World Tamil Blog Aggregator Thendral: முழுநிலா முற்றம் -கூட்டம் 7

Friday 31 July 2015

முழுநிலா முற்றம் -கூட்டம் 7

முழு நிலா[நீலநிலா] முற்றம்- கூட்டம் 7
நாள்[31.7.15]

இன்று முழுநிலா முற்றத்தின் ஏழாவது கூட்டம் சகோதரர் வைகறை வீட்டு மொட்டைமாடியில் நிகழ்ந்தது....வாசலில் கலர்கோலமிட்டு அனைவரையும் வரவேற்றார் சகோதரி ரோஸ்லின்.

முதலில் மதிப்பிற்குரிய அப்துல்கலாம் அவர்களுக்கும்,மதுக்கடை ஒழிப்பிற்காக போராடி உயிர் நீத்த அய்யா சசி பெருமாள் அவர்களுக்கும் ஒருநிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது.







நிகழ்வுகள்

1]படித்தபுத்தகம் பற்றி கூறும் நிகழ்வில்

கீதா  பாலகுமாரனின் ”உடையார் ”நாவல் குறித்தும்,

கவிஞர் மீனாட்சி அண்டனூர் சுராவின் ”மாண்புமிகு மதிப்பெண் “கதைக்குறித்தும்,
கவிஞர் ஈழபாரதி -தி இந்துவின் ”கடல்” நூல் குறித்தும்,

சகோதரர் கஸ்தூரிரெங்கன்” முஸ்லீம் தீவிரவாதிகளா?”என்ற நூல் பற்றியும்,

கவிஞர் சோலச்சி  -அன்வர் பாலசிங்கம் எழுதிய ”கறுப்பாயி என்கிற நூர்ஜஹான் ”உண்மைக்கதைக்குறித்தும்

கவிஞர் பொன்.க அய்யா மற்றும் கவிஞர் அப்துல் ஜலீல் இருவரும் கலாமின் ”எழுச்சிதீபங்கள் “குறித்தும்,
கவிஞர் நீலா “தேவதாசியரும் கட்டமைக்கப்பட்ட வரலாறும்”நூல் குறித்தும்,
கவிஞர் வைகறை “ஜப்பான்” என்ற சிறு நூல் குறித்தும் தங்களின் கருத்துகளைக்கூறினார்கள்.

2]கதைக்கூறல்
தங்கை மைதிலி “புத்தவிக்ரகம்’பற்றி வலைப்பூ நண்பர் திண்டுக்கல்தனபாலன் எழுதிய கதைக்குறித்து பகிர்ந்தார்.

திருச்சியிலிருந்து இருந்தபோதும் எப்படியாவது இந்நிகழ்விற்கு வந்துவிடவேண்டுமென்ற ஆவலில் சிரமப்பட்டு வந்து கலந்துகொண்ட தோழி ஜெயா எஸ்.ராவின்” வளையல்”பற்றியக்கதையைக்காட்சிப்படுத்தி அசத்தினார்.

3]பாடல்

முழுநிலாமுற்றத்தின் முக்கியத்துவம் பெற்றதாக கவிஞர் நீலாவின் ”பால் போல் நிலா”என்ற திருமணத்திற்குமுன் கனவு காணும் பாடல்கள் தொகுப்பைப்பாடி அனைவரின் சிறுவயது கனவுகளை மீட்டியது மிக அருமை .

கவிஞர் நாகநாதன் ”கவிதைபாடுகுயிலே” என்ற பாடலைப்பாடினார்.

முழுநிலாமுற்றத்தின் செல்லமகள் தமிழ் ஓவியா தனது தாத்தா எழுதிய “எல்லைத்தாண்டி வேதாரண்யம்”என்ற சமூகப்பாடலை இனிமையாகப்பாடினார்.

 கூட்டத்தின் புதிய அறிமுகம் கணேசன் [என் மாணவன்] நான் கொண்டகாதலடி என்ற கிராமியப்பாடலைப்பாடி அனைவர் மனதையும் கவர்ந்தார்.

