World Tamil Blog Aggregator Thendral: 65வது குடியரசு தினத்தில் ..........வேர்களின் நினைவில் ........

Sunday 26 January 2014

65வது குடியரசு தினத்தில் ..........வேர்களின் நினைவில் ........


"ஊழலும் ,சாதியும் ஒழியட்டும்"

"எங்கள் ஊரில் மாணிக்க முதலியார் என்ற தியாகி இருந்தார் .அவர்தான் எங்கள் ஊரில் காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகளுக்குத் தளபதி.எப்போதும் ஏதாவது அரசியல்நடவடிக்கைகளை நடத்திக் கொண்டே இருப்பார் .
கதர் ஜிப்பா ,காந்தி தொப்பி அணிந்து ,கையில் மூவர்ணக் காங்கிரஸ் கொடியுடன் "மகாத்மா காந்திக்கு ஜே " என்று அவர் கோஷம் போட்டுக் கொண்டே சென்றது இன்னும் என் கண்ணுக்குள் திரைப்படக் காட்சி போல ஓடுகிறது .

                                   எந்தப் போராட்டத்துக்காக அவர் அப்படி போனார் என்பதெல்லாம் இப்போது எனக்கு நினைவு இல்லை .அவரை கைது செய்து ,சிறைக்குக் கொண்டு போன அன்று ஊரெல்லாம் இதே பேச்சு ,அவர் செங்குந்தர் வகுப்பைச் சார்ந்தவர் .அவர் மேல் எல்லோருக்கும் மரியாதை உண்டு .அடிக்கடி எனது தாய்மாமாவைச் சந்திக்க வருவார் .அவர் வரும் போதெல்லாம் அவரைப் பார்ப்பதே பெரிய மரியாதை கலந்த வேடிக்கையாக இருக்கும்."     என்று   தினமணியின் சுதந்திரப் பொன்விழா மலரில் திரு .ஜி .கே .மூப்பனார்அவர்கள் எழுதிய கட்டுரை இது .
                              
                                இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்ட தியாகி மாணிக்க முதலியார்   அவர்களின்  மனைவி திருமதி .பட்டம்மாள்  அவர்களிடம் நான் கேட்டால் சலித்துக் கொள்வார் ,ஆமா ஆறு குழந்தைகள வச்சுக்கிட்டு நான் பட்டபாடு எனக்கு தானே தெரியும்னு திட்டுவாங்க.குடும்ப செலவுகளுக்கிடையில் சிக்கனமாக அவர் கஷ்டப்பட்டு சேர்த்த காசை எல்லாம் எடுத்துக்கிட்டு போய் சுதந்திரப் போராட்டத்திற்கு கொடுத்தால் அவர் திட்டாமல் என்ன செய்வார் !
                                     ஆறுகள் சூழ்ந்த பசுமைச் சூழலில் மனதுக்கு ரம்மியமான அழகிய கிராமம் .பெயரே சுந்தரப்பெருமாள் கோவில் .ரோஜாத்தோட்டம் ஊருக்குள் நுழையும் போதே நம்மை வரவேற்கும்.அங்கு தியாகியின்  குடும்பம் கிராமணி எனப்படும் பெரியக் குடும்பம். சொத்தையெல்லாம் ஊருக்கே செலவு செய்து விட்டார்.  .அவரால் வளர்ச்சி அடைந்த குடும்பங்கள் பல . ஆனால்  அவர் ,தனது குழந்தைகளுக்காக எதுவும் செய்து கொள்ளாத உண்மையான தியாகி அவர் . .அவர் குழந்தைகள் அனைவரும் தங்கள்  தந்தை மீது மிகுந்த மரியாதையுடன் இருப்பார்கள் .ஒருநாளும் தங்களுக்காக தந்தை எதுவும் செய்யவில்லை என எண்ணியதுமில்லை .
                                  என்னை என் தோழி கேட்பதுண்டு அனைவரும் அமைதியாகப்  போகையில் உனக்கு ஏன் அக்கறை என்று.தியாகியின் பேத்தி என்றால் வேறு எப்படி இருப்பேன் ?எனக்குள்ள சமூக அக்கறைக்கான வித்தாய் எனது தாத்தா
... !ஆம், தியாகி மாணிக்கம் ,திருமதி பட்டம்மாள் அவர்களின் செல்லப்  பேத்தி நான் .ஒவ்வொரு சுதந்திரதினம் ,குடியரசு தினம் ஆகிய தினங்களில் எனது பாட்டி வாழ்ந்த சுந்தரப்பெருமாள் கோவிலில் அவரை கௌரவம் செய்து ,கொடியேற்ற அழைப்பார்கள் அப்போது  அவர் தாத்தாவைப் பற்றி  பெருமையுடன் கூறுவார்கள் .அரசு, சென்னையில் உள்ள தியாகிகள் மண்டபத்தில் அவரின் புகைப்படத்தினை  வைத்து பெருமைப்படுத்தியுள்ளது மகிழ்வான ஒன்று .
                                 என் தாத்தாவின் நினைவாக, எனது முதல்இளமுனைவர் பட்ட ஆய்வு நூலான "ஜீவபாரதியின் வேலுநாச்சியார் நாவலில் பெண்ணியச் சிந்தனைகள் "என்ற நூலை அவர் வாழ்ந்த சுந்தரப் பெருமாள் கோவிலில் திரு.ஜி.கே .மூப்பனார் அவர்களின் தம்பி திரு.ரெங்கராஜ் மூப்பனார் வெளியிட்ட நிகழ்வு மனதை நிறைத்த ஒன்று .
                                      காலையிலேயே எனது தாத்தாவின் நினைவு வந்த போது மிகப் பெருமையாக இருந்தது .அவர்களின் நினைவுகளின் தூறலாக இக்கட்டுரை தோன்றியது .அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள் .நன்றி .

9 comments :

  1. பலரும் அறிய திரு .ஜி .கே .மூப்பனார் அவர்களின் கட்டுரையை பதிவாகிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

    ReplyDelete
  2. athil ulla thiyaagi en grandfather sir

    ReplyDelete
  3. தியாகியின் பெயர்த்தி...
    ஆச்சர்யமான மகிழ்ச்சி

    இந்தக் கொடுப்பினை சிலருக்குதான் கிடைக்கும்...

    ReplyDelete
  4. unmai than perumaiyum kuda .nandri

    ReplyDelete
  5. தாங்கள் தியாகியின்
    பெயர்த்தியா
    வாழ்த்துக்கள் சகோதரியாரே
    மனம் மகிழ்ச்சியால் நிரம்பி வழிகின்றது.

    ReplyDelete
  6. ஒரு தியாகியை அறிமுகம் செய்ததற்கு நன்றி கீதா! நீங்கள் அவரின் பேத்தி என்பது மகிழ்ச்சி! வாழ்த்துகள்!

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...