World Tamil Blog Aggregator Thendral

Saturday, 14 November 2015

நந்தலாலா இணைய இதழ்-வலையெழுத்து

நந்தலாலா இணைய இதழ்-வலையெழுத்து

வலையில் வீழ்வோமா?
                    எனது வலையில் வீழும் அன்பு இதயங்களுக்கு மனம் நிறைந்த வணக்கம்….
             உங்களுடன் சிலநாள் அகமும் புறமும் மகிழ …மண்ணில்  கலந்த மழையாய்….வசப்படும் வார்த்தைகளால்…வலைப்பூக்களின் வாசத்தில் மகிழப்போகின்றேன்…இவ்வரிய வாய்ப்பைத் தந்த நந்தலாலா இணைய இதழாசிரியருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்….

             வலைப்பூக்களை அறிமுகம் செய்யும் இவ்வரிசையில் யாரை அறிமுகம் செய்யப்போகின்றீர்கள் எனக்கேட்டதும்…வலைப்பதிவர் விழா 2015 இல் நடந்த போட்டிகளில் கலந்து கொண்டு கட்டுரைப்போட்டியில் சுற்றுச்சூழல் குறித்த
 ”கான் ஊடுருவும் கயமை”
என்ற தலைப்பில் எழுதி பரிசை வென்ற அன்புக்குரிய சகோதரி கீதமஞ்சரிவலைத்தள ஆசிரியர் ,

கீதாமதிவாணன் சட்டென்று நினைவிற்கு வந்தார்.ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து கொண்டு நமது இதயங்களை எல்லாம் வார்த்தை வலையில் வீழ்த்தி அங்குள்ள பறவைகளை, விலங்குகளை,பூக்களை நமக்கு அறிமுகம் செய்யும் ,இயற்கையை நேசிக்கின்ற இவரின் பதிவுகள் ஒவ்வொன்றும் நம்மை வியப்பின் எல்லையைத்தொடவைக்கும்…ஆழ்ந்த, விரிவான,அறிவுப்புதையல்களை தன்னுள் கொண்டிருப்பவை… இவரை இன்று அனைவருக்கும் அறிமுகம் செய்வதில் மட்டில்லா மகிழ்வடைகின்றேன்…
மேலும் தொடர....
http://www.nanthalaalaa.com/search/label/வலையெழுத்து

குழந்தைகள் தினவிழா..

விக்டரி அரிமா சங்கம்...புதுகை

குழந்தைகள் தினவிழா போட்டி

நேற்று புதுகை நகர்மன்றத்தில் நடந்த குழந்தைகள் தினவிழாவில் பேச்சுப்போட்டி,கட்டுரை,ஓவியப்போட்டிகள் நடந்தன...

மூன்று நிலைகளில் 6-8,9-10,11-12 போட்டிகள் நடந்தன...பேச்சுப்போட்டிக்கு நடுவர்களாக நான்,அனுசுயா,மற்றும் மாலதி மூவரும் கலந்து கொண்டோம்..
அழகான தலைப்புகள் அன்பால் உலகை வெல்வோம்,ஆ’கலாம் ஆகலாம்,சேவையால் சிகரம் தொடுவோம் ஆகிய தலைப்புகளில் குழந்தைகள் மிக அருமையாகப்பேசினர்...
கடலரசி என்ற மாணவி அனைவர் மனதையும் கவர்ந்து போட்டிகளில் முதல்பரிசை வென்றார்...
குழந்தைகளுடன் குழந்தைகள் தினத்தை இனிமையாகக் கழித்தோம் மூவரும்...
எங்கள் பள்ளி மாணவிகள் ஓவியப்போட்டி மற்றும் கட்டுரை போட்டிகளில் பரிசுகளை வென்றனர்...
சிவயோகமதி என்ற மாணவியின் அம்மா என்னிடம் உங்களைப்பார்க்கத்தான் வந்தேன்மா..என் மகள் எப்போதும் உங்களைப்பற்றித்தான் பேசிக்கொண்டே இருக்கிறாள்.அம்மா இப்படி இருக்கச்சொன்னாங்கன்னு,அதைச்செய்யச்சொன்னாங்கன்னு நீங்க சொன்னதத்தான் கேட்குறா...மிகவும் மகிழ்ச்சிம்மா இந்தப்பள்ளியில் சேர்த்ததற்கு பெருமைப்படுகின்றேன்..என்று கூறிய போது ,சரியா பணியைச்செய்கின்றோம் என்ற மனதிருப்தி வந்தது...இதைவிட வேறென்ன வேண்டும் ஒரு ஆசிரியருக்கு...ஒரு நல்ல அம்மாவாக என் மாணவிகளுக்கு இருப்பதால் வரும் மனநிறைவு..எதற்கும் ஈடாகாது..
இந்த வாய்ப்பை நல்கிய புதுகை விக்டரி அரிமா சங்க நிர்வாகிகளுக்கு மிக்க நன்றி..





Thursday, 12 November 2015

கடவுளைக்கண்டேன்..2

                                     

                                 
                                 நம்ம சகோ கில்லர்ஜிக்கு நகச்சுத்தி வந்தாலும் வந்தது...அதுக்கு ஆபரேஷன் பண்ணிக்கிட்டு மருத்துவர்கள் முழிக்க,.....

