World Tamil Blog Aggregator Thendral: கேமிராவும் நானும்

Saturday, 3 February 2018

கேமிராவும் நானும்
















நேற்று 3.2.18 வித்தியாசமான ஒரு நாள்.
என்னுடன் பணிபுரியும் ஆசிரியர் Premila Krish அவர்களின் மகன் ஒரு வித்தியாசமான இளைஞர்.புத்தகத்தின் வாசனை உணர்ந்த அவரின் செயல்கள் ஒரு பெருமிதம் தரக்கூடியது.
ஏதாவது செய்து மாணவர்களை நல்வழியில் அழைத்து செல்ல வேண்டும் என்ற தீராப்பசி உடையவர்.
தற்போது மெப்கோ சிவகாசி பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு பயில்கிறார்.
இரண்டு வருடங்களாக கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மற்றும் பொது இடங்களில் ஊக்குவிக்கும் பயிற்சி, மேஜிக் பயிற்சி, கார் பற்றிய வொர்க் ஷாப்.என பாண்டிச்சேரி தமிழ் நாடு முழுவதும் பயிற்சி பட்டறை வைத்து மாணவர்களுக்கு திறன்களை வளர்த்து வருகிறார்.
அப்படி நேற்று புதுக்கோட்டை நகர்மன்றத்தில் ஃபோட்டோ கிராபி பற்றிய ஒருநாள் பயிற்சி அவரது நண்பர்கள் கணபதி மற்றும் பிரசாத் ஆகியோருடன் இணைந்து நடத்தினார்.அவர் இப்பயிற்சி குறித்து கூறியதும் அவருக்கு வழிகாட்ட புதுகை செல்வா அவர்களிடம் கேட்டபோது மகிழ்வுடன் சம்மதித்தார்.
75 மாணவர்கள் நேற்றைய பயிற்சியில் கலந்து கொண்டனர்.
ஒரு கேமிரா குறித்த பருந்து பார்வையில் பயிற்சி இருந்தது.
கேமிராவின் பாகங்கள், வகைகள், அதன் விலை,கேமிராவை பயன் படுத்தி எடுப்பது எப்படி, எடிட்டிங் என அந்த மாணவர்கள் தங்களின் அனுபவ அறிவைப் பகிர்ந்த போது நகர்மன்றம் வியப்பில் ஆழ்ந்தது.
ஸ்மார்ட் போன் வந்தது பின்னர் தான் நான் ஃபோட்டோ எடுக்க துவங்கினேன்.
நேற்றுDSLR கேமிராவை தொட்டபோது ஒரு புதிய உலகில் அடியெடுத்து வைக்கும் உணர்வு.
ஒரு மாணவி பேசும் போது நான் விஸ்காம் படிக்கணும்னு கேட்டேன் பொம்பள புள்ளக்கி அதெல்லாம் ஒத்து வராதுன்னு என்னைப் படிக்க விடல.இன்று இந்த பயிற்சி என்கனவை அடைய வழி காட்டியது என்ற போது மனம் நெகிழ்ந்தது.உண்மைதானே பாத்திங்களைக் கையாள கற்க சொல்லும் சமூகம் பெண்களின் கையில் கேமிராக்களை எப்படி எளிதாக தந்து விடும்.
சின்ன பசங்க கூட அழகாக கேமிராவை கையாண்ட விதம் ஆச்சரியமாக இருந்தது.காலையில் வகுப்பும் மதியத்திற்கு மேல் செயல்பாட்டு கல்வியாக நகர்மன்றத்தின் வெளிப்புற அத்தனை பேரும் கேமிராவை தூக்கிக் கொண்டு படம் எடுக்கத்துவங்கினோம்.
அத்தனை ஆர்வத்துடன் ஆறாம் வகுப்பு மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை கற்றுக்கொள்வதை கண்ட பொழுது அடைக்கப்பட்ட வகுப்பு சிறைகளில் காப்பாற்ற சொல்லும் குழந்தைகளின் கரங்கள் அலைவதை உணர்ந்தேன்.
புதுகை செல்வா அவர்கள் கேமிராவை தொட்டு பாருங்கள்,தைரியமா பயன்படுத்துங்கள் என்று மாணவர்களை ஊக்குவித்தார்.ஒரு படத்தில் விரியும் காட்சிகள் எப்படி எடுப்பார்கள் என்று அவர் கூறியபோது எப்படி எல்லாம் ஏமாத்துறாங்கன்னு தோன்றியது.தனது உடலில் ஒருபகுதியாக கேமிராவோடு பயணிக்கும் அவருக்கு வாழ்த்துகள்.
ஃபோட்டோ எடுப்பதை கவிதையாக அழகாக உணர்வுபூர்வமாக விவரித்த மாணவர் கணபதிக்கு மிகச் சிறந்த எதிர்காலம் காத்துக்கொண்டு உள்ளது.
பெரியவங்க நாங்கள் நாட்டை அழிச்சு கெடுத்து வச்சிட்டோம்பா.இனி இவர்களை போன்றவர்களை வழிகாட்டியாக எண்ணி வாழ்க்கையை வடிவமைத்திடுங்கள் என்று கூறினேன்.
வாழ்த்துகள் வளரும் விருட்சங்களுக்கு.

7 comments :

  1. அருமையான விடயங்களை பகிர்ந்தமைக்கு நன்றி.

    புகைப்படம் எடுப்பது எனது இரண்டரை வயதிலிருந்தே எனது ஹாஃபி.

    ReplyDelete
  2. நல்லதொரு அனுபவம் உங்களுக்கு. புகைப்படம் எடுப்பது நல்லதொரு கலை. அதனை மாணவர்களும் கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுவது சிறப்பு.

    அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. அருமையான வழிகாட்டல்
    மாணவர் வெற்றி பெற
    நாம் ஊக்கம் கொடுப்போம்

    ReplyDelete
  4. புதியவர்களுக்கு வழிகாட்டுவது நல்லவிடயம். சமூக முன்னேற்றத்துக்கு அடித்தளம் இடுவது போல!

    ReplyDelete
  5. சிறப்பான தகவல். நல்ல முயற்சி.

    ReplyDelete
  6. கடந்த கால நினைவுகளை நம் கண்முன்னே சுவடு மாறாமல் கொண்டு வரும் சக்தி புகைப்படத்திற்கு மட்டுமே உண்டு...
    https://www.scientificjudgment.com/

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...