World Tamil Blog Aggregator Thendral: பொன்னியின் செல்வன் -கல்கி

Friday 15 May 2015

பொன்னியின் செல்வன் -கல்கி

பொன்னியின் செல்வன் -கல்கி

நாடகம் மதுரை லெக்‌ஷ்மிசுந்தர ஹால் 15.5.15

எல்லோரும் பொன்னியின் செல்வன் நாவலைப்பற்றி பேசும் பொழுது சிறு வயதில் சாண்டில்யன் நாவல்களையே அதிகம் படித்த எனக்கு, என்ன அதில் பெரிதாக இருக்கப்போகின்றது என்ற நினைவு...

 2012 ஆம் ஆண்டில் என் வாழ்வின் மிகச்சோதனையான தருணத்தில் இந்நாவல் என் உயிரை எனக்கு மீட்டெடுத்து, தனக்குள் என்னை புதைய வைத்து நாவலின் கதை மாந்தர்களோடு என்னை கூட்டிச்சென்று ,இவ்வுலகை மறக்க வைத்து, என்னை வாழ வைத்தது என்றால் அது மிகையில்லை...

அதன் மீது ஏற்பட்ட காதலில் .....இருந்து மீளமுடியாமல் நந்தினியுடனும் ,வந்தியத்தேவனுடம் வாழ்ந்து கொண்டிருக்கையில்.....

மதுரையில் பொன்னியின் செல்வன் நாடகம் போடுகின்றார்களாம் என்று கூறி என்னிடம் ,உதவி தொடக்கக்கல்வி அலுவலராகப்பணி புரியும் தோழி ஜெயாவிற்கும் ,கல்கியின் மீது ஆழ்ந்த பற்றுள்ள ஆசிரியர் அனுசுயாவிற்கும் மற்றும் மருத்துவர் ஸ்ரீமதிக்கும் சேர்த்து 4 டிக்கெட்டுகள் தந்தார் கவிஞர் தங்கம் மூர்த்தி....ரூபாய் 2000 ஒரு டிக்கெட்டின் விலை என்றதும் கொஞ்சம் தயக்கத்துடனே வாங்கிக்கொண்டோம்...

நேற்று பார்த்து ஜெயாவிற்கு அலுவலக உயர் அதிகாரி வந்து விட்டதால் போக முடியாதோ என்ற கவலை வேறு இதில் சகோதரி அஞ்சலி மூர்த்தி மிகுந்த ஆவலுடன் எல்லோரும் போகலாம் என்று கூறியதும் ....நாடகத்தைக்காணும் கனவில்....

ஆனால் சோதனையாக சகோதரியால் வரமுடியாத சூழ்நிலையில் அவர்களின் டிக்கெட்டுகளைக்கொடுத்து[5000]ஆத்தாடி] நீங்களாவது பாருங்க என்றார்கள்...எட்டு டிக்கெட்டுகள் கைகளில் ஆனால் போக முடியாதபடி ஜெயாவின் நிலை...பணி அனைத்தையும் முடித்து கொடுத்து விட்டு தனது உயரதிகாரியிடம் சொல்லிவிட்டு அவர் ஓடி வருகையில் மணி 4.

புதுகையில் இருந்து மதுரைக்கு 2 மணி நேரப்பயணம் மதுரையில் சரியாக 5.55 க்குlலெக்‌ஷ்மிசுந்தர ஹால் நாடக அரங்கிற்குள் அமர்ந்த பின்னே தான், அப்பாடி வந்துட்டோம்னு என்று இருந்தது.

அதற்கு பின் 4 மணி நேர நாடகம் எங்களை சுருட்டி இழுத்துகொண்டது.வந்தியத்தேவன் அறிமுகக்காட்சியே அவனது வீரத்தை ,சுட்டித்தனத்தைக்காட்டிவிட்டது.......ஊர்மக்கள் கூடி நின்ற காட்சி,

நந்தினி வீரமாய், கர்வமாய்,பழி வாங்கத்துடிப்பவளாய்,இறுதியில் பாசத்திற்கு அடிமைப்பட்டவளாய்...அடடா அருமை அருமை....

பழு வேட்டரையரும்,பொன்னியின் செல்வனும்,பூங்குழலியும் ,நம்பியும்,ஆதித்த கரிகாலனும்,குந்தவையும்,சுந்தரச்சோழனும் ,கண்முன் வந்து நின்றதை இப்போதும் நம்ப முடியவில்லை..

.ஐந்து பாகங்களைச்சுருக்கி எப்படி முழு நாவலையும் தரமுடியும் என்ற எனது சந்தேகத்தை துடைத்தெரிந்து விட்டனர்...எல்லோரும் கதாபாத்திரமாகவே மாறியுள்ளதை உணர முடிந்தது .பின்னணிக்காட்சிகளும்,இசையும்,பாடலும் மனதைக்கொள்ளைக்கொண்டன.

நாடகம் முடிந்ததும் கிளம்ப மனமின்றி வந்தியத்தேவன் மற்றும் அனைவருக்கும் பாராட்டை மனதாரத்தெரிவித்து விட்டு கிளம்பினோம்..

வாழ்க்கையில் பார்த்த முதல் வரலாற்று நாடகம் என்பதால் அந்த அற்புதமான கணங்கள் ஒவ்வொன்றும் எங்களை  தனக்குள் புதையச்செய்து விட்டன.

மீளமுடியவில்லை எங்களால்...இன்னும் எத்தனை நாட்களுக்கு என்னை ஆளப்போகின்றதென தெரியவில்லை....

மனம் நிறைந்த நன்றியை கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களுக்கும் சகோதரி அஞ்சலி அவர்களுக்கும் மனம் நிறையக்கூறினோம்.






8 comments :

  1. நாடகம் கண்டு வந்தமைக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. வணக்கம்
    வரலாற்று நாடகத்தை பார்த்து இரசித்தமைக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மிக்கநன்றி சகோ

      Delete
  3. ஆகா... தங்கம் மூர்த்தி என்னிடமும் சொல்லியிருந்தார்.. நான்தான் மறந்துவிட்டேன்.. நீங்களாவது சொல்லியிருந்தால் வந்திருப்பேன்.. இப்படிப் பண்ணிட்டீங்களே டீச்சர்?
    பூங்குழலியும், ஆழ்வார்க்கடியானும்தான் என் ஃபேவரிட்! பெரிய பழுவேட்டரையர் நெஞ்சில் 96விழுப்புண் இருக்கானு எண்ணிப்பார்க்கணும்னும் ஆசை.. உங்களால போச்சு! இனி எப்போ எங்கே போடுவாங்களோ தெரியல.. ப்ச்சு..

    ReplyDelete
    Replies
    1. ஆஹா அண்ணா நாங்களே போவது சந்தேகமாவே இருந்ததால் யாரிடமும் கேட்கல மன்னிக்கவும்.ஜீலை மாதம் சென்னையில் 11 காட்சிகள் போடுவதாக வந்தியத்தேவன் கூறினார்..

      Delete
  4. ஆகா...! ரசித்து விட்டீர்கள்... வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார்

      Delete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...