World Tamil Blog Aggregator Thendral: மரணம்

Tuesday 25 February 2014

மரணம்



நகரத்தில் மெளனமாய்
அடுத்த வீடறியாமல்
இழப்பின் வலியை
 மனதிற்குள்ளேயே அடக்கும்
நாகரீக மரணமாய் ....!

கிராமத்தில் நுழையும்போதே
எதிர்கொள்ளும் ஒப்பாரி நம்மை..
இழவு வீட்டின் சோகத்தை
ஒவ்வொரு வீடும் சுமக்கும்.
உணர்வுகளை மறைக்காமல்
உள்ளத்தை வெளிக்காட்டும்
கதறுகின்ற ஒப்பாரியிலும்
நாகரீகமின்றி மூக்கைச்சிந்தி
துடைக்கும் பட்டிக்காட்டுத்தனத்திலும்
ஊடாடும் கிராமத்தின்
 மனித நேயம் ...!









10 comments :

  1. நல்ல கவிதை..
    ஆனா கிராமத்துல ஒப்பாரி பாடுறதுக்கு தனியே ஆள் வருவாங்களாமே..உண்மையா?

    ReplyDelete
  2. உண்மைதான்மா.பாட்டிகளிடம் மட்டுமே ஒப்பாரி உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. ஹ்ம்ம் மறுமொழிக்கு நன்றிங்க கீதா. அப்டினா அது உண்மை உணர்வில்லையேனு தோணினதால கேட்டேன்..

      Delete
    2. அதுவும் கிராமத்தில் இருந்து நகரத்தில்வசிக்கும் படித்தவர்களின் இல்லத்தில் தான்மா

      Delete
  3. சகோதரிக்கு வணக்கம்
    உறவுகளின் இழப்பு கூட நாகரிகம் என்ற பெயரில் மனதுக்குள் மறைந்து கொள்வது ஒரு ஆரோக்கியமான நிலையில்லை என்பது எனது கருத்து, துக்கத்தை அழுது தான் தீர்க்க வேண்டும். கிராமப்புறங்களில் தான் இன்னும் மனிதமும் மனிதநேயமும் தன் சாயலை சற்று மாற்றிக்கொண்டாவது உலாவி வருகிறது என்பது தான் உண்மை. அழகான பகிர்வுக்கு நன்றிகள் சகோதரி..

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் சகோ.வரவிற்கு நன்றி

      Delete
    2. கிராமிய மனிதம் கமழும் கவிதை
      வாழ்த்துகள்

      Delete
  4. உறவுகளின் இழப்பை விட.நாகரிகம்தான் பெரியது என்னும் நாகரிகம் உண்மையிலேயே சிறுமைதானே.
    அருமையான கவிதை
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  5. இன்றைய "நவீன" நாகரீகம் பலவற்றையும் மூழ்கடித்து விட்டது...

    கவிதை அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. இனிவரு தலைமுறைகள் ஒப்பாரிப்பாடல்களை புத்தகத்தில் தான் படிக்கப்போகின்றனர். சிறிய கவிதை பெரிய கருத்தை சொல்லும் என்பது உங்கள் கவிதையிலிருந்து தெரிகிறது.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...