World Tamil Blog Aggregator Thendral: மறக்க முடியாத நாளாக ....

Wednesday 8 January 2014

மறக்க முடியாத நாளாக ....


இன்று என் வாழ்வில் மறக்க முடியாத நாளாக அமையும் என்பதை எதிர் பார்க்கவில்லை .எத்தனையோ சுழல்கள் என் வாழ்வில் .எதிர் நீச்சல் போட்டே மீண்டு வருகின்றேன்.காலச்  சூழலில் சிக்கி முழ்கும் போதெல்லாம் என் மாணவிகள் கரையேற்றி விடுகின்றனர் .


என் மீது இத்தனை அன்பை பொழிவார்கள் என எதிர் பார்க்கவில்லை .பள்ளியில் நுழைந்ததுமே வாழ்த்துமழை.ஏன் டீச்சர் சொல்லலன்னு சில குழந்தைகள் .இத்தனை ஆண்டுகளாய் என்ன சாதித்தோம் என தோன்றியதுண்டு .மாணவிகள் அதற்கு பதிலாய் என் பிறந்த நாளை தங்களின் பிறந்த நாளாய் கொண்டாடி மகிழ்ந்த போது மனம் நெகிழ்ந்து கண் கலங்கி விட்டேன் .எதையும் எதிர் பார்க்காத தூய்மையான அன்பில் கரைந்து நின்றேன் .பனியில் நனைந்த மழைத்துளிகள் பூவானம் தூவி வரவேற்று இதயம் நிறைந்த வாழ்த்துக்களை கூறாமல் கூறிய மதிய நேரத்தில் எனை வகுப்பிற்கு அழைத்து கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர் .மாணவிகளின் ஆரவாரத்தில்அதிர்ந்தது வகுப்பு .கைம்மாறாய் என்ன தர முழுமையான அன்பைத்தவிர ....
  .

11 comments :

  1. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தோழி !

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் .மனம் நிறைந்த நன்றிம்மா..

      Delete
  2. ஆகா... இதைவிட வேறென்ன வேண்டும்?
    தன் மாணவிகளால் போற்றப்படும் ஆசிரியர்கள்தான் உண்மையில் நல்லாசிரியர்கள். நீங்கள் தேசிய விருது பெற்றுவிட்டீர்கள். பிறந்தநாள் தெரிஞ்சிருந்தா ஒரு புத்தகத்தோட வந்துருப்பம்ல?
    இன்றுபோல அல்ல இன்றை விடவும் மகிழ்ச்சியாகவும், சாதனைகள் பல புரியும் ஆண்டாகவும் தங்களின் இந்த ஆண்டு திகழ அன்புத் தோழனின் இனிய வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை சார்.15 வருடங்களுக்கு முன் படித்த மாணவன் கூட இன்னமும் தொடர்பில் உள்ளான்.ஏதோ கொஞ்சம் உழைக்கிறேன் போல..இதுவே நான் எதிர்பார்க்கல..நன்றி தோழர்.

      Delete
  3. மகிழ்ச்சி. எங்கள் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மனம்நிறைந்த நன்றி சார்.

      Delete
  4. அன்பு சகோதரிக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். எதிர்பாராத அந்த குழந்தைகளின் அன்பில் மூழ்கியது கண்டு நானும் மகிழ்கிறேன். ஒரு ஆசிரியருக்கு இதை விட வேறு எது மகிழ்ச்சியைத் தர முடியும். அன்புள்ளம் கொண்ட ஆசிரியருக்கு மாணவிகள் பெருமை சேர்த்து இருக்கிறீர்கள் அவர்களையும் வாழ்த்தி மகிழ்கிறேன். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உண்மை சகோ.மிக்க நன்றி.

      Delete
  5. belated birthday wishes teacher!
    சற்று தாமதமாக பார்த்தால்
    தாமத வாழ்த்து என்ற போதும் நீங்கள் இன்னும் அந்த இன்ப அதிர்ச்சியில் இருந்து மீண்டிருக்க மாட்டீர்கள் தானே?
    மாணவர்கள் விரும்பும் ஆசிரியராக இருப்பது பெரும் பேரு !

    ReplyDelete
    Replies
    1. உண்மை சகோதரி.கண்டித்தாலும் என் மேல் காட்டும் பாசம் .எதையும் எதிர்பாராத அன்பு.நன்றிம்மா.

      Delete
  6. நன்றி சார்

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...