                சைடு கேப்ல இவரு சொர்க்கலோகம்?![அங்கேயா போவாரு...கில்லர்ஜின்னு பேர வச்சுக்கிட்டு]போயியியி..கடவுளைப்பார்க்க ,அந்தக்கடவுளோ பாவம் இவரோட வேண்டுதல்களையே நிறைவேற்ற முடியாது..பின்ன இந்தியாவுல மதம் ஜாதிங்குற வார்த்தையே இல்லை சொன்னா செயிலுன்னு சொல்ல கடவுளு தலையில கைய வச்சுக்கிட்டு...இந்தப்படுபாவிய பிடிக்க முடியாது போலன்னு அவரு ஒரு பந்தயம் வைக்க....
               சொர்க்கத்துலேர்ந்து என்னைப் பார்த்து...மாட்டிவிட்ட சகோவ என்ன பண்ணலாம்...இருக்கட்டும் எப்படியும் ஆபரேஷன் முடிந்து வெளியே வரும் போது கவனிச்சுக்கலாம்...இப்ப கடவுள பார்க்கலாம்னு  நினைச்ச உடனே விஷ்க்னு சொர்க்கத்துல நானு... கள்ளச்சிரிப்போட நம்ம சகோ கில்லர்ஜி....

                             பக்கத்துல அநியாயத்துக்கு அணிகலன்களோட வரிசையா எல்லா மதக்கடவுளும்....உட்கார்ந்துருக்காக...யாரப்பாத்து கேக்கலாம்னு போனா ...எதுக்கு வம்பு மொத்தக்கடவுள்களையும் ஒரே சமயத்துல பார்த்து கேட்டுடலாம்னு ..முடிவு பண்ணேன்...

ம்ம் கூறும் உமது ஆசைகளைன்னு திருவிளையாடல்ல வர்ற சிவபெருமான் சிவாஜி ஸ்டைலில் எல்லோரும் கேட்க...

எல்லாத்தையும் நிறைவேத்துவீகளான்னு வழக்கம் போல கிராஸ் கேள்வி கேட்க ....ம்ம்ம்ம்ம்னு உருமிவிட்டு கேளும் கேளும் கேட்டுப்பாரும்னு அதட்ட...அய்யோடான்னு பயந்துகிட்டே கேட்க ஆரம்பித்தேன்..

1]நிசமாவே பூமியில இத்ன கடவுள்  இருந்தும் நடக்குற அநியாயத்த யாரும் கேக்கலயே இனி ஒரு கடவுளாவது கேட்பீகளா?..

2]மனுசனுக்கு ஆறறிவு வேண்டாம் ஐந்தறிவே போதும்ஆறாவது அறிவ அழிக்க முடியுமாக்கடவுளே...,அத வச்சுக்கிட்டு இவன் படுத்துற பாடு தாங்க முடியல...

3]பெண்களைக்குறை சொல்லாத...இருங்க இருங்க பெண்கள் குறை சொல்லும் படி நடக்காத ஆண்களைப்படைப்பீர்களா..சாமி..

4]நீங்க எல்லாம் ஒண்ணா சேர்ந்து நம்ம சரத்குமாரு ஸ்டைல நிறுத்துறா சண்டைய...எல்லா மதமும் ஒண்ணுதாண்டா...மனுசனப் பிரிச்சவன வெட்டுறான்னு சொல்லோனும் முடியுமா,...?

5]எத்தன முறை சின்ன வயசுல உங்கள சுத்திசுத்தி வந்து எல்லாரும் நல்லாருக்கனும்னு வேண்டிக்கிட்டேன்...ஆனா என்ன மட்டும் நல்லா வைக்காத உங்களுக்கு தண்டனைக் கொடுக்க ஆசைப்படுறேன் முடியுமா சாமி?இல்ல இழந்து போன என் மகிழ்ச்சியெல்லாம் திருப்பி கொடுத்துடுங்க.....எலுமிச்சம்பழ விளக்கே ஆயிரக்கணக்குல ஏத்தியிருக்கேன் ..கொஞ்சம் கூட கருணை காட்டலியே பா...

6]இந்தியா கடன்ல இருக்கு உங்க பக்கத்துல இருக்குற  திருப்பதி வெங்கடாச்சலபதிக்கு ஆயிரம் கோடிக்கணக்குல நகை இருக்குன்றாக....கொஞ்சம் இரக்கப்பட்டு இந்தியாவோட கடனை அடைக்க சொல்லிடுங்க சாமி...


7]கண்டங்கள் எல்லாத்தையும் முடிஞ்சா ஒண்ணா  இணைச்சு இந்த அயல்நாட்டுக்காரங்ககிட்டஇருந்து, ஆமா சாமி ஆ ஊ ன்னா  எல்லைத்தாண்டினேன்னு பிடிச்சுட்டு போயி கொடுமைப்படுத்துறாய்ங்க....ஒண்ணா சேர்த்தாச்சுன்னா இந்த பிரச்சனையே இல்லல்ல...இந்தியாவ குப்பை கொட்டுற நாடா எந்த நாடும் நினைக்காதுல்ல..கொஞ்சம் காதக்கொடுங்க[ நம்ம பிரதமருக்கு அயல்நாட்டுலேயே இருக்காருன்னு கெட்டப்பேரு மாறிடும்ல...]


