World Tamil Blog Aggregator Thendral

Saturday, 18 June 2016

வைகறை நிதி பட்டியல்-2

34
20.5.16
மரியா சிவானந்தம் முகநூல் நண்பர்.சென்னை.
2,000
1,27,505
35
26.5.16
கவிஞர் ஜெயதேவன் முகநூல் நண்பர்.
2,000
1,29,505
36
30.5.16
திலகராஜ் பேச்சியப்பன்.முகநூல் நண்பர்.
5,000
1,34,505
37
7.6.16
மரபின் மைந்தன் முத்தையா.பட்டிமன்ற பேச்சாளர்,எழுத்தாளர்.
11,000
1,45,505
38
14.6.16
எஸ்.சுரேஸ்
2,000

39
14.6.16
கீதா பிரகாஷ் பொள்ளாச்சி இலக்கிய வட்டம்.
2,000

40
14.6.16
வீரக்கடம்பு கோபு மாவட்ட செயலாளர் தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் .திண்டுக்கல்
   500
1,50,005
41

புதுகை செல்வா ஒளிபதிவாளர்.
2,500

42

அனுசுயா ஆசிரியர் அ.ம.மே.நி.பள்ளி,சந்தைப்பேட்டை
4,000
1,56,505
43

நிலோபர் இ.நி.ஆ உளுவப்பட்டி
  500

44

மு.சின்னக்கண்ணு இ.நி.ஆ காட்டுப்பட்டி
  500

45

எஸ்.நாகலெட்சுமி த.ஆ மரிங்கிப்பட்டி
 1,000

46

ர.சரோஜாதேவி சமையலர் மரிங்கிப்பட்டி
  500

47

நெல்சன் இ.நி.ஆ ப.மேட்டுப்பட்டி
  500

48

சசிகலா இ.நி.ஆ ஆணைப்பட்டி
  500

49

செல்லம்டோரா இ.நி.ஆ ஆணைப்பட்டி
  500

50

ஜெய்ஸிரி த.ஆ கதவம்பட்டி
 400
1,60,905




முன் இருப்பு
1,60,905
51

மீனா வனிதா இ.நி.ஆ கதவம்பட்டி
 300

52

ராமலெஷ்மி இ.நி.ஆ கதவம்பட்டி
200

53

இரா.வடிவேல் இ.நி.ஆ கதவம்பட்டி
200

54

து.சுதாகர் இ.நி.ஆ கதவம்பட்டி
100

55

பழ .வனிதா இ.நி.ஆ கதவம்பட்டி
100

56
18.6.16வரை
தமிழ்த்திரு சேகர் ஆசிரியர் கொத்தமங்கலப்பட்டி
1,000
1,62,805

வைகறை நிதி பட்டியல்-1

எண்
நாள்
பெயர்
தொகை
[ரூபாய்]
கூடுதல்
1
5.5.16
திருமிகு நா.முத்துநிலவன் வலைப்பதிவர் புதுகை.
10,000

2
5.5.16
திருமிகு மு.கீதா
வலைப்பதிவர் புதுகை.
10,000

3
5.5.16
திருமிகு பேராசிரியர்.துரைபாண்டியன்
பாரத் மெட்ரிக் பள்ளி புதுகை.
10,000

4
5.5.16
திருமிகு சுரேஷ்
ஆக்ஸ்போர்டு சமையற்கலைக் கல்லூரி புதுகை.
5,000

5
5.5.16
திருமிகு சோலச்சி
வலைப்பதிவர் புதுகை
5,000

6
5.5.16
திருமிகு க.மாலதி
வலைப்பதிவர் புதுகை.
5,000

7
5.5.16
திருமிகு கதிரேசன் வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் புதுகை.
6,000

8
5.5.16
தமிழகத் தமிழாசிரியர் கழகம் புதுகை
5,000

9
5.5.16
திருமிகு மணிகண்டன்
வீதி உறுப்பினர் புதுகை.
1,000

10
5.5.16
திருமிகு மீனாட்சிசுந்தரம்
வலைப்பதிவர் புதுகை
1,000

11
5.5.16
திருமிகு ஜெயா
வீதி உறுப்பினர் புதுகை.
    500
58,500
12
6.5.16
திருமிகு பகவான் ஜி.
வலைப்பதிவர் .மதுரை.
1,000

