World Tamil Blog Aggregator Thendral: பார்த்தீனியம் அறிவோமா?

Wednesday 27 November 2013

பார்த்தீனியம் அறிவோமா?







விரைவாய் கடக்கும் காலங்களில் நம் வீட்டைச்சுற்றி ,தெருவைச் சுற்றி நாம் பார்க்கின்றோமா என்றால் இல்லை என்பதே அனைவரின் பதிலாய் இருக்கும்.

அந்நிய நாடுகள் நமக்கு தந்த கேடுகளில் ஒன்று பார்த்தீனியம் செடி.இதன் பாதிப்பு அறிந்தே அரசு ஒரு வாரம் பார்த்தீனியம் ஒழிப்பு வாரம் என்று செயல் பட்டது.மக்களுக்காக செய்யும் திட்டங்களில் மக்களும் கொஞ்சம் ஆர்வம் காட்டினால் தான் அது தொடர்ந்து நன்மையைத்தரும்.

தீமைகள்
----------------
பார்த்தீனியத்தால் பாதிக்கப்பட்டவள் என்பதால் அதைப் பற்றிய தேடுதலில் கிடைத்த செய்திகள் அதிர்சியானவை.

”ஒவ்வாமை,அரிப்பு,மலட்டுத்தன்மை,ஆஸ்துமா,மூச்சுத்திணறல்,...எனத் தொடரும் தீமைகள் அதன்மூலம்...நிறைய...”

தற்போது குழந்தையின்மை அதிகம் காணப்படும் நிலையில்
அதற்கான காரணிகளீல் ஒன்றான பார்த்தீனியம் செடியை ஒழிக்க மக்களும் ஒத்துழைக்க வேண்டும்.

நான் ஆசிரியக் கூட்டங்களுக்குச் செல்லும் போதெல்லாம் அச்செடியை கொண்டு சென்று அதன் தீமைகளை சொல்லிக்கொண்டுள்ளேன்.

எங்கள் பகுதி கவுன்சிலரிடம் சொல்லி அதற்கான விழிப்புணர்வை உண்டாக்க கோரியுள்ளேன் .புதுகையில் தற்போது அதிகமாக காணப்படுகிறது.

விழித்துக் கொள்வோம்.நம் சந்ததிகளின் நலனிற்காக....!
புதுகை மக்களின் நலனில் அக்கறை உள்ளவர்கள் .இதில் கவனம் செலுத்தி விழிப்புனர்வை உண்டாக்க விரும்புகின்றேன்.செய்வோமா?
நான் செய்கிறேன்.. நீங்க..?

6 comments :

  1. நம் சந்ததிகளின் நலனிற்காக கண்டிப்பாக விழித்துக் கொள்ள வேண்டும்...

    ReplyDelete
  2. ஓ.. இதென்ன இது இப்படி ஒரு கொடுமையானது..
    கவனத்தில் கொள்வது சாலச்சிறந்ததே!

    அவசியம் கருத்திற்கொள்ள நல்ல பகிர்வு!

    ReplyDelete
  3. நிச்சயமாக விரைவில் ஆவன செய்ய வேண்டும்.
    சமூக நலன் கொண்ட எண்ணத்திற்கு வாழ்த்துக்களும் நன்றியும் உரித்தாகட்டும்.
    நல்ல பகிர்வு.

    ReplyDelete
  4. வணக்கம்
    இன்று தங்ளின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளதுவாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி.http://blogintamil.blogspot.com/2014/01/blog-post_7.html?showComment=1389055275351#c7234559865850481387

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. பார்த்தீனியம் இருக்குமிடங்களில் ஆவரைச் செடியை பயிரிட்டால் பார்த்தீனியம் அழியும் என்று படித்தேன் தோழி.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...