8]காலக்கடிகாரம் இருந்தா ஒரே சுத்தா சுத்தி என்ன சின்ன வயசுல கொண்டி உட்டுறுக அட எல்லாரையும் தான்....செய்த தப்பயெல்லாம் செய்யமாட்டோம்ல...ஆனா புதுசா தப்பு பண்றத தடுக்க முடியாது சாமி..

9]கொஞ்ச நாளைக்கு பணக்காரர்கள்டேருந்து எல்லாத்தையும் புடுங்கி வறுமையில் வாடும் ஏழைகளிடம் கொடுத்துடுங்க..கஷ்டம்னா என்னன்னு அவங்களும் உணரட்டும் என்ன நாஞ் சொல்றது...அதுக்குள்ள கன்னத்துல கைய வச்சுக்கிட்டா என்ன பண்றது சாமியோவ்...


10]பேசாம எல்லாரும் ஒண்ணா சேர்ந்து மனுசப்பயல்க கிட்ட நாங்க எல்லாம் ஒரே உருவம் தான் இனி நீங்க அடிக்கிட்டா யாரு காரணமோ அவங்களுக்கு எண்ணெய்க்கொப்பரைதான்னு நேர்ல வந்து சொல்லிட்டு போயிடுங்க சாமிகளா..என்னோட இந்த சின்ன ஆசையெல்லாம் நிறைவேத்திட்டீகன்னா...தந்தை பெரியாரே நேர்ல வந்து நீங்க இருக்கீங்கன்னு சொல்லவச்சுடுறேன் சாமியோவ்..



அய்யோடா ஏனிப்படி சாமியெல்லாம் ஓடுறாங்கன்னு  தெரியலயே...

இன்னும் பத்து பேரு ஆசையக்கேட்போமா..யாரப்புடிக்கலாங்கோ

  1] அன்பு அண்ணன் முத்துநிலவன்
    http://valarumkavithai.blogspot.com


2]அன்பு சகோதரி கீதமஞ்சரி
           http://geethamanjari.blogspot.in

3]அன்புசகோதரர் தளிர்சுரேஷ்
          http://thalirssb.blogspot.com

  4]நம்ம தம்பி கஸ்தூரி
      http://www.malartharu.org

5]அன்புச்சகோதரி இளையநிலா
   http://ilayanila16.blogspot.com

6]அன்புத்தோழி தென்றல் சசிகலா
  http://veesuthendral.blogspot.in

7]அன்புத்தோழர் ஜோக்காளி
  http://www.jokkaali.in

8]அன்புச்சகோதரி மாலதி
http://malathik886.blogspot.in

9]உணர்வான தோழியும் சகோதரியும் ஆன ஜெயா
  http://jayalakshmiaeo.blogspot.in

10]கொடுத்து சிவந்த கரங்களை உடைய நம்ம விசு ஆசம் சார்
http://vishcornelius.blogspot.com


அப்பாடி ஒருவழியா இவங்க கிட்ட ஒப்படைச்சாச்சு இனி கில்லர்ஜி பிழைப்பது இவர்கள் கையில் கொஞ்சம் பார்த்து ஆசைய சொல்லுங்க எல்லாரும்...


Tuesday, 10 November 2015

சந்தைப்பேட்டை அ.ம.மே.நி.பள்ளியில் நாணயவியல் கண்காட்சி

சந்தைப்பேட்டை அ.ம.மே.நி.பள்ளியில் நாணயவியல் கண்காட்சி

இரண்டு மாதங்களுக்கு முன் எங்கள் பள்ளியில் நாணயவியல் கண்காட்சி









நடந்தது...சூழல் காரணமாக என்னால் உடனே எழுத முடியவில்லை...ஆனால் அதன் சிறப்பை கூறவேண்டும் என்ற எண்ணம் இன்று வடிவில்...

ரூபாயில் எத்தனை மாற்றங்கள்...
டீச்சர் இந்த 50 ரூபாய்களில் ஏதும் வித்தியாசங்கள் தெரிகிறதா ?.என நாணயவியல் கழகத்தலைவர் திருமிகு பஷீர் அலி அவர்கள் கேட்ட போது ஒண்ணும் தெரியலயே சார் என்றேன்....நல்லா உற்றுப்பாருங்கள் என்றார் அப்போதும் ம்கும் என்றேன்...சிரித்துக்கொண்டே பாரளுமன்றம் தெரிகிறதா ?என்றார்...ஆம் என்றேன்...

மேலே உள்ள கொடியைப்பாருங்கள் என்றார்..பார்த்தபோது வியந்தேன்..ஒரு நோட்டில் பாராளுமன்றத்தின் மேல் கொடிக்கம்பம் மட்டுமே இருந்தது,மற்றொன்றில் ஏதோஒரு கொடி பறந்தது,வேறு ஒன்றில் நம் தேசியக்கொடி பறந்தது....நாம் தினமும் புழங்கும் ரூபாயில் நுணக்கமாக எத்தனை விசயங்கள் உள்ளன..என மலைத்தேன்.

மேலும் பல நாடுகளில் தமிழ்மொழி மூன்று, நான்காம் இடத்தில் இருக்க இந்திய ரூபாயில் மட்டும்..கீழே உள்ளது என...தமிழ்மொழிக்கு மரியாதை இல்லை என்பதை வேதனையோடு பகிர்ந்து கொண்டார்...

