World Tamil Blog Aggregator Thendral: புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகம்.

Sunday, 13 July 2014

புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகம்.



தமிழ்நாட்டிலேயே இரண்டாவது மிகப்பெரிய அருங்காட்சியகம் புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகம் .


தற்போதுசீரமைக்கப்பெற்று புதுப்பொலிவுடன் திகழ்கின்றது.என் மாணவிகளுடன் இன்று அங்கு செல்லத் திட்டமிட்டு குழந்தைகளை அவர்களின் பெற்றோருடன் வரச்சொல்லியிருந்தேன்.ஆர்வமாய் பெற்றோரும் குழந்தைகளும் வந்திருந்தனர்.

புதுக்கோட்டை-திருக்கோகர்ணத்தில் உள்ள அரசு அருங்காட்சியகம் 1910 ஆம் ஆண்டில் புதுக்கோட்டையை ஆண்ட மன்னர் மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.ஏறத்தாழ 1.15 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளது.14 ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.மிகத்தெளிவாக விளக்கினர் திரு.லெக்‌ஷ்மணன்,திரு.பார்த்திபன்.ஆகியோர்.




நெல்லால் ஆன தேர் முதலில் வரவேற்கிறது.அதனருகில் கஞ்சிரா எனும் இசைக்கருவி முதன் முதலாக புதுக்கோட்டை மாமுண்டியாபிள்ளை அவர்களால் உருவாக்கப் பட்டது கம்பீரமாக வீற்றிருக்க..புதுக்கோட்டை மன்னர்களின் புகைப்படங்கள்,மூலிகை வண்ணங்களால் வரையப்பட்ட ஓவியங்கள்,காண்பதற்கரியதான பறவைகள்,ஊர்வன,நீர்வாழ்விலங்குகள்,
மன்னர்கள் வேட்டையாடிய விலங்குகளின் தலைகள்,சீற்றமாய் நிற்கும் சிறுத்தை,வவ்வால்கள்,பாடம் செய்யப்பட்ட இருதலைகளுடன் பிறந்த விலங்குகள்,வாசலில் நீண்டு நிற்கும் திமிங்கிலத்தின் தாடை எலும்பு,அழிந்து போன இசைக்கருவிகள்,மரச்சிற்பங்கள்,பனைஓலைப்பொருட்கள்,போரில் பயன்படுத்திய இரும்புக்கவசம்,போர்கருவிகள்,பீரங்கிகள்,சித்தன்னவாசல் ஓவியம்,இராஜாரவிவர்மா ஓவியங்கள்,கி.மு 2ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட பொற்காசுகள்,பெருங்கற்காலப் புதைப்பொருட்கள்,கற்கால கருவிகள்,முதுமக்கள் தாழிகள்,சமணர் சிற்பங்கள்,தமிழ் மொழி வளர்ச்சி கூறும் கல்வெட்டுகள்,உலோகச் சிற்பங்கள்,கல்லாய் மாறிய மரத்தின் துண்டு....இன்னும் இன்னும் என குழந்தைகளை வியக்க வைத்து மயக்கி மகிழவும் வைத்தது.....








 சித்தன்னவாசல் ஓவியங்கள்

 பீரங்கி ,துப்பாக்கிகள்.



பகுதி,பகுதியாக பிரித்து நேர்த்தியாக அமைக்கப்பட்ட அருங்காட்சியகம் புதுகையின் சிறப்பினைக்கூறுவதாக ,சிறந்த கல்விச்சுற்றுலாத் தளமாக விளங்குகின்றது.....

விழிகள் வியப்பில் விரிய ஒவ்வொரு பகுதியையும் விளக்கிய போது அவர்கள் அடைந்த உற்சாகம் ..அடடா.... கட்டுப்பாடான வகுப்பறையின்றி இப்படி பாடம் நடத்தினால் அவர்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்கும் ....!
இன்று மனம் நிறைவாக இருந்தது...மாணவர்களின் மகிழ்வைக்கண்டு....!

 நான் பிறந்த ஊரான அரியலூரிலிருந்து எடுக்கப்பட்ட கல்லாகிய மரத்தின் பகுதி...
 கற்கால கருவிகள்.

 முதுமக்கள் தாழி...



என்னுடன் தோழிகோமதி மற்றும் என் தோழியும் தமிழாசிரியருமான கிருஷ்ணவேணி தன் குடும்பத்துடன் வந்து மாணவிகளுக்கு விளக்கினார்கள்.பெற்றோர்களும் வியந்தனர்...












தமிழ்நாட்டின் தொன்மங்களை உலகிற்கு எடுத்துக் கூறும் கலைக்களஞ்சியமாகபுதுக்கோட்டை அரசு அருங்காட்சியகம் திகழ்கின்றது....!

7 comments :

  1. வணக்கம்

    எங்களின் பார்வைக்கு பகிர்வாக பகிந்தமைக்கு நன்றி...வரலாறுகள் அழியாமல் இருப்பது நன்று...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. அருமையான பணி சகோ!
    நானும் எங்கள் எச்.எம்.இடம் கேட்டிருக்கிறேன்.
    மாணவர்கள் மகிழ்ச்சி கண்ணில் தெரிகிறது:)

    ReplyDelete
    Replies
    1. 3 மணி நேரம் குழந்தைகளுடன்....மறக்க முடியாத நினைவுகள். மகிழ்வுடன்,சிரிப்புடன் குழந்தைகள்...சொர்க்கம்மா

      Delete
  3. ஒரே ஒருமுறை இந்த அருங்காட்சியகத்திற்கு வந்திருக்கிறேன் சகோதரியாரே
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. இப்போது புதுப்பித்துள்ளனர் சார்.நன்றி.

      Delete
  4. எத்தனையோ முறை புதுக்கோட்டை வந்திருந்தும் இந்த அருங்காட்சியகம் வந்ததில்லை. உங்கள் பதிவு அங்கே செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தைத் தருகிறது. பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...