World Tamil Blog Aggregator Thendral: kalam.1

Wednesday 29 July 2015

kalam.1

என்னசெய்தால் மகிழ்வார் கலாம்?
--------------------------------------------------------------

நேற்று வகுப்பில் கலாமின் நினைவுகளைப்பகிர்ந்து கொண்ட போது...

மாணவிகள் உண்மையை உணர்ந்து யோசிக்க ஆரம்பித்தனர்.

          இன்றோடு அவரை மறந்து விடாமல் எத்தனை எளிமையான வாழ்க்கையை வாழ்ந்துள்ளார்.....நாம் ஆடம்பரமான வாழ்க்கைக்கு அடிமையாகிவிட்டோம்..இனியாவது நாம் நம் கடமையை சிறப்பாக முடித்து ..அவருக்காக நாம் வருத்தப்பட்டது உண்மையான ஒன்று என்பது நிரூபிக்கவேண்டும்....

அவரின் கனவை நிறைவேற்ற மாணவர்களை வழிநடத்த வேண்டிய பொறுப்பு ,வருந்தும் ஒவ்வொருவருக்கும் உண்டு...

 நேர்மைக்கும் எளிமைக்கும் ,மனிதநேயத்திற்கும் கிடைத்த மரியாதையைக்கண்டு இனியாவது அரசியவாதிகள் மாற முயற்சிப்பார்களா?அல்லது போலியாக வருந்தி மறந்துவிடுவார்களா?

மதங்களைக்கடந்து உயர்ந்து நிற்கும் மனிதரைக்கண்டு மதத்தலைவர்கள் இனியாவது மனிதநேயத்தோடு நடந்து கொள்வார்களா?

மக்களின் மேல் உண்மையான அக்கறை உள்ள ஆட்சி நடக்குமா இனியாவது?

மக்களின் மனதில் உயர்ந்து நிற்கும் அவருக்கு புகழ் பாடுவது,சிலைவைப்பதை விட மக்களுக்காக  நேர்மையாக வாழ அனைத்துக்கட்சிகளும் உறுதி ஏற்குமா?

எந்த கட்சியிலும் இல்லாமல் இந்தியமக்களின் மனதில் இடம் பிடித்த அவரைப்போல் இனி யார் வருவார்?

மாணவிகளாகிய நீங்கள் தான் இனி பொறுப்புள்ள அரசியல்வாதிகளாக உருவாக வேண்டும்...விவசாயத்தை நோக்கி நம் பார்வை திரும்பவேண்டும்...இதுதான் நீங்கள் அவருக்கு செய்யும் உண்மையான கடமை என்றேன்....யோசிக்க வைத்துள்ளேன்...

ஒவ்வொரு பெற்றோரும் ஆசிரியரும் முயன்றால் முடியாததும் உண்டோ..!

உறுதி ஏற்போம்....அனைவரும்..


முயற்சிக்கிறோம் அய்யா...வளமையான வருங்காலத்தை உருவாக்க..
போய்வாருங்கள்....கனத்த மனதுடன் வழி அனுப்புகின்றோம்...வேறு வழியின்றி..

6 comments :

  1. பெற்றோரும் ஆசிரியரும் நினைத்தால் முடியாதது எதுவுமில்லை...

    ReplyDelete
  2. மாணவ சமுதாயத்தை வழிநடத்தும் மகத்தான பொறுப்பு
    பெற்றோருக்கும் ஆசியர்களுக்கும் நிச்சயம் உண்டு!..
    மனது வைத்தால் முடியும்..!

    ReplyDelete
  3. அவர் கூறிய அறிவுரைகளில் சிலவற்றை ஈடுபாட்டோடு பின்பற்றினால் நல்ல பலனே கிடைக்கும்.
    கலாமைப்பற்றி வெளிநாட்டுப்பத்திரிக்கைகளில் வந்த செய்தியைக் காண வாருங்கள்.
    http://www.drbjambulingam.blogspot.com/2015/07/blog-post_12.html

    ReplyDelete
  4. முயன்றால் முடியாதது இல்லை. அவர் காட்டிய பாதையில் செல்ல அனைவரும் உறுதுணை கொள்வோம்....

    த.ம. 4

    ReplyDelete
  5. வணக்கம்

    தங்கள் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன்

    http://blogintamil.blogspot.fr/2015/07/blog-post_31.html

    நன்றி
    சாமானியன்

    ReplyDelete
  6. மனது வைத்தால் முடியும்...

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...