125 நாடுகளுக்கும் மேற்பட்ட நாணயங்கள் ரூபாய் நோட்டுகளைச் சேகரித்து பொக்கிஷமாக வைத்துள்ளார்..
அனைத்துக்குழந்தைகளும் இதைக்கண்டு அறிந்து கொள்ள வேண்டும் என்பதையே நோக்கமாகக்கொண்டு செயல் படுகின்றார்.கண்காட்சியைப்பார்த்த பின் மாணவிகளிடம் கேள்விகள் கேட்டு பரிசுகளை அள்ளித்தந்தார்...

நாம் பார்த்தே இராத, பார்க்கவே முடியாத அரிய பழங்கால நாணயங்களைக்காட்டிய போது அதிசயத்து நின்றோம்...

எளிமையான ,பழகுவதற்கு இனிமையான,தன்னால் முடிந்த உதவிகளை அனைவருக்கும் செய்வதுடன்,மேலூம் பலரிடமிருந்து பெற்று வழங்கியும் ...மதிப்பிற்குரிய மனிதராக திருமிகு பஷீர் அலி வாழ்ந்து வருகின்றார்...எனக்கு தெரியாத எவ்வளவோ நல்ல விசயங்கள் அவரைப்பற்றி கேள்வி படுகின்றேன்..

பள்ளிகளில் யாரும் விரும்பினால் அழைக்கலாம்..
பஷீர் அலி: 9626232725

Saturday, 7 November 2015

தீபாவளி தேவையா ?தேவை இல்லையா?-பட்டிமன்றம்

                              6.10.15 வெள்ளிக்கிழமை காலை  ஆறாம் வகுப்பிற்குச்சென்றதும்..குழந்தைகள் தங்களுக்குள் ஏதோ கதைத்துக்கொண்டே இருந்தனர்...என்னம்மா என்றேன்..அம்மா நிறைய பேர் வரலம்மா என்றார்கள் ஏன் என்றதற்கு தீவாளிக்கு டிரஸ் வாங்கப் போயிட்டாங்கம்மா என்ற போது தான் ,ஒரு பட்டி மன்றம் வைக்கலாமா? என்றேன் உடனே அய்ய்ய்  வைக்கலாம்மா என்னதலைப்பு என்றார்கள் தீபாவளி தேவையா? தேவையில்லையா ?என்றேன்...தேவைதான்மான்னு கோரஸாக குரல் ஒலித்தது..யாரெல்லாம் தேவையின்னு பேசப்போறீங்கன்னு கேட்டதும்சிலரைத்தவிர அனைத்துக்கைகளும் உயர்ந்தன...மதியம் பட்டிமன்றம்னு சொல்லி ஆனா அதற்குள் சொன்ன எழுத்துவேலையெல்லாம் முடிச்சிடனும்னு சொன்னதும் ஓகேம்மான்னு ...குரல் கொடுத்தனர்..
மதியம் தயாராக கையில் குறிப்பெல்லாம் வச்சிருந்தனர்..சரி ஆரம்பியுங்கன்னு சொன்னதும்
 ஜனனி:அம்மா..தீபாவளி அன்று புது டிரஸ் கிடைக்கும்,பலகாரமெல்லாம் கிடைக்கும் நாங்க எல்லார் வீட்டுக்கும் போவோம் தீபாவளிக்குத்தான் ,சந்தோசமா பட்டாசெல்லாம் வெடிப்போம் அதனால தீபாவளி வேணும்ம்மா..

சிவயோகமதி:தீபாவளிக்கு அதிக செலவாகும் கடன் வாங்கித்தான் டிரஸ் பட்டாசு வாங்கனும்,வெடி வெடிக்கும் போது கையில பட்டு விபத்து வரும் அதனால தீபாவளி வேண்டாம்மா.

கவிதாஅம்மா அன்று தானே குழந்தைகள் சந்தோசமா இருக்கும் அதை ஏன் வேண்டான்னு சொல்லனும்மா வேணும்மா

அபிஸ்ரீ:அம்மா தீபாவளி அன்று அதிக விபத்தெல்லாம் நடக்கும்மா ...நம்ம சந்தோசத்துக்காக மத்தவங்க ஏன்மா பாதிக்கப்படனும் ..அதனால வேண்டாம்மா..அப்படி கடன் வாங்கி கொண்டாடனும்மாம்மா...
திவ்யா:அம்மா...எல்லோரும் அன்று வீட்டுக்கு வருவாங்க...சொந்தக்காரங்கள எல்லாம் பாக்கலாம் அதனால வேணும்மா..
ராஜபூரணி:வாங்க முடியாத குழந்தைகள் மற்றவர்கள் புது டிரஸ் போட்டுருக்கறத பாத்து ஏங்குவாங்கல்ல மா அதனால வேண்டாம்மா..

பரிதுல் பர்ஜானா...தீபாவளின்னா சந்தோசம்னு எல்லாரும் விருப்புவாங்க அதனால வேணும்மா
 சரி தீபாவளிய ஏன் கொண்டாடுறாங்கன்னு கேட்டேன்.
லலிதா : கிருஷ்ணர் நரகாசுரன கொன்றபோது நரகாசுரன் தான் இறந்த நாளை எல்லாரும் கொண்டாடனும்னு வேண்டிக்கிட்டானாம் அதனாலதான் கொண்டாடுறோம் .

