World Tamil Blog Aggregator Thendral: கடவுளுக்கு வேண்டுகோள்.....!

Friday 27 December 2013

கடவுளுக்கு வேண்டுகோள்.....!



பள்ளி மானவிகளுக்கு ஊட்டச்சத்தாய் அரசு முட்டை வழங்க வருடத்தின் பாதி நாட்கள் ஏதேனும் ஒரு சாமிக்கு விரதமென்று சாப்பிட மறுக்கின்றனர்.
5 அல்லது 10 நாட்கள் நடைப்பயணம் நடந்து காலில் புண்வர தவிக்கின்றனர்.விரதமிருக்கும் குழந்தைகள் படிக்க முடியாமல் மயங்கிச் சாய்கின்றனர்.
பெற்றோர்களுக்கு எப்படி சொல்லி புரிய வைக்க கடவுளே.கல்வியே கடவுள் என நீயாவது கூறேன் ....!

10 comments :

  1. பெற்றோர்கள் உணர வேண்டும்..

    ReplyDelete
    Replies
    1. உண்மை சார்.வருகைக்கு நன்றி.

      Delete
  2. ஐயோ.. இப்படியுமா.. நடக்குது...
    ஏன்தான் இவங்கெல்லாம் விளங்காத சென்மமாவே இருக்குறாங்க...:(

    ReplyDelete
  3. உண்மைதான் தோழி.சில குழந்தைகள் ஒரு மாதம் விரதமிருக்கும் பாருங்க ..அதெல்லாம் சொல்ல முடியா வலி. வருகைக்கு நன்றிம்மா.

    ReplyDelete
  4. இப்போதெல்லாம் சாப்பிடுவும் கற்றுத்தர வேண்டி இருக்குமோ?பயனுள்ள பதிவு.வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  5. உண்மை ஏன்மா முட்டை வாங்கிக்கலன்னு கேட்டா அப்பா மலைக்கு போறாங்க டீச்சர் விரதமென்கிறாள்.நன்றி

    ReplyDelete
  6. பெற்றோர்களே!
    சாமிக்கு நல்ல புத்தி
    கொடுக்கச் சொல்லி
    வேண்டிக்கொள்ளுங்கள் ப்ளீஸ்!

    ReplyDelete
  7. பெற்றோர்கள் பலநேரங்களில் இப்படித்தான் இருக்கின்றார்கள்.
    விரதம் என்றால் என்னவென்றே தெரியாமல் இருக்கிறார்கள்.
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  8. உண்மையை உர (ரை)க்கச் சொன்னமைக்கு நன்றி சகோதரி. எந்த சாமி பட்டினி கிடக்க சொன்னதென்று தெரியவில்லை. நடந்து செல்வது இன்னும் வேதனை. அதிலும் பெண்கள் அவர்களின் இயற்கையான உடற்கூறு மற்றும் உடல்நிலையைப் பாதிக்கும் என்பதை உணர மறுக்கின்றனர்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...