World Tamil Blog Aggregator Thendral: மலைநாட்டினில்

Monday 5 May 2014

மலைநாட்டினில்


கண்கள் பசுமையின்
குளிர்மையைத் தாங்கி
 உடலெங்கும்  பரவச் செய்த
பரவசத்தில்...

மலையின் அழகை
வார்த்தைகளில் வடிக்க
வளமற்றவளாய்..

 விண்முட்டும் மரங்களையும்
மலைகளையும்
விண்ணுடன் சேர்த்தணைக்கும்
மேகங்கள்....


காற்றும் ,கதிரவனும்
நுழைய முடியாத
காட்டின் அடர்வுக்குள்
உள்நுழைந்து பசுமை
குடித்து வந்த மகிழ்வில்...

எட்டும் வரை தேயிலை
தோட்டப்பாய் விரித்து
மனதைக் கொள்ளையடிக்க...

விழித்து கொண்ட
அறிவு கூற்றாய்...

அளவற்ற மரங்களின் தியாகத்தில்
காட்டின் அழிவில் உதயமாய்
தேயிலைத்தோட்டம்...

குடிக்கும் தேநீரின் சிவப்பில்
மரங்களின் கண்ணீரும்
மனிதர்களின் செந்நீரும்..

எதையும் ஏற்கும் கம்பீரமாய்
பல்லுயிரிகளின் புகலிடமாய்
மலைக்காடு






3 comments :

  1. வணக்கம்

    கவிதையும் படங்களும் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்
    படத்தில் இருப்பது யாரு?

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி.படத்தில் கீதா

      Delete
  2. கவிதையும்
    படமும்
    அருமை சகோதரியாரே

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...