நல்லவனோ கெட்டவனோ ஒருவன் இறந்த நாளைக்கொண்டாடுவது சரியா..என்று கேட்டதும்...இல்லம்மா கொண்டாடக்கூடாதும்மா..என்றனர் கோரஸாக..

தமிழர் திருநாள் எது என்றேன் ..பொங்கல் என்றனர்...தனக்கு உதவி செய்த சூரியனுக்கும் மாட்டுக்கும் நன்றி சொல்லி விழா கொண்டாடும் தமிழினம் தீபாவளியைக்கொண்டாடுவது முறையா என்றேன்...அனைவரும் யோசிக்கத்தொடங்கினர்..காலங்காலமாக கொண்டாடுகின்றார்கள் என்பதற்காகவே ஒரு விழாவை கொண்டாடலாமா என்றபோது அமைதி காத்தனர்,,

சிவயோக மதி: அம்மா நாம் வெடிகிற வெடிகளைச்செய்வதும் குழந்தைகள் தான்மா அதை வெடிக்கும் போது அவர்களையே வெடிப்பது போல் இருக்கும்மா...படிக்க போகாம அவங்க வெடி தயாரிக்கப்போறாங்கம்மா..தீபாவளி வேண்டாம்மா..என்றாள்..


மூன்று குட்டீஸ் சேர்ந்து ஒரு நாடகமும் போட்டனர் ...பேசவே பேசாத ரோகிணியும் முத்து லெட்சுமியும் வந்து பேசியது மகிழ்வாயிருந்தது...

வகுப்பே தீபாவளி கொண்டாடுவது தவறு என்றது...இக்குழந்தைகள் மனதில் விதைத்தான் தூவியுள்ளேன்..எந்த விழாவையும் காரணம் புரிந்து கொண்டாட வேண்டும்...இக்குழந்தைகளின் குடும்பங்கள் மிகவும் வறுமையான சூழ்நிலையில் இதில் கடன் வாங்கி ஆடம்பரமாகக்கொண்டாடி  பின் தவிக்கலாமா?

ஊடகங்களும் சமூகமும் தீபாவளிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மனிதநேயத்திற்குக்கொடுத்தால் தமிழினம் சிறப்படையாதா?யோசிப்போம்..


Friday, 6 November 2015

sinna kannamma-சின்னக்கண்ணம்மா

 

களம் புகுந்த யானையாய்
கலைத்து போட்டவளின்
கற்பனைகளை கதைத்துக்கொண்டுள்ளன
கவிழ்ந்து கிடக்கும் பொம்மைகள் ..

அடுக்கி வைத்தவைகளை
அத்தனை மெனக்கிடலுடன்
சிரத்தையாய் கலைப்பவளை
ரசிக்காமல் திட்டமுடியவில்லை

செய்கின்ற தவறுகளையெல்லாம்
இதழ்விரித்தே சமன் செய்திடுவாள்
கரடியும் சோட்டாபீமும் வாத்துக்குட்டியும்
இவளின் அன்பில் மூழ்கித்திளைக்கும்...

குயிலுக்கு டாட்டா காட்டுபவளுக்கு
பதிலுக்கு டாட்டா சொல்லும் குயில்

ரயிலென சுமந்துசெல்ல
அவளிடம் அணுகும் அட்டைப்பூச்சி
வேகமாய் அவளைக்கடத்தும் அவசரத்தில்
விரையும் மிதிவண்டி...

யானையை மிரட்டுபவள்
கொசுவிற்கு பயந்தலறும் காட்சியைக்கண்டு
ரசிக்கும் படுக்கையறை...
கொள்ளை மகிழ்வை
கொத்தாய்க்கொடுக்க
இவளால் மட்டுமே முடிகின்றது...

Sunday, 1 November 2015

யார் நீ?

எனக்கு இணையில்லை நீ
எப்போதும், என்றும் ஆகமுடியாது
எனைப்போல் நீ...

என்நாட்டில் என்விருப்பம்
எதையும் ஏற்கும் என்னுடல்
மரக்கறியோ மாட்டுக்கறியோ
மறுப்பதும் ஏற்பதும்
என் உரிமை...

வந்தேறிகளுக்கு தெரியாது
வளமாய் வாழ்ந்த எங்கள்
வரலாறு...

வாய்மூடீ இருப்பதால்
வாய்க்கு வந்ததெல்லாம்
வழிமொழியும் அதிகாரம்
வந்திடாதுனக்கு

உண்மையுணரும்
காலமதிகமில்லை
கதறும் காலம் மாற...

Saturday, 31 October 2015

வலைப்பதிவர் விழா 2015 வரவு செலவு கணக்கு விவரம்

 அன்புள்ள வலைப்பதிவர்களுக்கு வணக்கம்

                     

                வலைப்பதிவர்களின் அன்பு நிறைந்த மனங்களையே நன்கொடைகளில் நான் காண்கின்றேன்....எதிர்பார்க்கவில்லை ரூ 50,000 ஆகுமோ என்ற சந்தேகத்துடன் முதல் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு இன்று இந்த அளவு விரிவடைந்துள்ளமைக்கு உங்களின் தாராளமான மனமே காரணம்...விழா சிறக்கவும் உங்களின் ஆதரவே முழுமையான காரணம் என்பது மறுக்கவியலா உண்மை.
       
