World Tamil Blog Aggregator Thendral: தமிழ் இலக்கியங்கள்-ஆசாரக்கோவை-பெருவாயின் முள்ளியார்

Thursday 17 July 2014

தமிழ் இலக்கியங்கள்-ஆசாரக்கோவை-பெருவாயின் முள்ளியார்

                                             
         
                          

                                       தமிழ் இலக்கியங்களின் சிறப்பை தமிழர்களை விட வெளிநாட்டினரே அதிகம் உணர்ந்து தமிழ் மேல் காதல் கொண்டனர்....ஜி.யு.போப்,கால்டுவெல் போல....

திருக்குறளை தினமும் இரவில் படுக்கும் முன் படித்து விட்டே தூங்கும் வழக்கத்தைப் பின்பற்றிய விக்டோரியா மகாராணி போல தமிழை நேசித்தவர்கள் எண்ணிக்கையிலடங்கா....

திருவாசகத்தை ஆங்கிலத்தில்  மொழிபெயர்க்கக் காரணமாய் ஜி.யு.போப் அவர்கள் தனது  முன்னுரையில் இரு காரணங்களைக்  கூறுகின்றார்...

1]இந்தியாவிற்கு வரும் ஆங்கியேர்கள் தமிழ்நாட்டிற்குள் நுழையும் போது தமிழையும் ,தமிழ்நாட்டையும் கேவலமாக எண்ணக்கூடாது...தமிழ் மொழி அளவற்ற சிறப்பை உடையது...ஞானப்புதையல்களைத் தன்னுள்  உள்ளடக்கியது என்பதை படித்து உணரவேண்டும் என்பதற்காகவும்.. !

2]தமிழ் மொழியின் சிறப்பை உணராமல் ,தமிழில் பேசுவதைக் கேவலமாக எண்ணும் இக்காலத் தமிழ் இளைஞர்கள் தனது தாய்மொழியின் பெருமையை ஆங்கிலத்திலாவது படித்து உணரட்டும் என்பதற்காகவே எழுதுகிறேன் என்றாராம்...!

தமிழ் மொழியின் சிறப்பை உணர ஒரு பாடல்

நீதி இலக்கியங்களில் ஒன்றான ஆசாரக்கோவை நாம் எப்படி நடக்க வேண்டும் உணர்த்தும் அருமையான நூலாகும்...அதில் வைகறையில் செய்ய வேண்டியவை,நீராடும் முறை,ஆடை உடுத்தும் முறை,தன் உடல் போற்றும் முறை,உண்ணும் முறை என வாழ்வியல் செயல்கள் ஒவ்வொன்றையும் எடுத்தியம்பும் நூலாக உள்ளது....
சான்றாக
உண்ண வேண்டிய முறையாக

”உண்ணுங்கால் நோக்கும் திசைக்கிழக்குக் கண்ணமர்ந்து
தூங்கான் துளங்காமை நன்கிரீஇ-யாண்டும்
பிறிதியாது நோக்கான் உரையான் தொழுதுகொண்டு
உண்க உகாஅமை நன்கு”-            
                                                  ஆசாரக்கோவை-20

பொருள்

உணவை உண்கின்ற போது கிழக்குத் திசையை நோக்குமாறு அமர்ந்து,தூங்காமலும்,அசையாமலும்,நன்கு அமர்ந்து.எங்கும் வேறு ஒன்றாஇயும் பார்க்காமலும் சொல்லாமலும்,உண்ணும் உண்வைத் தொழுது,சிந்தாமல் உண்வைக் கையால் எடுத்து நன்கு உண்க .

உண்ணக்கூடாத முறையாக...

”கிடந்துண்ணார் நின்றுண்ணார் வெள்ளிடையும் உண்ணார்
சிறந்து மிகஉண்ணார் கட்டின்மேல் உண்ணார்
இறந்தொன்றுந் தின்னற்க நின்று.”

பொருள்

       படுத்தபடி உணவை உண்ண மாட்டார்,நின்ற வண்ணம் உண்ண மாட்டார்,வெட்ட வெளியில் இருந்து உண்ண மாட்டார்.விருப்பத்துடன் மிகுதியாக உண்ண மாட்டார்.கட்டிலின் மேல் அமர்ந்து உண்ண மாட்டார்.எதையும் நின்ற வண்ணம் உண்ணுதலும் கூடாது.

அவசர உலகில் உண்ணக்கூட நேரமின்றி ஓடிக்கொண்டே உண்ணுவோம் என்பதை முன் கூட்டியே உணர்ந்து ஆசாரக்கோவையை பெருவாயின் முள்ளியார் படைத்துள்ளாரோ என எண்ணும்படி  உள்ளது இச்செய்யுள்....

4 comments :

  1. வணக்கம்
    சகோதரி

    உண்மைதான் சிறப்பான விளக்கம் கண்டு மகிழ்ந்தேன்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. மிகச் சிறப்பான விளக்கம்!
    உங்கள் தயவால் அறிந்துகொள்கிறேன்.

    நன்றியோடு வாழ்த்துக்களும் தோழி!

    ReplyDelete
  3. ///தமிழில் பேசுவதைக் கேவலமாக எண்ணும் இக்காலத் தமிழ் இளைஞர்கள் தனது தாய்மொழியின் பெருமையை ஆங்கிலத்திலாவது படித்து உணரட்டும் என்பதற்காகவே எழுதுகிறேன்///
    ஆகா
    தமிழனின் நாடித்துடிப்பை அன்றே கனித்திருக்கிறார்

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...