World Tamil Blog Aggregator Thendral

Sunday, 28 July 2013

வீழ்வேன் என்று நினைத்தாயோ!

 தேங்கிய குட்டையல்ல
துள்ளும் அருவி
பாய்ந்தோடும் ஆறு
அள்ளிச்செல்வேன் அனைத்தையும்...

சலசலக்கும் ஓடை
சலியாது வளம் நல்குவேன்
ஆழ்மனக்கடல் நான்

கவலைகளைத் தேக்கி
சுனாமியாய் துன்பங்களை சுருட்டி
சுகங்களையே தருகின்றேன்...

இதமான தென்றல்
இனியவளே  அனைவருக்கும்
சுழன்றடிக்கும் சூறாவளி
வீழ்த்த எண்ணும் பகைவர்க்கு!
மழைக்கால நெருப்பாய்
மனதிற்கு இதமானவள்
மறந்தும் அணைக்க நினைத்தால்
சுட்டெரிக்கும் சூரியன் நான்!

உயிருள்ளவைக்கு மட்டுமல்ல 
உயிரற்றவைக்கும் 
தோழமை நான்...!
புதைத்தாலும்
பூமியில் விதையாய்
அழித்தாலும் 
அனலில் தங்கமாய்
சிதைத்தாலும் சித்திரமாய்
மறைத்தாலும்
தமிழ் மறையாய்
வையத்துள் நிலைப்பெற்றிடும்
என்னை

வீழ்வேனென்று நினைத்தாயோ!


Saturday, 26 January 2013

ஏன்பா ?

                                          ஏன் பா ?
                 
                           அப்பா
                          அம்மா நமக்கு வரம்
                           அணைக்காமல் அடிக்கலாமா ?

                          நான் இருப்பேன்
                          தள்ளாடும் வயதில்
                          ஊன்றுகோலாய் ...!

                         கல்வி போதுமெனக்கு
                         கற்றதன் பாதையில்
                          உற்றவர்களைக் காத்திடுவேன் ...!


                          எதிரிகளை இனங்கண்டு
                          வீழ்த்தும் சக்தியும்
                     

                           ஆடை அவிழ்த்து உறுப்புகளை

                            உபத்திரவ படுத்தும் உறுப்புதனை

                            அறுத்தெறியும் சக்தியும் ....


                            ஆணினம் தனை நண்பனாய்
                            ஆக்கும் சக்தியும் ...

                            வன்முறைதனை வருடும் தென்றலாய்
                              வகுத்திடும் சக்தியும் -பெற்றே
                              காத்திடுவேன் உங்களை ...
              
                             காக்கவே உதித்த என்னை
                              என் கனவுப் பூக்களைக் கருக்கி
                             கருவிலேயே சிதைத்தது
                     
                                ஏன் பா?                  
 

Thursday, 6 December 2012

நான்கு வழிச் சாலை




பல்லாயிரம் கோடியில்
நான்கு வழிச்சாலை
தவறேதும் செய்யாமல்
 மரணதண்டனையில்
மரங்கள் .