World Tamil Blog Aggregator Thendral: சைவமா?அசைவமா?ஆரோக்கியமா?

Saturday, 6 December 2014

சைவமா?அசைவமா?ஆரோக்கியமா?

சைவமா?அசைவமா?ஆரோக்கியமா?
----------------------------------------------------------------------
நேற்று மாலை என் சகோதரியும் தோழியுமான புவனேஸ்வரியின் தம்பி மகள் சீர்த்தியின் பிறந்தநாள் விழாவிற்குச் சென்றிருந்தோம்..விழா சிறப்புடன் நிகழ்ந்தது.என்னிடம் வந்து நீ இன்று அரிசி இல்லாத இயற்கை உணவை உண்ணப்போகின்றாய் என மென்மையாக கூறிவிட்டு போய்விட்டார்கள்..அய்யோடா என்ன கொடுக்க போகின்றார்களோ என்ற அச்சத்தில் இலையின் முன் உட்கார்ந்தோம்...

முதலில் வாழைபழம் வைத்தார்கள் அடுத்து ஒரு குவளையில் பச்சையான திரவம் தந்தார்கள்...ஒரு தட்டில் இரண்டு பணியாரம் போல இருந்தது லேசான பச்சை நிறத்தில் ..திரவம் சூப்தான் குடி என்றார்கள் என்னருகிலிருந்த ஜெயாவோ நீ சாப்பிட்ட பின் தான் நான் சாப்பிடுவேன் என்பது போல என் முகத்தையே..பார்த்துக்கொண்டு மிளகுத்தூள் வாசத்துடன் உண்மையிலேயே அருமையாக இருந்தது மூலிகைக்கீரை சூப்பாம்...அடுத்து பணியாரம் பத்துவகை தானியங்களால் செய்யப்பட்டது அதுவும் நல்லசுவையுடன்...இப்படியாக

திணை பால்பணியாரம்,

சாமை வெண்பொங்கல் இது மிகவும் அருமையாக இருந்தது,

குதிரைவாலி இட்லி,

முடக்கற்றான் சோளதோசை,

வரகு பயறு அடை,

தானியங்கள் +காய்கறி சுண்டல் இது ஜெயாவிற்கு ரொம்ப பிடித்திருந்தது

ஆவாரம்பூ சாம்பார்

பூசனி தயிர்சாதம்

தக்காளிச்சட்னி

தேங்காய் சட்னி

என ஆரோக்கியமான அதிக எண்ணெயில்லாத சிறப்பான விருந்தை அளித்து வியப்பில் ஆழ்த்திவிட்டார்கள்..சைவமா அசைவமா ஆரோக்கியமா என்று கேள்விக்கு ஆரோக்கியமே என்று கூறும்படி செய்து விட்ட அக்காவிற்கு மனம் நிறைந்த நன்றி...

விருந்து முடிந்து வெளியே வந்தால் அனைவருக்கும் மரக்கன்று அளித்து மகிழ்ந்து மகிழ்வித்தார்கள்.

20 comments :

 1. உங்களின் தோழி ,உணவே மருந்து என்பதில் நம்பிக்கை உள்ளவர் போல் இருக்கிறதே ,நம்மைப் போன்றவர்கள் ஒரு நேரம் மட்டுமே இப்படிப்பட்ட இயற்கைஉணவை விரும்பிச் சாப்பிடுவோம் :)

  ReplyDelete
  Replies
  1. உண்மை சகோ...அருமையான விருந்து.

   Delete
 2. அடடா...! இதுவல்லவோ சாப்பாடு...!

  ReplyDelete
  Replies
  1. நிச்சயமாக எண்ணெயின்றி ..அருமையாக இருந்தது..சார்.

   Delete
 3. ஆகா உண்மையிலேயே அருமையான விருந்துதான்
  விருந்து கொடுத்தவர்க்ளைப் பாராட்டத்தான் வேண்டும்

  ReplyDelete
 4. அலோவ் இந்த மாதிரி விழாவுக்கெல்லாம் அழைக்காதீர்கள் பொய் நல்லா மொக்கிட்டு வந்து போஸ்ட் போடுங்க ...
  காதுல புகை வருது

  ReplyDelete
  Replies
  1. மாதம் ஒருமுறை அல்லது வாரம் ஒரு நாள் யார் வீட்டிலாவது இந்த மாதிரியான உணவிற்கு ஏற்பாடு செய்வோம் சகோ...அனைவரும் விரும்பினால்...

   Delete
  2. ஆகா!!
   எனக்கும் வேண்டுமே..கீதாவும் மது அண்ணாவும் பார்சல் ப்ளீஸ் :)

   Delete
 5. Replies
  1. நன்றி த.ம.விற்கு

   Delete
 6. நல்ல மெனு.வாழ்த்துக்கள்/

  ReplyDelete
 7. நல்ல விருந்து தான் - கல்யாண வீடுகளில் விதம் விதமாய் சாப்பிட்டு அவஸ்தைப் படுவதற்கு இது மாதிரி கொடுத்தால் பரவாயில்லை!

  ReplyDelete
 8. நல்ல விருந்துக்காக தமிழ் மணம் 6

  ReplyDelete
 9. ஐயோ, எனக்கு சம்மந்த்மான உணவாவுள்ள இருக்கு தெறியாமப்போச்சே.......... இனிமே இதுமாதிரி இடத்துக்கெல்லாம். கடிச்சி ஒடைக்கிறவுஙளை எல்லாம்
  கூட்டிட்டு போகாதீங்க...ஹி.....ஹி.....ஹி..என்ன கூட்டிட்டுப்போங்க ம்ம் சரியா?

  ReplyDelete
 10. இயற்கை உணவுச் சாப்பாடு..
  ஆஹா... அதில் கிடைக்கும் சுவையே தனிதான்...
  இங்கு பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள்தான் அதிகம்..
  அப்புறம் எங்கே ஆரோக்கியமான இரவு உணவை உண்பது,.,
  நல்ல ரசனையுடன் விருந்தும் பின்னர் மரக்கன்றும் கொடுத்து அசத்தியிருக்கிறார்கள்...
  அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 11. ஆஹா...சூப்பரான சப்பாடா இருக்கே...நன்மையான சாப்பாடு தந்த உங்கள் தோழிக்கு..நன்றிகள்.

  ReplyDelete
 12. ஆஹா! என்ன ஒரு அருமையான சாப்பாடு! சகோதரி அடுத்த முறை எங்கேயாவது இப்படி ஒரு சாப்பாடு போட்டா எங்களுக்கும் சொல்லுங்க....ஒரு ரெண்டு இடமும் பிடிச்சு வையுங்க....மரக்கன்றுமா....அருமை...அவங்களுக்கு எங்கள் சார்பில் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்...

  ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...