           எங்கள் பள்ளியில் வந்த ஆண்டாய்வு காரணமாக இத்தனை நாட்கள் கடந்து விட்டன.இருப்பினும் கையிருப்புக்கணக்காகவே இந்த கணக்கை முடித்திருப்பதால் நிம்மதி அடைகின்றேன்.

         

              
               வங்கி கணக்கு வழி- புரவலர் நிதி

வ.எண்
தேதி
                  பெயர்
                 திருமிகு
தொகை
ரூபாய்
1
14.9.15
இளமதி ஜெர்மனி
5,000
2
14.9.15
பாரதிதாசன் பிரான்சு
5,000
3
16.9.15
மரு..உமர் பாரூக் -தேனி
5,000
4
16.9.15
புதுவை வேலு/யாதவன்நம்பி-பிரான்சு ரூ100பிடித்தம்  
11,010
5
18.9.15,11.10.15
ஜோசப் விஜு-திருச்சி [1,000+5,000]
6,000
6
22.9.15,3.10.15
பசி. பரமசிவம் -நாமக்கல் [5,000+5,000]
10,000
7
23.9.15
கர்னல். பா. கணேசன் -சென்னை
5,000
8

பெயர் குறிப்பிடாதவர்?
11,400
9
27.9.15
அம்பாளடியாள் -சுவிஸ்    
10,000
10
30.9.15
இனியா -கனடா[ ரூ108 பிடித்தம்]
5,000
11
8.10.15
மதுரைத்தமிழன்[அவர்கள் உண்மைகள்]
5,166
12
13.10.15
பரிவை சே.குமார்
5,000


கூடுதல்
83,576
   வங்கிக்கணக்கில் வரவாகி உள்ள தேதி வாரியாக விவரம் தொகுத்துத் தரப்பட்டுள்ளது. அதிலும் முன்பு வெளியிட்டுள்ள பட்டியலில் உள்ள வரிசை புரவலர் நிதி, நன்கொடை, விளம்பரம் என, மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
*வங்கிக்கணக்கில் வங்கிப் பிடித்தமாக ரூ558 பிடிக்கப்பட்டுள்ளது.
             ----------------------------------------------



*
             வங்கிக்கணக்கு வழி-நன்கொடை விவரம்

வரிசை
எண்
நாள்
      பெயர்
     திருமிகு
தொகை
ரூ
1
18.8.15
கலையரசி-புதுச்சேரி
1,000
2
20.815
பழனி.கந்தசாமி-கோயம்புத்தூர்
1,000
3
1.9.15
தமிழ்.இளங்கோ-திருச்சி
2,000
4
4.9.15
எங்கள் பிளாக் கௌதமன்,ஸ்ரீராம்-சென்னை
500
5
5.9.15
பி.எஸ்.டி.பிரசாத்-சென்னை
500
6
9.9.15
புலவர்.இராமானுசம்-சென்னை
1,000
7
9.9.15
ஜி.எம்.பாலசுப்ரமணியன்-பெங்களூர்
1,000
8
10.9.15
வினோத்-கிரேஸ்-அமெரிக்கா
1,000
9
14.9.15
யூஜின் ப்ரூஸ்
500
10
14.9.15
நடனசபாபதி-சென்னை
1,000
11
14.9.15
சென்னை பித்தன்
1,000
12
14.9.15
இராய. செல்லப்பா-காஞ்சிபுரம்
1,234
13
14.9.15
மருது பாண்டியன்
100
14
14.9.15
பொன். தனபாலன்-திண்டுக்கல்
1,000
15
14.9.15
செல்வராஜூ துரைராஜூ-குவைத்
3,000
16
15.9.15
வை.கோபாலகிருஷ்ணன்-திருச்சி
500
17
15.9.15
எஸ்.ஞானசம்பந்தம்-புதுச்சேரி
1,000
18
16.9.15
கீதா மதிவாணன் -ஆஸ்திரேலியா
1,000
19
16.9.15
சூரியநாராயணன்[சுப்பு தாத்தா]-சென்னை
500
20
18.9.15
மணவை ஜேம்ஸ்-திருச்சி
1,000
21
18.9.15
S.P. செந்தில் குமார்-மதுரை
500
22
18.9.15
கோவிந்தராஜூ -கரூர்
1,001
23
19.9.15
துளசிதரன்,கீதா-சென்னை
2,000
24
22.9.15
தளிர் சுரேஷ்-திருவள்ளூர்
1,000
25
23.9.15
ஆர்.வி.சரவணன்- குடந்தை
1,000
26
23.9.15
காமட்சி மகாலிங்கம் -மும்பை
1,000
27
25.9.15
இராமமூர்த்தி தீபா-மதுரை
1,000
28
25.9.15
பி.  அனுராதா
1,500
29
29.9.15
.பு.ஞானபிரகாசன் சென்னை
150
30
30.9.15

