World Tamil Blog Aggregator Thendral: பத்தாம் வகுப்பு தமிழ்ச் செய்யுள் பகுதி--- படமாக.....

Friday, 5 December 2014

பத்தாம் வகுப்பு தமிழ்ச் செய்யுள் பகுதி--- படமாக.....

மறக்க முடியாத அனுபவமாக

பத்தாம் வகுப்பு செய்யுள் பாடம்--- படமாக.....

ஒருவாரமாக பத்தாம் வகுப்பு பாடத்தில் உள்ள கம்பராமாயணம்-குகப்படலம்,பெரியபுராணம்-அப்பூதியடிகளை திருநாவுக்கரசர் சந்திக்கும் காட்சி,சிலப்பதிகாரத்தின் வழக்குரை காதை ஆகியவற்றை மாணவர்கள் நடிக்க படமாக்கும் பணி நேற்றுடன் சிறப்புடன் முடிந்தது...சிறு புள்ளியாக துவங்கி விரிந்து விரிந்து மிக அருமையாக வந்துள்ளது.

சென்ற28.11.14 வெள்ளிக்கிழமையன்று தமிழாசிரியர் மகா.சுந்தர் அவர்கள் எனை அலைபேசியில் அழைத்து கல்வித்துறைச் சார்ந்த இப்பணியைச்செய்யலாமா எனக்கேட்ட போது...சாதாரணமாக நாம் செய்வது தானே என செய்யலாமே எனக்கூறி..ஆசிரியர்கள் ரேவதி மற்றும் துரைக்குமரன்..மற்றும் கிருஷ்ணவேணி,சுமதி ஆகியோர் இணைந்த குழு அதற்கான பணியில் ஈடுபடத்துவங்கியது.கம்ப ராமாயணக்காட்சிகளை புதுக்கோட்டையின் மன்னருக்குச்சொந்தமான பண்ணை இடத்தில் நடத்த அனுமதி கேட்ட போது மகிழ்வுடன் கொடுத்ததுடன் படப்பிடிப்பிற்குத்தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து சிற்றுண்டி கொடுத்து உபசரித்த பாங்கு அனைவரையும் மனம் நெகிழ வைத்தது. மதிப்பிற்குரிய.மன்னருடன் சேர்ந்து புகைப்படமெடுக்க குழந்தைகள் விரும்ப மகிழ்வுடன் ஒத்துழைத்தார்கள்...


மாலை கிளம்பும் போது எதிர்பாராத விதமாய் நாங்கள் நேசிக்கும் மதிப்பிற்குரிய இராணியம்மா மாணவர்களை சந்தித்து பாராட்டி அவர்கள் நடித்த காட்சியைப் பார்த்து வியந்து வாழ்த்தியது அனைவராலும் மறக்க முடியாத ஒன்று...ஒரு குட்டி சுற்றுலா போல எங்கள் பள்ளி ஆசிரியர் சுதாவசந்தி வழக்கம் போல் தனது வேனைக்கொடுத்து சென்று வர உதவினார்கள்.
 வேன் கொடுத்து உதவிய ஆசிரியர் சுதா வசந்தி

மாலை 6 மணி அளவில் தனது மஹாராஜா திருமண மஹாலில் சிலப்பதிகாரம் செய்யுளை படமெடுக்க அனுமதி தந்து உதவினார்கள் எங்கள் புதுக்கோட்டையின் கொடை வள்ளலாக விளங்கும் திரு சீனு .சின்னப்பா அவர்கள்.இரவு 9 மணியளவில் சிலப்பதிகாரம் இனிதே படமாக்கப்பட்டது.


மறுநாள் அப்பூதியடிகள் வீட்டிற்கு திருநாவுக்கரசர் வரும் காட்சி .முற்றம் வைத்த வீடு தான் வேணுமென்று படமெடுக்கும் சகோதரர் செல்வா கூறியதால் வீடு தேடி துவங்கியப்பயணம் மதியம் ஒரு வீட்டைக்கண்டு பிடித்து அதில் ...நடந்தது.பசிகளைப்பிலும் குழந்தைகள் எங்களுடன் ஒத்துழைத்தனர்...