4]கவிதை வாசித்தல்

நாகநாதன்---” யாரின் அனுமதி இன்றி”என்ற கவிதையும்

மீனாட்சி--”-உலகப்பார்வையை தன்மீது
                     திருப்பியத்தலைவர்”கலாம் குறித்த கவிதையும்
பொன்.க அவர்கள் ”மரணதண்டனைக்கூடாதென”- மது இன்னும் எத்தனை உயிர்களைக்குடிக்கும் எனக்கேட்டார்.

நீலா எழுதிய ”நான்கு ஜாமங்களின் கதை” மதுவால் கணவன் மனைவி இடையே தாம்பத்ய உறவில் ஏற்படும் சிரமங்களைக்காட்டிய விதம் அருமை.

கீதா.”தங்கத்தட்டென்றேன்”என்ற .நிலா பற்றியக்கவிதை வாசித்தார்.

அமிர்தாதமிழ் எழுதிய “எங்கள் தலைக்கொய்து”என்ற ரோஜாக்கவிதை அருமை.

கவிஞர் செல்வா தான்  கேட்டு அதிர்ந்த மாணவன் கூறிய ”அப்பாக்கு தெரியாம”என்ற கவிதையைப் பகிர்ந்தார்.

5]நிகழ்வின் புதுமையாக கவிஞர் வைகறை

ஹைக்கூ வாசித்தல் என்ற தலைப்பில் ஹைக்கூ கவிதை அடங்கிய தாள்களை அனைவருக்கும் தந்து படிக்கக்கூறி அவர்களுக்கே அக்கவிதை என்றார் .அனைவரும் மகிழ்வுடன் கலந்து கொண்டு வாசித்தனர்...

தக்கமுன் தாயாரிப்புடன் அனைவரும் வந்து நிகழ்வைச்சிறப்பித்தது முழுநிலா முற்றத்தின் வளர்ச்சி சரியான பாதையில் சென்று கொண்டுள்ளது என்பதை உணரமுடிந்தது....நடுவில் வந்து விண்மீனாய்  வெளிச்சம்தர முனைந்தது மின்மினிப்பூச்சி...மனநிறைவுடன் முழுநிலா எங்களை வழி அனுப்பி வைத்தது...

நிகழ்வை செவிக்குணவுடன் வயிற்றுக்கும் கோதுமைப்பாலும் ,பிஸ்கட்டும் தந்து சிறப்புடன் நடத்திய வைகறை மற்றும் ரோஸ்லின் ஆகியோருக்கு மனம் நிறைந்த நன்றி


12 comments :

  1. சகோதரி மைதிலி அவர்களுக்கும் நன்றி... அனைவருக்கும் வாழ்த்துகள்...

    விரைவில் புதுக்கோட்டையில் சந்திப்போம்...

    ReplyDelete
    Replies
    1. காத்திருக்கின்றோம் சார்

      Delete
  2. உங்களுடன் நிகழ்வில் கலந்துகொண்ட உணர்வு. அருமையான பகிர்வு. பணி தொடரட்டும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அருமையான நிகழ்வு. பகிர்வுக்கு நன்றி கீதா

    ReplyDelete
  4. தனபாலன் அண்ணாவின் கதையா? அவரின் வலைப்பூவில் பதிவதில்லையோ... அக்கா...
    நல்லதொரு நிகழ்வு... அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. இனிமையான நிகழ்வு சகோதரியாரே
    நன்றி
    தம +1

    ReplyDelete
  6. ஆஹா! ரொம்ப அழகா நிகழ்ச்சியை பதிவாக்கி விட்டீர்கள் அக்கா! வாழ்த்துக்கள்! அந்த மாலையை மறக்க முடியாதில்லையா:)

    ReplyDelete
    Replies
    1. உண்மைமா...நீங்களும் வந்தது மனதிற்கு நிறைவாக இருந்தது

      Delete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...