World Tamil Blog Aggregator Thendral: “ பூனை எழுதிய அறை”

Friday, 14 February 2014

“ பூனை எழுதிய அறை”

கவிஞர்கள் பற்றிய உரையாடலில் எட்வின் சார் கல்யான்ஜியை படியுங்கள் என்றார்.புத்தகக் கண்காட்சியில் அவரின்
“ பூனை எழுதிய அறை”
 நூலை வாங்கி வந்தேன்.தூக்கம் வராத ஒரு இரவுப்பொழுதில் கல்யாண்ஜியின் நூலைப் படித்தேன்.ப்ப்பாபா என்ன சொல்வது இது கவிதை .அவர் உணர்ந்த உணர்வுகளை எளிதாக கடத்தி விட்டார் என்னில்.
”தேக்கும் ,பூக்கும்” எனத் துவங்குகிறது...

“வாசிக்க வேண்டிய ஒரு
புதிய புத்தகமாக இருளில்
புரளத் துவங்கியது
பூனை எழுதிய அறை...’

ஏனோ பூனை எனக்குப் பிடிக்காது..அதன் இதமான மென்மையையும் மீறி அதனின் திருட்டுத் தனம்....அதற்காக என்னிடம் கேட்டு குடிக்கனும் என கூறவில்லை...எனை ஏமாற்றுகிறது...என அதன் இயல்பை உணராமல் வெறுப்பேன்...மேலும் ஆசையாக வளர்த்த லவ் பேர்ட்ஸ் சிலவற்றைக் கொன்று தின்று விட்ட கோபமும்....!

ஆனால் இப்போது பூனையைப் பார்க்கும் போதெல்லாம் எந்த அறையில் எழுதப் போகின்றதோ என வியக்க வைத்து விட்டார் கல்யாண்ஜி.

கோப்பையில் விழுந்த பூச்சி கூட கருப்பொருளாகி கவிதை படைக்கின்றது.
சிறு வயதில் சேகரித்த லாடம் தரும் தொடர்வலைகள்...ஒவ்வொருவரும் தன் பால்யக் கால சேமிப்புகளை நினைவூட்டும்....கவிதையைப்
படித்த சில கணங்களில் நான் சேகரித்து வைத்துள்ள வாழ்த்து அட்டைகளைத் தேடி எடுத்த என்னை, நொடியில் பள்ளிவயதிற்கு இட்டுச் சென்றன.....அவை.
அவரின் கவிதைகள் கண் முன் காட்சியை நிலைநிறுத்துகின்றது கண்ணாடியாய்.....

மனதை கவ்வி கொள்ளும் தூங்கும் மழலையின் புன்சிரிப்பாய் ,கல்யாண்ஜியின் கவிதைப் பூக்கள்.....

அறிமுகம் செய்த எட்வின் தோழருக்கு நன்றி...

16 comments :

  1. அறிமுகம் செய்த தங்களுக்கும் நன்றி...

    ReplyDelete
  2. ரொம்பச் சுருக்கமாக எழுதி விட்டீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. முழுமையாக எழுதினால் நூலை வாங்க மாட்டார்களாம்...அதனால் தான் சார்.வருகைக்கு நன்றி

      Delete
  3. நிறைய படிக்றீங்க வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
    Replies
    1. நடுவில் கொஞ்சம் படிப்பதை விட்டுவிட்டேன் சார் நன்றி.

      Delete
  4. வணக்கம்
    புதிய புத்தகம் பற்றி சொல்லியமைக்கு நன்றிகள்..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. கண் முன் காட்சியை நிலைநிறுத்தும் கண்ணாடியாய்... விமர்சனம் பாராட்டுக்கள்..!..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நலமா?நன்றிம்மா

      Delete
  6. Replies
    1. வருகைக்கு நன்றி சார்

      Delete
  7. எட்வின் சார் பரிந்துரைக்கு அப்பீல்!
    அருமையான மதிப்புரை டீச்சர் !

    ReplyDelete
  8. கண்டிப்பாக வாங்கி படிக்க வேண்டிய புத்தகம்,வாங்கணும்/

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...