

  ReplyDelete
 2. வேதனை...இப்போ என்ன சொல்வாங்க....பெண்கள் பத்திரமா வீட்டிலே இருக்கணும், சுத்தக் கூடாதுன்னு சொல்றவங்க எல்லாம்???

  ReplyDelete
  Replies
  1. சில நேரம் சொல்லவியலா வேதனையில் மூழ்க வேண்டியுள்ளது.நன்றிம்மா

   Delete
 3. சில காலமாக இது போன்ற செய்திகளைப் பார்த்துப் பார்த்து மனம்
  பேதலித்துப் போகிறது என் தோழியே பொங்கி வரும் உணர்வெல்லாம்
  பெண்ணினத்துக்கு எதிராகச் செயற் படுவோரின் முகத் திரையைக்
  கீர் கீர் என்று கிழித்தெறியத் துடிக்கிறது :(((இன்றும் அதன் வேதனையின்
  உச்சத்தில் விழித்த சில கவிதை வரிகள் இதோ http://rupika-rupika.blogspot.com/2014/02/blog-post_406.html
  கெஞ்சியும் கூத்தாடியும் எல்லாமும் செய்து கொண்டோம் பயன் தான்
  என்ன என்று வருந்துகின்றது உள்ளம் பலமுறை மனத்தளவு குளிக்கும்
  இத் தீயை ஒரு முறை உடலில் ஏற்கத் துடிக்கிறது நெஞ்சம் .பொல்லாத சமூகமே நீ மண்ணோடு மடிக மலர் போன்ற பிஞ்சுகளின் சாபம் அஞ்சாத அரக்கர்களின் உள்ளக் கிடக்கையை எரித்துச் சாம்பலாக்கடும் .பகிர்வு நன்றி என் தோழியே :((((((

  ReplyDelete
 4. மகாத்மா கவிதை அருமை!

  பெண்கள் நிலையோ கொடுமை!

  ReplyDelete
 5. தண்டனைகள் கடுமையாக்கப் பட வேண்டும்
  உடனடியாக தண்டனை வழங்கப்படவும் வேண்டும் சகோதரியாரே

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் சார்.வருகைக்கு நன்றி.

   Delete
 6. இது போன்ற சிந்தனையை தூண்டும் பதிவுகள் தொடரட்டும் ... கவிஞரே...

  ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...

There was an error in this gadget