World Tamil Blog Aggregator Thendral: வீரமங்கை வேலுநாச்சியார்

Tuesday 1 July 2014

வீரமங்கை வேலுநாச்சியார்

வீரமங்கை வேலுநாச்சியார்
தமிழகம் மறந்த வீரப்பெண்மணி.நினைத்து போற்ற வேண்டிய பெண்மணி.

தற்செயலாக என் சகோதரி புவனாவேலு நாச்சியார்நாவலைத் தந்து இந்நாவலைப்படித்து பார் என்றார்கள்.படித்து கொண்டிருக்கும் போதே என்னுள் உறைந்து என்னை சீர்படுத்திய தாயவள்.

கி.பி 1730ல் பிறந்து ,கி.பி1796வரை வாழ்ந்து மறைந்த மாணிக்கம்.

எனது இளமுனைவர் ஆய்விற்காக ஜீவபாரதி எழுதிய வேலுநாச்சியார் நாவலையே ஆய்வு செய்தேன்.அவள் கால் பட்ட இடங்களில் ,வாழ்ந்த இடங்களில் நான் நின்றபொழுது காற்றாய் அவள் நிறைந்திருப்பதை உணர முடிந்தது.அவளை உங்களுக்கு அறிமுகம் செய்வதை எண்ணி பெருமைப்படுகின்றேன்.




வீரமங்கை வேலுநாச்சியார்

சுதந்திரப் போராட்ட வரலாறு என்பது 1857ல் சிப்பாய் கலகத்தில் இருந்து துவங்குவதாகவே கருதப்படுகின்ற நிலையில், இரு நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே தென் தமிழகத்தில் வெள்ளையர்களிடம் தன் கணவரான சிவகங்கைச் சீமையின் மன்னர் முத்துவடுகநாதரைப்  பலிகொடுத்து,எட்டாண்டுகள் தவ வாழ்க்கையாக மறைந்திருந்து வாழ்ந்து,ஹைதர் அலியின் உதவியுடன் போர்க்களத்தில் வெறியாட்டம் ஆடி வெள்ளையரை தோற்கடித்து இழந்த நாட்டை மீட்ட வீரத்தாயவள்.இவள் படையில் பெண்களுக்கென தனிப்படையும் அதை தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண்ணாகிய குயிலி தலைமை ஏற்க வைத்ததும் வேலுநாச்சியாரின் சாதிமத பேதமற்ற பண்பை கூறும் செயல்களாகும்.

இராமநாதபுர மன்னர்செல்லமுத்து விஜயரகுநாதசேதுபதி தன் மனைவி இறந்தபின் மறுமணம் புரியாமல் தன் ஒரே மகள் வேலுநாச்சியாரின் நல்வாழ்வையே உயிர்மூச்சாக எண்ணிவாழ்கின்றார்.
சிலம்புக்கலையில் வல்லவரான வேலு நாச்சியார் தன் திருமணப்பரிசாக தந்தையிடம் குதிரையொன்றை கேட்கிறாள் .தந்தையும் மகிழ்ந்து வாங்கித்தருகின்றார்.நம்பமுடியாத உண்மை.
சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை மணந்தபின் அவரின் அரசியல் செயல்பாடுகளில் இவரது பங்கு போற்றுதற்குரிய ஒன்று.

1762ஆம் ஆண்டில்கவர்னர் லாட்டீகாட் என்பவன் சிவகங்கை அரண்மனையில்
முத்துவடுகநாதரிடம் வரிகேட்டு ஆங்கிலம் தெரியாமல் தடுமாறும் முத்துவடுகநாதரை எள்ளி நகைக்கின்றான் பொறுத்துக்கொள்ள முடியாத வேலுநாச்சியார் எங்களை நத்திப்பிழைக்க வந்திருக்கும் நீதான் எங்கள் மொழியை அறிந்திருக்க வேண்டுமென்று தமிழ்,தெலுங்கு,மலையாளம் ,கன்னடம் ,உருது,என பன்மொழிகளில் அவனிடம் பேசி எச்சரித்து அனுப்புகின்றார்.
மருதுசகோதரர்கள்முத்துவடுகநாதருக்குதோள்கொடுக்கின்றனர்.

காளையார்க்கோவிலில்

முத்துவடுகநாதரையும் அவரது இளையமனைவி கௌரி நாச்சியாரையும் ஆங்கிலத்தளபதி பான்ஜோர் சுட்டுவீழ்த்த தலைமறைவு வாழ்க்கையில் வேலுநாச்சியாரும் அவரது செல்ல மகள் வெள்ளையம்மாளும்.இவரை காட்டிக் கொடுக்க மறுக்கிறாள் உடையாள் என்னும் சிறுமி.அவளின் தலையை வெட்டி வீழ்த்திச் செல்கிறது ஆங்கிலப்படை.