ஜி.ரமேஷ் உமா-சென்னை
1,000
31
6.10.15
சித்தையன் சிவகுமார் -மதுரை
501
32
9.10.15
முகம்மது நிஜாமுதீன்-
1,000
33
15.10.15
ராஜ்குமார் ரவி -கோவை
500
34
15.10.15
ஜம்புலிங்கம்-தஞ்சாவூர்
1,000
35
17.10.15
சுஜீத்[வெங்கட் நாகராஜ்]
1,000
36
20.10.15
உலகநாதன்
500
37
23.10.15
பொன்னுசாமி
250
37
27.10.15
கவிசெங்குட்டுவன்
250
38
28.10.15
கரூர்பூபகீதன்[.பூபாலகிருஷ்ணன்]
250


கூடுதல்
35,236




வங்கி கணக்கு- [போட்டிவிளம்பரம் / நூல் வெளியீடு]வரவு

வ.எண்
தேதி
பெயர்
திருமிகு
தொகை
ரூபாய்
1
4.9.15
கரந்தை ஜெயக்குமார் 
நூல் வெளியீடு
5000
2

ரூபன் மலேசியா
நூல் வெளியீடு திண்டுக்கல் தனபாலன் வழி
5000
3
16.9.15
விசு ஆசம்[துளசி கீதா திண்டுக்கல் தனபாலன் மற்ரும் வெஸ்டர்ன் யூனியன் வழியாக]
விளம்பரம், போட்டிகளுக்கு 10,000+18,781
28,781
4
18.9.15
மூன்றாம் சுழி துரை அப்பாதுரை
8,125
5
21.9.15
 தமிழ்களஞ்சியம்-வெற்றிக் கேடயம்
15,000
6
2.10.15
ஆல்பிரட் தியாகராஜன்- நியூயார்க்
3,000
7
9.10.15
விஜய் கார்த்திக் அமெரிக்கா
3,000
8
12.10.15
தமிழ் இணையக்கல்வி கழகம்- போட்டி
50,000
9
29.10.15
பாரத்கல்லூரி -தஞ்சாவூர்
10,000


கூடுதல்
1,27,906




வங்கி கணக்குவழி – கையேடு நூலுக்கான வரவு


வ.எண்
தேதி
பெயர்
தொகை
1
15.10.15
கலையரசி
3,000
2
21.10.15
எஸ்.பி. செந்தில் குமார்
1,000
3
16.10.15
ஜெ.சிவகுரு தஞ்சை
500
4

தளிர் சுரேஷ்
1,200


கூடுதல்
5,700


வங்கிக்கணக்குவழி மொத்தவரவு

.எண்
விவரம்
தொகை
ரூ
வங்கி பிடித்தம்
ரூ
மொத்ததொகை
ரூ
1
புரவலர்
83,576


2
விளம்பரம் ,போட்டி
1,27,906


3
நன்கொடை
35,236


4
புத்தகம்
5700



கூடுதல்
2,52,418
558
2,51,860




கையில் வந்த வரவு-புரவலர் நிதி

.எண்
பெயர்
திருமிகு
தொகை
ரூ
1
தங்கம் மூர்த்தி
12,000
2
மதுரை ரமணி
5000
3
ஜெயலெட்சுமி
5000
4
               கூடுதல்  
22,000


கையில் வந்த வரவு-நன்கொடை நிதி

.எண்
தேதி
பெயர்
திருமிகு
தொகை
ரூ
1
4.8.15
நா.முத்துநிலவன் புதுக்கோட்டை
2000
2
4.8.15
பொன்.கருப்பையா புதுக்கோட்டை
1000
3
4.8.15
மு.கீதா புதுக்கோட்டை
2000
4
4.8.15
கருணைச்செல்வி புதுக்கோட்டை

1000
5
4.8.15

கஸ்தூரிரங்கன் புதுக்கோட்டை
1,000
6
4.8.15
மைதிலி புதுக்கோட்டை
2,001
7
4.8.15
கா.மாலதி புதுக்கோட்டை
1,000
8
4.8.15
சி.குருநாதசுந்தரம் புதுக்கோட்டை
1,000
9
4.8.15
.கிருஷ்ணவேணி புதுக்கோட்டை
1,000
10
.9.15
கில்லர்ஜி-அபுதாபி வெஸ்டர்ன் யூனியன் வழியாக
2,222
11
12.09.15
முரளீதரன் -சென்னை 
1000
12
4.10.15
ரேவதி புதுக்கோட்டை
500
13
1.10.15
மகாசுந்தர் புதுக்கோட்டை
1,500
14
2.10.15
சூசைக்கலாமேரி த.ஆ புதுக்கோட்டை
1,000
15
6.10.15
அப்துல்ஜலீல் புதுக்கோட்டை
1,000
16
6.10.15
.பாண்டியன் மணப்பாறை
1,500
17
7.10.15

