World Tamil Blog Aggregator Thendral: வைகறை என்ற ஜோசப் பென்சிஹர்

Saturday 23 April 2016

வைகறை என்ற ஜோசப் பென்சிஹர்

சகோதரர் திருப்பதி, வைகறையைப்பற்றி எழுதக்கேட்டுக்கொண்டதன் பேரில்...
வைகறை என்ற ஜோசப் பென்சிஹர் ------------------------------------------------------------- நீண்ட நெடிய உருவமும்,
மாறாத புன்சிரிப்பும்,
கவிதைகளுடன் கலந்த வாழ்வும்,
யாரையும் புண்படுத்தாத நல்ல உள்ளமும்,கொண்ட வைகறை   திருச்செந்தூருக்கு அருகில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அடைக்கலாபுரத்தில் 3.3.1979 இல் பிறந்தார்.

ஒரு தம்பி ...மட்டுமே உடன்பிறந்தவர். .

கல்வி
1984-1992 ஆம் ஆண்டுகளில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை, அடைக்கலாபுரம் புனித ஆரோக்கிய அன்னை நடுநிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். பின்னர் 1992 -1996 ஆம் ஆண்டுகளில் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு பள்ளியில் 9 முதல் 12 ம் வகுப்பு வரை படித்தார். பின்னர் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகில் அமைந்துள்ள வானரமுட்டியில் அமைந்துள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் (DIET) 1996-1998 கல்வி ஆண்டில் தனது ஆசிரியர் பயிற்சிப் படிப்பை நிறைவு செய்தார். பின்னர் பாளையங்கோட்டையில் இருக்கும் பிரதர்ஸ் யூனியன் கிறிஸ்தவ துறவிகளால் நடத்தப்படும் கிறிஸ்து ராஜா மேல் நிலைப்பள்ளி யில் ஏறத்தாழ பத்து ஆண்டுகள் management staff ஆக பணி புரிந்தார். பின்னர் தூத்துக்குடி நகரில் அமைந்துள்ள St.Mary's higher secondary school (RC.aided) பள்ளியில் முதன் முதலாக அரசுப்பணியில் சேர்ந்து (ஒரு வருடம்) பணியாற்றினார். பின்னர் அவருக்கு சீனியாரிட்டி அடிப்படையில் அரசு பள்ளியில் வேலை கிடைத்ததால், ஏற்கனவே ஒரு வருடமாக பார்த்து வந்த aided school வேலை விட்டு விட்டு தர்மபுரி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் 2009இல்  ”பெரும்பாலை” கிராமத்தில்அரசுப்பள்ளி ஆசிரியர் பணி கிடைத்ததும் அங்கு சில வருடங்கள் பணிபுரிந்தார்.

பின் அவருக்கு 2014இல் புதுகையில்உள்ள நிலையக்கோட்டை பள்ளிக்கு பணிமாறுதல் கிடைத்ததும் மிக மகிழ்வுடன் வந்தார்.

 அவருக்கு ரோஸ்லின் என்ற துணைவியாரும், ஜெய்சன் என்ற 3 வயது குழந்தைகள் மட்டுமே உலகமாக இருந்தது..

 இலக்கியப்பணி
படிக்கும் காலத்திலேயே கவிதை எழுதி ஆசிரியர்களிடம் பாராட்டு பெறுவார். கவிதை மட்டுமின்றி நாடகம், பட்டிமன்றம் விடுமுறை விவிலிய பள்ளி (VBS)யில் தலைமை ஆசிரியர் என பல துறைகளிலும் தனக்கென தனி முத்திரை பதித்தார். அவர் இல்லாமல் அவரது ஊரில் எந்த மேடை நிகழ்ச்சியும் நடைபெற்றது இல்லை. மிகச்சிறந்த வர்ணனையாளர். 

 ஆசிரியப்பயிற்சி படிக்கும் பொழுது ”வளர்பிறை” என்ற கையெழுத்து பத்திரிக்கை நடத்தியுள்ளார்.

 நந்தலாலா என்ற பெயரில் எஸ்.எம்.எஸ் மூலம் கவிதைகளை வெளியிட்டு வந்தவர், பின் அதனை நந்தலாலா.காம் என்ற இணைய இதழாக உருவாக்கி நடத்தி வந்தார்.

சிறந்த மரபுக்கவிதைகளை எழுதியுள்ளார்..

அவரது சிறுகதைகள் பேசப்பட வேண்டியவைகளாக உள்ளன. 


”முழுநிலாமுற்றம்”என்ற பெயரில் புதுகையில் 10 கூட்டங்கள் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று அனைவரும் ஒன்று கூடி இலக்கியம் பேச வைத்தவர்.