13
6.5.16
திருமிகு ராஜா [சே.அரசன்] சென்னை.
1,000

14
6.5.16
திருமிகு சிவக்குமார்
வலைப்பதிவர் ஆப்ரிக்கா-உகாண்டா.
1,000
61,500
15
7.5.16
திருமிகு தமிழ் இளங்கோ
வலைப்பதிவர் திருச்சி.
2,000

16
7.5.16
திருமிகு செல்வதுரை
வலைப்பதிவர் மதுரை.
   500
64,000
17
8.5.16
திருமிகு முரளிதரன்
வலைப்பதிவர் சென்னை.
1,000
65,000
18
9.5.16
திருமிகு கோபி சரபோஜி
வலைப்பதிவர் சிங்கப்பூர்.
2,500

19
9.5.16
திருமிகு பொன்.கருப்பையா
வலைப்பதிவர் புதுகை.
1,000

20
9.5.16
திருமிகு புலவர் இராமாநுசம்
வலைப்பதிவர் சென்னை.
1,000
69,500
21
10.5.16
திருமிகு ஜம்புலிங்கம்
வலைப்பதிவர் தஞ்சை
2,000

22
10.5.16
திருமிகு கரந்தை ஜெயக்குமார் வலைப்பதிவர் தஞ்சை
2,000
73,500
23
11.5.16
திருமிகு தமிழரசன்[சே தமிழா] முகநூல் நண்பர் சென்னை
5,000
78,500
24
12.5.16
விதைக்கலாம் அமைப்பு
திருமிகு
வலைப்பதிவர்கள் கஸ்தூரிரங்கன்ரூ10,000,
மலையப்பன் ரூ2000,
விதைக்கலாம் நண்பர்கள் ரூ15,000]
27,000

25
12.5.16
திருமிகு ரஃபீக் சுலைமான்.
முகநூல் நண்பர் அமீரகம்.
5,000

26
12.5.16
திருமிகு கில்லர்ஜி.
வலைப்பதிவர் அபுதாபி.
2,005
1,12,505
27
13.5.16
திருமிகு நெப்போலியன் சிங்கப்பூர்
5,000

28
13.5.16
திருமிகு கலையரசி
வலைப்பதிவர் பாண்டிச்சேரி
2,000
1,19,505
29
14.5.16
திருமிகு பிரபா
முகநூல் நண்பர்.
1,000

30
14.5.16
திருமிகு அ.பாண்டியன்
வலைப்பதிவர் மணப்பாறை.
1,000
1,21,505
31
19.5.16
செல்வி ரோஷ்ணி
ம/மு[வெங்கட்நாகராஜ்]திருச்சி
3,000

32
19.5.16
திருமிகு அப்பாஸ் யாஸ்
முகநூல் நண்பர் புதுகை
   500

33
19.5.16
திருமிகு சிவா ஜி
[விதைக்கலாம் நண்பர் புதுகை.
   500
1,25,505


வீதி-28

                                                                     வீதி
                                           கலை இலக்கியக்கூட்டம் -28

கிளம்பிட்டீங்கதானே...

 கவிஞர் நேசமித்ரன் வருகையால் நாளைய வீதி கூட்டம் சிறக்க உள்ளது.

தேன் மதுரத்தமிழ் கிரேஸ் எங்களின் அன்பான அழைப்பை ஏற்று வீதியில் பங்கு கொள்கிறார்...

 நாளை அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்...

காலை 9.30 மணிக்கு துவங்கும் கூட்டம் ,அமைப்பாளர் திருமிகு மணிகண்டன் அவர்களின் அயராத உழைப்பினால் நாளை மிளிரப்போகின்றது..

 இலக்கியம் மனதை இலேசாக்கும் என்பதை வீதி உணர்த்தியுள்ளது..

இளம் கவிஞர்களை ஊக்கப்படுத்தும் வீதியின் முயற்சிக்கு உங்களின் பேராதரவை எதிர் நோக்கியுள்ளோம்...

