World Tamil Blog Aggregator Thendral: March 2018

Sunday, 11 March 2018

வீதி கலை இலக்கியக் களம் கூட்டம் 49


வீதி கலை இலக்கியக் களம் கூட்டம் 49
அன்புடன் அழைக்கிறோம்
நிதானமாக பயணிக்கும் வீதியின் பயணத்தில் வந்து போனவர்கள் தங்களின் இலக்கியச் சிந்தனைகளை நீராக ஊற்றி வளர்கின்ற தருவாக உருவெடுத்து ......தனது கிளை
பரப்பி சிட்டுக்குருவிகளுக்கு இடம் தந்து மகிழ்ந்து செழிக்கின்றது.
இலக்கியத்தில் இன்று சிட்டுக்குருவிகள் நாளை பெரும் புட்களாய் வளர்ந்து மேலும் பல சிட்டுகளை உருவாக்கும்...அவை .. மனிதநேயம் நிறைந்த புட்களாய் வளரும் என்ற நம்பிக்கையுடன் அழைக்கின்றோம்.
கவிஞர் முத்துநிலவன் அவர்கள் தலைமை ஏற்க..
சிறப்பு விருந்தினர்களாக
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் இதழாசிரியர் கவிஞர் திருமிகு Nenjam Tamil அவர்களும்..
இலங்கையில் விருது பெற்று இலக்கிய உலகிற்கு பெருமை சேர்த்துள்ள முனைவர் பெண்ணியம் செல்வக்குமாரிஅவர்களும்
கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.
வீதியில் கவிஞர் எஸ்.உதயபாலா அவர்களின் "நிலாச்சோறு" நூல் வெளியிடப்பட உள்ளது.
ஆழமான எழுத்தால் சமூக பிரச்சனைகளை நாவலில் தடம் பதிக்கும் சிறந்த எழுத்தாளர் திருமிகு புலியூர் முருகேசன் அவர்களின் மூக்குத்தி காசி நாவலை கவிஞர் இந்துமதி அவர்கள் விமர்சனம் செய்ய உள்ளார்.
தினமணி எழுத்தாளர் சிவசங்கரி சிறுகதை போட்டியில் வெற்றி பெற்ற சிறுகதை 'கானல் நீர் காட்சிகள்'எழுதிய எழுத்தாளர் சோலையப்பன் அவர்களை பாராட்டி சிறப்பிக்க உள்ளது.
மாணவிகள் சிறுகதை வழங்க உள்ளனர்.
வீதி உறுப்பினர்கள் கவிதைகள் வழங்க உள்ளனர்.
இம்மாத அமைப்பாளர்கள் கவிஞர்கள் வம்பன் செபா மற்றும் சுந்தரவள்ளி.