World Tamil Blog Aggregator Thendral: கல்வி

Thursday 12 December 2013

கல்வி

சுட்டிப் பையனை
பள்ளிக்குள் தள்ளினர்
படி..படி..படி...காலை மாலை
 கடும்பகல் படி

மூன்று வயதில் துவங்கி
மூவாறு வயதில் முடிய ...

பள்ளி இனி இல்லையென
பறந்தனர் மழலைகள்...

சுறாமீன் வாயென
சமூகம் வரவேற்றது..

திரைப்படம் நோக்கு
திறமைகள் தொலைய..

தொலைக்காட்சியில்
குடும்பத்தோடு குலைய..

காட்டினில் மாநாடு
கவலையில் மாக்கள்..!

மனித நேயம் மறந்து
ஒழுக்கம் குலைந்து
சடசடவென
சாதியினால் பிளவு பட்ட
மனித குலத்தை
எப்படி மீட்பது..?

காக்கை கட்டளையிட்டது
கல்விச்சாலைதனை
சடுதியில் கட்டுங்கள்...

ஒற்றுமையை காகமும்,
துப்புரவை வராகமும்,
நன்றியை நாயும்,
சுறுசுறுப்பை எறும்பும்,
சுதந்திரத்தை புறாவும்,
வீரத்தை சிங்கமும்,
கற்றுத்தர ஆசைப்பட்டன...

உயிர்கள் அனைத்தும்
பிரிவினையின்றி
அன்புடனே
பண்புடனே வாழ,
பக்குவமாய் கற்க,
காட்டிற்கு வாருங்கள்
அழைத்தன மாக்கள்..

மனிதன் வந்ததும்
மறைந்தது வனம்...!
மடிந்தன மாக்கள்..!
மரங்கள் எரிந்தன...!

ஆர்ப்பரித்தது மனிதக்கூட்டம்
அத்தனையும் விலை போயிற்று
அனைத்தும் பணமாயிற்று..

பணம் பணம் -என
பறந்தான் பறக்கின்றான்..
மறந்தான் மனித நேயம்...

மறைந்தான்
அவனும் ஓர்நாள்
புட்கள் தின்றன
கூடழிந்த கோபத்தோடு
பூச்சிகள் அரித்தன
காடழிந்த வேதனையோடு
மண்ணும் தின்றது-உனை
திருத்த முடியாதென..!

உணர்ந்தாலும் மறுக்கின்றான்
மனித நேயத்தை...!
17 comments :

 1. உங்கள் கவிதையில்
  எனது பட்டியலில் டாப்
  இதுதான்...
  உங்கள் சாதனையை
  நீங்களே முறியடிக்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. சகோதரிக்கு வணக்கம்
  மனிதநேயம் மறந்த மனிதனுக்கு சாட்டையடி தந்துள்ளீர்கள். புற்களும் பூச்சிகளும் மண்ணும் மனித உடலில் செய்யும் வேலை மனிதம் மறந்ததால் தான் என்று சுட்டிக்காட்டிய விதம் அருமை சகோதரி. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 3. வனத்தில் வாழ்வது வரமாகும் - அதை
  வணங்கி வளர்த்திட உரமாகும்
  சினத்தில் மனிதன் அளித்தாலும் - அவை
  சிரித்தே மீளெழும் திறனாகும்

  மனிதன் சேரும் இடமெல்லாம் - உயர்
  மக்கள் கூட்டம் என்கின்றோம்
  மண்ணில் அவர்கள் செயல்களெல்லாம் - துயர்
  மாக்கள் போலே இருக்கிறதே...!

  அருமை அருமை வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. உண்மை மாக்களிடம் கற்க வேண்டியது அதிகம்

   Delete
 4. மறைந்தான்
  அவனும் ஓர்நாள்
  புட்கள் தின்றன
  கூடழிந்த கோபத்தோடு
  பூச்சிகள் அரித்தன
  காடழிந்த வேதனையோடு
  மண்ணும் தின்றது-உனை
  திருத்த முடியாதென..!

  மண்ணாய்ப் போன படிப்பு மனிதனை மண்ணாக்குவது குறித்த கவிதை! விததியாசமான சிந்தனை! அருமை தொடர்க தோழி!

  ReplyDelete
 5. அழகான கருத்தாழம் மிக்க கவிதை தோழி. வாழ்த்துகள்.

  ReplyDelete
 6. சரியாகச் சொன்னீர்கள் இன்றைய நிலையை...!

  ReplyDelete
 7. வளம் பெற வனம் வேண்டும்
  உழுத நல் உளம் பெற
  மனித நேயம் வேண்டும் அது
  மன்றாடி கிட்டாத மகத்தான ஒன்று
  இருந்தாலும் இல்லாமல் இருகின்ற ஒன்று
  புழு பூச்சி தின்றாலும் பிறக்காத ஒன்று

  நல்ல பகிர்வு வாழ்த்துக்கள்....!

  ReplyDelete
 8. மனிதரால் மறக்கப்பட்ட நேயம் மாக்களால்
  புனிதமாய்க் காக்கப்பட்ட சிந்தனை மிக அருமை!

  மனந்தொட்ட கவிவரிகள்! மிகச் சிறப்பு!
  வாழ்த்துக்கள் தோழி!

  ReplyDelete
  Replies
  1. நலமா? நான் 3நாட்களாக பாண்டிச்சேரியில் இருந்தேன் .அங்கு ஒரு கைவினைப் பொருள் கண்காட்சியில் க்வில்லிங் வேலையில் தயாரிக்கப்பட்ட அணிகலன்களை பார்த்த போது ,பெருமையாக உங்களின் ஓவியங்களைப் பற்றி கூறினேன் .உங்களை பாராட்டினார்கள்.என்னையே பாராட்டியது போல் உணர்ந்தேன்.நன்றியும் பாராட்டுக்களும் உங்களுக்கு.

   Delete
  2. வணக்கம் தோழி!... மிக்க மகிழ்ச்சி! கண்காட்சிக்குச் சென்று பார்த்தீர்களா.. அங்கும் எனது கைவேலை பற்றிச் சிலாகித்தது கண்டு உள்ளம் பூரிக்கிறது..:)

   நான் செய்து பதிவிடுவது ஓவியம் போல போட்டோவில் தெரிகிறதோ?... ஓவியம் எனக்கு எட்டாத கலை..
   இந்த க்விலிங் - quilling - வர்ணத்தாள் நாடாக்களில் உருவாக்குவது. இதற்கு ஏற்கனவே இருக்கும் ஓவியமோ அல்லது எமது கற்பனை வரைபடமோ போதும்.

   உங்கள் ரசனைக்கு உளமார்ந்த நன்றி தோழி!

   Delete
 9. மனிதர்கள் எல்லோரும் தன்னை
  மகாத்மாவாக தான் நினைத்துகொள்கிறோம்
  மனிதர்கள் மாக்களிடம் கற்க வேண்டியது ஏராளம்
  மனசாட்சி உள்ளோர் திருந்துவோம் ,வருந்துவோம்
  மாற்று குறையாத பொன் உங்கள் கவிதை
  வாழ்த்துக்கள் சகோதரி !

  ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...