கணவன் இறந்த போதும் கழட்டாத தனது திருமாங்கல்யத்தை ஆங்கிலப்படையை எதிர்த்து மானாமதுரையில் வெற்றிபெற்ற பிறகு இழந்த நாட்டை மீட்டு அரியாக்குறிச்சியில் கால் வைக்கும் போதுதான் கழற்றுவேன் என்ற தனது உறுதியைக்கூறி உடையாளுக்கு தனது தாலியைக் காணிக்கையாக்குகின்றார் வேலுநாச்சியார்.இன்றூம் அங்குதான்உள்ளது வேட்டுடையாள் காளிக்கோவில் என அழைக்கப்படுகின்றது அவ்விடம்.

விருப்பாச்சிக்கோட்டையில் மறைந்திருக்கும் எட்டு ஆண்டுகளில் தன் குடிமக்களுக்கு போர்ப்பயிற்சி அளித்து உடையாள் படை எனும் பெண்கள் படை ஒன்றை அமைத்து அதற்கு குயிலி என்னும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண்ணைத் தலைமையேற்க செய்கிறார்.
போரில் தனக்குப் படை உதவி செய்யும் படி ஹைதர் அலியிடம் ஆண்போல் வேடமணிந்து சென்று அவர் மொழியிலேயே பேசி உதவிபெறுகின்றார்.

சிவகங்கை அரண்மனையை மீட்க படை முகாமிட்டு கண்காணித்து விழா நாளில் மாறுவேடத்தில் உள் நுழைந்து போரிடுகையில் ஆயுதகிடங்கில் தன் உடலில் நெய் ஊற்றி எரிந்து கொண்டு முதல் தற்கொடைப் பெண்ணாக குயிலை ஆயுதக்கிடங்கை அழித்து வேலுநாச்சியாரின் வெற்றிக்கு வழிகோள்கிறாள்.
இழந்த நாட்டை மீட்ட மாவீரப் பெண்மணி வேலுநாச்சியார்.ஆண்களுக்கு இணையாக போரிட்டவள்.தனது ஐம்பதாவது வயதில் கூட புதிய மொழியொன்றை கற்றவள்.

தமிழகம் மறந்த வீரப்பெண்.

அவள் வாழ்ந்த மண்ணில் வாழும் அனைவருக்கும் வீரம் வரும் .காற்றும் அவளின் புகழ் பாடும்....தீயாய்,புயலாய்,சீறிஎழும் புனலாய் வெள்ளையர்களை விரட்டியடித்தவள்.வரலாற்றில் மறைக்கப்பட்டவள்.ஆங்கில ஆவணங்களில் இன்றும் வாழ்பவள்....வீரமங்கை வேலுநாச்சியார்.

6 comments :

  1. பகிர்விற்கு நன்றிங்க கீதா..

    ReplyDelete
  2. காற்றும் அவளின் புகழ் பாடும்....தீயாய்,புயலாய்,சீறிஎழும் -
    அடடா..வீரமங்கையைப் பற்றி எழுதும் உங்கள் எழுத்தும் அவ்வாறே சீறி எழுகிறதே! அற்புதம் அற்புதம்..
    நீண்ட வரலாற்றைச் சுருக்கி நினைவுப்பெட்டகமாகத் தந்த உங்கள் தமிழுக்கு என் தலைதாழ்ந்த வணக்கம்.
    அந்தக் காளியர் கோவில்தான் இப்போதைய -
    “காளையார் கோவில்“ என்பதையும் சேர்த்துச் சொல்லியிருக்கலாம் ல?
    இதுவரை நான் அறியாத செய்தியாக -
    “1762ஆம் ஆண்டில்கவர்னர் லாட்டீகாட் என்பவன் சிவகங்கை அரண்மனையில் முத்துவடுகநாதரிடம் வரிகேட்டு ஆங்கிலம் தெரியாமல் தடுமாறும் முத்துவடுகநாதரை எள்ளி நகைக்கின்றான் பொறுத்துக்கொள்ள முடியாத வேலுநாச்சியார் எங்களை நத்திப்பிழைக்க வந்திருக்கும் நீதான் எங்கள் மொழியை அறிந்திருக்க வேண்டுமென்று தமிழ்,தெலுங்கு,மலையாளம் ,கன்னடம் ,உருது,என பன்மொழிகளில் அவனிடம் பேசி எச்சரித்து அனுப்புகின்றார்“ என்பதை அறிய வைத்த உங்கள் ஆர்வத்தமிழுக்கு என் அன்பான வணக்கம். நன்றி. தொடர்க.

    ReplyDelete
  3. வேலு நாச்சியார் போற்றப்பட வேண்டியவர்
    மறவாமல் நினைக்கப்பட வேண்டியவர்

    ReplyDelete
  4. வீர நாச்சியாரைப் பற்றிய இப்பதிவு மூலமாக பல வரலாற்றுச் செய்திகளை அறிந்தேன்.நன்றி.

    ReplyDelete

  5. வணக்கம்!

    வீரவேல் நாச்சியார் வெற்றி வரலாற்றை
    ஆரமாய்க் கொள்வோம் அகத்து

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  6. arumaiyaana pakirvu thozhi..nandri...

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...