World Tamil Blog Aggregator Thendral: விருந்தாளி

Sunday 24 May 2015

விருந்தாளி

வீட்டுக்கு வந்த அழையா
விருந்தாளி...கேளாமல்
தனக்குரிய இடம் தேடி
தன்னிஷ்டமாய் அலைய
சரசரவென ஓடிவிளையாட
சட்டென்று கோவம் வந்தது.
சற்றும் கவலையின்றி
தன்னிச்சையாய் அலைவதை
தடுக்க முடியாத இயலாமையில்
தவித்தவளின் கவலை நீக்க
 படமெடுத்த தலையில்
படாரென்று அடித்து நசுங்கிய
முகத்துடன் அள்ளிச்சென்றார்
எதிர்வீட்டு சித்தாள்...
அச்சத்தால் அடித்து விட்ட
சோகம் மனதில்

11 comments :

  1. அய்யோ பாவம் என்று நாம் விட்டுவிடவா முடியும். போட்டுத் தள்ளத் தான் முடியும்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைமா.ஆனாலும் கஷ்டமாயிருந்துச்சுமா.

      Delete
  2. சகோதரி!
    படம் எடுக்க வந்த போட்டோகிராபரை
    இப்படியா பொடரென்று போட்டு தாக்குவது?
    சிவன் கழுத்தில் இருந்தால்
    சித்தாள் இதை செய்வாரா?
    யாரும் இருக்கும் இடம் இருந்தால் நலமே!
    நல்ல வள்ளலார் சிந்தனைக் கவிதை)
    த ம +1
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  3. விஷமுள்ள விருந்தாளியன்றோ

    ReplyDelete
  4. பயத்தையும் அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. இப்படியும் ஒரு விருந்தாளியா?

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அய்யா..ஆனாலும் அதன் வேகம் அச்சத்துடன் ஆச்சர்யத்தையும் தந்தது.

      Delete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...