Wednesday, 15 June 2016

குட்டிமா

கனத்த மௌனம் சூழ
கம்மென்றுருக்கிறது வீடு..
பாலையின் வெம்மையாய்
மௌனம் சுட ....
சாளரக்கரங்களால் தேடி அலைந்து
தன் மகிழ்வைத் தேடிப் புலம்புகிறது...
 வாசலின் நிற்கும் புங்கையோ
அழத்துவங்கிய வீட்டை
இளமென்கரங்களால் தேற்றுகிறது....
 மௌனம் கலைந்த வகுப்பறையோ
 மகிழ்வின் உச்சத்தில்...
வீட்டைக்காணாது அலறியழும்
குட்டிமாவை
 பலகணிக்கரங்களால்
 தேற்றமுடியாது..
காவலிருக்கும் வேம்புவை துணைக்கழைக்க.
வேகமாக தலையாட்டி
சிரிக்க வைக்க முயல்கிறது
 தலையாட்டி பொம்மையென ....

Monday, 13 June 2016

பணம் இந்த பள்ளியில் இல்ல மேம் ---------------------------------------------------

பணம் இந்த பள்ளியில் இல்ல மேம் ---------------------------------------------------

புதுகையின் சிறந்த தனியார் பள்ளியில் இருந்து ஒரு குழந்தையை அவர்கள் பெற்றோர்..எங்கள் பள்ளியில் சேர்த்துள்ளார்கள்..

முதலில் பள்ளியை இரண்டு முறை வந்து சுற்றி பார்த்து ,கழிப்பறைக்குச் சென்று பார்த்து விட்டு திருப்தியான பின் சேர்த்துள்ளனர்....

 அந்த குழந்தையிடம் நேற்று மாலை குட்டிமா நல்லாருக்கியா..இந்த பள்ளி பிடிச்சிருக்கான்னு கேட்டேன்..பிடிச்சிருக்கு மேம் என்றாள்...

 நீ படித்த பள்ளிக்கும் இந்த பள்ளிக்கும் என்னடா வித்தியாசம் என்று கேட்டேன்..

ஒண்ணுமில்ல மேம். அங்கயும் மிஸ் எல்லாம் சாப்டா இருப்பாங்க..இங்கயும் அப்படிதான் இருக்கீங்க..

 அந்த பள்ளி மின்விசிறி எல்லாம் வச்சு அழகா இருக்கும்ல என்றேன்..இல்ல மிஸ் சுவரெல்லாம் இங்க் கறையா இருக்கும் ..இங்க இல்ல என்றாள்.
இப்ப தான் சுண்ணாம்பு நாங்க அடிச்சதால புதுசா தெரிகிறது...

 வேற என்னடா வித்தியாசக் என்றேன்..

 அங்க பணம் ரொம்பக் கேக்குறாங்க இங்க அப்படி இல்லன்னு

 அந்தக் குழந்தை சொன்ன போது இப்படி எங்களை நம்பி வரும் குழந்தைகட்காக கூடுதலாக மகிழ்வான கற்றலை அளிக்க வேண்டும் என்ற ஆவல் மேலோங்கிறது....
 பத்திரிக்கைகளும்,முன்னணி இதழ்களும் அரசுப் பள்ளியின் முன்னேற்றங்களை எடுத்து கூறத்துவங்கியுள்ளது ...அரசுப்பள்ளிகள் நல்ல பாதையில் பயணிக்கத் துவங்கியுள்ளன என்பதை எடுத்து காட்டுகின்றன..

டி.சி வேண்டாம் போங்க..

கீதாஅம்மா, இவங்க இன்னும் அவங்க மகளுக்கு டி.சி தரலம்மா?

 அதனால அந்த பொண்ணு பேர என்னம்மா செய்யுறது?

 என பள்ளிக்கூட பதிவு எழுத்தர் கொஞ்சம் சத்தமாக கூறிய போது ,
அருகில் கண்களில் நீர் வடிய ,ஆறாம் வகுப்பில் சேர காத்திருந்த வைத்தீஸ்வரியின் அம்மா கைகளை பிசைந்து கொண்டு நின்றார்கள்....

 ஏம்மா கண்களை துடைங்க முதல்ல, எதுக்கு அழுகனும்னு? கேட்ட போது.. இல்ல மிஸ் என் பொண்ணு திருச்சியில் உள்ள வெஸ்லி[புறத்தில் உள்ள சிறிய நர்சரி பள்ளி] பள்ளிக்கூடத்துல ஆங்கில வழிக்கல்வில படிச்சா...

