World Tamil Blog Aggregator Thendral: இவர்களால் உலகம் வாழ்கின்றது ...

Saturday 8 July 2017

இவர்களால் உலகம் வாழ்கின்றது ...

இவர்களால் உலகம் வாழ்கின்றது ...

தன குடும்பத்தையே கண்டுக்காமல் சுயநலமாக எல்லோரும் வாழும் காலத்தில் ...

தனது குடும்பம் ,எவ்வளவு பெரிய தொழில் நிறுவனம் இருந்தாலும் அத்தனையையும் விட்டுவிட்டு மக்களுக்கு தங்களால் இயன்ற நன்மையை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே குறிக்கோளாய் கொண்டு, வாரந்தோறும் ஒரு மாவட்டத்தில் எந்த வித பலனையும் எதிர்பாராமல் ...

நாங்க நல்லா இருக்கும் நீங்களும் நல்லா இருக்கவே நாங்கள் சேவை செய்கின்றோம் என்று உணவு தூக்கம் எல்லாவற்றையும் விட்டு விட்டு ஒரு குழு செயல் பட்டுக்கொண்டு இருக்கின்றது என்றால் நம்ப முடிகின்றதா?

ஆம் தோழமைகளே ....சிறிய குழுவாக ஆரம்பித்து இன்று நான்கு இலட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக்கொண்டு ஆரோக்கியம் & நல்வாழ்வு என்ற குழு தமிழகத்திலிருந்து சர்க்கரை என்ற நீரிழிவு நோயை விரட்டியே தீருவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டு அதில் வெற்றியும் அடைந்து வருகின்றது ...

இவர்களால் நன்மை அடைந்தவர்கள் தாங்கள் பெற்ற நன்மைகளைப் பட்டியல் போட்டு உலகுக்கு அறிவித்துக்கொண்டுள்ளனர் .

நோயாளிகளை குணப்படுத்தி நோயற்றவர்களாக மாற்றினால் வரவேற்க தானே வேண்டும் ஆனால் தனது சுயலாபத்திற்காக சிலர் இக்குழுவைப்பற்றியும் பேலியோ என்ற உணவுமுறைக்குரித்தும் ,முழுமையாக படித்து அறியாமல் தூற்றி வருகின்ற நிலையில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தனது பாதையில் சென்று அனைவருக்கும் பயனை அளிக்கின்ற உணவுமுறையை வழிகாட்டிக்கொண்டுள்ளனர்பேலியோ குழும நிர்வாகிகள் ...

சென்ற மாதம் திருச்சியில் நடந்த பேலியோ மாநாட்டை நடத்திய சகோதரர்வி .சி.வில்வம் தனது கால் அறுவை சிகிச்சை செய்துள்ள நிலையிலும் மிகச்சிறப்பாக நடத்தி அசத்தினார் ...அங்கு பேலியோ குழுவைச்சேர்ந்த தன்னார்வலர்கள் ...ஒரு ஒழுங்கு கட்டுப்பாட்டுடன் அவர்களது பணியைத்திறம்பட செய்தது கண்டு வியப்பாக இருந்தது ...

இத்தனைக்கும் காலையில் கூட்டம் மதியம் அனைவருக்கும் அவர்களுக்கு டயட் சார்ட் தருவது என்ற நிலையில் ...

மதிய உணவைக்கூட எடுத்துக்கொள்ளாமல் தங்களை நாடி வந்த மக்களுக்கு அன்புடன் அவர்கள் அக்கறையாக டயட் சார்ட் கொடுத்த போது ...மிகச்சிறந்த நிர்வாகத்தின் கீழ் சேவையே நோக்கமாக கொண்டு அவர்கள் செயல் படுவதைக்கான்கையில் மனம் நெகிழ்ந்து போனது ..

இந்த உணவு முறை குறித்து சந்தேகக்கண் கொண்டு பார்த்தவர்கள் முழுமையாக உணர்ந்து நலன் பெற்று வருவதைக்கான்கையில் மனம் மகிழ்கின்றது ..

அவர்களுக்கு எந்த விதத்தில் கைம்மாறு செய்ய முடியும் ...நீங்கள் பெற்ற ஆரோக்கியத்தை மற்றவர்களுக்கு கற்றுக்கொடுங்கள் என்று கூறாமல் கூறிக்கொண்டு அவர்கள் சேவை செய்கின்றனர் ...

முகநூலில் மட்டுமே இயங்கி மக்களுக்கு எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல் உழைத்துக்கொண்டு வருகின்றனர் ...அவர்களுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள் ...

6 comments :

 1. இந்த உலகம் சட்டென அழிந்து விடாமல் இயங்குவது இந்த நல்ல உள்ளங்களால்தான்.
  வாழ்க வளமுடன் - கில்லர்ஜி

  ReplyDelete
 2. அனைவருக்கும் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்.....

  ReplyDelete
 3. நல்ல உள்ளங்கள்
  நீடூழி வாழ வேண்டும்!

  ReplyDelete
 4. போற்றுதலுக்கு உரியவர்கள்

  ReplyDelete
 5. வாழ்த்துகள் அனைவருக்கும்

  ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...