பஷீர் அலி கீரமங்கலம்
2,000
18
9.10.15
பாலசுப்ரமணியன்-புதுக்கோட்டை
1,500
19
10.10.15
அமிர்தாதமிழ் புதுக்கோட்டை
1,000
20
10.10.15
கவியாழிகண்ணதாசன்-சென்னை
1,000
21
10.10.15
உமையாள்காயத்ரி-காரைக்குடி
500
22
10.10.15
ஜோக்காளி பகவான் ஜி-மதுரை
500
23
10.10.15
கு..திருப்பதி புதுக்கோட்டை
1,000
24
11.10.15
சீனா [எ]சிதம்பரம்-மதுரை
2,000
25
11.10.15
தமிழ்வாசி பிரகாஷ்-மதுரை
500
26
11.10.15
ஸ்டாலின் சரவணன் புதுக்கோட்டை
1,000
27
11.10.15
எழில்-கோவை
1,000
28
11.10.15
நீச்சல்காரன் இராஜாராம்-சென்னை
200
29
13.10.15
சுமதி புதுக்கோட்டை
500
30
13.10.15
மீனாட்சிசுந்தரம் புதுக்கோட்டை
500
31
18.10.15
மீரா.செல்வக்குமார் புதுக்கோட்டை
1000
32
19.10.15
வைகறை புதுக்கோட்டை 
1000
33
19.10.15
சோலச்சி புதுக்கோட்டை
1000


கூடுதல்
36923


கையில் வரவு-புத்தக விற்பனை


1
விழாவில் விற்பனை
5938
2
வைகறைமூலம்
200

கூடுதல்
6,138



கையில் வரவு-விளம்பரம்


.எண்
நாள்
பெயர்
திருமிகு
தொகை
ரூ
1
11.10.15
வி.சி.வில்வம் திருச்சி
1,500
2
11.10.15
அம்சப்பிரியா கோவை
500
3
11.10.15
பூபாலன் கோவை

500
4
11.10.15
குறிப்பேடு-[கு..திருப்பதி]
2,250
5
29.10.15
இராஜ்குமார்[பதாகை ]
2,000
6
29.10.15
பாரதி புத்தகாலயம்
1,000


கூடுதல்
7,750
                        
          
              கையில் வந்த மொத்த தொகை


.எண்
விவரம்
தொகை
ரூ
1
நன்கொடை
36,923
2
புரவலர்
22,000
3
விளம்பரம்
7750
4
புத்தகவிற்பனை
6138

கூடுதல்
72,811




மொத்த வரவு விவரம்


.எண்
விவரம்
தொகை
ரூ
வங்கிப் பிடித்தம்
தொகை
1
வங்கிக்கணக்கு
  2,52,418
558
2,51,860
2
கையில்
72,811
-
 72,811

மொத்தவரவு


3,24,671





மொத்த செலவு விவரம்

.எண்

விவரம்
தொகை
ரூ
கூடுதல்
1
மண்டபச்செலவுகள்
1]மண்டபம்,கரண்ட்பில்,
11,610



2]மேடைஅலங்காரம்,கார்ப்பெட்,
8880



3]ஒலி,ஒளி தலையணை பெட்ஷீட்
10,000



4]இசைக்குழு
2,400



5]ஒளிப்படம்[ஃபோட்டோ]
3,000



6]ஓவியக்கண்காட்சி
3,000



7]உணவு [மளிகை,கூலி,பாத்திரவாடகை]
75,000



8]நெகிழிப்பதாகை
7,100
1,20,990
2]
பரிசுப்பொருள்கள்
1]தோள்பை
41,000



2]கையேடு
30,000



3]போட்டிப்பரிசு தொகை[..]
50,000



4]விமர்சனப்போட்டி[பரிசு தராத வரவு]
   5,000



5]கேடயங்கள் ,பேட்ஜ்,குறிப்பேடுகள்
30,000
1,56,000
3]
நிகழ்ச்சிக்கான செலவு
1]அழைப்பிதழ்[அச்சிட அனுப்ப]
5,000



2]சிறப்பு அழைப்பாளர் தங்குமிடம்
4,383



3]எஸ்.இராமக்கிருஷ்ணன்
[போக்குவரத்து,அறைவாடகையுடன்]
27,000



நேரலை ஒளிபரப்பு மற்றும் பரிசு புத்தகங்களுக்கானவை
8,469
44,852


மொத்த செலவு

3,21,842


                மொத்த வரவு

விவரம்
தொகை
வங்கி கணக்கு
2,51,860
கையில் வந்த வரவு
72,811
கூடுதல்
3,24,671



           மொத்த வரவு செலவு விவரம்



மொத்த வரவு

3,24,671

மொத்த செலவு

3,21,842

கையிருப்பு தொகை
 
  2,829

* வலைப்பதிவர் விழா 2015 ஆன வரவு செலவு நிதி பொறுப்பாளர் மு,கீதா அவர்களால்[நான்தான்] வலைப்பதிவர் விழாக்குழு சார்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

* விழாக்குழுவினரின்  முழு ஒத்துழைப்பில் வரவு செலவுக்கணக்கை நிறைவாகச் சமர்ப்பிக்கின்றேன்.

*பொது நிகழ்வில் நிதிப்பொறுப்பை நான் ஏற்பது இதுவே முதல்முறை என்பதால் ,இதில் ஏதும் குறையிருப்பின் தயவுசெய்து கூறவும் ..என்னை திருத்திக்கொள்ள வாய்ப்பாக எடுத்துக்கொள்கின்றேன்…

**உங்களின் அன்பிற்கு ஈடாக எதுவுமே எங்களால் தர இயலாது..
 .
...அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றியை விழாக்குழு சார்பாக சமர்பிக்கின்றேன்..
                                    மிக்கநன்றியுடன்-விழாக்குழுவினர்