திடீர்னு அவ அப்பா மாரடைப்பால இறந்து போயிட்டார்...என்ன பண்றதுன்னு தெரியல...டீ மாஸ்டரா வேலை பார்த்துக்கொண்டிருந்தார். பணம் கட்டலன்னதும் இவள அதே பள்ளியில தமிழ் வழிக்கல்வில அவங்களே மாத்திட்டாங்க...

 நாங்க புதுக்கோட்டைக்கே வந்துட்டோம்...இப்ப இவளுக்கும், இவ சகோதரிக்கும் டி.சி போய் கேட்டா ரூ30,000 கொடுத்தா தான் தருவோம்னு கறாரா சொல்லிட்டாங்கன்னு கதறி...இப்படி இவ அப்பா எங்கள தவிக்க விட்டுட்டு போயிட்டாரேன்னு அழுத போது மனம் வலித்தது..

 குழந்தைக்கு கல்விக்கட்டணம் கட்ட முடியாததே அவரது மாரடைப்புக்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம்...னு தோன்றியது,...

 ஏம்மா அரசுப்பள்ளில எல்லாமே இலவசமா தரும்போது இப்படி கஷ்டப்பட்டு சேர்க்கணும்மான்னு வருத்தப்பட்டேன்..

இல்லங்க நான் தான் அரசுப்பள்ளில படிச்சேன்...இவளாவது பிரைவேட் ஸ்கூல்ல படிக்கட்டுமேன்னு சேர்த்துட்டேன்... இப்ப என்ன பண்றதுன்னு தெரியலன்னு கவலைப்பட்ட போது ..

அவங்க டி.சி யே வேண்டாம்மா...புள்ளய இங்க சேர்த்துக்கலாம்னு அனுப்பிட்டேன்....
எஸ்.எஸ்.ஏ ...ஆசிரியப்பயிற்றுநர் அனிதாவிடம்,விவரத்தைக்கூறி இவள எப்படி சேர்க்கலாம்மான்னு கேட்டேன்..
 ஆர்.டி.இ.ஆக்ட் 2009 இன் படி சேர்க்கப்பட்டுள்ளாள்னு ஒரு வரி சேர்க்கைப்பதிவேட்டில் எழுதிட்டு சேர்த்துடுங்கம்மான்னு சொன்னாங்க.. வைத்தீஸ்வரிய சேர்த்தாச்சு..

ஆனா இன்னும் எத்தனை குழந்தைகள் இப்படி இருக்கோன்னு கவலை வந்தது...

 மக்களின் அறியாமையை சில பள்ளிகள் பயன்படுத்தி கொண்டு..அவர்களின் குருதிய உறிஞ்சுவதை எப்படி தடுப்பது?

Monday, 6 June 2016

காற்றை அழைத்துச் செல்லும் இலைகள்-நூல்

நன்றி கவிஞர் வைகறைக்கும் கவிஞர் அம்சப்ரியா அவர்களுக்கும்.....

 கவிஞர் வைகறையின் தனித்தன்மையாகத் தான் படித்த நல்ல நூல்களைத் தந்து அதன் சிறப்பைக்கூறி, வாசிக்கச்சொல்லி பின் வாசித்துவிட்டீர்களா?என அக்கறையுடன் கேட்டு ,
இல்லையென நான் சொல்லும் போது பரவால்லமா நேரம் கிடைக்கும் போது அவசியம் படிங்கன்னு சொல்வது வழக்கம்... 

அப்படி தந்த நூல்களில் ஒன்று கவிஞர் அம்சப்ரியா அவர்களின்

 ”காற்றை அழைத்துச்செல்லும் இலைகள்”,

 நான் எழுதுவது கவிதையா என்ற சந்தேகம் முளைத்தெழுந்த ஒரு மாலைப்பொழுதில் தான், வைகறை இந்நூலைப் படிங்கம்மா,.. கவிதைக்குறித்த ஒரு புரிதல் உண்டாகும் என்றார்.

படிக்க வேண்டும் என்று எண்ணி எடுக்கும் போதெல்லாம் வேறு வேலைகளிலேயே கவனம் செல்லும்...

