Blood money
தமிழ் சினிமா புதிய பாதையில் தடம் பதிக்கத் துவங்கி உள்ளது மனதிற்கு சற்று நிறைவாக உள்ளது...
ஊடக அறம் பேசும் படம் Blood money
Sarjun இயக்கத்தில் பெண் நிருபராக பிரியாபவானிசங்கர் நடித்திருக்கும் இப்படம்...உண்மையை பேசத் துவங்கி உள்ளமைக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்...
குவைத் நாட்டில் பணிபுரியும் சென்ற பட்டுக்கோட்டை சகோதரர்கள் இருவருக்கும் அந்நாடு தூக்கு தண்டனை அறிவிக்கிறது...
பிரசவத்தில் தாயை இழந்த பெண் குழந்தை தன் தந்தையை பார்க்கத் துடிக்கும் கதை..
விபத்தில் இலங்கை இஸ்லாமியப் பெண்ணை கொன்றதாகவும் இழப்பீடாக இறந்த பெண்ணிற்காக தரும் தொகை ரூ 30,00,000 (Blood money) கொடுத்தப் பிறகு எதற்காக தூக்குதண்டனை...என பெண் நிருபர் பிரியா பவானியின் போராட்டமே கதை..
முடிவில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடைக்கும் மன்னிப்பு கடிதம் அவர்களைக் காப்பாற்றுதிறது...
ஒரு குழந்தை தன் தந்தையைக் காணத்துடிக்கும் துடிப்பை சிறுமி இயல்பாக கடத்துகிறாள்..
மகன்களைக் காப்பாற்றத்துடிக்கும் தாய்,பெண் என்பதால் அவளை ஏளனம் செய்து அலட்சியம் செய்யும் ஊடக பணியாளர் ...
அரசு மற்றும் ஊடக நிறுவனர் இவர்களை எதிர்த்து துணை நிற்கும் மேலதிகாரி...
சிறப்பு... வழக்கமான டூயட் சண்டை காட்சிகள் இல்லாமல் பெண்ணை மரியாதையாக திறமைசாலியாக போராடி வெற்றி பெறுபவளாக காட்டியது சிறப்பு... பாராட்டுக்கள் இயக்குநருக்கு..
தூக்கு தண்டனை குற்றவாளிகளாக நடிக்கும் கிஷோர், ஷிரிஷ் கண்கலங்க வைத்துள்ளனர்..
படத்தில் அனைவரும் வாழ்ந்துள்ளனர்.. மனம் நிறைந்த வாழ்த்துக்கள்... தமிழ்த் திரைப்படம் தரமான படங்களைத் தந்து தடம் பதிக்கட்டும்.
ஆனால் பணி இஸ்லாமிய நாடு,இஸ்லாமிய பணக்காரர் தன்னிடம் பணி புரியும் இலங்கை இஸ்லாமியப் பெண்ணை கொலைசெய்ய அதை தன்னிடம் பணிபுரியும் தமிழர்கள் மேல் சுமத்தி தண்டனை பெற்றுத்தருகிறார் என்பது சற்று உறுத்தவே செய்கிறது...
அருமையான விமர்சனம்...இறுதியில் சொல்லிய உறுத்தல் எனக்குமிருந்தது..வாழ்த்துகள்..
ReplyDelete