 நூல் வெளியீடு

 ஒரிஜினல் தாஜ்மகால் (2008)
 நிலாவை உடைத்த கல் (2012)
ஜன்னல் திறந்தவன் எட்டிப் பார்க்கப்படுகிறான் (2014)ஆகிய பேசக்கூடிய ,ஆளுமை நிறைந்த கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார்.

மூன்றாவது நூல் முழுதும் தன் மகன் ஜெய்க்குட்டியை கவிதைகளாக வடித்துள்ள சிறந்த தந்தை.
 உறவுகளை நேசிக்கும் மாமனிதர்.எல்லோரையும் மேடையேற்றி ,பாராட்டி ஊக்கப்படுத்தும் மனிதநேயமுள்ளவர்.அதனாலேயே வைகறை தன் தரத்தை இழந்துவிட்டார் என்று நண்பர்கள் மத்தியில் கூறினாலும்..கவலைப்படாது .....அனைவரையும் நேசிக்கும் பண்பாளர்.

புதுகைக்கு வந்த இரண்டாம் மாதமே ”கவிதைகளால் இணைவோம் ”என்ற கூட்டத்தை நடத்தியவர்.

புதுகை கணினித்தமிழ்ச்சங்கம் நடத்திய வலைப்பதிவர் விழா சிறக்க முக்கிய காரணமாய் இருந்தவர்.

 வீதி கலைஇலக்கியக்கூட்டங்களில் புதுமைகளைப்புகுத்தி உலகெங்கும் வீதி கலை இலக்கிய அமைப்பு பேசப்படும் அளவிற்கு பாடுபட்டவர்.

 தரமான கவிதைகளைப்படைக்க, கவிஞர்களுக்கு மே மாதத்தில் பயிற்சி அளிக்க வேண்டும்என்றும்,வெளியூரில் உள்ள கவிஞர்களை புதுகையிலும் ,புதுகையில் உள்ள கவிஞர்களை வெளியூரிலும் அறிமுகம் செய்ய வேண்டும் என்பதை செயல் படுத்திக்காட்டியவர்.

 பத்துவருடங்களாக ஆண்டு விழாவே நடக்காத அவரது பள்ளியில் சென்ற மாதம் சிறப்புடன் ஆண்டு விழா நடக்க காரணமானவர்..

அவரது முயற்சிக்கு அவரது மனைவியின் ஒத்துழைப்பு பாராட்டத்தக்கது. 

நல்ல கணவன்,நல்ல தந்தை,நல்ல ஆசிரியர்,நல்லநண்பர்,சிறந்த கவிஞர்,மனித நேய பண்பாளர்,புத்தகத்திற்கு மட்டுமே செலவு செய்யும் வாசிப்பாளர்.


 கவிதை உலகம் சிறந்த தரமான ஆளுமை நிறைந்த கவிஞரை இழந்துவிட்டோமே எனக்கதறி துடிக்க வைத்துவிட்டு 21.4.16 அன்று, தனது 35 ஆவது வயதில் மறைந்து விட்டார்.

நன்றி அவரது நண்பர் லாரன்ஸ் அவர்களுக்கு.

29 comments :

 1. இந்த இவரின் மறைவுச் செய்து என் மனதுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. 35 வயது ... சாகும் வயதா? மிகவும் கொடுமை.

  ReplyDelete
  Replies
  1. இந்த இவரின் மறைவுச் செய்து = இந்த இவரின் மறைவுச் செய்தி

   Delete
  2. மிகவும் கொடுமை சார்...மறக்க முடியாது தவிக்கின்றோம்.

   Delete
 2. தங்களின் இந்தப்பதிவின் மூலம் அவரின் சிறப்புகள் பலவற்றை அறிய முடிந்துள்ளது.

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் இதற்காக எழுதும்போது அறிந்து கொண்டேன் புதிய செய்திகளை சார்..

   Delete
 3. இவரின் மறைவு வருத்தம் கொள்ள வைக்கிறது....

  ReplyDelete
  Replies
  1. சொல்ல வார்த்தையில்ல...கலங்கிய கண்கள் விழி அவரின் சிரித்த முகம் நிழலாடுகிறது...

