World Tamil Blog Aggregator Thendral: kuraththi-குறத்தி

Thursday 27 November 2014

kuraththi-குறத்தி



கழுத்தில் தொங்கிய
கனத்த தூளியோடும்
கையில் பிடித்த
தளர்நடையோடும்
வயிற்றில் உதைக்கும்
கருவோடும் பயணிக்கும்
 குழவிக்குறத்தியின்
குவளை தேநீருக்காய்
ஆடியபடி...

29 comments :

  1. வேதனையான கவியே....
    தங்களது சமூக சிந்தனைக்கு ஒரு சல்யூட்

    ReplyDelete
  2. குறத்தியின் நிலை...
    அருமை.
    தேநீருக்கு ஆடும் குவளையும் தான்...

    ReplyDelete
  3. அருமை அருமை
    கவிதை காட்சியாய் படிக்கையில்
    மனதினுள் விரிந்தது
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார்

      Delete
  4. காலமும், இந்தக் காட்சியும் இனியாவது மாற வேண்டும் என்ற எண்ணத் தாக்கத்தை ஏற்படுத்தும் கவிதை.

    ReplyDelete
  5. நன்றி த.ம விற்கு

    ReplyDelete
  6. ம்ம்ம் அழகிய வரிகளில் ஒரு சோகம்

    //குழவிக்குறத்தியின்
    குவளை தேநீருக்காய்
    ஆடியபடி... //

    ReplyDelete
    Replies
    1. ம்ம் நேரில் காணும் போது வலியும் சகோ..

      Delete
  7. வறுமையின் நிறம் சிவப்பு!!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்மா .அதுவே குழந்தை போல இருந்தது.அதுக்கு மூணு குழந்தைனா ஏத்துக்கவே முடியல ..புது பஸ் ஸ்டாண்டுகிட்ட உங்கள் கண்ணிலும் படலாம்.

      Delete
  8. சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ..

      Delete
  9. “ஒரு குத்துச் சுண்டலுக்காக
    தங்கைக் குழந்தைகளைச்
    சுமந்துவரும்
    அக்காக் குழந்தைகள்“ எனும் நவராத்திரி கொலு பற்றிய ஞானக்கூத்தன் (?) எழுதிய கவிதை நினைவுக்கு வந்தது.
    இந்தக் குழந்தைமணக் கொடுமைகள் இன்னும் தொடர்வது நமது ஆட்சியாளர்கள் மக்களுக்குச் செய்யும் அவமானம்.
    கவிதை நெஞ்சில் நின்றுவிட்டது.
    (மலைவாழ் மக்கள் கு(ன்)றவர்தான் குறவர் ஆயினர்)

    ReplyDelete
    Replies
    1. குன்றவர் ..குறவர் ஆயினர் என்பது எனக்கு புதிய செய்தி சார்..நன்றி..

      Delete
  10. கவிதை காட்சியாய் விரிகிறது.என்ன ஒரு நிலையல்லவா..?
    கவிதை அருமை.

    ReplyDelete
  11. கவிதையில் குறத்தியின் சோகம்!

    ReplyDelete
  12. ஊர் ஊராய் அலைவது முடிந்து ,குன்று போல் நிமிர்ந்து நிற்கும் வாழ்க்கை என்று வருமோ அவர்களுக்கு ?
    த ம 4

    ReplyDelete
  13. அருமையான சமூகப் படம் கவிதையில் வந்திருகிறது ..
    வாழ்த்துக்கள்
    த ம 5

    ReplyDelete
  14. இத்தனைசுமைகளோடுஒர் அழகிய(கவிதை)குறத்தி

    ReplyDelete
  15. தேவை நோக்கிய பயணம்/

    ReplyDelete

தங்களின் இனிய வருகைக்கு நன்றி...