மாலை எங்கள் பள்ளிக்கு அருகில் உள்ள உலகநாத சுவாமி கோவிலில் நாவுக்கரசர் அப்பூதியடிகளைச் சந்திக்கும் காட்சி படமாக்கப்பட்டதுடன் முடிந்தது..எங்கள் பணி....

நேற்று பத்தாம் வகுப்பு வாழ்வியல் திறன்களை கலந்துரையாடல்களாக படமெடுக்கப்பட்டது.

ஒளிப்பதிவாளர்களின் சிரமங்களை,நடிகர்களின் சிரமங்களை மாணவர்கள் நேரில் கண்டு உணர்ந்தனர்.

மிக அருமையாக செல்வா படமெடுத்துள்ளதை பார்த்த போது அவர் எந்த அளவு இதையே சிந்தித்து எடுத்துள்ளார் என்பதை உணர முடிந்தது.

எங்கள் பள்ளித்தலைமை ஆசிரியர் மிகவும் மகிழ்ந்து குழந்தைகளைப்பாராட்டினார்கள்.

இவற்றிற்கெல்லாம் காரணமாய் எங்களின் முதன்மைக்கல்வி அலுவலர்...மதிப்பிற்குரிய நா.அருள்முருகன் அய்யா அவர்களே...
எங்களின் திறன்களை வெளிக்கொணர இவர்கள் போன்ற அதிகாரிகளே முழுமுதற்காரணமாய் உள்ளனர் என்பதை இத்தருணத்தில் மனம் நெகிழக்கூறிக்கொள்கின்றேன்...

வகுப்பறை விட்டு குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்லும் போது தான் அவர்களின் குழந்தமையை  முழுமையாக உணரமுடிகின்றது..வண்ணத்துப்பூச்சிகளை கூண்டில் அடைத்து தேனெடுக்க சொல்லித்தருவதைப்போல...

11 comments :

 1. தங்கள் குழுவின் செயல்பாட்டிற்க்கும், குழந்தைகள் அனைவருக்கும் எமது வாழ்த்துகளும்...

  ReplyDelete
 2. செம கலக்கலா இருக்கே!! நல்ல அனுபவம் இல்லையா அக்கா!! முதன்மைகல்வி அலுவலர் மட்டுமல்லாது உங்கள் எல்லோர் பணியும் வாழ்படவேண்டிய ஒன்று!!

  ReplyDelete
 3. குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் சகோதரியாரே
  படம் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்

  ReplyDelete
 4. நல்ல முயற்சி.....சகோதரர் மகாசுந்தரா ,மகா நடிகரா :)
  த ம 2

  ReplyDelete
 5. அருமையான முயற்சி ! சிலப்பதிகாரத்தின் வழக்குரை காதை , கம்பராமாயணத்தின் குகப்படலம் இரண்டுமே அருமையான தேர்வு ! வீடியோ இணைப்பும் இணைத்திருந்தால் இன்னும் இன்பமாக இருந்திருக்கும்

  ReplyDelete
 6. வாவ்! அருமையான புதிய முயற்சி! வாழ்த்துகள்! படம் காணக் கிடைக்குமா கீதா?

  ReplyDelete
 7. ஹை மிகவும் அருமையான முயற்சி! படம் காணக் கிடைக்குமா சகோதரி! ஏனென்றால் நாங்கள் எங்கள் சொந்த முயற்சியில் தான் எடுக்கின்றோம். கல்வித் துறையின் பங்கு இல்லை எங்கள் ஊரில்.

  ReplyDelete
 8. படவேளைகள் முடிந்தவுடன் எங்களுக்கும் அனுப்புங்க. எங்கள் பள்ளிக்கும் பயன்படுத்திக்கொள்வோம். நன்றி..

  ReplyDelete
 9. மிக்க மகிழ்ச்சி. அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...