World Tamil Blog Aggregator Thendral: வீதி கலை இலக்கியக்களம்-36[19.2.17]

Monday 20 March 2017

வீதி கலை இலக்கியக்களம்-36[19.2.17]

வீதி கலை இலக்கியக்களம்-36

பிப்ரவரி மாத வீதிக்கூட்டம்

மிகத்தாமதமான பதிவிற்கு மன்னிக்கவும்..
 மிகச்சிறப்பாக நடந்தது வீதிக்கூட்டம்...

பிப்ரவரி மாதம் 19.2.17 அன்று அமைப்பாளர்களான பேராசிரியர் சக்திவேல் மற்றும் கவிஞர் சுகுமாரன் ஆகியோரால்அருமையாக நடந்தது..
வரவேற்புரை :கவிஞர் சுகுமாரன்...
தனக்கே உரிய பாணியில் அனைவரையும் அன்புடன் வரவேற்ற விதம் அருமை.

தலைமை:கவிஞர் .முத்துநிலவன்

வீதியின் தோற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் கவிஞர் முத்துநிலவன் அவர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது..அவர் இம்மாத வீதியில்  தலைமை ஏற்று ஒரு பண்பாட்டுக்கூட்டமாக வீதி உள்ளது.ஒரு படைப்பு பற்றி நீண்ட நெடிய பாரம்பரிய மிக்க தமிழ் மொழியில், படைப்பாளனின் கடமை கூடுதலாக உள்ளது.வள்ளுவன் கையில் உள்ள எழுத்தாணியும்,தொல்காப்பியனின் தூரிகையும், நம் கையில் உள்ள பொறுப்பு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைக்கூறுகின்றது...இக்காலக்கல்வி படைப்பாளியை உருவாக்கவில்லை...என்று கூறி தனது சிறப்பானதொரு தலைமை உரையால் வீதிக்கு அணி செய்தார்.


முன்னிலை:கவிஞர் ஆ.ச. மாரியப்பன்..

முதுபெரும் கவிஞர் ஆ.ச.மாரியப்பன் அவர்கள் வீதிக்கு பெருமை மானவ்ர்கள் கலந்து கொண்டு நம்மை வழி நடத்துவது என்று பெருமிதம் கொண்டார்.

இசைப்பாடல்:கவிஞர் பவல்ராஜ்
வீதிக்கு பெருமை சேர்க்கும் கவிஞர்களில் ஒருவரான கவிஞர் பவல் ராஜ் அவர்கள் மதுவின் பாடு என்ற தலைப்பில்

                                     ”பாஸ் மார்க் வாங்கினாலும் 
                                         பார்ட்டி கொடுக்கிறான்”

தமிழனனின் வாழ்வோடு இரண்டறக்கலந்துள்ள மதுவின் தீமைகளை மிக அழகான வரிகளில் எழுதி இசையுடன் பாடி வீதிக்கு பெருமை சேர்த்தார்.

கருத்துரை :கவிஞர் ராசி.பன்னீர் செல்வம்

கவிதையின் புதிய வடிவாகத் தெலுங்கு மொழியில் அறிமுகமாகியுள்ள ”நாநீ”என்ற வடிவத்தை ஸ்மார்ட் கிளாஸாக புதுகைக்கு மிகத்தெளிவாக அறிமுகம் செய்த விதம் மிக அருமை...ஆகச்சிறந்த விமர்சகர்..கவிதையின் நவீனத்துவத்தை மிக அழகாக எடுத்துக்காட்டுகளுடன் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் விளக்கினார்.

கவிஞர் ஆதவன் தீட்சண்யாவின் கவிதை
                                          ”தலித்துகள் 
                                     சற்றே அதிர்ஷ்டசாலிகள்
                                   அம்பேத்கர் கதையில் 
                                        துரோணரே இல்லை”

20-25 அசையில் /நான்கு வரிகளில் இந்திய பௌத்தம் &ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கான குரலாக தமிழகத்தில் ”நாநீ”கவிதையின் தன்மை உள்ளது என மிகச்சிறப்பாக கூறினார்.

கவிதைப்போட்டி

கல்லூரி மாணவர்களுக்கு கவிதைப்போட்டி ,பேச்சுப்போட்டி நடத்தி பரிசுகள் வழங்கியது வீதியின் பாதையில் முன்னேற்றத்தைக்காட்டுகிறது...இதற்கு அமைப்பாளர்களின் தனி முயற்சியே காரணமாகும்.

நூல் விமர்சனம்:

கவிஞர் கீதா

ராகுல சாங்கிருத்தியாயன் அவர்களின் “வால்காவிலிருந்து கங்கை வரை”என்ற நூலை அறிமுகம் செய்தார்...


கவிஞர் சோலச்சி

கவிஞர் பொம்மூர் குமரேசனின் “அப்பாவின் வேட்டி”என்ற கவிதை நூலைப்பற்றி மிக அருமையாக அறிமுகம் செய்தார்.சிறப்புரை:                   
                                   பேராசிரியர் மதிவாணன்.
                              டாக்டர் கலாம் பாலிடெக்னிக் முதல்வர்

முன்னோர்கள் கொண்டுவந்த தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு வேண்டும் என்று கூறினார்.

                 பேச்சாளர் செக.மகேசன்.தஞ்சை

பண்பாட்டுடன் புதியன பிறத்தல் வேண்டும்.கவிதை உணர்ச்சி மட்டுமின்றி உணர்வை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்று கவிதையின் தன்மைகளை மிக அழகாக எடுத்துக்கூறிய விதம் சிறப்பு.

நன்றியுரை:பேராசிரியர் சக்திவேல்

மிகச்சிறப்பாக கூட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் அழகு தமிழில் நன்றி கூறி நிறைவு செய்தார்.

வீதிக்கு கல்லூரி மாணவர்களை அழைத்து ,போட்டிக்கள் நடத்தி பரிசுகள் வழங்கி...மிகச்சிறப்பாக நடத்திய பேராசிரியர் சக்திவேல் மற்றும் கவிஞர் சுகுமாரன் ஆகியோரை வீதி பெருமையுடன் பாராட்டி மகிழ்கின்றது .3 comments :

 1. வீதி நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. நல்லதோர் நினைவு மீட்பு

  ReplyDelete
 3. அருமையான நிகழ்ச்சித் தொகுப்பு
  பயனுள்ள கருத்துகள்

  மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017
  https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html

  ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...