   Delete
 4. இன்னும், இன்னும் எத்தனைமுறை அவரைப் பற்றி எழுதினாலும், இத்தனைபேர், இவ்வளவு விவரமானவர்கள் இருந்தும் அவரைத் தொலைத்து விட்டோமே என எண்ணும்போது மனம் பதைபதைக்கின்றது

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சார்..எதையும் சொல்லாமல் தனக்கு இத்தனை பெரிய நோய் இருக்குன்னு அறியாமல் போய்விட்டார்

   Delete
 5. இன்னும் அந்த ஊரில் எல்லோருமே நல்ல வாழ்வாதாரத்தோடு இருக்கையில் இவர் குடும்பம் மட்டும் இன்னும் ஏன் கஷ்டத்தில் என்று கண் கலங்க வைக்கின்றது. அவரது மனைவிக்கும், மகனுக்கும் நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. நிச்சயம் செய்வோம் சார்.

   Delete
 6. இருந்திருந்தால் இன்னும் பல சிறப்பான கவிதைகள் தமிழுக்குக் கிடைத்திருக்கும். அவர் குடும்பத்துக்கு மட்டுமின்றித் தமிழுக்கும் பெரிய இழப்பு தான்.

  ReplyDelete
  Replies
  1. உண்மைமா..மிகச்சிறந்த கவிஞர்.மனித நேயவாதி..

   Delete
 7. எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள். பிரார்த்தனைகள் அவரது குடும்பத்திற்கு. உங்கள் பதிவின் மூலம் அவரைப் பற்றிய பல தகவல்கள் அறிய முடிந்தது சகோ...

  ReplyDelete
  Replies
  1. உங்களைப்பற்ரி பெருமையாக வலைப்பதிவர் விழா முடிந்ததும் பேசிக்கொண்டிருந்தார் சகோ.

   Delete
 8. ஆழ்ந்த அஞ்சலிகள்! வைகறையின் குடும்பத்தாருக்கு இந்த இழப்பைத்தாங்கும் வரத்தை கடவுள் கொடுக்கட்டும்.

  ReplyDelete
  Replies
  1. காலம் தான் தேற்ற வேண்டும்.

   Delete
 9. மேலும் அறிந்தேன் சகோ நண்பரைப்பற்றி.....

  ReplyDelete
  Replies
  1. இப்படி எழுதும் நிலை வரும்னு நினைக்கல சகோ.

   Delete
 10. அற்புதமான கவிஞர். ஆழ்ந்த அனுதாபங்கள்.

  ReplyDelete
 11. எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள். பிரார்த்தனைகள் அவரது குடும்பத்திற்கு. உங்கள் பதிவின் மூலம் அவரைப் பற்றிய பல தகவல்கள் அறிய முடிந்தது சகோ...

  ReplyDelete
 12. கவிஞர் வைகறையின் ஆன்மா
  சாந்தி பெறட்டும்...

  ReplyDelete
 13. நண்பரைப் பற்றி அறியாச் செய்திகள் அறிந்து கொண்டேன்
  அவர்தம் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவிப்போம்

  ReplyDelete
 14. அறியாத பல செய்திகளை அறிந்தோம். நண்பர் திரு தமிழ் இளங்கோ அவர்களும் நேரில் சென்று விவரமாக எழுதியிருந்தார். படிக்கப்படிக்க மனச்சுமை ஏறுகிறதே தவிர குறையவில்லை. அவரது குடும்பத்தார், இந்த இழப்பை எதிர்கொள்ளும் அளவிலான தைரியத்தைப் பெறவேண்டும்.

  ReplyDelete
 15. படிக்கப்படிக்க சோகம் அதிகமாகிறது. அவரது மனைவிக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்புண்டா? கிராமத்தில் சொந்த வீடு, நிலம் ஏதும் உண்டா?

  ReplyDelete
 16. இளம்வயதில் இப்படியொரு இழப்பை யாரால்தான் தாங்கிக்கொள்ள இயலும்? அவர்தம் துணைவியாருக்கும் குழந்தைக்கும் யாரால் ஆறுதல் சொல்ல இயலும்.. உறவுகளும் நட்புகளும் இப்பேரதிர்விலிருந்து மீண்டுவர காலம் துணை செய்யட்டும்.

  ReplyDelete
 17. உருக்கமான பதிவு....நம்மோடிருந்தவனுக்கு இப்படி ஓர் பதிவு..நாமே...முடியல...

  ReplyDelete
 18. கவிஞரின் மறைவு கலங்க வைக்கிறது! ஆழ்ந்த இரங்கல்கள்!

  ReplyDelete
 19. சொற்களில் மிகுந்த கவனமாக இருப்பவர் கவிஞர் வைகறை.
  “கவிதையில் சொற்கள்” எனும் தலைப்பில் 26ஆவது வீதியில் என்னைப் பேச அழைத்திருந்தார்... கடைசி நேர இயலாமை காரணமாக வரஇயலாத நிலை ஏற்பட இப்போது எந்தச் சொற்களால் வைகறையின் இழப்பை எழுதுவேன்?

  ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...