World Tamil Blog Aggregator Thendral: பரியேறும் பெருமாள் -திரைவிமர்சனம்

Monday 1 October 2018

பரியேறும் பெருமாள் -திரைவிமர்சனம்

பரியேறும் பெருமாள் .
விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலைக் கூறும் துன்பியல் கவிதை .
கறுப்பி ரயிலின் முன் அடிபட்டு சிதறும் காட்சியில் துவங்கும் படம் நமது ஆதிக்க மனதையும் அடித்து நொறுக்கி கலங்க வைக்கிறது என்றால் மிகையில்லை .ஏன் சிகப்பி தண்டவாளத்தில் கட்டிவைக்கப்பட்டாள்என்பதை குறியீடாக துவங்கி இறுதியில் இரட்டைக்குவளைகளில் குறியீடாக முடிக்கும் இயக்குனர் படத்தில் வாழ்ந்திருக்கிறார் .

தமிழ்வழிக் கல்வியில் படிக்கும் மாணவர்கள் ஆங்கிலப் பாடத்தைக் கண்டு பயப்படும் நிலையும் ,ஆங்கில வழிக் கல்வியில் பயிலும் மாணவர்கள் தமிழைக் கண்டு பயப்படும் நிலை மிக யதார்த்தம் .

மாணவர்களுக்குள் சாதீயத்தை புகுத்துபவர்கள் வெறி பிடித்த மிருகத்தை விடக் கொடுமையானவர்கள் .
மூத்திரத்தைக் குடின்னு சாதாரணமாக திட்டுவதைக் கேட்டதுண்டு ஆனால் அதை அனுபவிக்கும் கொடுமையை உணர வைத்துள்ளார் கதிர் மிக அற்புதமான நடிப்பால் .

எல்லோரையும் இயல்பாகக் காட்டும் இயக்குனர் கதாநாயகியாக வருபவர் சிகப்பாக இருக்க வேண்டும் என்ற மனநிலையை என்ன சொல்வது .தாழ்ந்தவர்களை விட தாழ்ந்து இருக்கும் பெண்கள் குறித்த பார்வை மாறுவது எப்போது ?
கருப்பு அழகு என்று திரைப்படங்கள் உண்மையைக் காட்டுவது எப்போது ?

தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து ஆதிக்கவாதிகளின் மனதில் படிந்திருக்கும் மனநிலையை ,அதை உடைத்தெறியத் துடிக்கும்விளிம்பு நிலை மக்களின் மனதை காட்சிப்படுத்தியவிதம் அருமை .
மனதில் குடியேறிய பரியன் வாழ்வில் உயரட்டும் .

சீழ் பிடித்த சாதீயத்தை அறுவைச்சிகிச்சை செய்து அகற்ற வில்லை என்றால் தமிழர்கள் தன்மானத்தோடு வாழ்வது என்பது சிக்கலே .

மனிதநேயமின்றி ,மனிதர்களை அடக்கி ஒடுக்கி மிதிக்கின்ற மனிதர்கள் வாழும் நாடு பண்பாட்டில் எப்படி சிறந்ததாகும் ....?

சாதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் தயாரிப்பாளர் திருமிகு இரஞ்சித் மற்றும் இயக்குனர் மாறி செல்வராஜ் உள்ளிட்ட அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்

10 comments :

  1. Very Nice review. மனிதநேயமின்றி ,மனிதர்களை அடக்கி ஒடுக்கி மிதிக்கின்ற மனிதர்கள் வாழும் நாடு பண்பாட்டில் எப்படி சிறந்ததாகும் ....? How true it is ?






    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார்

      Delete
  2. நல்ல விமர்சனம். பாராட்டுகள்.

    ReplyDelete
  3. Andha naai paeyar karuppi thaana?? Sigappinu potrukeenga

    ReplyDelete
  4. //தாழ்ந்தவர்களை விட தாழ்ந்து இருக்கும் பெண்கள் குறித்த பார்வை மாறுவது எப்போது ?

    கருப்பு அழகு என்று திரைப்படங்கள் உண்மையைக் காட்டுவது எப்போது ?
    //

    எப்போது? எப்போது?
    படம் பார்க்கும் ஆவல்தூண்டும் விமர்சனம்.

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...