 நீண்ட நாட்களாக வாசிக்காமல் என் கைப்பையிலேயே இருந்த இக்கவிதை நூலை , இன்று கனத்த மழைபெய்து கொண்டிருந்த கணத்தில் கையிலெடுத்து வாசிக்கத்தூண்டியது , கவிஞர் அம்சப்ரியாவின் மற்றொரு நூல்.

பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் சிறு நூல் வரிசை வெளியீடான “கவிதைக்குள் அலையும் மனச்சிறகு..’” 

அதைப்படித்ததும் ஏற்பட்ட ஆவலில் “காற்றை அழைத்துச் செல்லும் இலைகள்”நூலைப்படிக்காமல் விட்டோமே என்ற ஆதங்கத்தில் படித்த போது....

 காற்றை மட்டுமல்ல கவிதையின் பயணத்தில் என்னையும் அழைத்துச் சென்று ஒரு நல்ல நூலுடன் பயணித்த நிறைவைத் தந்துள்ளது.

 கவிதை தனது பயணத்தில் புதுக்கவிதையிலிருந்து ,நவீனக்கவிதைக்கு செல்லத்துவங்கியதன் அவசியத்தை உணர்த்தியது.... ”கவிதையைக் கண்டறிந்து,கவிதையைப் புரிந்து கொண்டுஅதன் மைய ப்பொருளை உணர்ந்து,கவிதைக்கான ரசனையை உணரவைத்து,நவீனக்கவிதையின் அடையாளத்தை வரையறுத்து,கவிதை எவ்வாறு அணுகுதல் என்பதைக் கற்பித்து....நவீனக்கவிஞர்களின் சிறந்த கவிதைகளை அறிமுகப்படுத்துவதுடன் அவர்களை ஊக்குவித்தலுமாக 13 கட்டுரைகளில் கவிதையோடு கவிதையாக வாழ்ந்து நம்மையும் வாழவைக்கின்ற கவிஞர் அம்சப்ரியா அவர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.


 கவிதை எழுதும் அனைவரும் வாசிக்க வேண்டிய நூலாக

 கவிஞர் அம்சப்ரியா அவர்களின் ”காற்றை அழைத்துச் செல்லும் இலைகள்” விலை ரூ 80/
அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
41,கல்யாணசுந்தரம் தெரு,
பெரம்பூர், சென்னை-600011
044-255582552

Wednesday, 1 June 2016

ஆங்கில வழிக்கல்வியில் விட பயமாருக்கு...

ஆங்கில வழிக்கல்வியில் விட பயமாருக்கு...

காலையில் அக்கா மகளிடம் பேசினேன்...தன் மகளை அருகில் உள்ள அரசுப்பள்ளியில் விடப்போறேன் சித்தி, ஆங்கில வழியில் விட பயமாருக்கு..குழந்தைய படி படின்னு அதன் இயல்பையே மாத்திடுவாங்கல்ல...

அரசுப்பள்ளின்னா அன்பா பார்த்துப்பாங்கன்னு அவங்க அப்பா அங்கு தான் சேர்க்கனும்னு சொல்றாங்க...

 மருமகன் மாநில அரசின் சென்னை செண்ட்ரல் பாலிடெக்னிக்கில் ஆசிரியராகப்பணி புரிந்து வருகின்றார். சத்தமின்றி நிறைய சேவை புரிந்து வருகின்றார்.கவிஞர் வைகறைக்கு ரூ 5000 அனுப்பி உள்ளார். உதவி செய்ய பணத்தை விட மனம் முக்கியம்..

 பக்கத்துல எல்லோரும் இங்கிலீசு மீடியத்துல சேர்க்க சொல்றாங்க..ஆனா நாங்க அரசுப்பள்ளில தான் சேர்க்க போறோம்னு தெளிவா சொன்னா..

 இந்த தெளிவு அம்மாவான என்னிடம் இல்லயே வருத்தப்பட்டேன்.. ஆனா ஒரு அரசுப்பள்ளி ஆசிரியரா பெருமைப்பட்டேன்.

முதன்முதலாக பள்ளியில் அடியெடுத்து வைக்கும் குட்டிமாக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள்...